Tamil News | Online Tamil News |
- உ.பி., முசாபர் நகர் கலவரம் குறித்து பிரதமர் தலைமையில் நாளை ஆலோசனை
- இலங்கை தமிழர் பகுதியில் நடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு 60 சதவீதம் : 25 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் உற்சாகமாக பங்கேற்பு
- வரும் 27ம் தேதி கூடுகிறது பார்லிமென்ட் கூட்டு குழு : ஸ்பெக்ட்ரம் வரைவு அறிக்கை நிறைவேற்றப்படுமா?
- காங்கிரஸ் செயலர்களுக்காக கண்காணிப்பு முறை: அறிமுகப்படுத்தினார் துணை தலைவர் ராகுல்
- வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம்
- கூட்டணி லாபம், நஷ்டம்: "சர்வே' எடுக்க கருணாநிதி திட்டம்
- சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350 : உயர்வைக் கட்டுப்படுத்த அரசு முயற்சி
- நள்ளிரவில் நீதிபதியை எழுப்பி ஜாமின்: வக்கீல்கள் கொட்டம்
- வெங்காய விலை... மத்திய அரசுக்கு உலை...
- உரத்த சிந்தனை : மோடி எனும் மந்திரம்: எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி
| உ.பி., முசாபர் நகர் கலவரம் குறித்து பிரதமர் தலைமையில் நாளை ஆலோசனை Posted: முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்கும், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில், நாளை நடக்கிறது. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற, வகுப்பு கலவரம் குறித்து, இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.முதன்முறையாக கிராமத்தில்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், கடந்த, 6 மற்றும் 7ம் தேதிகளில், இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த, இந்தக் கலவரத்தில், 50க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு ... |
| Posted: கொழும்பு: இலங்கையில், தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு மாகாணத்தில், 25 ஆண்டுகளுக்குப் பின், நேற்று நடைபெற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், 60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. ஓட்டுப்பதிவில், மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதேநேரத்தில், "தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஓட்டளிக்கக் கூடாது' என, இலங்கை ராணுவத்தினர் மிரட்டியதாக, பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.கடந்த, 1987ல், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1988ல், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது. அதன்பின், தேர்தல் எதுவும் ... |
| வரும் 27ம் தேதி கூடுகிறது பார்லிமென்ட் கூட்டு குழு : ஸ்பெக்ட்ரம் வரைவு அறிக்கை நிறைவேற்றப்படுமா? Posted: புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான, சர்ச்சைக்குரிய வரைவு அறிக்கையை நிறைவேற்ற, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் கூட்டம், வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.ஒத்திவைப்பு:ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்தது. இந்தக் குழுவின் கடைசி கூட்டம், பிப்ரவரி மாதம் நடந்தது. அதன்பின், ஏப்ரல் மாதத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோ தயாரித்துள்ள, வரைவு அறிக்கையின் நகல்கள், குழுவின் உறுப்பினர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.அந்த வரைவு அறிக்கையை ... |
| காங்கிரஸ் செயலர்களுக்காக கண்காணிப்பு முறை: அறிமுகப்படுத்தினார் துணை தலைவர் ராகுல் Posted: புதுடில்லி :கட்சிப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர்களுக்காக, மாதாந்திர கண்காணிப்பு முறையை, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் அறிமுகப்படுத்தி உள்ளார்.இதுதொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:விவரம் சொல்லணும்: இந்த ஆண்டு இறுதியில், மத்திய பிரதேசம், டில்லி, ராஜஸ்தான் உட்பட, ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன் அடுத்த ஏழு மாதங்களில், லோக்சபா தேர்தல் வரவுள்ளது. இதனால், கட்சிப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளை முடுக்கி விடும் பணியில், காங்., துணைத் தலைவர், ... |
| வன்முறை, ஆபாசம் வேண்டாம்: முதல்வர் ஜெ., விருப்பம் Posted: சென்னை:""வன்முறை, ஆபாசம் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று துவங்கியது. முதல்வர் ஜெ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தென்னிந்திய வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்றார். முதல்வர் பேசியதாவது: ஊமைப் படமாக ஆரம்பித்து, பேசும் படங்களாக, வண்ணப் படங்களாக சினிமா வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு, 100 நாட்கள் படங்கள் ஓடினால் சாதனையாக கருதப்படும்; இன்று, இந்திய சினிமாவுக்கு "நூற்றாண்டு கொண்டாட்டம்' என்பது பிரமிக்கத்தக்க சாதனை. இதில் சினிமா துறையினரின் பங்கு மகத்தானது. ... |
| கூட்டணி லாபம், நஷ்டம்: "சர்வே' எடுக்க கருணாநிதி திட்டம் Posted: பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, திராவிட கட்சிகள் விருப்பம் காட்டத் துவங்கியுள்ளன. தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்தால், தி.மு.க.,வுக்கு கிடைக்கக் கூடிய லாபம், நஷ்டம் குறித்து, "சர்வே' எடுக்க, தி.மு.க, தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மோடியின் பிறந்ததினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்கவில்லை. இடதுசாரி கட்சிகளின் தலைவர்களான பிரகாஷ் காரத், பிஸ்வாசை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். பிரதமர் வேட்பாளர் பட்டியலில், முதல்வர் ஜெயலலிதாவும் இடம் ... |
| சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350 : உயர்வைக் கட்டுப்படுத்த அரசு முயற்சி Posted: தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான சிமென்ட், ஒரு மூட்டை விலை, 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான, கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசின் தலையீடு காரணமாக மூட்டைக்கு, 30 ரூபாய் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, 2007ல் ஒரு மூட்டை, 180 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை, படிப்படியாக உயர்ந்து தற்போது, 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிமென்ட் உற்பத்தியாளர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, வேண்டுமென்றே அவ்வப்போது விலையை உயர்த்துவதே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.கடந்த மாத துவக்கத்தில், ஒரு ... |
| நள்ளிரவில் நீதிபதியை எழுப்பி ஜாமின்: வக்கீல்கள் கொட்டம் Posted: நேற்று முன்தினம், எம்.கே.பி.நகரில் இருந்து அண்ணா சதுக்கம் சென்ற பேருந்து, வால்டாக்ஸ் சாலையில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தால், மாநகர பேருந்து ஓட்டுனர் கடுமையாக தாக்கப்பட்டார். அவரை தாக்கிய வழக்கறிஞருக்கு, சம்பவம் நடந்த அன்றே, நள்ளிரவில் ஜாமின் வழங்கப்பட்டது.வேண்டுமென்றே வழிவிடாமல்: வழித்தடம் "2ஏ'வில் இயக்கப்படும் பேருந்து ஒன்றில், அனந்த குமார், 28 ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம், வால்டாக்ஸ் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் அவர் இயக்கிய பேருந்து திரும்ப இருந்த போது, ஒருவர் அபாயகரமான முறையில் பேருந்தை முந்துவதற்கு ... |
| வெங்காய விலை... மத்திய அரசுக்கு உலை... Posted: கோவை மக்களுக்கு தேவையான பெல்லாரி (பெரிய) வெங்காயம், மகராஷ்டிரா மாநிலம் புனே, சோலாப்பூர் பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் லாரிகளில் வருகிறது. தினமும் கோவைக்கு 450 டன், பொள்ளாச்சிக்கு 360 டன், திருப்பூருக்கு 270 டன் மேட்டுப்பாளையத்துக்கு 100 டன் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜனவரியில் கிலோ 12 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், இரு மாதங்களாக "ராக்கெட்' வேகத்தில் உயர்ந்துள்ளது. தற்போது, மொத்த மார்க்கெட்டில் கிலோ 65 ரூபாயாகவும், சில்லரை விலையில் 85 ரூபாயாகவும் உள்ளது.உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துவிட்டதாக சிலர் தெரிவித்தாலும், மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் ஒரு ... |
| உரத்த சிந்தனை : மோடி எனும் மந்திரம்: எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி Posted: கட்சியை வளர்க்க இளைஞர்களை இணைத்து, சிறப்பாக பணிபுரியும் இளைஞரை, "கட்சியின் தூண்' என்று தலைமை பாராட்டும். அந்த இளைஞன், கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டர்களும், தோழர்களும் விரும்புவர். அண்ணாதுரையின் மறைவிற்கு பின், நெடுஞ்செழியன் தலைமை ஏற்று இருந்தால், எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து வெளியேறாமல், தலைமை ஏற்று இருந்தால், வைகோ தி.மு.க.,வின் தலைமை ஏற்று இருந்தால், சில வரலாற்றுப் பிழைகள் நடந்திருக்காது.கடந்த, 1938ல், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், மீண்டும், 1939ல், தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். காந்திஜிக்கு, இது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 22,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |