Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது

Posted: 21 Sep 2013 01:06 PM PDT

எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

சிட்பண்ட் மோசடி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு சம்மன்

Posted: 21 Sep 2013 01:02 PM PDT

சாரதா "சிட்பண்ட்' மோசடி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு மேற்கு வங்க போலீஸ் சம்மன் அனுப்பியது.

முசாஃபர்நகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராஜ்நாத்துக்கு அனுமதி மறுப்பு

Posted: 21 Sep 2013 01:02 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் வகுப்பு மோதல்களால் பாதிக்கப்பட்ட முசாஃபர்நகர் மாவட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு அந்த மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பந்த்: ஸோபியானில் 9-வது நாளாக ஊரடங்கு நீடிப்பு

Posted: 21 Sep 2013 12:59 PM PDT

ஸோபியானில் 5 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் முழு கடை அடைப்பு போராட்டம் நடந்தது. úஸாபியானில் 9-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடித்தது.

நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 21 Sep 2013 12:56 PM PDT

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளியை பலாத்காரம் செய்த வழக்கில் மருத்துவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக,காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது

Posted: 21 Sep 2013 12:56 PM PDT

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் வெற்றி பெறக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா

Posted: 21 Sep 2013 12:55 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடவியல் துறை சார்பில், மாணவர் மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போளூர் ஒன்றியக் கிராமங்களில் அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

Posted: 21 Sep 2013 12:55 PM PDT

போளூர் ஒன்றியத்தில் உள்ள கேளூர், கல்வாசல், சந்தவாசல் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியத்துக்கே ஓய்வு தந்து மத்திய அரசு சாதனை

Posted: 21 Sep 2013 12:55 PM PDT

புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரில் ஓய்வூதியத்துக்கே ஓய்வு கொடுத்து மத்திய அரசு சாதனை படைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.

மாதந்தோறும் செயல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

Posted: 21 Sep 2013 12:54 PM PDT

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், மாதந்தோறும் செயல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் சேவைசார் கட்டமைப்பு கருத்தரங்கு

Posted: 21 Sep 2013 12:54 PM PDT

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் எம்சிஏ துறை சார்பில் சேவைசார் கட்டமைப்பு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 21 Sep 2013 12:54 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில், புரட்டாசி முதலாம் சனிக்கிழமையை யொட்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நல்லவன்பாளையத்தில் 24ல் கண் சிகிச்சை முகாம்

Posted: 21 Sep 2013 12:53 PM PDT

: திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) இலவச கண் சிகிச்சை மற்றும் விழிலென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெறுகிறது.

ஆட்டோ டிரைவரிடம் தகராறு: 4 பேர் கைது

Posted: 21 Sep 2013 12:53 PM PDT

வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவரிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்ததாக 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்கள்

Posted: 21 Sep 2013 12:52 PM PDT

திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, 4 பெண்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர்.

இளம்பெண் மாயம்

Posted: 21 Sep 2013 12:52 PM PDT

திருவண்ணாமலை அருகே திருமணத்துக்குச் சென்றபோது காணாமல் போன இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 450 பேர் தேர்வு

Posted: 21 Sep 2013 12:52 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், பல்வேறு நிறுவனங்களில் 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

சிந்து நதி ஆணையக்குழு இந்தியா வருகை

Posted: 21 Sep 2013 12:52 PM PDT

செனாப் நதியில் தொடங்கவுள்ள மின் உற்பத்தி திட்டம் குறித்து ஆலோசிக்க பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையக்குழு இந்தியா வந்தது.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

Posted: 21 Sep 2013 12:52 PM PDT

ஆரணியை அடுத்த அடையபுலம், சித்தேரி சக்திநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 65 பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மின் வாரிய ஊழியரை மிரட்டி வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 21 Sep 2013 12:51 PM PDT

திருவண்ணாமலையில் மின்வாரிய ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில் சிபிஎஸ்இ முதல்வர்கள் கூட்டம்

Posted: 21 Sep 2013 12:51 PM PDT

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இனிப்பு பலகாரத்தை உண்ட 6 குழந்தைகள் மயக்கம்

Posted: 21 Sep 2013 12:51 PM PDT

பிகாரில் மர்மப் பெண் கொடுத்த இனிப்பு பலகாரத்தை உண்டதால் மயக்கமடைந்த 6 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா பள்ளி சீரமைப்புப் பணிக்கு ரூ.10 லட்சம்: எம்.பி. முகுல் ராய் வழங்கினார்

Posted: 21 Sep 2013 12:51 PM PDT

சிறுமி இறந்ததால் அடித்து நொறுக்கப்பட்ட பள்ளியின் சீரமைப்புப் பணிக்காக தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை எம்.பி. முகுல் ராய் வழங்கியுள்ளார்.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் யாசின் பட்கல் கைது

Posted: 21 Sep 2013 12:50 PM PDT

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, இந்திய முஜாகிதீன் இயக்கத் தலைவர் யாசின் பட்கலை தேசிய புலனாய்வு அமைப்பினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

திருவண்ணாமலை

Posted: 21 Sep 2013 12:50 PM PDT

"கல்வி உரிமைச் சட்டத்தால் 23 கோடி குழந்தைகள் பள்ளிகளில் சேர்ப்பு'

Posted: 21 Sep 2013 12:47 PM PDT

கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, நாட்டில் 23 கோடி குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு: வி.கே.சிங்

Posted: 21 Sep 2013 12:44 PM PDT

தன் மீதான குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை, அபத்தமானவை என ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் பதிவு செய்வதற்கான பயிற்சி முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Posted: 21 Sep 2013 12:42 PM PDT

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் தனியார் இணைய தள உரிமையாளர்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியர் டி.என். ஹரிஹரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

காமராஜர் பல்கலை. ஆட்சி மன்றக்குழு தேர்தல்:செப். 25இல் மனுத்தாக்கல்

Posted: 21 Sep 2013 12:42 PM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் ஒதுக்கீட்டுக்கான ஆட்சிமன்ற பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்

Posted: 21 Sep 2013 12:42 PM PDT

திருத்தங்கல்- விருதுநகர் சாலையில் செக்போஸ்ட் அருகே கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர் கல்வி தின விழா

Posted: 21 Sep 2013 12:41 PM PDT

ராஜபாளையம் ராம்கோ குருப் டெக்ஸ்டைல்ஸ் டிவிஷன் ராஜபாளையம் மில்ஸ் சார்பில் தொழிலாளர் கல்வி தின விழா கொண்டாடப்பட்டது.

சென்னகேசவப் பெருமாள் கோயில் தங்கத் தேரோட்டம்

Posted: 21 Sep 2013 12:41 PM PDT

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் சமேத செங்கமல நாச்சியார் திருக்கோயில் தங்கத் தேரோட்டம்  நடைபெற்றது.

கல்வி வளர்ச்சிக்கு உதவ 14 வகை விலையில்லா பொருள்கள்: எம்.எல்.ஏ.

Posted: 21 Sep 2013 12:41 PM PDT

தமிழகத்தில் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், அரசு மாணவ, மாணவியருக்கு 14 வகையான விலையில்லா பொருள்களை வழங்கி வருகிறது.  இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார் சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன்

மகளிர் சுய உதவிக் குழு பணிகள்: அதிகாரி ஆய்வு

Posted: 21 Sep 2013 12:40 PM PDT

: காரைக்குடி தாலுகா சங்கராபுரம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்பட்டுவரும் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேல

மோசடி நிதி நிறுவனங்களில் முதலீடுகளை தவிர்க்க காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 21 Sep 2013 12:40 PM PDT

மோசடி நிதி நிறுவனங்களில் பொது மக்கள் முதலீடு செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி சிவகங்கை, வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறை சார்பில் துண்டு பிரசுரங்களை வீடுவீடாக வழங்கும் விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர்சேர்த்தல்: இணையதள மையங்களுக்கு பயிற்சி

Posted: 21 Sep 2013 12:40 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் செய்தல், ஒரே சட்டமன்றத் தொகுதியில் பாகம் மாற்றம் ஆகியவற்றை இணையதள மையங்கள் மூலம் பதிவு செய்திட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

துலாவூர் நகரத்தார் பெண்கள் குருபீடத்தில் குருபூஜை

Posted: 21 Sep 2013 12:39 PM PDT

காரைக்குடி அருகே துலாவூர் நகரத்தார் பெண்கள் குருபீடத்தில் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதும், சைவ ஆதீன மடங்கள் பதினெட்டில் ஒன்றானதுமான துலாவூர் ஆதீனத்தில் ஆதி குருவாகிய ஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகரின் மகா குருபூஜை நடைபெற்றது.

பழுதான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Posted: 21 Sep 2013 12:39 PM PDT

திருப்புவனத்திலிருந்து குருந்தங்குளம் செல்லும் சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளது. இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மேலச்சொரிக்குளம் கிராம மக்கள் கோரி வருகிறார்கள்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Posted: 21 Sep 2013 12:38 PM PDT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நினைவாற்றல் திறன் மேம்பாட்டு மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடைபெற்றன.

உலக கடலோர தூய்மை தினம் கடைப்பிடிப்பு

Posted: 21 Sep 2013 12:37 PM PDT

: ராமேசுவரத்தில் கடலோர காவல் படை சார்பில் உலக கடலோர தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.  கடலோரப் பகுதிகளில் கிடக்கும் குப்பை, கழிவுகளை அகற்றும்பணியில் கடலோர காவல் படையினர் மற்றும்

மயானத்துக்கு பாதை அமைக்க கோரிக்கை

Posted: 21 Sep 2013 12:37 PM PDT

பொன்னாம்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பாதை அமைத்துத்தருமாறு சிவகங்கை வட்டாட்சியரிடம் சனிக்கிழமை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

Posted: 21 Sep 2013 12:37 PM PDT

காரைக்குடி முத்தாலம்மன் கோயில் அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத உற்சவத்தையொட்டி, சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

தேசிய ஊரக வேலைத் திட்ட சமூக தணிக்கை பயிற்சி

Posted: 21 Sep 2013 12:36 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

காங்கிரஸ் சாதனை விளக்க பிரசாரம்

Posted: 21 Sep 2013 12:36 PM PDT

சிவகங்கை நகர் காங்கிரஸ் சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிறந்த தினத்தையொட்டி சாதனை விளக்க இருசக்கர வாகன பிரசார ஊர்வலம் நகர் காங்கிரஸ் தலைவர் கே.சண்முகராஜன் தலைமையில் நடைபெற்றது

குழந்தைகள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Posted: 21 Sep 2013 12:36 PM PDT

முதுகுளத்தூர், கடலாடி ஆகிய பேருந்து நிலையங்களில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நிகழ்ச்சியில்  குழந்தைகளின் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஊட்டச்சத்து

பயோனீர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நுண்கலை விழா

Posted: 21 Sep 2013 12:35 PM PDT

திருப்புவனம் வட்டம், பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நுண்கலை விழா நடைபெற்றது.

24-இல் மின்நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

Posted: 21 Sep 2013 12:35 PM PDT

ராமநாதபுரத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

பா.ஜ.க. ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

Posted: 21 Sep 2013 12:35 PM PDT

திருச்சியில் இளம் தாமரை மாநாட்டுக்கு 20 வாகனங்களில் செல்ல ஆண்டிபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கென்யாவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: 30 பேர் சாவு

Posted: 21 Sep 2013 12:35 PM PDT

கென்யாவில் வணிக வளாகம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்.

3 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

Posted: 21 Sep 2013 12:34 PM PDT

தேனி மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தாமரைக்குளம் ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி வார விழா

Posted: 21 Sep 2013 12:34 PM PDT

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

மெக்ஸிகோவில் நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் சாவு

Posted: 21 Sep 2013 12:34 PM PDT

மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தையில் குப்பைகள் தேக்கம்

Posted: 21 Sep 2013 12:34 PM PDT

தேனி உழவர் சந்தை அருகே காய்கறி மற்றும் குப்பைக் கழிவுகள் அப்புறப்படுத்தாமல் தேங்கிக் கிடப்பதால், சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் துர்நாற்றத்தால் சிரமப்பட்டு வருகின்றனர்.

அஞ்சலகங்களில் சூரிய சக்தி விளக்குகள் விற்பனை

Posted: 21 Sep 2013 12:33 PM PDT

தபால்துறையும், இன்ட்ரி நிறுவனமும் இணைந்து, மேம்படுத்தப்பட்ட புதிய வகை சூரிய விளக்குகளின் விற்பனைத் தொடக்க விழாவை, பெரியகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடத்தின

ஆடுகளைக் கடத்தியதாக 5 பேர் கைது

Posted: 21 Sep 2013 12:33 PM PDT

தேனியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை கடத்திச் சென்றதாக, 5 பேரை வெள்ளிக்கிழமை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மணல் திருடியவர் கைது

Posted: 21 Sep 2013 12:33 PM PDT

தேனி அருகே பூதிப்புரத்தில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியதாக ஒருவரை, வெள்ளிக்கிழமை பழனிசெட்டிபட்டி காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர்.

சுற்றுச்சூழல் பாதிக்காமல் ஓர் இன்பச் சுற்றுலா

Posted: 21 Sep 2013 12:32 PM PDT

: தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை கொடைக்கானல் பள்ளியில் இருந்து சுற்றுச் சூழல் தூய்மையை வலியுறுத்தி மிதிவண்டி மூலம் வெளிநாட்டு மாணவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கருவூலக கணக்குத் துறை மாநில செயற்குழுக் கூட்டம்

Posted: 21 Sep 2013 12:32 PM PDT

தேனியில் சனிக்கிழமை தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் கு. தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.

 பெரியகுளத்தில் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி

Posted: 21 Sep 2013 12:32 PM PDT

பெரியகுளம் நகராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிலிப்பின்ஸ், தைவானில் "உசாகி' புயல்

Posted: 21 Sep 2013 12:32 PM PDT

பலத்த காற்று, பெருமழையுடன் பிலிப்பின்ஸ் மற்றும் தைவானைத் தாக்கிய "உசாகி' புயல், சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

வரதட்சிணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: நீதிபதி

Posted: 21 Sep 2013 12:31 PM PDT

வரதட்சிணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மதுரை மாவட்ட நீதிபதி எஸ். சரவணப்பெருமாள் தெரிவித்தார்.

நல்லாசிரியருக்கு பாராட்டு

Posted: 21 Sep 2013 12:31 PM PDT

கூமாபட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.வரதராசபாண்டியனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழாசிரியர்

லண்டனில் ராம்தேவிடம் 6 மணி நேரம் விசாரணை

Posted: 21 Sep 2013 12:31 PM PDT

லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் சனிக்கிழமை, யோகா குரு பாபா ராம்தேவிடம் 6 மணி நேரம் பிரிட்டிஷ் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் மீது கந்துவட்டி வசூலித்ததாக வழக்கு

Posted: 21 Sep 2013 12:31 PM PDT

கடன் தொகைக்கு அதிக வட்டி வசூல் செய்து பணி இடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் நீதிமன்ற உத்தரவுப் படி வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இளைஞரை தாக்கியவர் கைது

Posted: 21 Sep 2013 12:30 PM PDT

சிவகாசியில் சனிக்கிழமை இளைஞரை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.   சிவகாசி பட்டித்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரகாஷ் (34).

அருப்புக்கோட்டை வழியாக சுற்றுலா தலங்களை இணைக்கும் ரயில்கள்: பயணிகள் மகிழ்ச்சி

Posted: 21 Sep 2013 12:30 PM PDT

அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பயனடையும் வகையில் ரயில் வசதி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மகளிர் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

Posted: 21 Sep 2013 12:30 PM PDT

: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் த. சசிரேகா தலைமை வகித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

Posted: 21 Sep 2013 12:29 PM PDT

சிவகாசி அருகே சனிக்கிழமை பள்ளிச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பட்டாசுத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

அரசுப் பள்ளிக்கு பெஞ்ச் வழங்கல்

Posted: 21 Sep 2013 12:29 PM PDT

சிவகாசி ரிசர்வ்லயனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, சிவகாசி இன்னர்வீல் கிளப் ஆப் பைரோடவுன் சங்கத்தினர் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள மாணவர்கள் அமரும் பெஞ்சினை இலவசமாக வழங்கினார்கள்.

காட்டுப்பன்றிகளை ஒழிக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 21 Sep 2013 12:29 PM PDT

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காசோளப்பயிர்களை நாசம் செய்து வரும் காட்டுபன்றிகளை ஒழிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள்

திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 21 Sep 2013 12:29 PM PDT

தமிழக அரசுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.

சிரியா ஆயுதப் பட்டியல்: சர்வதேச ரசாயன தடுப்பு அமைப்பு விசாரணை

Posted: 21 Sep 2013 12:28 PM PDT

சிரியா அளித்துள்ள ரசாயன ஆயுத விவர பட்டியல் பற்றி சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு சனிக்கிழமை விசாரணை நடத்தியது.

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஏராளமானோர் தரிசனம்

Posted: 21 Sep 2013 12:28 PM PDT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

செப்.24 காரைக்குடியில்மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

Posted: 21 Sep 2013 12:28 PM PDT

வரும் செப்.24 ஆம் தேதி காரைக்குடியில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

தேவகோட்டை நகர்மன்ற கூட்டம் அதிகாரிகள் வராததால் ஒத்திவைப்பு

Posted: 21 Sep 2013 12:27 PM PDT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்மன்ற கூட்டம் அதிகாரிகள் வராததால் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இராக்கில் தற்கொலைப் படை தாக்குதல்: 65 பேர் சாவு

Posted: 21 Sep 2013 12:27 PM PDT

இராக்கில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தனர்.

சகோதரர்களை தாக்கிய5 பேர் மீது வழக்கு

Posted: 21 Sep 2013 12:27 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சொத்து தகராறு காரணமாக சகோதரர்களை தாக்கிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இணையதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

Posted: 21 Sep 2013 12:26 PM PDT

அனைத்து வகையான தேடுதல்களுக்கும் இணையதளம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது. வாழ்க்கைக்கு தேவையானது, தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொண்டு இணையதளங்களில் தேடுதல்களைப்

பங்குச் சந்தையில் 4-வது வாரமாக முன்னேற்றம்

Posted: 21 Sep 2013 12:26 PM PDT

மும்பை பங்குச் சந்தையானது கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. செப்.20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 531 புள்ளிகள் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த 4 வாரங்களில் சென்செக்ஸ் 1,744 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

மானாமதுரை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

Posted: 21 Sep 2013 12:26 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ராஜகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 21 Sep 2013 12:26 PM PDT

ிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருள்மிகு ராஜகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  திருப்பத்தூர் அருள்மிகு ராஜகாளியம்மன்

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

Posted: 21 Sep 2013 12:25 PM PDT

: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆசிரியர்களுக்கு கல்வி நாயகர் விருது வழங்கும்  விழாவும், மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது.

"வட்டி விகித அதிகரிப்பு பணவீக்கத்தைக் குறைக்க உதவாது'

Posted: 21 Sep 2013 12:25 PM PDT

இந்திய ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளித்துவரும் தொகைக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) 0.25 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளது. இது பணவீக்கத்தைக் குறைக்க உதவாது, மாறாக ஏற்றுமதியைப் பாதிக்கும் என்று பொறியியல் சாதன ஏற்றுமதியாளர்கள் சங்கம் (ஈ.ஈ.பி.சி.) தெரிவித்துள்ளது.

நித்திரவிளை அருகே 1,200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 21 Sep 2013 12:25 PM PDT

நித்திரவிளை அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்தப்படவிருந்த 1,200 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய்யை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

பொறியியல் கல்லூரியில்தகவல் தொடர்பு சங்கம் தொடக்கம்

Posted: 21 Sep 2013 12:24 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த எ.வி.கே.நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை சார்பில் துறையின் சங்க தொடக்க விழா  நடைபெற்றது

நாகர்கோவிலில் நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted: 21 Sep 2013 12:23 PM PDT

நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக,

"முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: அரசு ரூ. 5.90 லட்சம் ஒதுக்கீடு'

Posted: 21 Sep 2013 12:23 PM PDT

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் முதல்வர் கோப்பைக்கான கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்த அரசு ரூ. 5.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்தார்.

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பு

Posted: 21 Sep 2013 12:23 PM PDT

நாகர்கோவில் நகர்நல மையத்தில் சிகிச்சை பெற்று வரும் 75 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா ரோட்டரி கம்யூனிட்டி மையத்தில் நடைபெற்றது.

மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

Posted: 21 Sep 2013 12:22 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலைச் சுற்றி பழுதான மின் விளக்குகளைச் சீரமைக்க தேவசம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சனிக்கிழமை நடந்த பக்தர்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகர்கோவிலில் பாஜக நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

Posted: 21 Sep 2013 12:22 PM PDT

நாகர்கோவிலில் நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தேவ் முன்னிலை வகித்தார்.

பள்ளிகளில் மாணவர்களிடம் பெல்ட், செல்போன்கள் பறிமுதல்

Posted: 21 Sep 2013 12:22 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் மாணவர்களிடமிருந்து செல்போன்கள், பெல்ட், போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குமரியில் கலங்கரை விளக்க தினம் கடைப்பிடிப்பு

Posted: 21 Sep 2013 12:21 PM PDT

:கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் 86-வது தேசிய கலங்கரை விளக்க தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கோ ஆப் டெக்ஸில் "தங்க மழை' போட்டி திட்டம் தொடக்கம்

Posted: 21 Sep 2013 12:21 PM PDT

:நாகர்கோவிலில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி, தங்கமழை போட்டித் திட்டம் ஆகியவை சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

தனியார் ரப்பர் தோட்டதொழிலாளர்கள் மீது தாக்குதல்: 11 பேர் காயம்

Posted: 21 Sep 2013 12:20 PM PDT

கடையல் அருகே தனியார் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். கடையல் அருகே தனியார் ரப்பர் தோட்டம் ஒன்றில் உயர் மருத்துவச் சிகிச்சை கேட்டு சிஐடியூ ஆதரவு

நான் சினிமாவின் குழந்தை: கமல்ஹாசன்

Posted: 21 Sep 2013 12:20 PM PDT

"நான் சினிமாவின் குழந்தை' என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

Posted: 21 Sep 2013 12:20 PM PDT

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ரப்பர் பால்வடிப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும் மழைக்குடைகள்!

Posted: 21 Sep 2013 12:20 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில், சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் மழை பெய்து வரும் நிலையில், ரப்பர் மரங்களில் பால்வடிப்பு நடத்தமுடியாமல் ரப்பர் விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மழைக்குடை கட்டிய விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படவில்லை.

சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று விடுகின்றனர்: ரஜினிகாந்த்

Posted: 21 Sep 2013 12:20 PM PDT

சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையிலும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவிலும் தோற்றுவிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சினிமா நூற்றாண்டு விழா கருத்தரங்கு

Posted: 21 Sep 2013 12:19 PM PDT

சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி அனக்கம் இலக்கிய, சமூக அமைப்பு சார்பில் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 21 Sep 2013 12:19 PM PDT

ஆற்றூர் அருகே சனிக்கிழமை, பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். கல்லுப்பாலம் வாரியார்விளையைச் சேர்ந்தவர் ரங்கநாதன். ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக மெக்கானிக். இவரது மனைவி சார்லெட் மேபல் பாய் (54). இவர் சனிக்கிழமை, அருகேயுள்ள கடைக்குச்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™