Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காந்தி மட்டும் தான் சுதந்திரத்திற்கு போராடியவரா,?

Posted: 22 Sep 2013 01:37 PM PDT





ஏன் காந்தி மட்டும் தான் சுதந்திரத்திற்கு போராடியவரா,
மற்ற தலைவர்கள் மறக்கடிக்க படுவது ஏன்...
ஏனைய விடுதலை வீரர்களுக்கும் நாம் மரியாதையை செலுத்த வேண்டும்.
muganool

குழந்தைகளின் உலகில்

Posted: 22 Sep 2013 11:53 AM PDT

குழந்தைகளின் உலகில் தன்னைத் தானே கோபித்துக் கொண்டன கொஞ்சலும் கோபமும் காமமில்லாத கட்டித் தழுவழும் மோகமில்லாத முத்தங்களும் நிறைந்த குழந்தைகளின் உலகில் பொம்மையாகாது கயவர்களின் உலகில் கடவுளாகிப் போனதை எண்ணிய சிலைகள்!

மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி!

Posted: 22 Sep 2013 11:36 AM PDT

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான். இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, தொட, விவாதிக்கத் தயங்கிய ஒரு உண்மை குறித்து பேச முனைந்த இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு முதல்ப் பாராட்டுகள். தினந்தோறும் உடலைச் சுத்திகரிக்க உருவாகும் மலம், சிறுநீர் போல், ஒவ்வொருவரையும் தன்னுள்ளே தாங்கி, உருவம் கொடுத்து, வளர்த்து உலகுக்குத் தந்த கர்ப்பப்பை தன்னை ஒரு சுழற்சியில் சுத்தப்படுத்திக்கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள வெளியேற்றும் உதிரம் ஏன் "தீட்டு" ...

உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...

Posted: 22 Sep 2013 10:33 AM PDT

அக்டோபர் மாதத்திலிருந்து  உங்கள் சிலிண்டருக்கான  மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே... ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது.  ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். ...

12000 பதிவுகள் கடந்த தம்பி அருணுக்கு வாழ்த்துக்கள்

Posted: 22 Sep 2013 09:03 AM PDT

12000 பதிவுகள் கடந்த தம்பி அருணுக்கு வாழ்த்துக்கள், இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கடக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 

தென்பாண்டி சிங்கம் நூலினை டவுன்லோட் செய்ய

Posted: 22 Sep 2013 08:11 AM PDT

தென்பாண்டி சிங்கம் நூலினை டவுன்லோட் செய்ய கலைஞரின் -தென்பாண்டி சிங்கம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/6l70x5egts5mg5v/then_paandi_singam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

எனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் தேவை

Posted: 22 Sep 2013 08:07 AM PDT

அன்பு உறவுகளுக்கு வணக்கம். எனக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. தற்சமயம் அக்குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வைத்து என் நீண்ட கால கனவினை நிறைவேற்ற உள்ளேன்.   பெயர் தொடங்கும் எழுத்துக்களில் வட மொழி எழுத்தும் வருகிறது. அதற்கு ஏற்றவாறு தமிழ் பெயர்கள் தரவும். தொடங்கும் எழுத்துக்கள் கோ, ஸ, ஸீ, ஸி ஆகியவை. ஆகவே உறவுகள் யாரேனும் மேற்கண்ட எழுத்துக்களில் தொடங்கும் பெயர்கள் தந்து உதவுமாறு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Posted: 22 Sep 2013 07:53 AM PDT

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:- ௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும். ௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும். ௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும் முதல் விளையாட்டுக்கான படம்:- தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது) (தொடரும்) இதுவரை சொன்ன சொற்கள்: ௧. ஜன்னல் = காலதர் ௨. வானம், விரிந்த கடல் = அம்பரம் ௩. திமில் = அக்கு ௪. வயல் = பழனம் ௫. வைகை ஆறு = வேகவதி ௬. அரிவாள் மனை = புள்ளம் ௭. தோசை = கஞ்சம்

தமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை

Posted: 22 Sep 2013 07:38 AM PDT

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளுக்கும் படிப்பை முடிக்கும்போது கண்டிப்பாக அரசு வேலை உறுதியாக காத்திருக்கும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உறுதியாக அரசு வேலை காத்திருக்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடுதான் இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம். தமிழ்வழியில் கல்வி தமிழில் படித்தால் வேலையே கிடைக்காது என்ற ...

தமிழ் சுற்றுச்சூழல் சொற்களஞ்சியம்!

Posted: 22 Sep 2013 07:02 AM PDT

பசுமை எழுத்து - சில வெளிச்சப் புள்ளிகள் - ஆதி வள்ளியப்பன் சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் எதிரே உள்ள இக்சா மையம், வெயிலின் கடுமை சற்றே தணிந்திருந்த, மே மாதம் 4-ம் தேதி. தமிழ் சுற்றுச்சூழல் ஆர்வலனான நானும் நண்பர்களும் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக பேசி வந்த ஒரு விஷயத்துக்காகக் கூடியிருந்தோம். "தமிழ் சுற்றுச்சூழல் சொற்களஞ்சியம்" ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டமே அது. சுற்றுச்சூழல் எழுத்து சார்ந்த ஆர்வம், ஆங்காங்கே வலுவாகத் துளிர்விடத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், மொழிபெயர்ப்போ, ...

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?

Posted: 22 Sep 2013 06:57 AM PDT

சிட்டுக்குருவிகள் ஏன் குறைந்து விட்டன? எங்கள் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டிலேயே கூடி கட்டி அமோகமாக இனப்பெருக்கம் செய்துள்ளன. இன்றைக்குச் சிட்டுக்குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே. இதற்குக் காரணம் செல்போன் கதிர்வீச்சுதான்... இந்தத் தகவல் நிச்சயம் உங்கள் காதுக்கும் வந்திருக்கும். எல்லோரும் செல்போன் பயன்படுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஆனால் சிட்டுக்குருவிகள் ஏன் அழிந்தன என்ற கேள்வியை 10 பேரிடம் கேட்டால், அதில் 8 பேர் செல்போன் கோபுரங்கள்தான் ...

“மூன்றாம் உலகப் போர் - தண்ணீருக்காக!”

Posted: 22 Sep 2013 06:55 AM PDT

காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன். மருந்துக் கடையில் 'சிரப்' ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன், மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன் நீட்டினான். இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும் கூட,"விய்ஷ்க்" என பிய்த்து,"ப்பூ" என ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக் கொடுப்பது தவிர்க்க ...

நல்ல தமிழ் எங்கே கிடைக்கும்?

Posted: 22 Sep 2013 06:51 AM PDT

தொலைபேசி அழைப்பு குரல் கொடுத்தது. காலையிலிருந்தே எதிர்பாராத மழை. முதலில் மெல்லச் சிணுங்கி அப்புறம் அறைய ஆரம்பித்துவிட்டது. முதல் நாள் காலையில் கூடிய எங்கள் முக்கூட்டில், "நாளைக்கு இந்நேரம் தஞ்சையில் இருப்போம்" என்றார்கள் நாயக்கரும் அமரநாதனும். நானோர் மொனண்டி. அதனால் என்னைக் கூப்பிடவில்லை. ஒரு ரயில் நின்று புறப்படும் நேரம்தான் எங்கள் சந்திப்பு. இதை நாங்கள் முக்கூட்டு, நல்ல காலை என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறது. மழை அடித்த அடிப்பில் அவர்கள் சரியான படிக்கு நனைந்திருப்பார்கள். வந்திருக்க ...

'கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம்!!!

Posted: 22 Sep 2013 05:25 AM PDT

கேலியும் கிண்டலும் மாணவனை நரகத்தில் தள்ளிய பயங்கரம் பிதற்றிப் பிதற்றி ஏதேதோ பேசுகிறான். கடந்த நான்கு மாதங்களாக, முடை நாற்றம் வீசும் அந்த வீட்டுக்குள் ஈக்களுக்கு மத்தியில் முடங்கிக் கிடந்திருக்கிறான். கலெக்டராவதற்காகத் துடித்துக் கொண்டிருந்த பிள்ளை, கனவுகளை தொலைத்துவிட்டு நிற்பது எதனால்? கந்தக்குமாருக்கு என்ன ஆயிற்று? எவ்வளவு பெரிய மாளிகையை காட்டினாலும் யாருமே சொந்த வீட்டைத்தான் சொர்க்கம் என்பார்கள். ஆனால், சொந்த வீட்டுக்குள்ளேயே நான்கு மாதங்கள் நரகத்தை அனுபவித்திருக்கிறான் பதினைந்து ...

புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம்

Posted: 22 Sep 2013 05:11 AM PDT

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு ...

மாணவர்களே அசத்துங்கள் ஆசிரியர்களை – விந்தையான கணக்கு !

Posted: 22 Sep 2013 04:27 AM PDT

கனடாவில் இன்று பெரும்பாலான பள்ளிகள் ஆரம்பம். (குவல்வ் நகரத்தில் மட்டும் கடந்த 1ம் திகதி ஆரம்பித்தது ஏன் என்பது புதிர்தான்!) இந்த பள்ளி ஆரம்பமாமும் காலங்களில் மாணவர்கள் தமது விடுமுறைகளைப் பற்றியும் எங்கு சென்றோம், என்ன செய்தோம் என சக மாணவர்களிடம் சொல்லி மகிழ்வார்கள். சிலர் தம் தோழர்களை கவர்வதுக்கு என்றே ஆய்த்தமாக செல்வார்கள். அப்படி நீங்களும் உங்கள் நண்பர்களையும் கவர வேண்டுமா? இதோ ஒரு விடயம்! இதை உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இல்லாமல் உங்கள் ஆசிரியரையும் அசத்துங்கள். எமது கணக்குப் ...

ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 22 Sep 2013 04:17 AM PDT

ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கவிதா வெளியீடு .த பெ .எண் 6123. 8.மாசிலாமணி தெரு , பாண்டி பஜார் , தியாயராயர் நகர் , சென்னை 600017.தொலைபேசி 044-24364243. நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் நாடு அறிந்த நல்ல கவிஞர் .புதுக்கவிதை தாத்தா என்று செல்லமாக அழைக்கக் கூடிய கவிஞர் .கவிவேந்தர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் .தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் , நான் மற்றும் பட்டிமன்ற அணியினரும் சென்னை ...

விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் வாள்கள்!

Posted: 22 Sep 2013 04:08 AM PDT

பழனி அருகே இஸ்லாமியப் போர் வீரர் நினைவிடத்தில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் வாள்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழனியை அடுத்த விருப்பாட்சிபாளையத்தின் 19-ஆவது பாளையக்காரராக 1762-ஆம் ஆண்டு முதல் 1801-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்ற திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர். இவர் தீரன்சின்னமலை, துண்டாஜி ஆகியோரைத் திரட்டி கோவையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைக்காகப் போராடியவர் ஆவார். இவரது படைத் தளபதி பாபுஜி சாயபு. கோபால்நாயக்கருக்கு வலதுகரம் போல விளங்கிய ...

சொல்லுங்கப் பார்க்கலாம்

Posted: 22 Sep 2013 04:02 AM PDT

மேலே உள்ள படத்தில் காணப்படுவது பெரிய றோட்டுகளில் உள்ள "Manhole" என்றழைக்கப்பெறும் மனிதக் குழி ஆகும்.  இவை றோட்டின் கீழ் அமைக்கப்பெற்றுள்ள வயர் தொடர்புகளையும், கழிவுநீர் பாதையையும் இதனூடாக தொழிலாளர்கள் கீழ் இறங்கி சீர் செய்வதற்கான உள்ள நுளைவாயிலாகும். இவைகளை அனேகமாக எல்லோருமே பாத்திருக்கின்றோம். அவற்றின் வாயில் வட்ட வடிவில் அமைந்திருக்கும். சதுரமாக அல்லது நீள்-சதுரமாக அமைக்காது மூடியை வட்ட வடிவில் அமைத்தமைக்கு  காரணம் என்னவாக இருக்கலாம்?

கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )

Posted: 22 Sep 2013 03:50 AM PDT

October2013-Practical Photoshop Magazine(uk) Pdf Free Download http://www23.zippyshare.com/v/58725/file.html Sep2013-Photoshop Creative Magazine Pdf Free Download Issue 105. http://www49.zippyshare.com/v/19531455/file.html 2013-AutoCad Practical 3D Drafting & Design Ebook Pdf Mediafire Link. http://www.mediafire.com/download/8zsz8lcbuanqzgf/Autodesk.AutoCAD.2013.Practical%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 19-9-2013-MicroMart Tech Magazine Pdf Free Download Link.. http://www40.zippyshare.com/v/38989516/file.html Samsung ...

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி

Posted: 22 Sep 2013 01:06 AM PDT

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண சபை தேர்தல் 25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நடைபெற்றது. 2009–ம் ஆண்டு இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியது. இந்திய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி தலைமையில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் பார்வையாளர் குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டதால் ஓட்டுப்பதிவு ...

ஒதுக்கப்பட்ட தொல்காப்பியம்

Posted: 22 Sep 2013 01:06 AM PDT

மனிதர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து பேசக் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்று மனித சரித்திரத்தை ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள். பேச்சு என்பது ஒலி. அதாவது சப்தம். வாய் மொழியாக எழுப்பும் சப்தத்தையே "பேச்சு' என்றும் "சொல்' என்றும் குறிப்பிடுகிறார்கள். அது சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது. "எல்லாச் சொல்லும் பொருள் உடையது' என்று தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பொருள் இல்லாதது சொல் கிடையாது. சொற்கள் ஒவ்வொன்றாகச் சேர்த்து மொழியாக்கினார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எண்ணங்களையும் ...

மறந்ததேன்?

Posted: 22 Sep 2013 12:21 AM PDT

மறந்ததேன்? பள்ளி கூடத்தில் ஆரம்பித்து கல்லூரி வரை ஒன்றாக படித்த பிள்ளையாம் வீடு வரை கூட்டி வந்து அறிமுகப் படுத்தினான் என் மகன் ! நண்பர்கள்தான் அங்கிள் என்றால் நாங்களெல்லாம் படிப்பை தவிர மற்றதை நினைப்பதில்லை கண்ணியம் காக்கிறோம் எங்கள் நட்பில் வேகமாய் பேசி முடித்தால் !! பல நாட்கள் சென்றது பருவத் தேர்வில் தோற்றான் ஏன் எனக் கேட்டேன் - என் மனதில் காதல் என்றான் !! வாலிப வயதில் வரும் நோய்தான் பதிப்பு முடியட்டும் பார்க்கலாம் என்றேன்! சரியென சென்றவன் - தன் தலை வைத்து ...

இது உங்கள் இடம்..!

Posted: 21 Sep 2013 11:38 PM PDT

நன்றி: வாரமலர் வேண்டாம் சுய வைத்தியம்! என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான். சுய வைத்தியம் எனும் ...

கொன்று புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட நர்சிங் மாணவி 82 நாளுக்கு பின் மீட்பு

Posted: 21 Sep 2013 11:02 PM PDT

கன்னியாகுமரி: கொன்று புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட குமரி நர்சிங் மாணவி கார் டிரைவரை திருமணம் செய்து சென்னையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி அருகே உள்ள லீ புரத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகள் ஸ்டாலின் ஜானா (20). திங்கள்சந்தை அடுத்த நெய்யூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 1ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ஸ்டாலின் ஜானா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு ...

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

Posted: 21 Sep 2013 10:49 PM PDT

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி ! உளியால் செதுக்குமுன் மனத்தால் செதுக்கினான் சிற்பி ! அழியாமல் இருந்தது நீரில் வரைந்த ஓவியம் புகைப்படம் ! ஒளிருவதில்லை தீட்டும்முன் வைரம் ! வருந்துவதில்லை நிறத்திற்காக காகம் ! முட்டையில் இருந்து கோழி மட்டுமல்ல சேவலும் வரும் ! சின்ன மீன் போட்டு சுறா மீன் பிடிப்பு அன்பளிப்பு ! கிணறுதான் கடல் தவளைக்கு ! உதட்டில் தேன் உள்ளத்தில் தேள் அரசியல் ! நிறைய கேள் பார் குறைவாகப் பேசு ஒன்றுதான் வாய் ! நீச்சுத் ...

ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!

Posted: 21 Sep 2013 10:47 PM PDT

அகமதாபாத்: அன்னிய செலாவணி சட்டத்தில் கைதாகி சிறை சென்ற டாக்டர் ஒருவர், அங்கேயே படித்து 31 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் டாக்டர் பானு படேல். கடந்த 2004ல் அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு (பெரா) சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு அகமதாபாத் நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2005ல் தீர்ப்பளித்தது.இதையடுத்து சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டாக்டருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள மருந்தகத்தில் இவருக்கு வேலை தரப்பட்டது. ...

புலிப்பாண்டியன் நூலினை டவுன்லோட் செய்ய

Posted: 21 Sep 2013 10:01 PM PDT

புலிப்பாண்டியன் நூலினை டவுன்லோட் செய்ய கௌதம நீலாம்பரன் -புலிப்பாண்டியன் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் http://www.mediafire.com/download/omx7qz0rx5250ap/Pulippaandian-Gowthama-Neelaambaran%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

திக் திக் கதைகள் -ரா.கி.ரங்கராஜன்

Posted: 21 Sep 2013 09:57 PM PDT

திக் திக் கதைகள் -ரா.கி.ரங்கராஜன்

http://www.mediafire.com/download/0dift1d1r49ixe5/ThikThikKathaigal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கள்ளழகர் காதலி நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 21 Sep 2013 09:56 PM PDT

கள்ளழகர் காதலி நாவலை டவுன்லோட் செய்ய ஸ்ரீவேணுகோபாலன் -கள்ளழகர் காதலி நாவலை டவுன்லோட் செய்ய கீழே டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/c2hbhus4jb472u5/Kallazhagar-Kadhali%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

இம்போர்ட் லைசென்ஸ் சம்பந்தமாக உதவி தேவை ?

Posted: 21 Sep 2013 09:03 PM PDT

உறவுகளே ஒரு சின்ன சந்தேகம்

வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய லைசென்ஸ் எடுக்க என்னவெல்லாம் தேவை ?

எப்படி லைசென்ஸ் எடுப்பது என்பது போன்ற விரிவான விளக்கம் தேவை ?

உதவுங்கள் உறவுகளே

காசு... பணம்... துட்டு... மணி...

Posted: 21 Sep 2013 08:57 PM PDT

சொக்கநாதப் புலவர் இயற்றியதுதான் பணவிடுதூது. இவர் திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அப்பொழுது சேதுபதியை ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி மீது பாடப்பட்டதுதான் இப் பணவிடுதூது என்றும் கூறுவர். இந்நூலில் பணத்தின் அதாவது, பல்வேறு காசுகளைப் பற்றிய செய்திகளையும் பெயர்களையும் புலவர் குறிப்பிட்டுள்ளார். காசு குறித்து 36 சொற்களை அவர் கையாண்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு: பொன், தாது, அத்தம், ஆடகம், வெறுக்கை, ஈகை, வேங்கை, சாதரூபம், கல்யாணம், ஏமம், மா, நிதானம், அரி, மாடு, மோகரம், சம்பங்கி, சாணான் ...

பண்டைத் தமிழர்களின் உயர்ந்த உள்ளம்!

Posted: 21 Sep 2013 08:23 PM PDT

தீமை எவையேனும் இருப்பினும் அவற்றை அழித்து அல்லது நீக்கிவிட்டு, "நன்றின்பால் உய்க்கும்' நல்லறிவு பெற்றவர்களாகப் பண்டைத் தமிழர்கள் விளங்கினர். தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும் நன்றாக இருந்தால்போதும் என எண்ணாமல், நாடும் அரசும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினர். இதற்குப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் "ஐங்குறுநூறு' என்னும் நூல், திணைக்கு நூறாக ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்கள் அடங்கியது. மருதத் திணையில் ஓரம்போகியார் என்னும் புலவர் ...

முருகன் ஆனந்தக் களிப்பு

Posted: 21 Sep 2013 08:20 PM PDT

கி.பி.1885-இல் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கெஞ்சம்பட்டி கிராமம் உள்கடை நல்லையத்தேவன்பட்டி (மாஜி) நாட்டாண்மை வையாபுரித் தேவர் குமாரர் பழனியாண்டித் தேவர் திருப்பரங்குன்றம் சிவசுப்பிரமணியர் மீது, "ஸ்ரீமுருகன் ஆனந்தக் களிப்பு' என்னும் பெயரில் பல பாடல்களை ஏட்டில் எழுதி வைத்திருந்தார். அவருடைய குமாரர்களாகிய நா.மு. கந்தசாமித் தேவர், மு.க.சுப்பையாத் தேவர் ஆகியோர் 1949-இல் மதுரை ஸ்ரீமுருக விலாஸ் அச்சகத்தில் அப்பாடல்களை அச்சிட்டு நூல் வடிவில் கொண்டு வந்தனர். 24 பக்கமுள்ள அச்சிறு நூலுக்குக் காரைக்கேணி ...

மீனவர்களை விடுவிக்காததை கண்டித்து படகுகளில் வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கையில் 27ம் தேதி தஞ்சம்

Posted: 21 Sep 2013 07:26 PM PDT

நாகை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 18ம் தேதி சிறை பிடித்தனர். இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட ...

நிலுவை வழக்குகளை முடிக்க 400 ஆண்டுகள் கூட ஆகலாம்

Posted: 21 Sep 2013 07:20 PM PDT

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் நீதிமன்றம் மற்றும் மாற்று முறை சமரச தீர்வு மையம் ஆகிய நீதிமன்றங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக உள்ளாட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தனர். விழாவில் நீதிபதி சுந்தரேஷ் பேசியதாவது: பெண்களுக்கு எதிராக 100 குற்றங்கள் நடந்தால், 5 குற்றங்கள் மட்டுமே வெளியில் தெரிகிறது. பல காரணங்களால் பெண்கள் ...

டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளிகளுக்கு 10 கட்டளைகள்

Posted: 21 Sep 2013 07:18 PM PDT

நாகர்கோவில்: மாணவர்களை டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு கல்வித்துறை 10 கட்டளைகளை பிறப்பித்துள்ளது. மதுரையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார். இதையடுத்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டிய சுற்றறிக்கையை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: *மழை ...

நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்...

Posted: 21 Sep 2013 06:50 PM PDT

திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த பெண் பேச்சாளரும் மேடைக்கு வந்தார். பதினைந்து நிமிடம் பேச நினைத்து வந்தவர் மாணவர்களின் ஆர்வத்தையும்,அமைதியையும் பார்த்துவிட்டு 45 நிமிடங்கள் பேசினார். எதுகை, மோனையுடனோ, இலக்கிய இலக்கணத்துடனோ, சவால் விடும் சரித்திர சான்றுகளுடனோ அவர் பேசவில்லை. சாதாரணமாக ...

இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு

Posted: 21 Sep 2013 06:49 PM PDT

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. 2009 -ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கையாக இந்த தேர்தல் கருதப்படுகிறது. ஆகையால் இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு மாகாணத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் ...

படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு

Posted: 21 Sep 2013 06:44 PM PDT

திருப்பூர் : திருப்பூர் கோர்ட் ஜாமின் அனுமதித்த, சட்டக்கல்லூரியில் படிக்கும் தன் மகனுக்கு, பிணையம் தர, தந்தை மறுத்ததால், மகனுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் நடத்திய, சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், எட்டு பேரின் ஜாமின் மனு, திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று பேர் மனு, 24ம் தேதி, விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள, ஐந்து பேருக்கு, ...

எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம்

Posted: 21 Sep 2013 06:44 PM PDT

நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்த, விமல் ராஜ்,38, 1997ம் ஆண்டு முதல், சவுதியில் உள்ள, அல் ஜூ பையில் துறைமுகத்தில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2012ம் ஆண்டு, டிசம்பர், 10ம் தேதி, தமிழகத்தை சேர்ந்த, 16 பேர் மற்றும் கேரளத்தை சேர்ந்த, மூன்று மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.மீனவர்களை ஈரான் கடற்படை, எல்லை தாண்டி வந்த குற்றத்திற்காக கைது செய்தது. சிறையில் அனுபவித்த நாட்கள் குறித்து, விமல்ராஜிடம் பேசியதில் இருந்து... எப்படி ஈரான் கடற்படையினரிடம் சிக்கி கொண்டீர்கள்? கடந்த, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™