Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு "சீல்'

Posted: 26 Sep 2013 01:03 PM PDT

தேனி மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கிவரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, வியாழக்கிழமை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்து மூடினர்.

வாக்காளர் பட்டியலில் பணிகள் மேற்கொள்வது குறித்த பயிற்சி

Posted: 26 Sep 2013 01:02 PM PDT

கொடைக்கானலில் வாக்காளர் பட்டியலில் பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து நியமன அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

நரேந்திர மோடி வருகையை எதிர்த்து நோட்டீஸ் ஒட்டிய இருவர் தலைமறைவு

Posted: 26 Sep 2013 01:02 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருவதை எதிர்த்து,  அவதூறு செய்யும் வகையில் நோட்டீஸ் ஒட்டிய இருவர் தலைமறைவாகினர்.

கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

Posted: 26 Sep 2013 01:02 PM PDT

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர்(பொறுப்பு) எட்வர்டு தெரிவித்தார்.   கொடைக்கானல் நகர்மன்றக் கூட்டம், தலைவர் (பொறுப்பு) எட்வர்ட் தலைமையில் நடைபெற்றது.

ஓவியரை தாக்கிய போலீஸ் மீது வழக்கு

Posted: 26 Sep 2013 01:01 PM PDT

கோயிலில் படம் வரைய காலதாமதம் செய்ததாக ஓவியரை தாக்கிய போலீஸ்காரர் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி: உணவக உரிமையாளர் மீது வழக்கு

Posted: 26 Sep 2013 01:01 PM PDT

தேனியில் விற்பனை செய்த நிலத்துக்கு போலி ஆவணம் தாயாரித்து வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக, உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மீது, மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை முடிக்க 20 ஆண்டுகள் ஆகும்: நீதிபதி

Posted: 26 Sep 2013 01:00 PM PDT

தற்போது நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை முடிக்க 20 ஆண்டுகள் ஆகும் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பி.எஸ். ஆவடி தியாகராஜமூர்த்தி கூறினார்.

பகுதி நேர நூலக தொடக்க விழா

Posted: 26 Sep 2013 01:00 PM PDT

விருதுநகர் அருகே பகுதி நேரம் நூலகத்தை சட்டப் பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

போலி டாக்டர் கைது

Posted: 26 Sep 2013 01:00 PM PDT

சிவகாசியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் கிருஷ்ணசாமி (28). இவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என

குறுஞ்செய்தியால் குழம்பும் மொழியறிவு

Posted: 26 Sep 2013 12:59 PM PDT

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ - மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.

கூரையேறி கோழிபிடிக்க முடியாதவர்கள்...

Posted: 26 Sep 2013 12:58 PM PDT

இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் ஐ.நா. சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புறப்பட்டுப் போயிருக்கிறார். அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

ஏனிந்த விதித்தளர்வு?

Posted: 26 Sep 2013 12:57 PM PDT

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, பயன்படுத்துவோரும் அந்த நிதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை...

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நார் பொருள்கள் தயாரிக்க பெண்களுக்கு பயிற்சி

Posted: 26 Sep 2013 12:57 PM PDT

விருட்சம் மகளிர் முன்னேற்ற களஞ்சியமும், நபார்டு நிறுவனமும் இணைந்து மகளிருக்கான சுயவேலை வாய்ப்பு பயிற்சி முகாமினை நடத்தின. இந்த முகாமின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வாகனம் மோதி மான் சாவு

Posted: 26 Sep 2013 12:56 PM PDT

  ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் வன விலங்குகளுக்குப் போதுமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக வன விலங்குகள் குடிநீருக்காக சாலையைக் கடக்கும்போது, வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்போர் அறை திறக்கப்படுமா?

Posted: 26 Sep 2013 12:56 PM PDT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர்  வந்து செல்கின்றனர்.     இந்நிலையில் பொதுமக்கள், கடும் வெயிலில் அமருவதற்கு போதுமான இட வசதியின்றி ஆட்சியர் அலுவலகம் முன்பும், மரத்தடியிலும் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கமுதி தாலுகாவில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

Posted: 26 Sep 2013 12:56 PM PDT

கமுதி தாலுகாவைச் சேர்ந்த 2 வருவாய்க் கிராமங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள், செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

லாரி- சரக்கு வாகனம் மோதல்: சிறுவன் சாவு; 8 பேர் காயம்

Posted: 26 Sep 2013 12:55 PM PDT

திருவாடானை தாலுகா தொண்டி கக்கிலாங்குளம் அருகே லாரியும் சரக்கு வாகனமும் மோதிக் கொண்டதில் 5 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர்.

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை

Posted: 26 Sep 2013 12:55 PM PDT

: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

இலவசத் தொழிற்பயிற்சி

Posted: 26 Sep 2013 12:55 PM PDT

காரைக்குடியில் டிராப்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை தேசிய சிறுதொழில் நிறுவனம் ஆகியவை சார்பில் இலவசத் தொழில் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

இலவச கால்நடை மருத்துவ முகாம்

Posted: 26 Sep 2013 12:54 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை  நடைபெற்றது.  ஊராட்சித் தலைவர் ராசியப்பன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாமுக்கு சேவுக

தொழில் முனைவோர் கருத்தரங்கம்

Posted: 26 Sep 2013 12:54 PM PDT

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Sep 2013 12:53 PM PDT

குடியிருப்பு மனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி, மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக, வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் 111 சேமிப்புக் கிட்டங்கிகள் அமைப்பு

Posted: 26 Sep 2013 12:53 PM PDT

ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம், மாவட்டத்தில் 111 சேமிப்புக் கிட்டங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு இணைப் பதிவாளர் த. செல்வக்குமரன் தெரிவித்துள்ளார்.

நத்தத்தில் நிரந்தர  தினசரி சந்தை துவக்கம்

Posted: 26 Sep 2013 12:52 PM PDT

  நத்தத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பில் நிரந்தரமாக தினசரி சந்தைக்கான கடைகள் கட்டி முடிக்கப்பட்டு, புதன்கிழமை துவக்க விழா நடைபெற்றது.

பழனி கோயில் உண்டியல் வரவு:  21 நாளில் ரூ.1.17 கோடி

Posted: 26 Sep 2013 12:52 PM PDT

பழனி மலை கோயில் உண்டியல்கள் கடந்த 21 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 1.17 கோடியைத் தாண்டியுள்ளது.

விநியோகிக்க வேண்டிய விலையில்லா பொருள்களை லாரியில் ஏற்றியதால் பொதுமக்கள் முற்றுகை

Posted: 26 Sep 2013 12:52 PM PDT

வேடசந்தூர் அருகே பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1300 விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்களை லாரி மூலம் சேலத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பாமாயில் பறிமுதல்

Posted: 26 Sep 2013 12:51 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பட்டணம்பட்டியில் உள்ள   வைகை அங்காடியைச் சேர்ந்த பகுதி நேர ரேஷன் கடையின் விற்பனையாளர் பாலசுப்பிரமணி. இவர், குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் இல்லை

நிதி நிறுவனம் மூலம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு

Posted: 26 Sep 2013 12:51 PM PDT

பழனி அருகே  சின்னக்கலையமுத்தூரைச் சேர்ந்தவர் சங்கிலி மகன் ராமசாமி (47). இவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்து வருகிறார். இவரிடம், திருப்பூர் மாவட்டம்,

கமுதியில் ரூ.1 கோடியில் போலீஸ் தகவல் தொடர்பு கோபுரம்

Posted: 26 Sep 2013 12:50 PM PDT

போலீஸ் துறை தொலைத் தொடர்பு வசதிக்காக, கமுதியில் ரூ.1 கோடி செலவில் உயர்கோபுரம் அமைக்கப்பட உள்ளது.    

ஹாக்கி போட்டி: கீழக்கரை பொறியியல் கல்லூரி சாம்பியன்

Posted: 26 Sep 2013 12:50 PM PDT

ராமநாதபுரத்தில் மண்டல அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி பொதுக்கூட்டம்

Posted: 26 Sep 2013 12:50 PM PDT

பரமக்குடி ராஜா மஹாலில் அதிமுக அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பிலான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.  மாவட்ட

லாரி மோதி ஒருவர் சாவு

Posted: 26 Sep 2013 12:49 PM PDT

  திருவாடானை தாலுகா தொண்டி அருகே புதுக்குடி விலக்கில் இரு சக்கரவாகனத்தில் சென்றவர் லாரி மோதி உயிரிழந்தார்.

மீனவர்கள் பிரச்னையை தீர்க்க மோடியிடம் பாஜக மனு

Posted: 26 Sep 2013 12:49 PM PDT

  திருச்சியில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின்  இளந்தாமரை  மாநாட்டிற்கு ராமேசுவரம் நகர் பகுதியில் இருந்து கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன் தலைமையில், நகர் தலைவர் முத்துசெல்வம்,

மின் கம்பி திருடியவர் கைது

Posted: 26 Sep 2013 12:49 PM PDT

கமுதி அருகே மின் கம்பி திருடிய இளைஞரை போலீஸார், புதன்கிழமை கைது செய்தனர்.

கமுதி பகுதி பள்ளிகளில் விலையில்லாசைக்கிள்கள்: எம்.எல்.ஏ. வழங்கினார்

Posted: 26 Sep 2013 12:49 PM PDT

கமுதி பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மு.முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.   கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த 235 மாணவர்களுக்கும், சத்திரிய நாடார்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு

Posted: 26 Sep 2013 12:48 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவ,மாணவிருக்கு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்

நாட்டு நலப்பணி  திட்ட முகாம்

Posted: 26 Sep 2013 12:48 PM PDT

ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடராஜபுரம் கிராமத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில்  துவங்கியது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் என். ஜெயகாந்தன் வரவேற்புரையாற்றினார். 

தொண்டி பகுதியில் தொடரும் மர்ம காய்ச்சல்

Posted: 26 Sep 2013 12:48 PM PDT

திருவாடானை தாலுகா தொண்டி நம்புதாளை பகுதிகளில் தொடரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவுக்கு செப்.30இல் உள்ளூர் விடுமுறை

Posted: 26 Sep 2013 12:47 PM PDT

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவுக்கு செப்.30இல் உள்ளூர் விடுமுறைராமநாதபுரம்,செப்.26:

கமுதி நர்ஸ் மதுரையில் மாயம்

Posted: 26 Sep 2013 12:47 PM PDT

கமுதி நர்ஸ் ஒருவர் மதுரையில் மாயமானது குறித்து போலீஸார், புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம்

Posted: 26 Sep 2013 12:46 PM PDT

வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம்தேனி, செப். 26

போடிமெட்டு மலைச் சாலை அகலப்படுத்தும் பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தல்

Posted: 26 Sep 2013 12:46 PM PDT

போடிமெட்டு மலைச் சாலையை அகலப்படுத்தும் பணி மிகவும் தாமதமாக மெதுவாக நடைபெற்று வருவதால், விவசாயத் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றன

அழகாபுரியில் மக்கள் தொடர்பு முகாம்

Posted: 26 Sep 2013 12:46 PM PDT

தேனி அருகே அழகாபுரியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு, அக்டோபர் 3 ஆம் தேதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன.

வருசநாடு அருகேகுட்டி யானை பலி

Posted: 26 Sep 2013 12:45 PM PDT

தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் ஓடையில் தவறி விழுந்து ஆண் யானை பலியானதாகக் கூறப்படுகிறது.

அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம்

Posted: 26 Sep 2013 12:45 PM PDT

தேனியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

செப்டம்பர் 28 மின் தடை

Posted: 26 Sep 2013 12:45 PM PDT

காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப்.28) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு காலணியிலிருந்து, மடிக்கணினி வரை முதல்வர் வழங்குகிறார்: அமைச்சர்

Posted: 26 Sep 2013 12:44 PM PDT

உயர் கல்வியை ஊக்குவிக்க மாணவர்களுக்கு, காலணியிலிருந்து, மடிக்கணினி வரை விலையில்லாமல் வழங்குகிறார், முதல்வர் ஜெயலலிதா என செய்தி விளம்பரம் மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினார்.

செந்திக்குமார நாடார் கல்லூரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்

Posted: 26 Sep 2013 12:43 PM PDT

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் கணினி அறிவியல் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை, கணினி பயன்பாட்டுத் துறையின் சார்பாக கருத்தரங்கம் மற்றும் பல்வேறு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.     இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வக

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Posted: 26 Sep 2013 12:43 PM PDT

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகைகாரியாபட்டி,  செப். 26:

விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

Posted: 26 Sep 2013 12:43 PM PDT

அருப்புக்கோட்டை நகரில் உள்ள மொத்தம் 8 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து 10-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கும் அரசு சார்பில்      விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா அரு

இயந்திரவியல் கருத்தரங்கு

Posted: 26 Sep 2013 12:42 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயந்திரங்களின் அதிர்வுகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு இயந்திரவியல் துறை மாணவர்களுக்கு நடைபெற்றது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 26 Sep 2013 12:42 PM PDT

:  முதல்அமைச்சரின் விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின்கீழ்,சிவகாசி மதி மருத்துவமனை சார்பில், அனுப்பன்குளம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

வினாடி-வினாபோட்டி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. முதலிடம்

Posted: 26 Sep 2013 12:42 PM PDT

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை கணிதவியல் துறை சார்பில் நடைபெற்ற கணித வினாடி-வினா போட்டியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் முதலிடம் பெற்றது

வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேர் மீது வழக்கு

Posted: 26 Sep 2013 12:41 PM PDT

 சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

Posted: 26 Sep 2013 12:39 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 70 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் என்.ஏ. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீவிலி. காட்டில் பெண் கொலையா? போலீஸ் விசாரணை

Posted: 26 Sep 2013 12:39 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பெண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் அந்த பெண் அணிந்திருந்த உடைகள் வியாழக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் தாற்காலிக மின் இணைப்பு வழங்க கோரிக்கை

Posted: 26 Sep 2013 12:38 PM PDT

காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் தாற்காலிக மின் இணைப்பு வழங்க கோரிக்கைகாரியாபட்டி,  செப். 26:

தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம்

Posted: 26 Sep 2013 12:38 PM PDT

சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில், மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மீது ஊழல் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Sep 2013 12:37 PM PDT

: சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மீதான ஊழல் புகார் குறித்து சட்டபூர்வமான விசாரணை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவு

சிவகங்கை மாவட்டத்திற்கு ப. சிதம்பரம் நாளை வருகை

Posted: 26 Sep 2013 12:37 PM PDT

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை சிவகங்கை மாவட்டத்திற்கு வருகிறார்.

சாலை விபத்தில் நிருபர் சாவு

Posted: 26 Sep 2013 12:37 PM PDT

காரைக்குடி தாலுகா கல்லல் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் நாளிதழ் ஒன்றின் நிருபர் உயிரிழந்தார். கல்லல் அருகே பாகனேரியைச்சேர்ந்தவர்

பள்ளியில் முப்பெரும் விழா

Posted: 26 Sep 2013 12:35 PM PDT

பள்ளியில் முப்பெரும் விழா திருப்பத்தூர், செப்.26:

இரட்டைக் கொலை வழக்கில் அனைத்து எதிரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 26 Sep 2013 12:35 PM PDT

சிவகங்கை அருகே இரட்டைக் கொலையில் தொடர்புடைய அனைத்து எதிரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட பொது மக்கள் முயன்றனர்

1000 மாணவர்களுக்குவிலையில்லா சைக்கிள் வழங்கல்

Posted: 26 Sep 2013 12:34 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 1000 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

Posted: 26 Sep 2013 12:34 PM PDT

சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஒன்றியம் புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம்

Posted: 26 Sep 2013 12:34 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் பட்டா கேட்டு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

காட்டாம்பூரில்என்எஸ்எஸ் முகாம்

Posted: 26 Sep 2013 12:34 PM PDT

  திருப்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காட்டாம்பூர் ஊராட்சியில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமினை மேற்கொண்டனர்.

சிவகாசி

Posted: 26 Sep 2013 12:33 PM PDT

திண்டுக்கல்

Posted: 26 Sep 2013 12:33 PM PDT

வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்

Posted: 26 Sep 2013 12:27 PM PDT

நாட்டின் பிற மாநிலங்களின் வளர்ச்சியை ஒப்பிடும்போது ஓரளவுக்கு வளர்ந்த மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் குழு மதிப்பிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: 7 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 26 Sep 2013 12:26 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து விளக்கமளிக்குமாறு, சம்பந்தப்பட்ட ஏழு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

Posted: 26 Sep 2013 12:25 PM PDT

கடந்த 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவசரச்சட்டம்: பாஜக இரட்டை வேடம்

Posted: 26 Sep 2013 12:24 PM PDT

குற்றப் பின்னணி உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

இந்தியாவுக்கு "நட்பு நாடு' அந்தஸ்தை இப்போது அளிக்க இயலாது: பாகிஸ்தான்

Posted: 26 Sep 2013 12:23 PM PDT

எல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு "நட்பு நாடு' அந்தஸ்தை அளிக்க இயலாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நம் நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது

Posted: 26 Sep 2013 12:22 PM PDT

சுவாமி விவேகானந்தரும், அரவிந்தரும் கனவு கண்ட ஒளிமயமான எதிர்காலமும், உலகிற்கு தலைமை தாங்கும் கடமையும் இந்தியாவுக்கு உள்ளதாக குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறினார்.

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற 30 தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு

Posted: 26 Sep 2013 12:19 PM PDT

இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 30 பேரை இந்திய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை கணினி: இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Posted: 26 Sep 2013 12:06 PM PDT

அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணினியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

பாகிஸ்தான் அதிபரின் மருமகன் கடத்தல்?

Posted: 26 Sep 2013 12:05 PM PDT

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைனின் மருமகன் அப்துல் முத்தலிப், பணம் கேட்டு மிரட்டும் கும்பலால் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்மோகன் சிங் - ஒபாமா இன்று பேச்சுவார்த்தை

Posted: 26 Sep 2013 12:03 PM PDT

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

Posted: 26 Sep 2013 12:02 PM PDT

மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இராக் குண்டுவெடிப்பு: 23 பேர் சாவு

Posted: 26 Sep 2013 11:58 AM PDT

இராக்கில் வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.

கென்யாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்

Posted: 26 Sep 2013 11:58 AM PDT

கென்யாவின் எல்லைப்பகுதிகளில் சோமாலியா பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை மீறல்: இலங்கைக்கு ஐ.நா. கெடு

Posted: 26 Sep 2013 11:56 AM PDT

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய நியாயமான விசாரணைக்கு வரும் மார்ச் மாதத்துக்குள் உத்தரவிடாவிட்டால், அந்நாடு சர்வதேச விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய வங்கி உரிமம்: ரிசர்வ் வங்கி பரிசீலனைக்குப் பின் சிறப்புக்குழு ஆய்வு

Posted: 26 Sep 2013 11:52 AM PDT

புதிய வங்கிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை முதல்கட்டமாக ரிசர்வ் வங்கி பரிசீலித்த பின்னர் சிறப்புக் குழு தனது ஆய்வை மேற்கொள்ளும் என்று அக்குழுவின் தலைவர் பிமல் ஜலான் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டுக்குள் 15 மாடல்கள்: ஹீரோ திட்டம்

Posted: 26 Sep 2013 11:51 AM PDT

இந்த ஆண்டுக்குள் 15 புதிய மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பவன் முஞ்ஜல் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்மில் பணத்தை நிரப்பச் சென்று தலைமறைவானவர் கைது

Posted: 26 Sep 2013 11:49 AM PDT

ஏடிஎம்மில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியவரைத் தில்லி போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த இருவரில் ஒருவரைக் போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.49 லட்சம் மீட்கப்பட்டது.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை:  இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

Posted: 26 Sep 2013 11:49 AM PDT

எட்டு வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு பத்து ஆண்டு கடுங்காவலும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தில்லி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருந்துக் கடைக்காரரை தாக்கியதாக கட்சிப் பிரமுகரின் மருமகள் மீது புகார்

Posted: 26 Sep 2013 11:49 AM PDT

தில்லியில் மருந்துக் கடைக்காரரை மிரட்டி, ஆள்வைத்துத் தாக்கியதாக சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கோபால் யாதவின்  மருமகள் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட்-3 யுனிவர்செல்லில் அறிமுகம்

Posted: 26 Sep 2013 11:49 AM PDT

ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனம், நோட் வகை போன்களில் மேம்படுத்தப்பட்ட கேலக்ஸி நோட்-3 இந்தியாவின் முன்னணி மொபைல் சில்லறை விற்பனையகமான யுனிவர்செல்லில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

கேஜரிவால் விளம்பரம்: ஷீலா தீட்சித் கிண்டல்

Posted: 26 Sep 2013 11:48 AM PDT

தில்லி பிரதேசத்தின் முதல்வராக தான் வருவதற்கு அதிகம் ஆதரவு உள்ளதாக கருத்துக் கணிப்புகளை மேற்கோள்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் செய்து வரும் விளம்பரங்கள் குறித்து ஷீலா தீட்சித் கிண்டல் செய்துள்ளார்.

தில்லி போலீஸ் ரோந்தில் "நானோ'

Posted: 26 Sep 2013 11:48 AM PDT

தலைநகர் தில்லியில் போலீஸ் ரோந்துப் பணியில் டாடாவின் நானோ கார் பயன்படுத்தப்படவுள்ளது.

மாநகராட்சி ஊழியர் சுட்டுக் கொலை

Posted: 26 Sep 2013 11:48 AM PDT

கிழக்கு தில்லி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்த மனோஜ், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தரக் கூடாது: பாஜக

Posted: 26 Sep 2013 11:47 AM PDT

"குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சி ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசர சட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பாஜக தலைவர்கள் நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.

குழந்தைத் தொழிலாளர் நிலை: தில்லி அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

Posted: 26 Sep 2013 11:47 AM PDT

தொழிற்கூடங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் குழந்தைகளை மீட்பதற்கான சோதனைகளை நடத்தி அவர்களை மீட்கும்படி அளிக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றாத தில்லி பிரதேச அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடி பேரணியில் பங்கேற்க ஷீலாவுக்கு பாஜக அழைப்பு

Posted: 26 Sep 2013 11:47 AM PDT

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது

ஏர்ஏஷியா இந்தியா நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ்

Posted: 26 Sep 2013 11:47 AM PDT

ஏர்ஏஷியா இந்தியா நிறுவனத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆசிரியர், பெற்றோர் போராட்டம்

Posted: 26 Sep 2013 11:46 AM PDT

கல்விக்கு எதிரான கொள்கைகளைக் கைவிடக் கோரி "ஆல் இந்தியா சேவ் எஜுகேஷன் கமிட்டி'யின் தில்லி பிரதேச கிளை சார்பில் ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை தர்னா நடைபெற்றது.

முசாஃபர் நகர் கலவரம் எதிரொலி:உ.பி. கூடுதல் டிஜிபி பணி இடமாற்றம்

Posted: 26 Sep 2013 11:46 AM PDT

உத்தர பிரதேச மாநில காவல் துறை சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் அருண் குமார் திடீரென்று வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உத்தர பிரதேச அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது.

கல்லூரி மாணவர்களிடையே மோதல்

Posted: 26 Sep 2013 11:45 AM PDT

கல்லூரி மாணவர்களிடையே மோதல்காஞ்சிபுரம், செப். 26:

லாரி-பஸ் மோதல்: 6 பேர் காயம்

Posted: 26 Sep 2013 11:45 AM PDT

மதுராந்தகம் அருகே வியாழக்கிழமை பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™