Tamil News | Online Tamil News |
- பாட்டிலுடன் ஒரு லிட்டர் குடிநீர் விலை ரூ.10! குடிநீர் வியாபாரத்தில் குதிக்கிறது அரசு
- தி.மு.க.,வை தோற்கடிக்கும் வகையில் களப்பணியாற்றுங்கள்: முதல்வர் ஜெயலலிதா
- ஜெ., வழக்கை விசாரிக்கும் நீதிபதி தீர்ப்பளிக்க முடியாது: கருணாநிதி
- நடிகர் ரஜினி ஆதரவை கோருகிறது பா.ஜ., : மோடி கூட்டத்துக்கு நேரில் அழைக்கவும் முடிவு
- பதவி முடியும்போது வளர்ச்சி பணிகளில் ஆர்வம் : தமிழக மக்கள் பிரதிநிதிகளின் திடீர் ஞானோதயம்
- கூட்டணி அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: சீட் பேரத்தை அதிகரிக்க மவுனம் காக்க தே.மு.தி.க., திட்டம்
- தென்மேற்கு பருவமழை ஐந்து மாவட்டங்களில், "புஸ்'
- உரத்த சிந்தனை : திறக்காத உண்மையின் கதவுகள்: ஆர்.நடராஜன் -
- சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி
- தெலுங்கானா விவகாரம்: 46 நாட்களாக நடக்கும் போராட்டத்தால் மத்திய அரசு குழப்பம்
| பாட்டிலுடன் ஒரு லிட்டர் குடிநீர் விலை ரூ.10! குடிநீர் வியாபாரத்தில் குதிக்கிறது அரசு Posted: சென்னை:அரசு பஸ்கள், பஸ் நிலையங்கள் போன்றவற்றில், ஒரு பாட்டில் 10 ரூபாய் என்ற விலையில் வினியோகிக்கப்படும், "அம்மா மினரல் வாட்டர்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, இன்று துவக்கி வைக்கிறார். மலிவு விலை உணவு, மலிவு விலை அரிசி என, பல்வேறு துறைகளில், கால் பதித்த தமிழக அரசு, தற்போது குடிநீர் வியாபாரத்திலும் இறங்கியுள்ளது.மலிவு விலை குடிநீர்: பஸ்களில், நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு, தண்ணீர் பாட்டில் வாங்குவதே, பெரும்பாடு ஆகிடும். புறப்படும் பகுதியில் இருந்து, சேர வேண்டிய பகுதிக்குச் சென்று சேர்வதற்குள், குடிக்க நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. ... |
| தி.மு.க.,வை தோற்கடிக்கும் வகையில் களப்பணியாற்றுங்கள்: முதல்வர் ஜெயலலிதா Posted: சென்னை : "லோக்சபா தேர்தலில், தி.மு.க., மண்ணை கவ்வும் வகையில், கட்சித் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்' என, அ.தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு, முதல்வர் எழுதிய, கடிதத்தில் கூறியிருப்பதாவது:மனிதநேயம் மிக்க, அண்ணாதுரை துவக்கிய கட்சி, தீய சக்தியின் பிடியில் சிக்கி, தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர் அண்ணாதுரை.சரணாகதி:எந்தக் கொள்கையை முன் வைத்து, அண்ணாதுரை ஆட்சியைப் பிடித்தாரோ, அந்தக் ... |
| ஜெ., வழக்கை விசாரிக்கும் நீதிபதி தீர்ப்பளிக்க முடியாது: கருணாநிதி Posted: சென்னை: "ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாலகிருஷ்ணா, தீர்ப்பளிக்க முடியாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா, இம்மாதம், 12ம் தேதியோடு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், மாதத்தின் இடையில் ஓய்வு பெறுவது, ஓய்வூதியம் போன்றவை வழங்க இடையூறாக இருக்கும் என்பதால், மாத இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, பாலகிருஷ்ணா இம்மாதம், 30ம் தேதி வரை பணியாற்றுவார்.ஆனால், அவர் ... |
| நடிகர் ரஜினி ஆதரவை கோருகிறது பா.ஜ., : மோடி கூட்டத்துக்கு நேரில் அழைக்கவும் முடிவு Posted: சென்னை : நடிகர் ரஜினியின் ஆதரவை, தமிழக பா.ஜ., கேட்கிறது. இதற்காக திருச்சியில், கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு, ரஜினியை நேரில் சந்தித்து அழைக்கவும் திட்டமிட்டு உள்ளது.லோக்சபா தேர்தல் நடக்க, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் பிரசாரத்தை கடந்த மாதம் மோடி துவக்கினார். இந்நிலையில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராகவும், மோடி அறிவிக்கப்பட்டு உள்ளார்.எதிரணியில் ... |
| பதவி முடியும்போது வளர்ச்சி பணிகளில் ஆர்வம் : தமிழக மக்கள் பிரதிநிதிகளின் திடீர் ஞானோதயம் Posted: எம்.பி.,க்கள் பலரும், கடைசி காலத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் பலர், தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவிடுவதில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை. ஒரு சிலர் மட்டுமே, நான்கு ஆண்டுகளில் முழுமையான தொகையை பரிந்துரை செய்து, அத்திட்டங்களைச் செயல்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர்.ரூ.5 கோடி:ஆரம்பத்தில் ஒரு கோடி ரூபாயாக இருந்த எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 2 கோடியாக உயர்த்தப்பட்டு, தற்போது, 5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிதியைப் பயன்படுத்தி, தொகுதி மேம்பாட்டு பணிகளை ... |
| கூட்டணி அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: சீட் பேரத்தை அதிகரிக்க மவுனம் காக்க தே.மு.தி.க., திட்டம் Posted: "சீட்' பேரத்தை அதிகரிப்பதற்காக, கூட்டணி குறித்த அறிவிப்பை தள்ளிபோட தே.மு.தி.க., தலைமை முடிவெடுத்து உள்ளது. தே.மு.தி.க.,வை வலையில், வீழ்த்த தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடினார்.அவருக்கு, காங்., துணைத் தலைவர் ராகுல், வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, காங்., நிர்வாகிகள், போட்டி, போட்டுக் கொண்டு, விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., - காங்., இடையே கூட்டணி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் ஏற்பட்டது. தே.மு.தி.க., செயற்குழு ... |
| தென்மேற்கு பருவமழை ஐந்து மாவட்டங்களில், "புஸ்' Posted: தமிழகத்தில், தென் மேற்கு பருவமழை காலத்தில், இதுவரை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், போதுமான மழை பெய்யவில்லை; திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில், மிகவும் சொற்பமான அளவே பெய்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழையால் வட மாவட்டங்களும், தென் மேற்குப் பருவ மழையால், தென் மாவட்டங்களும் நீர் பெறுகின்றன.கடந்தாண்டில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிலைக்கு, தமிழகம் தள்ளப்பட்டது. ஆனால், இந்தாண்டு அதிகளவு மழைப் பொழிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சாட்சியாக, அடிக்கடி, வெப்பச் ... |
| உரத்த சிந்தனை : திறக்காத உண்மையின் கதவுகள்: ஆர்.நடராஜன் - Posted: ஆட்சி இருந்தால் அனைத்தும் நமதே என்று, ஆளும் தரப்பு நினைக்கிறது. இதில் மலை, மணல், ஆறு, மரம், மக்களின் வரி, கஜானா எல்லாமே அடக்கம். மக்களின் பணத்தை எப்படி மடக்கலாம்; வந்த பின், அதிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் என்று, நினைக்கும் அளவுக்கு, நம் ஜனநாயகம் வளர்ந்திருக்கிறது.மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அரசியல் தொடர்புடைய வியாபாரிகள் மீது, இதுவரை என்ன கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நில அபகரிப்பு வழக்குகளில், தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர்? அரசியல் தொடர்புகள், பலரை எல்லாக் குற்றங்களிலிருந்தும் காப்பாற்றி விடுகிறது.வங்கிக் ... |
| சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி Posted: "பச்சோரி கமிட்டி அறிக்கையையும், தமிழக அரசின் கோரிக்கையையும், நிராகரிக்கிறோம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வளர்ச்சி ஏற்படும் என்பதால், சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.ரூ.2,100 கோடி "அவுட்!' : சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கப்பல் துறை இணை செயலர், ஜவ்கரி ... |
| தெலுங்கானா விவகாரம்: 46 நாட்களாக நடக்கும் போராட்டத்தால் மத்திய அரசு குழப்பம் Posted: ஐதராபாத்:தெலுங்கானா தனி மாநிலத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்து, சீமந்தரா பகுதியைச் சேர்ந்த, பொதுமக்கள், அரசியல்வாதிகள், 46 நாட்களாக நடத்தி வரும், தீவிர போராட்டங்களால், மத்திய அரசு குழப்பமடைந்து உள்ளது. இதனால், தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை, மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு, மத்திய அரசு தள்ளப்பட்டு உள்ளது."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும்' என, காங்., மேலிடம், முடிவெடுத்தது. இதற்கான நடைமுறைகளும் துவக்கப்பட்டு உள்ளன. ஆனால், தெலுங்கானா அல்லாத, ராயலசீமா, கடலோர ஆந்திரா மற்றும் சீமந்திரா பகுதிகளைச் சேர்ந்த, மக்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 15,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |