Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எல்லா விதத்திலும் தோல்வியடைந்த மத்திய அரசை தூக்கி எறியுங்கள்: மோடி ஆவேசம்

Posted:

திருச்சி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற, 'இளந்தாமரை' பிரமாண்ட மாநாட்டை காண, திருச்சியில் நேற்று ஏராளமானோர் குவிந்தனர். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் உரையாற்றிய மோடி, ""எல்லா விதத்திலும் தோல்வி அடைந்த, மத்திய அரசை, தூக்கி எறியுங்கள்,'' என, மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். அதே நேரத்தில், கூட்டணிக்கு அடித்தளம் அமைக்கும் விதமாக, மாநிலத்தின் பிரதான கட்சிகளான, தி.மு.க., அ.தி.மு.க.,வை விமர்சிப்பதைத் தவிர்த்தார்.திருச்சி, "ஜி' கார்னர் மைதானத்தில், நேற்று, பா.ஜ., இளந்தாமரை மாநாடு நடந்தது. பா.ஜ., அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் ...

மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அரசு பகிரங்க குற்றச்சாட்டு

Posted:

பிற மாநிலங்களில் இருந்து, மின்சாரத்தை கொண்டு வருவதற்கான, மின் வழித் தடங்களை அமைப்பது குறித்து, தமிழகத்தில், அடுத்தடுத்து அமைந்த அரசுகள், அக்கறை காட்டவில்லை. எனவே, தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு, முழுக்க முழுக்க, அம்மாநில அரசே காரணம்," என, மத்திய மினதுறை இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குற்றம் சாட்டினார்.டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களின் மின் தொகுப்புகளில் இருந்து, தமிழகத்திற்கு மின்சாரத்தை எடுத்து வருவதற்கான, வசதிகளை ஏற்படுத்த, தமிழக அரசு தவறி விட்டது. என்ன மாதிரியான, மின் வழித்தடங்கள் வேண்டும் ...

"இளந்தாமரை' மாநாட்டுக்கு குவிந்த தொண்டர்கள்: விழாக்கோலம் பூண்ட திருச்சி மாநகரம்

Posted:

திருச்சி: பா. ஜ., சார்பில், திருச்சியில் நேற்று நடந்த, "இளந்தாமரை' மாநாட்டுக்கு, நேற்று முன்தினம் இரவிலிருந்தே, இளைஞர்களும், தொண்டர்களும் குவிந்ததால், திருச்சியே விழாக்கோலம் கண்டது. மாநாட்டுக்கு வந்த அனைவரும், காவி நிற உடை, துண்டு, தொப்பி அணிந்து வந்ததால், மாநகரமே காவி மயமாக காட்சியளித்தது. மாநாட்டில், அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.இம்மாநாட்டில் மக்கள் பங்கேற்க வசதியாக கடந்த, 2ம் தேதியிலிருந்து, "ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்யப்பட்டது. ...

பிரதமருக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Posted:

சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர், ஜெயலலிதா, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், "மகிழ்ச்சிகரமான உங்கள் பிறந்த நாளில், என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சிகரமான நாள், தொடர்ந்து வர வேண்டும். நீண்ட நாள், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் வாழ்த்து கடிதம், ...

தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் மின் வெட்டு: குடியிருப்புகளுக்கு தடையில்லா மின்சாரம்

Posted:

குடியிருப்புகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தொழில் நிறுவனங்களுக்கு, மீண்டும் மின் வெட்டை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், விவசாயம், தொழிற்சாலை, குடியிருப்புகள் என, மொத்தம், 2.43 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இவற்றிற்கு, நாள்தோறும், 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின் உற்பத்தி, சராசரியாக, தினசரி, 8,000 மெகா வாட் என்ற அளவில் தான், உள்ளது. பற்றாக்குறை மின்சாரம், வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல், கட்டுப்பாடுகள் மூலம் ஈடுசெய்யப்படுகிறது. தனிநபர் மின் நுகர்வு, தொழிற்சாலை அதிகரிப்பு போன்ற காரணங்களால், மின் ...

‘தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்’: கருணாநிதி எச்சரிக்கை

Posted:

சென்னை: 'கட்சியில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.கருப்பசாமி பாண்டியன், திருநெல்வேலி, தி.மு.க., மாவட்டச் செயலராக உள்ளார். அதே ஊரைச் சேர்நதவர் நாலடியார்; இவரும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்.கட்சிக்காரர்: இவரது மகள் தமிழரசி, கருப்பசாமி பாண்டியனிடம் சென்று, தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டார். தன் விருப்பத்துக்கு உடன்பட்டால், கட்சியில் சேர்த்துக் கொள்வதாக, கருப்பசாமி பாண்டியன் கூறியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், தமிழரசி, வீட்டுக்கு வந்து ...

கிராமப்புற வேலை திட்டம் நிரந்தரமல்ல: அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

Posted:

புதுடில்லி: ''கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு நிரந்தரமாக வேலை வழங்கும் திட்டமாக இருக்காது; இன்னும், 20 – 25 ஆண்டுகளில், இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்படும்,'' என, கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.கிராமப்புற ஏழை மக்களுக்கு, ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 100 நாள் வேலை, உறுதியாக கிடைக்கும் வகையில், இந்த திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.முதற்படி திட்டமாம்: டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய, கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் ...

‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ முறைகேடு: பார்லி கூட்டுக்குழு இன்று கூடுகிறது

Posted:

புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு குறித்து விசாரித்து வரும், பார்லிமென்ட் கூட்டுக்குழு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இன்று மீண்டும் கூடுகிறது. இதில், பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றமற்றவர் எனவும், தி.மு.க., முன்னாள் அமைச்சர், ஏ.ராஜாவை குற்றவாளி போல சித்தரிக்கும் வரைவு அறிக்கை நிறைவேற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ஏ.ராஜா இருந்த போது, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ராஜா மற்றும் பலர், ...

ஜம்முவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ‘வெறியாட்டம்’

Posted:

ஜம்மு: போலீஸ் ஸ்டேஷன், ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய கொடூர தாக்குதலில், ராணுவ அதிகாரி உட்பட, ஒன்பது பேர் இறந்தனர். வீரர்களுடன் நீண்ட நேரம் சண்டையிட்ட பயங்கரவாதிகள், மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், ஜம்மு பகுதியில் உள்ள ஹிராநகர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று காலை, 6:45 மணிக்கு, போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்கள் பணியை துவக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ராணுவ சீருடையில்: அப்போது அங்கு, ராணுவ சீருடையில் வந்த, மூன்று பயங்கரவாதிகள், திடீரென இயந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™