Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வெற்றி பெறும் அணியுடன் கூட்டணி: விஜயகாந்த்

Posted: 01 Sep 2013 01:09 PM PDT

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் அணியுடன் கூட்டணி அமைப்பது என தேமுதிகவின் தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Posted: 01 Sep 2013 01:08 PM PDT

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

Posted: 01 Sep 2013 01:07 PM PDT

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பதவியில் இருந்ததுதான் மன்மோகன் சிங்கின் சாதனை: சுப்பிரமணியன் சுவாமி

Posted: 01 Sep 2013 01:05 PM PDT

பதவியில் இருந்ததுதான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

புனித வளனார் ஆலயத்தில் விவிலியத் திருவிழா தொடக்கம்

Posted: 01 Sep 2013 12:58 PM PDT

கோவில்பட்டி புனித வளனார் தேவாலயத்தில் விவிலியத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு, இறைமக்கள் அனைவரும் விவிலியத்தை கையில் ஏந்திய வண்ணம், ஆர்.சி.

மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்

Posted: 01 Sep 2013 12:58 PM PDT

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழை மாணவர்-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

உடன்குடியில் கிருஷ்ண ஜயந்தி விழா

Posted: 01 Sep 2013 12:57 PM PDT

உடன்குடியில் பாரதமாதா சேவா சங்கம், அகில பாரத இந்து மகாசபை ஆகியவை சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. உடன்குடி தேரியூர் பெருமாள் சுவாமி கோவில் வளாகத்தில் பாரதமாதா சேவா

ஆறுமுகனேரியில் பாஜக தெருமுனைப் பிரசாரம்

Posted: 01 Sep 2013 12:57 PM PDT

ஆறுமுகனேரியில் பாஜக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

எட்டயபுரத்தில் பைக்- கார் மோதல்: 3 பேர் காயம்

Posted: 01 Sep 2013 12:57 PM PDT

எட்டயபுரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பைக்கும் காரும் மோதியதில், தொழிலாளிகள் 3 பேர் காயமடைந்தனர்.

பொறியியல் கல்லூரியில்  கலைத்திறன் போட்டிகள்

Posted: 01 Sep 2013 12:56 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நுண்கலை மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்-மாணவிகளுக்கான கலைத்திறன் போட்டிகள் 4  நாள்கள் நடைபெற்றது.

சிவப்பு சாத்தி சப்பரத்துக்கு அலங்காரம் செய்வதில் தாமதம்

Posted: 01 Sep 2013 12:56 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு சாத்தி வீதியுலாவின்போது அலங்காரம் செய்வதில் தாமதம் ஏற்பட்

கோவில்பட்டியில் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் 

Posted: 01 Sep 2013 12:56 PM PDT

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு தேசிய விருது

Posted: 01 Sep 2013 12:55 PM PDT

:தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட இந்திய அடக்கவிலை நிர்ண

பனைவிளையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

Posted: 01 Sep 2013 12:55 PM PDT

பனைவிளையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தடகளப் போட்டி: கோவில்பட்டி பள்ளி முதலிடம்

Posted: 01 Sep 2013 12:55 PM PDT

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் வட்டார அளவிலான தடகள மற்றும் குழுப் போட்டியில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி முதலிடம்

மாவட்ட செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசு

Posted: 01 Sep 2013 12:55 PM PDT

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாநகராட்சியைக் கண்டித்து  நாளை திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 01 Sep 2013 12:54 PM PDT

தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக சார்பில் செப். 3-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்

Posted: 01 Sep 2013 12:54 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் திருநெல்வேலி தேசிய மாணவர் படை பிரிவு இணைந்து, பாலிடெக்னிக் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான 10 நாள்கள் பயிற்சி முகாம் தொடங்கியது.

பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 01 Sep 2013 12:54 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் நான் ஒரு பொறியாளர் என்ற தலைப்பில் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.   இக்கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வ

இலக்கியச் சங்கமம்

Posted: 01 Sep 2013 12:53 PM PDT

நூலகர் வாசகர் வட்டம் நடத்தும் சிந்தனைச் சாரல் நிகழ்ச்சி. தலைமை: மு.முருகேஷ்; பங்கேற்பு: எம்.கே.லோகேஸ்வரன், கு.இரா.பழனி, பூ.பரசுராமன்; கிளை நூலகம், ரெட்டைவாடை செட்டித் தெரு, வந்தவாசி; 5.9.13 மாலை 5.30.

சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

Posted: 01 Sep 2013 12:53 PM PDT

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாமிதோப்பு தலைமைப் பதியில் 147 அடி உயர ராஜகோபுரத்துக்கு அடிக்கல்

Posted: 01 Sep 2013 12:53 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி  தலைமைப் பதியில் கட்டப்பட உள்ள 147 அடி உயர ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாலம் இடிந்து இறந்த மாணவரின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு

Posted: 01 Sep 2013 12:52 PM PDT

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்ததால், அவரின் சடலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி

குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

Posted: 01 Sep 2013 12:52 PM PDT

நாகர்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புலிகள் சரணாலயம் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

Posted: 01 Sep 2013 12:51 PM PDT

:குமரி மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிசனங்கோப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அகம் பொதிந்தவர்கள்

Posted: 01 Sep 2013 12:51 PM PDT

அகம் பொதிந்தவர்கள் - கர்ணன்; பக்.160; ரூ.75; மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம்-608 001.

கிறிஸ்தவ ஆலயத்தில் பிரச்னை: பங்குத்தந்தை மீது தாக்குதல்

Posted: 01 Sep 2013 12:51 PM PDT

நாகர்கோவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பங்குத்தந்தை தாக்கப்பட்டார். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"ஒழுங்கீன மாணவர்களைக் கண்காணிக்க குழு'

Posted: 01 Sep 2013 12:51 PM PDT

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை கண்டறிய கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள்

Posted: 01 Sep 2013 12:51 PM PDT

வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள் - தொகுப்பு மற்றும் தமிழாக்கம்: டி.ஞானையா, வெ.ஜீவானந்தம்; பக்.192; ரூ.150; அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-41.

மகன் தற்கொலை முயற்சி: தாய் சாவு

Posted: 01 Sep 2013 12:51 PM PDT

நாகர்கோவில் அருகே விஷம் குடித்த மகனை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீட்டுக்கு வந்த தாய் ஞாயிற்றுக்கிழமை திடீரென இறந்தார்.

"மாணவர்கள் குறிக்கோளுடன் வாழ வேண்டும்'

Posted: 01 Sep 2013 12:50 PM PDT

:மாணவர்கள் குறிக்கோளுடன் வாழ வேண்டும் என கேரள கூடுதல் ஐ.ஜி.நிஷாந்தினி கூறினார்.

கருங்கல்: பி.எஸ்.என்.எல். இணைப்புகள் செயலிழப்பு

Posted: 01 Sep 2013 12:50 PM PDT

கருங்கல் பகுதியில் பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி இணைப்புகள் பழுதாகியிருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி - v - விண்வெளித் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்கள்

Posted: 01 Sep 2013 12:50 PM PDT

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி - v - விண்வெளித் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்கள் - நெல்லை சு முத்து; பக்.358; ரூ.300; தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை - 5.

கல்வெட்டுக்கலை

Posted: 01 Sep 2013 12:49 PM PDT

கல்வெட்டுக்கலை - பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்; பக்.240; ரூ. 250; பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.

வம்புக்கு நான் அடிமை

Posted: 01 Sep 2013 12:48 PM PDT

வம்புக்கு நான் அடிமை - ஜே.எஸ்.ராகவன்; பக்.200; ரூ. 90; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; )044- 2464 1314.

வரப்பெற்றோம்

Posted: 01 Sep 2013 12:47 PM PDT

காப்பிய இமயம் - என்.வி.நாயுடு; பக்.356; ரூ.160; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நெல்சன் மண்டேலா

Posted: 01 Sep 2013 12:45 PM PDT

உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.

தேசிய உணவு பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் இன்று அறிமுகம்

Posted: 01 Sep 2013 12:43 PM PDT

மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குஜராத் கலவரம் துரதிருஷ்டமானது: ராஜ்நாத்சிங்

Posted: 01 Sep 2013 12:43 PM PDT

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் துரதிருஷ்டமானது; அதற்காக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டுவது நியாயமல்ல என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார்.

ஜனவரிக்குள் 73 லட்சம் பேருக்கு உணவுப் பொருள்கள்

Posted: 01 Sep 2013 12:42 PM PDT

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தில்லி பிரதேசத்தில் உள்ள 73 லட்சம் மக்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயன்கள் கிடைக்கும் வகையில் தில்லி பிரதேச அரசு செயல்பட்டு வருகிற

சிறுமி பலாத்காரம்:இளைஞர் கைது

Posted: 01 Sep 2013 12:42 PM PDT

தில்லியில் சனிக்கிழமை எட்டு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தில்லி ஜெய்த்பூர் பகுதியில் சனிக்கிழமை மாலை

தில்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்

Posted: 01 Sep 2013 12:42 PM PDT

தலைநகர் தில்லிக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உருவாக்கப்பட்ட தில்லி புறவழி விரைவுச் சாலைத் திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்ற விஜய் கோயல் உள்பட 200 பாஜகவினர் கைது

Posted: 01 Sep 2013 12:41 PM PDT

தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதான நிதி முறைகேடு புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் உடனே அவர் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தி தில்லியில் பாஜக இளைஞரணியினர் போராட்டம் நடத்தினர்.

தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவை விடியோ பதிவுசெய்ய முடிவு

Posted: 01 Sep 2013 12:41 PM PDT

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலை வெளிப்படையாகவும், சுமுகமாகவும் நடத்திட பல்வேறு ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து

"டிசம்பர் 16' வழக்கில் தண்டனை பெற்ற நபருக்கு சிறார் காப்பகத்தில் தனி அறை

Posted: 01 Sep 2013 12:40 PM PDT

"டிசம்பர் 16' பாலியல் பலாத்கார வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்ற மைனர் நபர் சிறார் சிறப்புக் காப்பகத்தின் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளத

தில்லி பல்கலை. மாணவர்களின் ஒரு வார கல்விச் சுற்றுலா இன்று தொடக்கம்

Posted: 01 Sep 2013 12:40 PM PDT

தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 900 மாணவ, மாணவியர் பங்கு பெறும் ஒரு வார கால ரயில் சுற்றுலா திங்கள்கிழமை தொடங்குகிறது.

34 ஆண்டுக்கு முன்பு ஊழியர் பணி நீக்கம்:வங்கி உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்

Posted: 01 Sep 2013 12:40 PM PDT

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக் குழு அளித்த பரிந்துரையின்பேரில்  ஊழியரைப் பணி நீக்கம் செய்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் முடிவை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆசாராம் கைது: தில்லி விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Sep 2013 12:39 PM PDT

ஆசாராம் பாபு கைதுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் தில்லி விமான நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தெலங்கானா தனி மாநில உருவாக்கம் நாடாளுமன்ற தொடருக்கு பின் தீவிரம்

Posted: 01 Sep 2013 12:39 PM PDT

""தெலங்கானா தனி மாநில உருவாக்கப் பணிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்குப் பின் தீவிரமாகும்'' என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறினார்.

தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு தில்லியில் புதிய அலுவலகம்

Posted: 01 Sep 2013 12:39 PM PDT

பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு (என்ஐஏ) புது தில்லியில் புதிய அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2008-ஆம்

தில்லியில் ஆபத்தான நிலையில் 900 அரசு குடியிருப்புகள்!

Posted: 01 Sep 2013 12:38 PM PDT

மத்திய அரசுக்குச் சொந்தமான 900 குடியிருப்புகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது. தில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான பழமையான கட்டடங்கள் குறித்து அண்மையில் மத்திய பொதுப் பணித் துறையினர் ஆய்வு நடத்தினர். 

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: ஒருவர் மரணம்

Posted: 01 Sep 2013 12:36 PM PDT

சீனாவில் ஞாயிற்றுக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.8 பேர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தானில் குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் சாவு

Posted: 01 Sep 2013 12:35 PM PDT

பாகிஸ்தானில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இராக்கில் 44 ஈரானிய அகதிகளை ராணுவம் கொன்றதாக புகார்

Posted: 01 Sep 2013 12:33 PM PDT

ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் 44 அகதிகளை ராணுவத்தினர் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 24 பேர் சாவு

Posted: 01 Sep 2013 12:32 PM PDT

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை ராணுவ உடையில் சென்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் உயிரிழந்தனர். 34 பேரைக் காணவில்லை.

சிரியா மீது தாக்குதல் நடத்த ஒபாமா முடிவு: நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருக்கிறார்

Posted: 01 Sep 2013 12:31 PM PDT

சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா நாடியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது

Posted: 01 Sep 2013 12:26 PM PDT

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசைக் கண்டித்து தொடர் போராட்டம் அறிவிப்பு

Posted: 01 Sep 2013 12:26 PM PDT

விலைவாசி உயர்வு மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கண்டித்து அரசுப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவர் என அகில இந்திய மாநில அரசுப் பணியாளர்கள் சம்மேளன

டெங்கு பாதிப்பு விவரம் சேகரிக்க 10 பேர் குழு

Posted: 01 Sep 2013 12:25 PM PDT

கடலூர் மாவட்டத்தில், நீரினால் பரவும் நோய் மற்றும் டெங்கு நோய் பாதிப்பு குறித்த விவரங்களை அறிய 10 பேர் கொண்ட குழுவை சுகாதாரத் துறை ஏற்படுத்தியுள்ளது.

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி: விண்ணப்பிக்க இன்று கடைசி

Posted: 01 Sep 2013 12:25 PM PDT

கடலூரில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட கோரிக்கை

Posted: 01 Sep 2013 12:24 PM PDT

சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், முன்னாள் நிர்வ

சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கக் கோரிக்கை

Posted: 01 Sep 2013 12:24 PM PDT

செல்லங்குப்பம் கடற்கரைப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்க குடியிருப்போர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தில்  ஊழலை தடுக்க வலியுறுத்தல்

Posted: 01 Sep 2013 12:24 PM PDT

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க கிராமங்கள்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மயானத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை

Posted: 01 Sep 2013 12:23 PM PDT

மயானத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

831 சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள்

Posted: 01 Sep 2013 12:23 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைப்பாளர்கள் உள்பட 831 சத்துணவுப் பணியாளர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மாநில பாட்மிண்டன்: சென்னை வீரர்கள் வெற்றி

Posted: 01 Sep 2013 12:23 PM PDT

தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த வி.வேலவன், எம்.ஆர். மணிகண்டன் ஜோடி வெற்றி பெற்றது.

தமிழகத்தில் காவல்துறை ஆட்சி: அன்புமணி குற்றச்சாட்டு

Posted: 01 Sep 2013 12:22 PM PDT

தமிழகத்தில் காவல்துறையின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

அரசுப் பள்ளிக்கு 100 இருக்கைகள் நன்கொடை

Posted: 01 Sep 2013 12:22 PM PDT

காஞ்சிபுரம் கா.மு. சுப்புராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 100 இருக்கைகளை ஹுண்டாய் நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை சேகரிக்கும் மையம் தொடக்கம்

Posted: 01 Sep 2013 12:22 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை சேகரிக்கும் மையம் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தியாவில் சச்சினின் 200-வது டெஸ்ட்!

Posted: 01 Sep 2013 12:22 PM PDT

தனது 200-வது டெஸ்ட் போட்டியை இந்தியாவில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடவுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

அரசு தொழிற்சாலையில் ரூ. 52 லட்சம் கையாடல்: காசாளர் சொத்துகள் முடக்கம்

Posted: 01 Sep 2013 12:21 PM PDT

தமிழ்நாடு ஜரிகை தொழிற்சாலையில் ரூ. 52 லட்சம் பணத்தை கையாடல்  செய்ததாக காசாளரின் சொத்துகள் நீதிமன்றம் மூலம் முடக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

Posted: 01 Sep 2013 12:21 PM PDT

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த பொறியியல் கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

3-வது சுற்றில் வோஸ்னியாக்கி தோல்வி

Posted: 01 Sep 2013 12:21 PM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ம் சுற்றில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, செக் குடியரசின் பெட்ரோ க்விட்டோவா ஆகிய வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினர்.

"மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்'

Posted: 01 Sep 2013 12:21 PM PDT

மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், மக்கள் நலன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த முடியும் என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.

பா.ம.க. - விடுதலைச் சிறுத்தைகள் மோதல்: 20 பேர் மீது வழக்கு

Posted: 01 Sep 2013 12:20 PM PDT

காரைக்கால் அருகே சனிக்கிழமை பாமக மற்றும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கள்ளநோட்டுப் புழக்கத்தை கட்டுப்படுத்த பா.ஜ.க. வலியுறுத்தல்

Posted: 01 Sep 2013 12:20 PM PDT

காரைக்காலில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், இதுகுறித்து தீவிரமான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விநாடி-வினா போட்டி

Posted: 01 Sep 2013 12:20 PM PDT

புதுச்சேரியில் தேசிய மாணவர் படை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த விநாடி-வினா  போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில கபடிப் போட்டி காரைக்காலில் தொடக்கம்

Posted: 01 Sep 2013 12:19 PM PDT

காரைக்காலில் மாநில அளவிலான கபடிப் போட்டி சார்பில் சனிக்கிழமை தொடங்கியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

Posted: 01 Sep 2013 12:19 PM PDT

புதுச்சேரி அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 01 Sep 2013 12:19 PM PDT

திருக்கோவிலூர் அருகே ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வி.ஆர்.எஸ்.பொறியியல் கல்லூரியில் கணிப்பொறித்துறை கூட்டமைப்பு தொடக்கம்

Posted: 01 Sep 2013 12:18 PM PDT

விழுப்புரம் அருகே அரசூர் வி.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் கூட்டமைப்பு உதவியுடன்

ஹைதராபாத் அணி சாம்பியன்

Posted: 01 Sep 2013 12:18 PM PDT

முதலாவது இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் சாய்னா நெவால் தலைமையிலான ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

புதிய வாராந்திர ரயில்களை இயக்க கோரிக்கை

Posted: 01 Sep 2013 12:18 PM PDT

புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்று விழுப்புரம் ரயில்வே பயன்பாட்டாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பணி நிறைவு பாராட்டு

Posted: 01 Sep 2013 12:18 PM PDT

உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர் மா.அய்யனார். பணிநிறைவு பெற்ற இவருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

களமருதூர் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி

Posted: 01 Sep 2013 12:17 PM PDT

திருநாவலூர் ஒன்றியம், களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

3-இல் மின்வாரிய குறைதீர் கூட்டம்

Posted: 01 Sep 2013 12:17 PM PDT

விழுப்புரத்தில், மின்வாரிய குறைதீர்வுக் கூட்டம், வரும் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

செப்டம்பர் 29-ல் பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டம்

Posted: 01 Sep 2013 12:17 PM PDT

பரபரப்பான சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை கூடியது. இதில், பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டத்தை சென்னையில் வரும் 29-ம் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 01 Sep 2013 12:17 PM PDT

விழுப்புரத்தில், மூப்பனார் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

குற்றச் சம்பவங்களை தடுக்க வழக்குரைஞர் சங்கம் கோரிக்கை

Posted: 01 Sep 2013 12:17 PM PDT

குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட இந்திய வழக்குரைஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

மார்க்சிஸ்ட் செயலர் மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு

Posted: 01 Sep 2013 12:16 PM PDT

உளுந்தூர்பேட்டை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, முன்னாள் ஊராட்சித் தலைவர் உள்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை ஹாக்கி: தென் கொரியா வெற்றி

Posted: 01 Sep 2013 12:16 PM PDT

ஆசியக் கோப்பை ஹாக்கியின் இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நடப்புச் சாம்பியனான தென் கொரியா அணி வெற்றி பெற்றது.

செப்டம்பர் 2 மின் தடை

Posted: 01 Sep 2013 12:16 PM PDT

கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி விழா

Posted: 01 Sep 2013 12:15 PM PDT

கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த, மத்திய, மாநில அரசுகள் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.

போக்குவரத்துக் காவலருடன் தகராறு:அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted: 01 Sep 2013 12:14 PM PDT

பண்ருட்டியில் போக்குவரத்துக் காவலருக்கும், ஒரு கோஷ்டியினருக்கும் ஏற்பட்ட தகராறில் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மத்திய சிறையில் மருத்துவ முகாம்

Posted: 01 Sep 2013 12:13 PM PDT

கடலூர் மத்திய சிறை கைதிகளுக்கு நடந்த மருத்துவச் சிகிச்சை முகாமில் 228 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

மனைவி நல வேட்பு நாள்: 43 தம்பதியினர் பங்கேற்பு

Posted: 01 Sep 2013 12:13 PM PDT

சிதம்பரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் வேதாத்திரி மகரிஷி வழிகாட்டுதலின்பேரில் சிவசக்திநகர் அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் மனைவி நல வேட்புநாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகம் அருகே ஹைமாஸ் விளக்கு அமைக்கக் கோரிக்கை

Posted: 01 Sep 2013 12:13 PM PDT

பண்ருட்டி, திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என கவுன்சிலர் வடிவேலன் கூறினார்.

9-இல் செல்வ விநாயகர், திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 01 Sep 2013 12:12 PM PDT

கடலூர் மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர், திரெüபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அகவிலைப்படி: தெளிவுபடுத்தஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

Posted: 01 Sep 2013 12:11 PM PDT

கடந்த 1995-ஆம் ஆண்டுக்குப் பின் ஓய்வுபெற்றவர்களுக்கு அகவிலைப்படியை ஓய்வூதியத்தில் இணைத்துக் கொள்வது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சேலை ஊராட்சியில் மர்மக் காய்ச்சல்: மருத்துவக் குழுவினர் முகாம்

Posted: 01 Sep 2013 12:11 PM PDT

ஏகாட்டூர் ஊராட்சியைத் தொடர்ந்து சேலை ஊராட்சியிலும் 8 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™