மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லி, ராஜஸ்தான், ம.பி., மிசோரம், சத்தீஷ்கருக்கு நவம்பரில் தேர்தல்: அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும்
- திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 86 லட்சம் உண்டியல் வருமானம்
- சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு ரூ.42 லட்சம்: நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார்
- உ.பி. கலவரப்பகுதியில் சுற்றுப்பயணம்: மன்மோகன்–சோனியா மீது 'ஜாட்’ மக்கள் குற்றச்சாட்டு
- ரூ.20 லட்சம் செலவில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க புதிய கூடம்
- டீசல் விலை அதிகரிப்பால் ரெயில் கட்டணம் உயராது: மத்திய மந்திரி பேட்டி
- 450 தொகுதிகளில் பா.ஜனதா போட்டி: ராஜ்நாத் சிங் தகவல்
- பிரதமர் பதவி வேட்பாளர் பெயரை தேர்தலுக்கு முன் அறிவிக்க மாட்டோம்: காங்கிரஸ் முடிவு
- கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து பீரோவில் பூட்டி வைத்த கொடுமை
- பீகார் மவோயிஸ்ட் தாக்குதலில் இரு சிறப்பு படை போலீசார் சுட்டுக்கொலை
- நிலக்கரி சுரங்க முறைகேடு: மாயமான கோப்புகள் பற்றிய அறிக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
- ரெயில்வே, மாநில போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- முசாபர்நகர் கலவரம் எதிரொலி: உத்தரபிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
- ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றம்சாட்டிய பள்ளி மாணவி மனநலம் சரியில்லாதவர்: ராம்ஜெத்மலானி
- முஸ்லிம் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு: வகுப்புவாத வன்முறை மசோதா கொண்டுவர உறுதி
- மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
- ரெயில்வே துறைக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு: மந்திரி ஆதிர் சவுத்திரி பேட்டி
- கர்நாடகாவில் பலத்த மழை: 120 வீடுகள் இடிந்தன
- உ.பி. கலவரப் பகுதியில் மன்மோகன்சிங் ஆய்வு: பா.ஜனதா கண்டனம்
- மோடியை அத்வானி புகழ்ந்தது குறித்து நிதீஷ் குமார் கருத்து
| Posted: 16 Sep 2013 11:18 PM PDT டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து அந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் 5 மாநில தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலம் மட்டும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாகும். எனவே அந்த மாநிலத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் |
| திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 86 லட்சம் உண்டியல் வருமானம் Posted: 16 Sep 2013 10:53 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முழு அடைப்பையொட்டி பஸ்கள் ஓடாவிட்டாலும் ரெயில் மூலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருக்கிறார்கள் ரூ.300 டிக்கெட் தரிசனத்துக்கு 1 மணி நேரம் காத்திருக்கிறார்கள். நேற்று 55 ஆயிரம் பேர் சாமி |
| சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு ரூ.42 லட்சம்: நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார் Posted: 16 Sep 2013 10:31 PM PDT தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது குடும்ப சொத்து விவரங்களை அவர் நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார். அவர் கூறியதாவது:– என் கையில் உள்ள சொத்து மதிப்பு ரூ.42.6 லட்சம். எனது மனைவி புவனேஸ்வரிக்கு ரூ.33 கோடியே 5 லட்சம். மகன் லோகேசின் சொத்து மதிப்பு ரூ4.92 கோடி. மருமகள் பிராம்ஹணிக்கு ரூ.3.30 கோடி சொத்து |
| உ.பி. கலவரப்பகுதியில் சுற்றுப்பயணம்: மன்மோகன்–சோனியா மீது 'ஜாட்’ மக்கள் குற்றச்சாட்டு Posted: 16 Sep 2013 10:25 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 48 பேர் பலியானார்கள். அங்கு சகஜநிலை திரும்பியதையடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. கலவரப் பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, |
| ரூ.20 லட்சம் செலவில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க புதிய கூடம் Posted: 16 Sep 2013 10:24 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருவறை அருகே லட்டு பிரசாதம் தயாரிக்கும் கூடம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் அடுப்பு வெப்பம் காரணமாக ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஆகம விதி காரணமாக இந்த கட்டிடத்திலே லட்டு தயாரிக்கப்படுகிறது. என்றாலும் லட்டு தயாரிக்க பயன்டுத்தப்படும் பூந்தி வெளியில் தயாரித்து இந்த கட்டிடத்துக்கு கொண்டு வந்து லட்டு உருட்டப்படுகிறது. இந்த நிலையில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 25 கிராம் எடையுள்ள சிறிய லட்டு பிரசாதம் தயாரிக்க கோவிலுக்கு வெளியே புதிய கூடம் அமைக்கப்படுகிறது. இதற்காக பழைய அன்னதான கூடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு ரூ.20 லட்சம் செலவில் லட்டு பிரசாத மையம் கட்டப்படுகிறது.இதற்கான பணி நேற்று தொடங்கியது. இந்த கூடத்தில் தினமும் 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான லட்டு தயாரிக்கப்படும் என்றும் வரும் பிரம்மோற்சவத்துக்குள் இந்த புதிய கூடம் தயாராகி விடும் என்றும் தேவஸ்தான அதி |
| டீசல் விலை அதிகரிப்பால் ரெயில் கட்டணம் உயராது: மத்திய மந்திரி பேட்டி Posted: 16 Sep 2013 09:53 PM PDT டீசல் விலை அதிகரித்து வந்தாலும் ரெயில் கட்டணம் உயராது என்று மத்திய ரெயில்வே மந்திரி கூறினார். மத்திய ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கே நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதே அதனால் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுமா? என்று கேட்டனர். அதற்கு மத்திய மந்திரி, டீசல் விலை அதிகரித்தாலும் ரெயில் கட்டணம் உயர்வு இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கூற இயலாது என்றார். தமிழகத்தில் நடைபெறும் ரெயில்வே பணிகள் தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, தமிழக திட்டங்கள் பற்றி அதிகாரிகளிடம் ஆலோசித்து விட்டுதான் கருத்து கூற முடியும் என்றார். முன்னதாக ரெயில் மந்திரி மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருவதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் இரவு 11.30 மணிக்கு பெங்களூரில் இருந்து வந்தார். அவரை வரவேற்க வந்த அதிகாரிகள் 6 மணி நேரத்து |
| 450 தொகுதிகளில் பா.ஜனதா போட்டி: ராஜ்நாத் சிங் தகவல் Posted: 16 Sep 2013 09:47 PM PDT தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற 2014 மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாரதீய ஜனதா கட்சி குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டது. அடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் செல்வாக்கு பற்றியும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றியும் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளது. பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 552. இதில் 530 எம்.பி.க்கள் மாநிலங்களில் இருந்தும் 20 பேர் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். ஆங்கிலோ- இந்தியன் வகுப்பைச் சேர்ந்த 2 பேரை எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிப்பார். மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் மெஜாரிட்டிக்கு 275 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அளித்தது போக 450 தொகுதிகளில் பாரதீய ஜனதா போட்டியிட தீர்மானித்துள்ளது. இதுபற்றி பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் அளித்த பேட்டி வருமாறு:- பாராளுமன |
| பிரதமர் பதவி வேட்பாளர் பெயரை தேர்தலுக்கு முன் அறிவிக்க மாட்டோம்: காங்கிரஸ் முடிவு Posted: 16 Sep 2013 08:22 PM PDT பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பெயரை தேர்தலுக்கு முன்பு அறிவிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு (2014) மே மாத அளவில் நடக்க உள்ளது. இதற்கான பிரசார களத்தில் இறங்க தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஆயத்தமாகி விட்டன. பாரதீய ஜனதா கட்சி, தங்களது பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்ததும், பாராளுமன்றதேர்தல் களம் சற்று சூடு பிடிக்க தொடங்கி விட்டது. காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவிக்கையில், 'பிரதமர் பதவிக்கு தகுதியானவர் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி என்றும் அவரது தலைமையின் கீழ் பணியாற்ற தயார் என்றும் கூறினார். இந்த நிலையில் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பக்தசரண் தாசிடம், காங்கிரஸ் கட்சி சார்பிலான அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- |
| கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து பீரோவில் பூட்டி வைத்த கொடுமை Posted: 16 Sep 2013 05:34 PM PDT கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் ரோஜா(வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். இவருக்கு தாய் மட்டும் உள்ளார். தந்தை ஏற்கனவே இறந்து விட்டார் |
| பீகார் மவோயிஸ்ட் தாக்குதலில் இரு சிறப்பு படை போலீசார் சுட்டுக்கொலை Posted: 16 Sep 2013 04:41 PM PDT பீகார் மாநிலம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள தோபி போலீஸ் சராகப் பகுதிகளில் நேற்று மாலை சிறப்பு பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். 8 பேர் கொண்ட குழுவாக சென்ற அவர்கள் மீது காட்டில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இரு |
| நிலக்கரி சுரங்க முறைகேடு: மாயமான கோப்புகள் பற்றிய அறிக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு Posted: 16 Sep 2013 02:39 PM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது |
| Posted: 16 Sep 2013 02:15 PM PDT பொது மக்களுக்கு பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்கள் மானிய விலையில் விற்கப்படுவதால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்வதற்காக, படிப்படியாக மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது |
| முசாபர்நகர் கலவரம் எதிரொலி: உத்தரபிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி Posted: 16 Sep 2013 12:42 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 47 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர் |
| ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றம்சாட்டிய பள்ளி மாணவி மனநலம் சரியில்லாதவர்: ராம்ஜெத்மலானி Posted: 16 Sep 2013 12:27 PM PDT மதபோதகர் ஆசாராம் பாபு (72) மீது அவரது ஆசிரமத்தில் படித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் குற்றம்சாட்டினார். இதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள அவருக்கு ஜோத்பூர் நீதிமன்றம் மீண்டும் 14 நாள் நீதிமன்றக்காவலில் இருக்கும் படி உத்தரவிட்டுள்ளது. |
| முஸ்லிம் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு: வகுப்புவாத வன்முறை மசோதா கொண்டுவர உறுதி Posted: 16 Sep 2013 10:51 AM PDT உத்தரப்பிரதேசத்தில் நடந்த வகுப்பு வாத வன்முறைக்கு 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நாட்டில் பெருகி வரும் இனமோதல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜமாத் இ உலெமா இ ஹிந்த் தலைவர் மெஹ்மூத் மதானி தலைமையில் முஸ்லிம் தலைவர்கள் 15 பேர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். |
| மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலி Posted: 16 Sep 2013 10:50 AM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி மாநிலத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஷகடோல் மாவட்டம் திகே கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த |
| ரெயில்வே துறைக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு: மந்திரி ஆதிர் சவுத்திரி பேட்டி Posted: 16 Sep 2013 08:55 AM PDT மத்திய ரெயில்வே துணை மந்திரி ஆதிர் சவுத்திரி, மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'ரெயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, விரைவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்' என்றார். |
| கர்நாடகாவில் பலத்த மழை: 120 வீடுகள் இடிந்தன Posted: 16 Sep 2013 07:04 AM PDT கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் பெய்த பலத்த மழைக்கு 120 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மந்திரி மகாதேவ பிரசாத் பார்வையிட்டார். சாம்ராஜ்நகரில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளான ராமசமுத்திரா, உப்பார வீதி, பவுர கார்மீகரா வீதி உள்ளிட்ட பகுதிகளில் |
| உ.பி. கலவரப் பகுதியில் மன்மோகன்சிங் ஆய்வு: பா.ஜனதா கண்டனம் Posted: 16 Sep 2013 05:44 AM PDT உ.பி.யில் உள்ள முசாபர் நகரில் இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவராக வெடித்தது. இதில் 48 பேர் பலியானார்கள். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். கலவரம் ஏற்பட்ட இடத்தை பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ்நக்வி கூறுகையில், இவர்களின் இந்த சுற்றுப்பயணத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை குணமடையச் செய்யமுடியாது. |
| மோடியை அத்வானி புகழ்ந்தது குறித்து நிதீஷ் குமார் கருத்து Posted: 16 Sep 2013 05:08 AM PDT இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தனது அதிருப்தியை ராஜ்நாத் சிங்கிடம் குறிப்பிட்டார். இந்த நிலையில் இன்று காலை சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடியின் சாதனைகள் குறித்துப் பேசி அத்வானி அவரை புகழ்ந்துள்ளார். உட்கட்டமைப்பு வசதியிலும், மின்சாரத்துறையிலும் குஜராத் அரசு வெகுவாக முன்னேறியுள்ளது என்று அத்வானி கூறினார். தங்கள் கட்சி பிரதமர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |