Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தடை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கிடுக்கிப்பிடி

Posted:

சென்னை: பள்ளி கல்வித்துறையில், மொபைல் போன் பயன்படுத்த, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மொபைல் போன் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, தொடக்கக் கல்வித் துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 2007ம் ஆண்டிலேயே, மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், நகரப் பகுதிகளில் உள்ள, பள்ளி மாணவர்களில் ஒரு சிலர், மொபைல் போனை கொண்டு வருகின்றனர். இதை முற்றிலும் ...

"2ஜி' ஊழல்: தி.மு.க., புது கோரிக்கை: கூட்டு குழு கூட்டம் ஒத்திவைப்பு

Posted:

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் தொடர்பாக, தொலை தொடர்பு துறை சார்பில், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்' என, பார்லிமென்ட் கூட்டு குழுவுக்கு தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் கூடுவதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டு குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது."2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, ஜே.பி.சி., என்ற பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவில், லோக்சபா உறுப்பினர்கள், 20 பேரும், ராஜ்யசபா உறுப்பினர்கள், 10 பேரும், இடம் பெற்றுள்ளனர். இதன் ...

"மாஜி' ராணுவ தளபதி சிங் ஏற்படுத்திய ரகசிய பிரிவு: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு திட்டம்

Posted:

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங்கால் ஏற்படுத்தப்பட்ட, ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு, முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட, அரசு திட்டமிட்டுள்ளது. வி.கே.சிங், ராணுவ தளபதியாக இருந்தபோது, ராணுவத்தில், தொழில்நுட்ப பணிகள் டிவிஷன் என்ற தனிப் பிரிவை ஏற்படுத்தினார். இந்த பிரிவில் உள்ளவர்கள், தொழில்நுட்ப ரீதியிலான ரகசிய புலனாய்வு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், பத்திரிகை ஒன்றில், தனிப்பிரிவு பற்றிய, சர்ச்சைக்குரிய செய்தி, நேற்று வெளியாகி இருந்தது. அதில் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு

Posted:

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக, உயர்த்தப்பட்டு உள்ளது. இதை, ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்க, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். இந்த வகையில், கடந்த, ஏப்ரல் மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 72 சதவீதத்திலிருந்து, 80 சதவீதமாக்கப்பட்டது. இது, ஜனவரி 1ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்தது. ஜூலை மாதம், 1ம் ...

அமெரிக்க நிறுவனத்துடன் அணு உலை ஒப்பந்தம் உறுதி: சிவசங்கர் மேனன் அறிவிப்பு

Posted:

புதுடில்லி: ""அமெரிக்க நிறுவனத்துடன் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளோம். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால், இந்தியாவில் ஏற்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்கள், இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.ஐ.நா., கூட்டம்: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள, பிரதமர், மன்மோகன் சிங், இம்மாதம், அமெரிக்கா செல்கிறார். அப்போது, அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன், அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுகிறார்; அந்த ஒப்பந்தம், ...

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நடப்பதென்ன? கர்நாடகம், கேரளாவில் தேடுவதை தவிர பலன் காணோம்

Posted:

ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் கொலை வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவினர், 150க்கும் மேற்பட்டோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட, நால்வரும் தப்பிச் சென்றதாக கூறப்படுவதால், அண்டை மாநில போலீசின் உதவியை, சிறப்பு புலனாய்வு பிரிவினர் நாடியுள்ளனர்.ஜூலை மாதம்: வேலூரில், ஜூலை, 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பனை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. இது தொடர்பான பரபரப்பு அடங்கும் முன், சேலத்தில், அதே மாதம், 19ம் தேதி, பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷை, மூன்று ...

டி.டி., மருத்துவ கல்லூரியை ஏற்று நடத்த முடியாது: அரசு கைவிரிப்பு

Posted:

சென்னை: "டி.டி., மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வாய்ப்பில்லை. எம்.பி.பி.எஸ்., தவிர்த்து, மாற்று படிப்புகளில் சேர விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவோம்' என, மாணவியருடன் நடத்திய பேச்சில், அரசு தெரிவித்துள்ளது. நிச்சயம் தீர்வு கிடைக்கும் எனச் சென்ற மாணவியர், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.மருத்துவ கவுன்சில் அனுமதி: திருவள்ளூர், டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2010 - 11ல் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் மீறி, மாணவர்கள் சேர்க்கை ...

இலங்கை வடக்கு மாகாணத்தில் இன்று தேர்தல்

Posted:

கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்திலும், மத்திய மற்றும் வட மேற்கு மாகாணத்திலும், இன்று தேர்தல் நடைபெறுகிறது.ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல், முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் அடிப்படையில் தற்போது, வடக்கு மாகாண தேர்தல் நடத்தப்படுகிறது.142 பேர் தேர்வு: வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை தீவு மாவட்டங்களிலும், வட மேற்கு மாகாணத்தில், குருநாகல், புத்தளம் மாவட்டங்களிலும், மத்திய ...

கைவீசம்மா கைவீசு.. இது அந்த காலம்...: மக்கள் மீது கல்வீசினார் திண்டுக்கல் சப்- கலெக்டர்

Posted:

திண்டுக்கல்: "எஜமான்.. சாமி' என, அரசு அதிகாரிகளை, அந்தக்காலத்து மக்கள் பணிவாக அழைப்பர். அதிகாரிகளும், தங்களால் முடிந்த வரை, மக்களுக்கு நல்லது செய்வர். இந்தக் காட்சிகளை இப்போது பார்ப்பது ஆபூர்வம். தற்போது, அதிகாரிகளும் அப்படி இல்லை.. மக்களும் மாறி விட்டனர். இதில் சில அதிகாரிகள் மட்டும் விதிவிலக்கு. இந்த விதிவிலக்கிலும் வித்தியாசமானவர், திண்டுக்கல் சப்- கலெக்டர் பி.மதுசூதனரெட்டி. கோபம் வந்தால்... என்ன செய்வார் என்றே தெரியாது. கையில் கிடைத்ததை தூக்கி வீசுவார். "டென்ஷன்' உச்சத்தில் இருந்தால், கல்லையும் எடுத்து எறிவார். இது கதை இல்லைங்க...நிஜத்திலும் நிஜம். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™