Tamil News | Online Tamil News |
- தமிழகம் முழுவதும் 200 பஸ்கள் கோர்ட்களில் முடக்கம்: நஷ்ட ஈடு கொடுக்க முடியாததால் சிக்கல்
- "பிரதமராக ராகுல் தகுதியானவர்!': மன்மோகன் சிங் தகவல்
- நாட்டின் பொருளாதாரம் மருத்துவமனையில் படுத்து கிடக்கிறது: முதல்வர் மோடி கிண்டல்
- திருத்தப்படாத தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு பாதகமே: முதல்வர் ஜெயலலிதா
- ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது கச்சத்தீவு: ஆதாரங்களை முதல்வரிடம் வழங்க வாரிசுகள் முடிவு
- தேவை ஒழுக்கமும், கட்டுப்பாடும்: உரத்த சிந்தனை, மு.இளங்கோவன்
- அறிவியல் சாதனைக்கு உறுதுணையாக இருந்தது தமிழ் மொழியே: அப்துல் கலாம் பேச்சு
- விமான நிலையங்களின் ஆணையம் திருப்பி தந்த 850 ஏக்கர் நிலம்: தமிழக அரசு "அடம்'
- வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர ஏற்பாடு
- பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு : அவசரமாக நிறைவேறின முக்கிய மசோதாக்கள்
- 2020-ஒலிம்பிக் போட்டிகள்:2வது முறையாக டோக்கியோ தேர்வு
| தமிழகம் முழுவதும் 200 பஸ்கள் கோர்ட்களில் முடக்கம்: நஷ்ட ஈடு கொடுக்க முடியாததால் சிக்கல் Posted: விபத்து இழப்பீடு வழங்க முடியாததால், நீதிமன்றங்களால், "ஜப்தி' செய்யப்பட்ட, 200 அரசு பஸ்கள், நீதிமன்றங்களிலேயே முடங்கி நிற்கின்றன. நிதி தள்ளாட்டத்தில் இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், பஸ்களை மீட்க முடியாமல் திணறி வருகின்றன. பயணிக்க போதுமான பஸ்கள் இல்லாததால், பயணிகளும் தவிக்கின்றனர்.தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 21,202 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவற்றை, 10 கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. நிதி தட்டுப்பாடு: பஸ்களின் இயக்கம் மூலம், போக்குவரத்துக் ... |
| "பிரதமராக ராகுல் தகுதியானவர்!': மன்மோகன் சிங் தகவல் Posted: புதுடில்லி: ""நான், ஒரு திறந்த புத்தகம். ராகுல் தலைமையின் கீழ், பணியாற்ற தயாராக உள்ளேன். பிரதமர் பதவிக்கு, ராகுல் தான், சரியான தேர்வு,'' என, பிரதமர், மன்மோகன் சிங் கூறினார்.ரஷ்யாவில் நடந்த, "ஜி - 20' மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று, அங்கிருந்து டில்லி வரும் வழியில், விமானத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், மூன்றாவது முறையாக, பிரதமராக பதவியேற்பீர்களா...' என, என்னிடம், திரும்ப திரும்ப கேட்கப்படுகிறது. நானும், இதற்கு பல முறை பதில் அளித்து விட்டேன். அடுத்த லோக்சபா ... |
| நாட்டின் பொருளாதாரம் மருத்துவமனையில் படுத்து கிடக்கிறது: முதல்வர் மோடி கிண்டல் Posted: அம்பிகாபூர்: சத்தீஸ்கரில் நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பிரதமர், மன்மோகன் சிங்கை, கடுமையாக தாக்கி பேசினார். ""நிதித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள பிரதமரால், நாட்டின் பொருளாதாரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.சத்தீஸ்கர் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஆளும், பா.ஜ., சார்பில், தேர்தல் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர், ராமன் சிங்கை ஆதரித்து, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் ... |
| திருத்தப்படாத தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு பாதகமே: முதல்வர் ஜெயலலிதா Posted: சென்னை: "மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டு, "மாநில சுயாட்சி' என்ற வார்த்தைக்கு, உயிர் கொடுத்ததே தி.மு.க., தான் என, கருணாநிதி கூறியிருப்பது கேலிக்கூத்தானது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில், அரிசி விலை குறித்தோ, பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், மாநில அரசே, உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்பது குறித்தோ, "பண மாற்றம்', "உணவு கூப்பன்' ஆகியவை குறித்தோ, மத்திய அரசு, எவ்வித திருத்தங்களும் கொண்டு வராத நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக, தி.மு.க., ஓட்டு போட்டது, தமிழக மக்களுக்கு இழைத்திருக்கும், ... |
| ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது கச்சத்தீவு: ஆதாரங்களை முதல்வரிடம் வழங்க வாரிசுகள் முடிவு Posted: சென்னை: கச்சத்தீவை மீட்க, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள, முதல்வருக்கு உதவியாக, ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கே, கச்சத்தீவு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை, முதல்வரிடம் வழங்க, சேதுபதி வாரிசுகள் முடிவு செய்துள்ளனர்.இலங்கையின், யாழ்ப்பாணத்தில் இருந்து, 70 கி.மீ., தூரத்திலும், ராமேஸ்வரத்தில் இருந்து, 18 கி.மீ., தொலைவிலும், கச்சத்தீவு அமைந்துள்ளது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், கச்சத்தீவில் இறங்கி, ஓய்வெடுப்பர்; வலைகளை காய வைப்பர். அங்குள்ள தேவாலயத்திற்கு, இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்களும் சென்று வருவர். சமீப காலமாக, ... |
| தேவை ஒழுக்கமும், கட்டுப்பாடும்: உரத்த சிந்தனை, மு.இளங்கோவன் Posted: இன்றைய இளைஞர்களிடையே, ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவர்கள் தான், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இன்று ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தராமல், கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டால், எதிர்கால இந்தியாவின் நிலை, கேள்விக்குறியாகி விடும். இதை சரிப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இன்றைய சீரழிவுக்கு காரணம், மேற்கத்திய கலாசாரத் தாக்கம் தான். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய நாடுகளைக் கைகாட்டும் நாம், அவர்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளலாமே?பயனுள்ள ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், ... |
| அறிவியல் சாதனைக்கு உறுதுணையாக இருந்தது தமிழ் மொழியே: அப்துல் கலாம் பேச்சு Posted: பேரூர்: ""அறிவியல் துறையில் நான் சாதித்திட ஊக்கமாக இருந்தது, தமிழ் வழியில் நான் கற்ற ஆரம்பக்கல்வி தான்,'' என்று, கோவை மாவட்டம் பேரூரில் நடந்த தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.கோவை மாவட்டம் பேரூரில், தமிழ் பயிற்றுமொழி -வழிபாட்டு மொழி மாநில மாநாடு நேற்று துவங்கியது. தொடக்க விழா, பேரூராதீன வளாகம், தொல்காப்பியர் அரங்கில், தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் வரவேற்புடன் துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசுகையில், ""60 ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட பேரூர் தமிழ்க்கல்லூரி, ... |
| விமான நிலையங்களின் ஆணையம் திருப்பி தந்த 850 ஏக்கர் நிலம்: தமிழக அரசு "அடம்' Posted: சென்னை விமான நிலைய, இரண்டாவது ஓடுபாதை அமைக்கும் பணிக்காக, தமிழக அரசு கையகப்படுத்திய நிலங்களில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ.,), திரும்ப வழங்கிய நிலத்தை உடனடியாக, அதன் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விமான நிலைய விரிவாக்க பகுதி நில உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்த, 2007, அக்டோபர் மாதம், சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது ஓடுபாதை விரிவாக்க பணிக்காக, மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், காரப்பாக்கம், தொரப்பாக்கம் மற்றும் கோவூர் பகுதிகளில் இருந்து, 1,066.99 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்தி, இந்திய விமான ... |
| வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர ஏற்பாடு Posted: வட மாநிலங்களில் இருந்து, தென் மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வர, தமிழகத்தில், நான்கு இடங்களில், 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, 12 ஆயிரம் மெகா வாட் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், மின் உற்பத்தி, சராசரியாக, 8,000 மெகா வாட் என்ற குறைந்த அளவில் உள்ளது. இதனால், பற்றாக்குறை மின்சாரம், வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல், மின்வெட்டு, கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. தென் மாநிலங்களின் மின் கட்டமைப்புக்கும், வடமாநில மின் கட்டமைப்புக்கும் இடையில், மின்சாரம் பெறுவதில், மின் தொடரமைப்பில், ... |
| பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு : அவசரமாக நிறைவேறின முக்கிய மசோதாக்கள் Posted: புதுடில்லி: ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், முக்கியத்துவம் வாய்ந்த, உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட, 16 மசோதாக்கள், பெரிய அளவில் விவாதம் இல்லாமல், அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.சபை நடவடிக்கை பாதிப்பு: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட், 5ம் தேதி துவங்கியது. இதற்கு முந்தைய கூட்டத்தொடர்களில், மத்திய அரசின் நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் ஆகிய பிரச்னைகளை எழுப்பி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால், ... |
| 2020-ஒலிம்பிக் போட்டிகள்:2வது முறையாக டோக்கியோ தேர்வு Posted: பியூனோஸ் ஏர்ஸ்:2020-ல் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்வாகியுள்ளது.இதற்கான ரகசிய ஓட்டெடுப்பு நேற்று மாலை அர்ஜென்டினாவில் உள்ள பியூனோஸ் ஏர்ஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தியது. இந்த ஓட்டெடுப்பில் டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டோக்கியோ தேர்வாகியுள்ளது. இது 125 வது சீசன் ஆகும்.இதன் மூலம் ஜப்பான், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளது. ஏற்கனவே 1964-ல் ஜப்பான் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது 93 நாடுகள் போட்டிகளில் பங்கேற்று இருந்தது.1964-ல் ஜப்பானில் நடந்தபோது ஆசிய நாடு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 08,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |