Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?

Posted: 01 Sep 2013 10:24 AM PDT

திருச்சதகத்திலே மானின் நேர்விழி என ஒரு பாடல் வரும். திருச்சதக பாடல் : மானேர் நோக்கி யுடையாள் பங்காமறையீ றறியாமறையோனே தேனே அமுதே சிந்தைக்கரியாய் சிறியேன் பிழைபொறுக்குங் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமாநகர்குறுகப் போனா ரடியார் யானும் பொய்யும்புறமே போந்தோமே. அதற்கு பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் உரை எழுதுகிறார். நயந்து நயந்து படிக்க வேண்டிய உரை அது. மானினுடைய விழி பார்க்க அழகாய் இருக்கும். அதுபோல அழகான கண்களை உடையவள் அம்பிகை என்பதை மானின் நேர் விழி என்ற சொற்றொடர்க்குப் பொருளாகச் ...

இது விமர்சனம் அன்று...

Posted: 01 Sep 2013 10:13 AM PDT

ஆதலால் காதல் செய்வீர்…. காமெடி கூட்டத்திற்கு நடுவே வெகு கம்பீரமாய் கதையை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம்.  அம்மா இறந்ததைக்கூட "ஹாஹா….எங்க ஆத்தா செத்துட்டா மச்சி….பீர் வுடலாம் வா மச்சி…" என்று சிரித்துக்கொண்டே சொன்னால்தான் இன்றைய காமெடி டிரெண்டில் படம் கல்லா கட்டும் என்று வெகு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்பித் திரியும் காலகட்டத்தில் அவர்கள் கன்னத்தில் அறையும் உணர்ச்சி-உணர்வுகள் பேசும் படம் இது.  எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற ரீதியில் எல்லாம் காட்சிகள் சமைத்தால் அவ்வளவுதான். மக்கள் ...

கடி ஜோக்ஸ் -சில..

Posted: 01 Sep 2013 09:50 AM PDT

"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."

ராஜாதி ராஜ ராஜ குல மார்த்தாண்ட 23000 பதிவுகள் பராக் பராக்

Posted: 01 Sep 2013 09:15 AM PDT

23,000 பதிவுகள் கண்ட ஈகரை ராஜாவுக்கு வாழ்த்துகள்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள் ஈகரை சிறக்க  

தூறலாய் ஒரு காதல் ....

Posted: 01 Sep 2013 08:44 AM PDT

அது ஏனோ தெரியவில்லை இப்போது எல்லாம் மழை பெய்தால் மண் வாசனை வருவதற்குள் , கவிதை வந்து விடுகிறது எனக்கு உன்னோடு நான் நினைந்த ,, இல்லை இல்லை உன்னோடு நான் கரைந்த அந்த மழை நாள் முதல் .... என் தாய் எனக்கு பேச கற்றுகொடுத்தார் என் தந்தை எனக்கு நடக்கக் கற்றுகொடுத்தார் என் ஆசான் எனக்கு எழதக் கற்றுகொடுத்தார் ஆனால் எனக்கு மழையில் நினையக் கற்றுகொடுத்தவள் நீதான் .... முன்பெல்லாம் மழையில் நினைந்தால் சளி பிடிக்கும் ,,, உன்னோடு நினைந்த பிறகு மழையும் பிடிக்க ஆரம்பித்தது .... மழை ...

சில நகைச்சுவைகள்

Posted: 01 Sep 2013 08:43 AM PDT

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஆதங்க்கம் * * * * * * * * * * * * * * * * * * * * ஆனா, * * * * * * * * * * * * * * *எனக்கு என்ன வருத்தம்னா * * * * * * * * * * * * * * * * * * * * * * இதுவும் ஒரு போஸ்ட்னு படிக்கிறீங்களே, அதான்      .

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Posted: 01 Sep 2013 07:02 AM PDT

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ... அன்புடைய மாமனும் மாமி யும்நீ... அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது. ஆகவே முதன்முதலாக ...

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு!!

Posted: 01 Sep 2013 05:05 AM PDT

தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., முதலில் இடம் பெற, துண்டு விரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை, மணிமேகலையுடன் ஒப்பிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியது மூலம், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தரப்பில், தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், தி.மு.க., கூட்டணியில் இன்னும் இறுதி வடிவம் முழுமை அடையாமல், இழுபறியாக உள்ளது. அதேசமயம், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் என, "மெகா' கூட்டணி அமைய ...

Varicose veins - வெரிகோஸ் வெயின்

Posted: 01 Sep 2013 03:54 AM PDT

ஆண், பெண் இருவருக்குமே பொதுவாக இருக்கும் ஒரு பிரச்னை வெரிகோஸ் வெயின்! அதாவது கால்களில் நரம்புகள் சுருண்டு பார்ப்பதற்கு பாம்பு போல் நெளிந்து காணப்படுவதுதான். இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வலிக்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மை. வெரிகோஸ்வெயின் கால்களில் மட்டுமே வரக்கூடியது. இதயத்திலிருந்து மகாதமனி வழியாக வரும் சுத்தமான ரத்தம் கால்களில் காணப்படும் சிறிய ரத்தக் குழாய்களில் சென்று மீண்டும் அதே வழியில் பயணம் செய்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இதயத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்பது ...

குட்டி நீதி கதை

Posted: 01 Sep 2013 03:35 AM PDT

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு... கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ...

தெய்வீக தென்றல் தெரசா!

Posted: 01 Sep 2013 03:09 AM PDT

கல்கத்தாவில் ஆதரவற்ற பிள்ளைகளை வளர்த்து வரும் சிசுபவன். ஒரு சிறுவனுக்கு ஆதரவாக யாரும் இல்லை. அவனை வளர்த்த மூதாட்டி தனது முடியாத நிலையில் சிசு பவனுக்கு அழைத்து வந்தார். அங்கே இருந்த சகோதரிகள் அவன் படித்து இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டனர். அவனைப் பார்த்து "நீ வளர்ந்து பெரியவனான பிறகு என்னவாக விரும்புகிறாய்' என்று கேட்டனர். அவன் சொன்னான்: "நான் அன்னை தெரசாவாகப் போகிறேன்' என்று. அவனால் அதுபோன்று பின்னாளில் ஆக முடியவில்லை. ஆனால், அவன் இப்போது பாதிரியாராகப் பணிபுரிகிறார். அன்னை தெரசா ...

2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள்

Posted: 01 Sep 2013 02:23 AM PDT

29-8-2013-குமுதம் ரிப்போர்ட்டர் http://www.mediafire.com/download/vjjf9iuy2utf7gg/Reporter29813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-குங்குமம் தோழி http://www.mediafire.com/download/u9v57939e99aiyr/Thozhi31813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-இளைஞர் மலர் http://www.mediafire.com/download/ld6derdude314li/ilaignarmalar31813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-குங்குமம் தோழி ப்ரூட்ஸ் ஸ்பெஷல் http://www.mediafire.com/download/a4n5d93g14fpxcq/Thozhi_Suppli31813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-குங்குமச் ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 01 Sep 2013 01:11 AM PDT

அழகு !! (நிமிடக்கதை)

Posted: 01 Sep 2013 12:51 AM PDT

தரகர் கொண்டு வந்து கொடுத்தப் படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத்தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட்டாரிடம் மேற்கொண்ட செய்திகளைப் பேசுவதுமாக இருந்ததைப் பார்க்கும் பொழுது இந்த இடம் மிகவும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது. என்ன செய்யலாம் ... என்ற யோசனையுடன் தாயைத் தனியாக வெளியில் அழைத்து வந்தான். "அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டினார் இல்லையா...? ...

இது உங்கள் இடம்..!

Posted: 01 Sep 2013 12:51 AM PDT

நன்றி: வாரமலர் வேண்டாம் சுய வைத்தியம்! என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான். சுய வைத்தியம் எனும் ...

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 01 Sep 2013 12:05 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

பசி தீர்த்த மணிமேகலை

Posted: 01 Sep 2013 12:03 AM PDT

உணவு பாதுகாப்பு திட்டம்.
பசி தீர்த்த மணிமேகலை என்று கலைஞர் , திருமதி சோனியா காந்தியை புகழ்ந்ததாக செய்தி. இதற்கு பலர் எதிர்ப்பு கூறி உள்ளனர். கலைஞர் அவர்களை இவர்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் சோனியா விடம்  என்ன கூறினார் என்றால், " MONEY MAY COME ,LIE " மணி மே கம் ,லை =பணம் வரலாம் ,பொய் சொன்னால் "    

ரமணியன்.

உணவுப் பொருளில் கலப்படம்! என்ன பாதிப்பு? எப்படி கண்டுபிடிப்பது? எங்கே புகார் செய்வது?

Posted: 31 Aug 2013 11:16 PM PDT

உயிர் வாழ்வதற்காகவும் உடல் நலம் பேணுவதற்காகவும் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்றால்...? எவ்வளவு விபரீதம்! "உணவுக் கலப்படத் தடைச் சட்டம்' 1954 நீக்கப்பட்டு ஆகஸ்டு 2011 முதல் "உணவுப் பாதுகாப்புத் தரச்சட்டம்' 2006 அமுலுக்கு வந்துள்ளது, இச்சட்டத்தில் "கலப்படம்' என்ற சொல் நீக்கப்பட்டு பாதுகாப்பற்ற உணவு பற்றிய விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், "கலப்படம்' என்ற சொல்லுக்கான விளக்கம் புதிய சட்டத்தில் மறைமுகமாகக் கையாளப்படுகிறது. உணவுக் கலப்படம் பற்றிய சட்ட விளக்கம்: உணவு பொருளில் ...

சிவப்பு வாழைப்பழங்கள்!

Posted: 31 Aug 2013 09:01 PM PDT

மஞ்சள், பச்சை நிறத்தில் தான் வாழைப்பழங்களை பார்த்திருக்கிறோம்; வாங்கியும் சுவைத்திருக்கிறோம். ஆனால், ஆசியா மற்றும் கிழக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில், சிவப்பு வண்ணத்தில் வாழைப் பழங்கள் உள்ளன. இதனை, "ரெட் டக்கா' வாழைப்பழங்கள் என்று அழைக்கின்றனர். இப்பழங்களின் உட்பகுதி வெளிர் ஊதாக்கலரில் இருக்கும். மற்ற பழங்கள் போன்றே மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தாலும், இப்பழங்களின் மணம் மட்டும், "ரெஸ்பரி' போன்ற வாசனையில் இருக்கும். இந்நாடுகளில், இவ்வகை சிவப்பு வாழைப்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு, ...

தந்தையுள்ளம்: சிறுகதை

Posted: 31 Aug 2013 08:23 PM PDT

சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தமது இருக்கை எண்ணைத் தேடிப் பிடித்து அமர்ந்தார் குமாரசாமி. தோள் பையை இருக்கையில் வைத்து, சின்ன மாம்பழக் கூடையை அலுங்காமல் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தார். "அடடே... வாத்தியாரய்யா!' எதிர் சீட்டில் தென்பட்ட முத்துராஜா சிநேகமாகச் சிரித்தார். "சௌக்கியமா அண்ணா?' முத்துரஜாவின் மனைவி தமயந்தி வெகுவாகவே மகிழ்ந்தாள். "நல்ல சௌக்கியம்மா... அடேயப்பா... எவ்வளவு நாளாச்சு உஙகளைப் பார்த்து!' "உங்க சன் வித்யாகர் எப்படியிருக்கான் ஸார்?' "நல்லா ...

கவிதையில் யாப்பு

Posted: 31 Aug 2013 08:07 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

குங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை

Posted: 31 Aug 2013 08:06 PM PDT

குங்குமம் (2.9.2013) இந்த வார‌ இதழில் என் குறுங்கதை

2.9.2013 தேதியிட்ட குங்குமம் இந்த வார இதழில் பக்கம் 81ல் நான் எழுதிய 'ஜாகிங்' என்ற தலைப்பிலான ஒரு பக்க கதை வெளியாகியிருக்கிறது. கதை வெளியான குங்குமம் இதழின் பிரதி இங்கே.

http://ramprasathkavithaigal.blogspot.in/2013/08/292013.html

மலர் தேவதை!

Posted: 31 Aug 2013 07:51 PM PDT

முன்னொரு காலத்தில் ஒரு சோம்பேறி மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சோம்பேறி மட்டும் அன்றி, பெரிய முட்டாளும் கூட. "நான் உழைக்க மாட்டேன். ஆனால், எனக்கு வயிறார உணவை அதிர்ஷ்ட தேவதைக் கொடுக்க வேண்டும்!' என்பது அவன் குறிக்கோள். ஒருநாள், திறந்த வெளியில் மல்லாந்து படுத்து இருந்தான். "இன்று அதிர்ஷ்ட தேவதை என் வாயில் ஓர் அப்பத்தைப் போட வேண்டும்!' என்று வெகு நேரம் வாயைத் திறந்து வைத்திருந்தான். காற்றடித்த போதெல்லாம் வாயில் மண்தான் விழுந்தது. மாலை வரை அப்படியே படுத்துக் கிடந்த அவனுக்கு வாய் வலித்தது. எழுந்தான். ...

Samsung Galaxy Golden (SHV-E400) - இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!

Posted: 31 Aug 2013 07:43 PM PDT

சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHV-E400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது. இதன் மேலாக ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள்ளாக ஒரு திரையும் தரப்பட்டுள்ளன. இரண்டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. எனவே, போனை மூடிவிட்டாலும், மேல்புறமாக உள்ள திரையைப் பயன்படுத்தலாம். உள்புறமாக உள்ள, திரை கீ போர்டுடன் இயங்குகிறது. ...

“தண்டா புத்ரா” திரை விமர்சனம் – 7 ஆண்டுகால சரித்திர சம்பவங்களின் தொகுப்பு!

Posted: 31 Aug 2013 07:36 PM PDT

06ஆகஸ்ட் 31 – 13வது பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியிடத் திட்டமிடப்பட்டு, அப்போது தோன்றிய எதிர்ப்புகளினால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்ட படம் 'தண்டா புத்ரா'. தற்போது பினாங்கில் தடை, பின்னர் அனுமதி என மேலும் சில சர்ச்சைகளையும்  ஏற்படுத்தியுள்ள "தண்டா புத்ரா" மலாய்ப்படம் எதிர்பார்த்த அளவுக்கு, கண்டனத்துக்குரிய காட்சிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. படம் முழுக்க அரசாங்கத்தின் கோணத்தில், அன்றைய பிரதமர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் மற்றும் துணைப் பிரதமர்கள் ...

இயற்கை மருத்துவ முறையில் தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க வழிகள்

Posted: 31 Aug 2013 07:29 PM PDT

இயற்கை மருத்துவ முறையில் தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க வழிகள் 1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். 2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். 3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து ...

துன் வீ.தி. சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை மாற்ற முயன்றார் துங்கு அப்துல் ரஹ்மான்

Posted: 31 Aug 2013 07:24 PM PDT

மலேசியா தமிழர்களின் பெருந்தலைவராக விளங்கியவர் துன் வீ.தி. சம்பந்தன். இவருடைய இயற்ப்பெயர் வீராசாமி திருஞான சம்பந்தன். 1919-ஆம் ஆண்டு செல்வமிகுந்த குடும்பத்தில் பிறந்தார். தமிழகத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திர பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார். அவருடைய வாழ்க்கைத் துணைவியார் தோ புவான் உமா சம்பந்தனிடம், அவரின் லண்டன் பயணத்தில் அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™