Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நீதித்துறை மீது பாய்வதில் ஆளும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒற்றுமை: நீதிபதிகள் நியமனத்திற்கு புது சட்டம் கொண்டு வர ஆதரவு

Posted:

புதுடில்லி: ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, நீதிபதிகள் குழு முறையை மாற்றியமைக்க வகை செய்யும், "நீதித்துறை நியமன கமிட்டி'யை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதா, ராஜ்யசபாவில் நேற்று அறிமுகமான போது, அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று, அந்த மசோதாவை வரவேற்றன.சமீபகாலமாக, நீதித்துறைக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக, "குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்; சிறையில் இருப்பவர்கள், தேர் தலில் போட்டியிட முடியாது' ...

பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்கள் ஆவேசம்: கச்சத்தீவு மனுவை வாபஸ் பெற வலியுறுத்தல்

Posted:

"கச்சத்தீவு தொடர்பாக, இலங்கைக்கு சாதகமாக, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை, மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக, புதிய மனுவை தாக்கல் செய்ய முன்வர வேண்டும்' என, பார்லிமென்டில், தமிழக எம்.பி.,க்கள், நேற்று கோரிக்கை விடுத்தனர்.சுப்ரீம் கோர்ட்டில் மனு: "இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, முதல்வர் ஜெயலலிதா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு, சமீபத்தில், பதில் மனு தாக்கல் செய்த, மத்திய அரசு, "கச்சத்தீவு ...

"பிரதமர் பதவி கனவில் நான் இல்லை': சொல்கிறார் நரேந்திர மோடி

Posted:

காந்திநகர்: ""நான் நாட்டின் பிரதமராகும் கனவில் இல்லை; 2017 வரை குஜராத் முதல்வராகவே நீடிப்பேன்,'' என, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில், முதல்வர் நரேந்திர மோடி மற்றும் மாநில கவர்னர், கமலா பெனிவால் ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின், முதல்வரும், கவர்னரும் ஒரே மேடையில் தோன்றியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விழாவில் பேசிய முதல்வர் நரேந்திர மோடி, மாணவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். அப்போது கூட்டத்தில் இருந்த, 10ம் வகுப்பு ...

"ஆபாச, "சிடி'க்கள் மூலம் பெண்களை வசப்படுத்திய ஆசாராம் பாபு': சீடர் பரபரப்பு வாக்குமூலம்

Posted:

ஜோத்பூர்: பிரபல சாமியார், ஆசாராம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது சீடர் ஒருவர், தன் குருநாதர் குறித்த பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.பல மாநிலங்களில் ஆசிரமங்கள் நடத்திய, பிரபல சாமியார், ஆசாராம் பாபு மீது, பெண் ஒருவர், சமீபத்தில், பாலியல் பலாத்கார புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே, ராஜஸ்தானில் உள்ள ஆசாராமின் ஆசிரமத்தில், போலீசார் சோதனையிட்ட போது, அங்கிருந்த சிலரை பிடித்தனர். விசாரணையின் போது, ஆசாராமின், முக்கிய சீடர்களில் ஒருவரான சிவா என்பவர் கூறியதாவது: ஆசிரமத்தில் ...

சோனியா நாடு திரும்பியதும் டீசல் விலை உயர்கிறது

Posted:

புதுடில்லி: "மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் தலைவர் சோனியா, நாடு திரும்பியதும், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலை உயர்த்தப்படலாம்' என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: டீசல் விலையை, லிட்டருக்கு மூன்று முதல், ஐந்து ரூபாய் வரையும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, 2 ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டர் ஒன்றுக்கு, 50 ரூபாயும் உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இருந்தாலும், இது அரசியல் ரீதியான முடிவு என்பதால், முதலில் இதுபற்றி, காங்கிரஸ் உயர்மட்டக் குழு பரிசீலிக்க ...

வைகைச்செல்வனிடம் இருந்து அமைச்சர், கட்சி பதவி பறிப்பு

Posted:

சென்னை: தமிழக அமைச்சரவையில், நேற்று, 11வது முறையாக, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை அமைச்சராக பணியாற்றி வந்த வைகைச்செல்வன், நேற்று அதிரடியாக, அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அமைச்சரவையில் சிறப்பாக செயல்படாதவர்கள், குற்றஞ்சாட்டுக்குள்ளாவோர், அவ்வப்போது நீக்கப்படுவதும், புதியவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்பதும், தொடர்ந்து வருகிறது. நேற்று, 11வது முறையாக, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. பள்ளி கல்வித் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை, ...

ராஜாவை பலிகடாவாக ஆக்க இடம் தரமாட்டோம்: கருணாநிதி பேட்டி

Posted:

சென்னை: "முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை, பலிகடாவாக ஆக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தர மாட்டோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது பேட்டி: கல்வி துறை அமைச்சர், ஆசிரியர் தினவிழாவில், கலந்து கொள்ள இருந்த நேரத்தில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளார். அமைச்சர்களை மாற்றுவது என்பது, முதல்வரின் விருப்பத்தை பொறுத்தது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அமைச்சர்களை மாற்றுகிறவரும், மாற்றப்படுகிறவர்களும் தான் கவலைப்பட வேண்டும்; நான் கவலைப்படவில்லை. நாங்கள் யாரையும் பலிகடாவாக ஆக்க ...

ஸ்தலசயன பெருமாள் கோவில் கையகப்படுத்துவதை கைவிட்டது தொல்லியல்துறை

Posted:

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலை, தேசிய சின்னமாக அறிவித்து கையகப்படுத்தும், இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை, அரசியல் தலையீடுகளால் கைவிடப்பட்டது, சமூக ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவில், 108 வைணவத் தலங்களில், 63வது தலமாக புகழ்பெற்றது. இக்கோவில், நகரின் மைய பகுதியில் அமைந்து, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ராமர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. பழங்காலத்தில், இவ்வூர் திருக்கடல் மல்லையாக விளங்கியபோது, இறைவனை தரிசிக்க தவமிருந்த, புண்டரீக ...

தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்

Posted:

"டாஸ்மாக்' கடைகளில், வரும், 22ம் தேதி வரை, அதிரடி சோதனை நடத்த, மாவட்ட மேலாளர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், செய்வது அறியாது ஊழியர்கள், விழி பிதுங்கி நிற்கின்றனர்.தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.ஏராளமான முறைகேடு: டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™