Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உற்பத்தி செலவு அதிகரிப்பால் "டாஸ்மாக்' மதுபானம் விலை உயருகிறது

Posted:

மது ஆலைகள், உற்பத்தி செலவை காரணம் காட்டி, கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி வருவதால், நடப்பாண்டு, விற்பனை இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், மதுபானங்களின் விலை உயர்வை அரங்கேற்றுவது குறித்து, அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.தமிழகத்தில், 2003ம் ஆண்டு முதல், மது விற்பனையை, அரசே, "டாஸ்மாக்' மூலம் மேற்கொண்டு வருகிறது. மது விற்பனையில், ஆண்டுக்கு ஆண்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருவதாக கூறினாலும், கடந்த நிதி ஆண்டில், விற்பனை இலக்கு பூர்த்தி செய்யப்படவில்லை.டாஸ்மாக் இணையதள தகவலின்படி, 2010ம் நிதியாண்டில், ஆண்டு விற்பனை, 15 ஆயிரம் கோடி ரூபாயாக ...

லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேச வேண்டாம்: கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு

Posted:

"லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இப்போது யாரும் பேசவேண்டாம்; தேர்தல் நேரத்தில் முடிவு செய்யலாம்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அறிவித்துள்ளார்.தே.மு.தி.க., செயற்குழு கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் வந்திருந்தனர்.ஆனால், காலை, 11:00 மணி ஆகியும் கூட்டம் துவங்கவில்லை. கூட்டத்தை துவங்க ...

சேலத்தில் 7 மாதத்தில் நடந்த 18 கொலைகள் : ரவுடி, கட்டபஞ்சாயத்து கும்பலால் விபரீதம்

Posted:

சேலத்தில், நடப்பாண்டு ஜனவரி துவங்கி, ஆகஸ்ட், 15 வரை, 18 கொலைகள் நடந்துள்ளன.சேலத்தில் ரவுடிகள் இடையே ஏற்பட்டுள்ள முன் பகை காரணமாக, அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், அன்னதானப்பட்டி மூனாரங்கரடு பகுதியில் பெருமாள் வகையறாக்களும், அவர்களின் எதிர் கோஷ்டியினரும் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.அன்னதானப்பட்டி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 2013 ஜனவரி, 23ல், சேலம் மணியனூரில், முத்து மகன் ரகு, தம்மண்ண செட்டித் தெருவில் அமிர்தலிங்கம் மகன் சரவணன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அன்னதானப்பட்டியை சேர்ந்த ...

ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள்

Posted:

சென்னை : முன்பதிவு துவங்கிய, ஏழு நிமிடங்களில் தீபாவளி முன்பதிவுக்கான ரயில் டிக்கெட்டுகள் காலியானதால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நவ. 1ம் தேதிக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வடமாநிலங்களிலிருந்தும் வேலைக்காக வந்து, அதிகம் பேர் சென்னையில் வசித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்தாண்டுக்கான தீபாவளி, நவ., 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 60 நாட்களுக்கு முன், ரயில்வே முன்பதிவு செய்யலாம் என்பதால், அக். 30ம் தேதிக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. 10 நிமிடங்களில் ...

கச்சத்தீவு வழக்கில் மத்திய அரசின் வாக்குமூலம் : கருணாநிதி கடும் கண்டனம்

Posted:

சென்னை : "கச்சத்தீவு, இலங்கை வரம்புக்குள் உள்ளது' என்ற மத்திய அரசின் வாக்குமூலம், கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கச்சத்தீவு பற்றிய வழக்கில், மத்திய அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில், கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கச்சதீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்னை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. தொடர்ந்து, இந்தியா, இலங்கை கடல் பகுதியில், சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது, கச்சத்தீவு இலங்கை ...

இரவில் பெட்ரோல் பங்க்கை மூட முடிவு?

Posted:

புதுடில்லி:பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்கும் வகையில், இரவு, 8:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை வரை மூட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த முடியும் என மத்திய அரசுக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்க டாலருக்கு இணையாக, இந்திய ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதால், மத்திய அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நிதிப் ...

உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் ஆதாயம் பெற காங்., தீவிரம்

Posted:

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்களின் பலன்களை மக்களிடம் விளக்கி, தேர்தல் ஆதாயம் அடைய, காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது. "ஏழ்மையை அகற்றுவோம்' என்ற கோஷத்தை முன்வைத்து, காங்., கட்சித் தலைவர்கள், அடுத்த சில மாதங்களில், நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளனர்.குறைந்த விலை:குறைந்த விலையில், கோதுமை, அரிசி உள்ளிட்ட, உணவுப் பொருட்களை, ஏழை மக்களுக்கு வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதா, சமீபத்தில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த உணவு பாதுகாப்பு திட்டத்தின் ...

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விரைவில் 10 சதவீதம் உயர்கிறது!

Posted:

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், தற்போது, 80 சதவீதம் அகவிலைப்படியாக உள்ளது. இதை, 10 சதவீதம் உயர்த்தி, 90 சதவீதமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இது, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான, ...

காங்கிரஸ் சாமர்த்தியத்தில் சிக்கியது தி.மு.க.,: "2ஜி' ஊழல் பாதிப்பு வராமல் நடவடிக்கை

Posted:

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, பார்லிமென்ட் கூட்டுக் குழுவில், காலியான இடத்திற்கு போட்டியிடாமல், தி.மு.க., மவுனமாக ஒதுங்கியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தந்திரமே காரணம் என, கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தங்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க, காங்கிரஸ் மேற்கொண்ட சாமர்த்திய நடவடிக்கையில், தி.மு.க., சிக்கிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க, மிகப்பெரிய போராட்டத்திற்கு பின், பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவரான, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ, பல ஆலோசனைக் ...

சிரியா மீது தாக்குதல் நடத்த பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோருகிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா

Posted:

வாஷிங்டன் : சிரியா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்து உள்ளார்.சிரியா நாட்டில், அதிபர் பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்துவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™