| நண்பனைப்போல் பழகினார் தனுஷ் - சற்குணத்தின் நய்யாண்டி அனுபவம் Posted:  களவாணி, வாகை சூடவா படத்திற்கு பிறகு இயக்குநர் சற்குணம் இயக்கி, அக்டோபர் 11 அன்று வெளிவர உள்ள படம் நய்யாண்டி. இப்படம் உருவான விதம் குறித்தும் தனுஷின் நடிப்பு குறி்த்தும் டைரக்டர் சற்குணம் அளித்த சிறப்பு பேட்டி... நய்யாண்டி படம் 48 நாட்களில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது. கும்பகோணத்தில் 70 சதவீதம், தஞ்சாவூரில் 20 சதவீம் மற்றும் ... |
| கிளாமராக நடிக்க ஆசை - சொல்கிறார் நந்திதா!! Posted:  ஒரு படத்திலாவது நல்லா கிளாமராக நடிக்க ஆசைப்படுவதாக சொல்கிறார் நடிகை நந்திதா. அட்டகத்தி படத்தில் கல்லூரி மாணவியாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற ரோலில் யதார்த்தமாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா. இந்தபடத்திற்கு பிறகு அவர் நடித்த எதிர்நீச்சல் படமும் நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது இதற்குத்தானே ... |
| மும்பையில் பண்ணை வீடு கட்டுகிறாராம் நீதுசந்திரா! Posted:  தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்தவர் மும்பை வரவு நீது சந்திரா. தன்னை இயக்குனர்கள் எந்த அளவுக்கு தோலுரித்தாலும் அதுகுறித்து எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடியவர் நீது. என்றபோதும் கோடம்பாக்கத்தில் இன்னமும் அவர் ராசியில்லாத நடிகை லிஸ்டிலேதான் ... |
| நஸ்ரியாவுடன் காதல் இல்லை: ஜெய்யும் மறுத்து விட்டார் Posted:  சிம்பு, ஹன்சிகா மோத்வானி காதலை போலவே ஜெய், நஸ்ரியா காதலும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நஸ்ரியா அளித்த பேட்டியில் "ஜெய் ஜஸ்ட் பிரண்டுதான். நாங்க போன்ல கூட பேசிக்கொள்வதில்லை. எங்காவது பார்த்துக் கொண்டால் ஒரு ஹாய் சொல்லிக்குவோம் எங்களுக்குள் காதலும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை" ... |
| பண்ணையாரும் பத்மினியும்: கவுரவ வேடத்தில் சினேகா Posted:  விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் பண்ணையாரும் பத்மினியும், அருண்குமார் என்பவர் டைரக்ட் செய்கிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். ஜெயபிரகாஷ் பண்ணையாராகவும், துளசி அவரது மனைவியாகவும் நடிக்கிறார்கள். கிராமத்தில் உள்ள பண்ணையார் தனது பத்மினி கார் மீது வைத்திருக்கும் அன்பும், அதை மற்றவர்கள் பார்க்கும் ... |
| ஹீரோயினாக வளரும் சரண்யா மோகன்!! Posted:  மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த சரண்யா மோகன் யாரடி நீ மோகினி படத்தில் துருதுரு கேரக்டரில் நடித்ததன் மூலம் இங்கு பிரபலமானார். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோயின் ஆனார். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அந்த படங்கள் ஃபிளாப் ஆனதால் மீண்டும் தங்கச்சி பாப்பா கேரக்டருக்கே வந்தார். ... |
| அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா! Posted:  தமிழில் கனகவேல் காக்க, முரண் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. கன்னடத்து நடிகையான இவர் அட்டகத்தி ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ் என்ற படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம். அதனால் நீண்டநாளைக்குப்பிறகு தான் நடித்த ஒரு படம் ... |
| அஜீத்துக்கு ரூட் போடும் நஸ்ரியா நசீம்! Posted:  நேரம், ராஜா ராணி படங்களில் நடித்துள்ள நஸ்ரியா நசீமுக்கு சினிமாவில் இது பொற்காலம் என்றுதான் சொல்லவேண்டும். காரணம் அவர் தொட்டதெல்லாம் துலங்கிக்கொண்டிருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் திருமணம் எனும் நிக்கா படத்தில் ஜெய்க்கு ஜோடியாகத்தான் தமிழில் முதல் படமாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அவர். அதனால் கோடம்பாக்கத்தின் ... |
| ரஜினி, கமலை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல்: கருணாநிதி Posted:  சினிமா நூற்றாண்டு விழாவில், ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர்., போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை. அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பின், அவர்களை ... |
| என் இளமையின் ரகசியம் யோகா, தியானம்தான் - ஸ்ரேயா Posted:  உனக்கு 20 எனக்கு 18 படத்தில் தமிழுக்கு வந்தவர் ஸ்ரேயா. அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த மழை படத்தில் மழையில் நனைந்தபடி இவர் ஆடிய கலக்கல் ஆட்டம் தமிழக இளவட்ட ரசிகர்களை கலக்கி எடுத்தது. அதனால் அந்த படத்திலிருந்தே ஸ்ரேயாவுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவானது. அதன்பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் டாப்மோஸ்ட் ... |
| தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சினிமா Posted:  நாட்டில் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் இந்த சட்டத்தை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் மிரட்டப்படுகிறார்கள். மக்களிடம் இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதனை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் அங்குசம். ஸ்கந்தா, ... |
| காமெடியாக நடித்த யானை! Posted:  இராம. நாராயணன் படத்திற்கு பிறகு யானை இப்போது ஒரு படத்தில் காமெடியாக நடித்திருக்கிறது. வி.டி.வி கணேஷ் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் இங்க என்ன சொல்லுது, கணேசுக்கு ஜோடி மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். சந்தானம் காமெடியன். சிம்பு கெஸ்ட் ரோல் என பல சிறப்புகள் இந்தப் படத்துக்கு இருக்கு. இப்போது கூடுதலாக ஒரு யானையை காமெடியாக நடிக்க ... |
| மனோரமாவுக்கு சிவாஜி விருது Posted:  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 85வது பிறந்த நாளை சிவாஜி பிரபு சாரிட்டபிள் டிரஸ்ட் வருகிற அக்டோபர் 1ந் தேதி கொண்டாடுகிறது. மியூசிக் அகாடமியில் மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நெல்லை கண்ணன் சிறப்புரையாற்றுகிறார். விழாவில், பழம்பெரும் தயாரிப்பாளரும், ... |
| சினிமா -நூற்றாண்டு விழாவில் தமிழ் நடிகர்களுக்கு அவமானம்: தமிழ் சினிமாவுக்கு தனி சங்கம் வேண்டும்: இயக்குனர்கள் போர்க்கொடி Posted:  சென்னையில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழ் கலைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவுக்கு தனி அமைப்புகள் உருவாக வேண்டும் என்று இயக்குனர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சென்னையில் நேற்று நடந்த ஞானகிறுக்கன் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ... |