Tamil News | Online Tamil News |
- மன்மோகன் துவக்கிய திட்டங்களால் ஏராளமானவர்களுக்கு நன்மை: சோனியா
- மீனவர்களை விடுவிக்க நெருக்கடி தாருங்கள்: பிரதமருக்கு மீண்டும் ஜெ., கடிதம்
- எல்லோரும் பார்ப்பது போல் பார்க்கிறோம்: மோடி வருகை பற்றி ஸ்டாலின் கருத்து
- 2.5 கோடி பேருக்கு மொபைல்போன் இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டம்
- "ஆன்லைன்' முறைக்கு "ஆப்பு' வைக்க அமைச்சருக்கு இறப்புச் சான்றிதழ்
- மோசடி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய அமைப்பு: உருவாக்க மத்திய அரசு திட்டம்
- ஐந்து மாநில தேர்தல்களில் பின்பற்றுகிறது காங்கிரஸ் புது பார்முலா
- "ஏழை நாடு' என நம்மை வர்ணிக்கும் பிரதமரால் அவமானம் : டில்லியில் அரசு மீது மோடி ஆவேச தாக்குதல்
- மன்மோகனை சந்திக்க முடியாமல் இலங்கை திரும்பிய ராஜபக்சே
| மன்மோகன் துவக்கிய திட்டங்களால் ஏராளமானவர்களுக்கு நன்மை: சோனியா Posted: திருவனந்தபுரம் :பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துவக்கிய, பல திட்டங்களால், நலிந்த பிரிவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர்,'' என, காங்கிரஸ் தலைவர், சோனியா பாராட்டினார். ராகுலின் சமீபத்திய, அதிரடி அறிவிப்பால், பிரதமருக்கு ஏற்பட்ட தர்மசங்கடம் மற்றும் அவமானத்தை தணிக்கும் வகையில், சோனியா இவ்வாறு கூறியுள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சோனியா கூறியதாவது: சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினர், ஒவ்வொரு மட்டத்திலும், பாகுபாட்டை சந்தித்து வருகின்றனர். ... |
| மீனவர்களை விடுவிக்க நெருக்கடி தாருங்கள்: பிரதமருக்கு மீண்டும் ஜெ., கடிதம் Posted: சென்னை :இலங்கை மீனவர்களையும், அவர்கள் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த அவரது கடிதம்: தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையே , டிசம்பர் மாதம் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, கடந்த, 20ம் தேதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொடுமையாக தாக்குவது நீடித்ததாலும், இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், பாக்., ஜலசந்தி பகுதியில் மீனவர்கள் மீதான தாக்கப்படுதல் ... |
| எல்லோரும் பார்ப்பது போல் பார்க்கிறோம்: மோடி வருகை பற்றி ஸ்டாலின் கருத்து Posted: நாகர்கோவில்: தமிழகத்தின் மோடி வருகை தந்ததை எல்லோரும் பார்ப்பது போல் நாங்களும் பார்க்கிறோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டிஇரண்டாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி பற்றிய கருத்து என்ன?வரும் மே மாதத்துடன் இந்த ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகிறது. வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டது. சென்னையிலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பஞ்சமில்லை. தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறி விட்டது. இதுதான் இந்த அரசின் சாதனை.இலங்கை தமிழர்களின் பிரச்னையில் தி.மு.க.வின் ... |
| 2.5 கோடி பேருக்கு மொபைல்போன் இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டம் Posted: புதுடில்லி : லோக்சபா தேர்தல் நெருங்குவதை அடுத்து, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, அடுத்த அதிரடியை துவக்கியுள்ளது. நாடு முழுவதும், 2.5 கோடி பேருக்கு, இன்டர்நெட் வசதி அடங்கிய, மொபைல் போன்களை, இலவசமாக வழங்கும் திட்டம், விரைவில் துவக்கப்படவுள்ளது. லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு மே மாதத்தில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, அதிரடியான, கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, தேர்தலில் ஆதாயம் அடைவதற்கு, காய் நகர்த்தி வருகிறது. ஏற்கனவே, உணவு பாதுகாப்பு திட்டத்தை துவக்கியுள்ள நிலையில், அடுத்ததாக, ... |
| "ஆன்லைன்' முறைக்கு "ஆப்பு' வைக்க அமைச்சருக்கு இறப்புச் சான்றிதழ் Posted: மதுரை : "மதுரை மாநகராட்சியில், "ஆன்லைன்' முறையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் முறைக்கு முடிவு கட்டவே, அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மதுரை தெற்கு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., அண்ணாதுரை பெயரில் இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டது, என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அண்ணாதுரை 2006 ஜூலை 26 ல், இறந்ததாகவும், 2007 ஜூலை 26 ல், செல்லூர் ராஜூ இறந்ததாகவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆன்லைன் சான்றிதழை, தபால் மூலம் இருவருக்கும் சிலர் அனுப்பியுள்ளனர். மேயர் ராஜன் செல்லப்பா, கமிஷனர் நந்தகோபால் விசாரணையில், மாநகராட்சி இணையதளத்தை "டிராக்' செய்து, நகர்நல ... |
| மோசடி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய அமைப்பு: உருவாக்க மத்திய அரசு திட்டம் Posted: புதுடில்லி : கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு, அப்பாவி பொதுமக்களையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றும் மோசடி நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் செயல்பாட்டை முன்கூட்டியே கண்டறிந்து, மோசடிகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவசியமான, மத்திய அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பணத்தை பன்மடங்காக பெருக்க நினைப்பவர்களின் ஆசையை மட்டுமே முதலீடாகக் கொண்டு, ஏராளமான மோசடி நிதி நிறுவனங்கள், நாட்டில் செயல்படுகின்றன. கம்பி நீட்டும் மோசடி பேர்வழிகள்அவற்றின் மோசடிகளை முன்கூட்டியே அறியாத, அப்பாவிகள், தாங்கள் ... |
| ஐந்து மாநில தேர்தல்களில் பின்பற்றுகிறது காங்கிரஸ் புது பார்முலா Posted: புதுடில்லி:குற்ற வழக்குகளில் தண்டனை பெறும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற வகை செய்யும், அவசர சட்டத்திற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இந்த ஆண்டு இறுதியில், ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தலின் போது, கறைபடாத, குற்ற வழக்குகளில் சிக்காத, மிகச்சிறந்த நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிக்கனி பறிக்கத் திட்டமிட்டுள்ளது. அதனால், தற்போதைய, எம்.எல்.ஏ.,க்கள் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.தீபாவளிக்கு பிறகு : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில், ... |
| "ஏழை நாடு' என நம்மை வர்ணிக்கும் பிரதமரால் அவமானம் : டில்லியில் அரசு மீது மோடி ஆவேச தாக்குதல் Posted: புதுடில்லி : போபால், திருச்சியைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியிலும், காங்கிரசுக்கு எதிரான, நரேந்திர மோடியின் ஆவேச தாக்குதல் தொடர்ந்தது. நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில்,""அமெரிக்க அதிபர் ஒபாமா முன், இந்தியாவை, "ஏழை நாடு' என, வர்ணிக்கும் பிரதமரால், நமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர் சக்தியை உடைய இந்தியாவை, இப்படி அவமதிக்கும் பிரதமர், நமக்கு தேவையா,'' என, அவர் கேள்வி எழுப்பினார். குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அரியானா, ... |
| மன்மோகனை சந்திக்க முடியாமல் இலங்கை திரும்பிய ராஜபக்சே Posted: நியூயார்க்:பிரதமர் மன்மோகன் சிங்கை, சந்திக்க முடியாமல், இலங்கை அதிபர் ராஜபக்சே, கொழும்பு திரும்பினார்.ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில், உரையாற்றுவதற்காக, அமெரிக்கா சென்ற பிரதமர், மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து, பல்வேறு விஷயங்களை விவாதித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்தும், ஒபாமாவிடம் எடுத்துரைத்தார். இதற்கிடையே, அமெரிக்கா வந்த, இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய பின், மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்காக, நியூயார்க்கில் காத்திருந்தார்.ஆனால், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் ஒபாமாவை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 30,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |