Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மன்னன் மகள்-சாண்டில்யன்

Posted: 29 Sep 2013 02:37 PM PDT

நண்பர்களே! சாண்டில்யன் சரித்திர நாவல் வரிசையில் மன்னன் மகள் என்ற நாவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாவல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.இதன் மின்நூல் உரிமையாளருக்கு நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள். அடுத்து சாண்டில்யனின் ராஜபேரிகை-யில் சந்திப்போம். மன்னன் மகள் I அல்லது மன்னன் மகள் I மன்னன் மகள் II அல்லது மன்னன் மகள் II தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/blog-post_7278.html

என்று மாறும் தேசம் ????????????

Posted: 29 Sep 2013 01:25 PM PDT

விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்! புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் ...

ஸ்மைல் ப்ளீஸ் .....

Posted: 29 Sep 2013 01:22 PM PDT

ஒரு புகைப்படக்காரரை......
ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வழியாகச் சென்ற ஒருவர்
"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?"
என்று மற்றொருவரைக் கேட்கிறார்.

"பின்ன என்னங்க?
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் .....
என்றால் என்ன செய்வார்களாம்?"

thanks t o facebook

நாளை பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம்

Posted: 29 Sep 2013 11:31 AM PDT

நாளை பிறந்த நாள் காணும் ஆதிராவை வாழ்த்துவோம் நாளை பொன் விழா காணும் பெண்மணி இவர். அரை சதம் , கண்டு போனது     நிறை சதம் ,காணப் போவது:   ஒளி மிக்க பாதை உன் எதிரே. தமிழ் மொழி சேவையும்   பொது ஜன சேவையும்   இருகண்ணென இருந்திட எண்ணங்கள்  திட்டங்களாகவும் திட்டங்கள் செயல்களாகவும் வடிவு கொடுக்கும் வடிவுக்கரசியே ஆதிரை-- மணிமேகலை , அக்ஷய பாத்திரம் போல் அள்ள அள்ள, குறையாது மெள்ள மெள்ள  வாராது அறிவு பதிவுகள் அரங்கேறும் ,   நிறைவாக பணிகள் சிறந்திடவே , குறைகள் ...

4000 பதிவுகள் கடந்த ராஜு சரவணன் அவர்களை வாழத்தலாம் வாங்க ...

Posted: 29 Sep 2013 11:24 AM PDT



வாழ்த்துகள் அண்ணா ...





இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி? - மதுமிதா

Posted: 29 Sep 2013 10:52 AM PDT

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது ...

3000 மதிப்பீடுகளை கடந்த பாசதிற்க்குறிய நமது தலைமை நடத்துனர் ராஜா அண்ணாவை வாழ்த்தலாம் வாருங்கள்!!

Posted: 29 Sep 2013 10:41 AM PDT



3000 மதிப்பீடுகளை கடந்த பாசதிற்க்குறிய நமது தலைமை நடத்துனர் ராஜா அண்ணாவிற்கு                
                                         வாழ்த்துக்கள்!!

25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!

Posted: 29 Sep 2013 09:49 AM PDT

மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். 25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்! இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், ...

உனக்காகவே ஒரு ரகசியம்

Posted: 29 Sep 2013 09:00 AM PDT

உனக்காகவே ஒரு ரகசியம் நண்பர்களே... சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் படைப்பாக விகடனில் வெளிவந்த உனக்காகவே ஒரு ரகசியம் ஒரு ரகசியம்...!-என்ற கட்டுரை தொகுப்பு மின்நூல் வடிவில் உங்களுக்காக... பதிவிறக்கி படித்து மகிழுங்கள்... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/yg0srlzkkq2pfda/Unakkagaveoruragasiyam%28OrathanaduKarthik.blogspot.com%29.rar

மாத்தி யோசி ....................

Posted: 29 Sep 2013 08:47 AM PDT

புதிய சிந்தனை ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும். அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு. இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான். அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? ...

சென்னையில் கிரிக்கெட் வாரிய தேர்தல்: என்.சீனிவாசன் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு

Posted: 29 Sep 2013 08:25 AM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) 84–வது பொதுக்குழு கூட்டம் சென்னை அடையாரில் உள்ள பார்க் ஷெரட்டான் ஓட்டலில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2013–14–ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. என்.சீனிவாசன் கிரிக்கெட் வாரிய தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும் அவர் மட்டுமே தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்து உள்ளார். இதனால் அவர் மீண்டும் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுகிறார். ...

அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்...

Posted: 29 Sep 2013 07:36 AM PDT

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததைஅறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ...

திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

Posted: 29 Sep 2013 07:19 AM PDT

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி, 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் உள்ளது புலவன்பாடி கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த பழனி - மலர் தம்பதியின் 4 வயது குழந்தை தேவி. பெரியவர்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிறுமி தேவி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சங்கர் என்பவரது நிலத்தில் மூடப்படாமல் இருந்த 400 அடி ஆழ்துளை கிணற்றில் மீது போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு மீது கால்வைத்த ...

ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால்...

Posted: 29 Sep 2013 07:12 AM PDT

"ஒரு பண்பாட்டினை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும். பின்பு, அந்த இனத்தின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மூன்றாவது, அவர்களை இருப்பிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். நான்காவது, அவர்கள் நினைவுகளை அழித்து ஒழிக்க வேண்டும்" சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற நேரம் ஒரு வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மலைவாழ் மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் ...

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Posted: 29 Sep 2013 06:50 AM PDT

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:- ௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும். ௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும். ௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும் முதல் விளையாட்டுக்கான படம்:- தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது) (தொடரும்) இதுவரை சொன்ன சொற்கள்: ௧. ஜன்னல் = காலதர் ௨. வானம், விரிந்த கடல் = அம்பரம் ௩. திமில் = அக்கு ௪. வயல் = பழனம் ௫. வைகை ஆறு = வேகவதி ௬. அரிவாள் மனை = புள்ளம் ௭. தோசை = கஞ்சம் ௮. தாமரை = புண்டரீகம் ௯. ...

இயல்பே அழகு!

Posted: 29 Sep 2013 06:37 AM PDT

எப்படிச்சாப்பிடுவது, எப்படிப் பேசுவது, எப்படி உடை உடுத்துவது, எப்படிக் கைகுலுக்குவது, எப்படி அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நடந்துகொள்வது, எப்படிப் பணியாளர்களை நடத்துவது, எப்படி நெருக்கடிகளைச் சமாளிப்பது, எப்படிப் பெண்களைக் கவர்வது, எப்படிக் குழந்தை வளர்ப்பது என்றெல்லாம் ஏராளமான அறிவுரைகளும் பயிற்சி வகுப்புகளும் கிடைக்கும் காலம் இது. கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இதுபோன்ற ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள் நம்மைக் குழந்தைகளைப் போலவும், முட்டாள்களைப் போலவும் ...

ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!

Posted: 29 Sep 2013 06:19 AM PDT

கியூப் டைஸ் என அழைக்கப்படும் ஆறு சதுர முக பக்கங்கள் கொண்ட தாய விளையாட்டுக்கும் நம் இந்திய தாய விளையாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. நம் தாயக்கட்டைகள் நான்கு முகங்கள் உடையது. மரம் மற்றும் உலோகங்களில் ஆன விளையாட்டு பொருள். அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டுகள் அனைத்துமே ஓரளவுக்கு எளிதாக அனைத்து இடத்திலும் விளையாடும் வண்ணம் இருந்தன. உள்ளரங்கு விளையாட்டுகள் எனப்படும் இண்டோர் கேம்ஸ்க்கும் அதிகம் செலவழிக்க தேவை இருந்ததில்லை. மனிதர்களுக்கு மதிப்பு இருந்த காலம். விளையாட மனிதர்கள் இருந்தால் போதும்.. ...

தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா

Posted: 29 Sep 2013 06:13 AM PDT

500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா? "திடீர்னு ஒருநாள் எங்க வீட்டுத் தென்னந்தோப்புல இருந்த மரங்கள் எல்லாம் காய்ஞ்சு விழுறாப்பல கனவு கண்டேன். கனவைச் சொல்லி 'மாற்றுப் பயிரை பத்தி யோசிக்கணும்'னு நான் சொன்னத யாரும் நம்பல. ...

"என்னது... சிவாஜி செத்துட்டாரா?"

Posted: 29 Sep 2013 06:08 AM PDT

முதல்முறை அந்தச் செய்தியைப் படித்தபோது பிரதமரே கொஞ்சம் திடுக்கிட்டுப்போய் இருப்பார். மோடி கொடுத்த பேட்டியைத்தான் ராகுல் பெயரில் ஊடகங்கள் தவறாகப் போட்டுவிட்டனவோ என்று. "அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்" - என்ன ஒரு காட்டம்?! கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் முக்கியமான அம்சத்தை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!

Posted: 29 Sep 2013 05:04 AM PDT

பாலை நிலத்தில் ஒருவகை தாவரம் காணப்படும்..... வறுத்தெடுக்கும் வெயில் கொளுத்தும் போதெல்லாம் அது இருக்குற இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக, அதன் விதைகள் கிடக்குமாம்....... ஆனால் ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம் நேத்து ஒரு நாவல் படிக்கும் போது இத்தகவலை பார்த்தேன் ஆனால் அதன் பெயர் குடுக்கவில்லை... தெரிந்தவர்கள் தெரிந்து கொள்ள உதவுங்கள் உறவுகளே ......!     

கோச்சடையான் -கௌதம நீலாம்பரன் நாவல்

Posted: 29 Sep 2013 03:12 AM PDT

கோச்சடையான் -கௌதம நீலாம்பரன் நாவல்

http://www.mediafire.com/download/ng9rb9rr2wogmkl/kochadayan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கோவில்களும் தெய்வீக முயற்சிகளும்-மின்னூல் வடிவில்

Posted: 29 Sep 2013 02:55 AM PDT

கோவில்களும் தெய்வீக முயற்சிகளும்-மின்னூல் வடிவில் கோவில்களும் தெய்வீக முயற்சிகளும் புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் கோவில்களும் தெய்வீக முயற்சிகளும்-அருமையான புத்தகம், தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/r2888c31r302sc6/koyilgalumtheivigamuraigalum%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )

Posted: 29 Sep 2013 02:53 AM PDT

October2013-Windows7 Help & Advice Magazine Pdf Free Download ... http://www23.zippyshare.com/v/27815269/file.html 26.9.2013-MicroMart (UK) Magazine Free Download Pdf Link .. http://www10.zippyshare.com/v/41929709/file.html October2013-Practical Photoshop Magazine(uk) Pdf Free Download http://www23.zippyshare.com/v/58725/file.html Sep2013-Photoshop Creative Magazine Pdf Free Download Issue 105. http://www49.zippyshare.com/v/19531455/file.html 2013-AutoCad Practical 3D ...

மிதிலா விலாஸ் -தமிழக அரசு பரிசு பெற்ற நாவல்

Posted: 29 Sep 2013 02:50 AM PDT

மிதிலா விலாஸ் -தமிழக அரசு பரிசு பெற்ற நாவல் மிதிலா விலாஸ் -லக்ஷ்மி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/c5n3u45ty5qy73n/Lakshmi+-Mithila+Vilas%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

தண்ணீர் கீரை

Posted: 29 Sep 2013 02:47 AM PDT

கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம்  சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க இருக்கும் தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி  பிரச்சனைகளையும் சரி செய்கிறது. தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்: பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள்  மிகச்சிறந்ததாகவே விளங்குகின்றது.. தண்ணீர் கீரையில் வைட்டமின், ...

வித்தியாசமான உதவி...........................

Posted: 29 Sep 2013 12:15 AM PDT

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே ...

"நேர்மை கடைகள்"!!!!!!!......

Posted: 28 Sep 2013 11:07 PM PDT

]44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம் மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்த வரிசையில், மாணவர்களிடையே, நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில், 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடை"களை திறப்பதற்கு, ...

15000 பதிவுகளை கடந்து வெற்றிநடை போடும் நாட்டாமையை வாழ்த்தலாம் வாங்க

Posted: 28 Sep 2013 10:41 PM PDT

+  + கடந்தும் நிதானமா வெற்றிநடை போடும் அன்பிற்குரிய நாட்டாமை பாலாஜி   அவர்களை வாழ்த்த வயதும் அனுபவமும் இல்லை என்பதால் வணங்கி மகிழ்கிறேன்.    

12000 பதிவுகள் கடந்த தம்பி அருணுக்கு வாழ்த்துக்கள்

Posted: 28 Sep 2013 10:27 PM PDT

12000 பதிவுகள் கடந்த தம்பி அருணுக்கு வாழ்த்துக்கள், இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கடக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 

தமிழக அரசியலில் மோடி ஏற்படுத்திய அதிர்வலை

Posted: 28 Sep 2013 07:26 PM PDT

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதும், மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது.அதை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட, தமிழக பா.ஜ., திருச்சியில், 'இளந்தாமரை மாநாடு'க்கு ஏற்பாடு செய்தது. பிரியாணி, குவார்ட்டர், கைசெலவுக்கு பணம், அழைத்து வர வாகனம் என, லட்சக்கணக்கில் செலவு செய்து தான், மற்ற கட்சிகள் மாநாடு நடத்துவது வழக்கம். அதற்கு நேர்மாறாக, தலா, 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்க, ...

வள்ளலார் போட்ட பூட்டு!

Posted: 28 Sep 2013 06:57 PM PDT

வள்ளலார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன் புருஷோத்தமன் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு மதுரை ஞானசம்பந்தர் சுவாமிகள் மடத்திற்குச் சென்றுவிட்டார். அந்த மடாதிபதிக்கு ராமலிங்க அடிகள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த அங்கிருந்த புலவர்கள் சிலர், "இராமலிங்க அடிகளை பெரிய வித்துவான் என்று சொல்கிறார்கள்; ஆனால் கடிதம் பாமரத்தன்மையாக உள்ளது, அவருக்கு இலக்கணப் புலமை கிடையாது' என்று கூறினர். அதன்பொருட்டு இராமலிங்க அடிகள் மீண்டும் சன்னிதானத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் அந்தப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™