Tamil Star |
- தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா மீண்டும் அறிக்கை
- வொசிங்டனில் யாரைச் சந்திக்கப் போகிறார் சம்பந்தன்
- பொதுமன்னிப்புக் கோரினார் பசில் ராஜபக்ச
- கின்னஸ் சாதனை செய்ய 100 கிலோ எடையுள்ள ஒரு இட்லி
- தொண்டைமானாறு கடல் நீரேரிக்கு குறுக்காக பாலம் அமைக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி முட்டுக்கட்டை
- மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைந்தமை தொடர்பில் வருத்தப்படவில்லை -மஹிந்த சமரசிங்க
- தேர்தல் பிரச்சாரங்களினால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது – விக்னேஸ்வரன் வேண்டுகோள்!
- யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பஸ் வண்டியுடன் டிப்பர் லொறி மோதி16 பேர் காயம் : 3 பேரின் நிலை கவலை
- இந்தியாவில் 800 மொழிகள் பேசப்படுகின்றன
- தூதரகத்தில் பணியாற்றும் அலுவலர்களை திரும்ப அழைத்தது அமெரிக்கா
| தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா மீண்டும் அறிக்கை Posted: 09 Aug 2013 08:25 PM PDT
இந்தத் தாக்குதலுக்கு கவலை தெரிவித்தும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமையையும் சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 2ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் வொசிங்டனில் நேற்றுமுன்தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜெனிபர் பசாகி மற்றொரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், "சிறிலங்காவின் வெலிவேரியவில் அண்மையில் நிராயுதபாணிகளாக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்கிறது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாத் தரப்புகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக, கத்தோலிக்க தேவாலயம் ஒன்றினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து நாம் கவலை கொள்கிறோம். குறிப்பாக வழிபாட்டு இடம் ஒன்றில் நடத்தப்பட்ட வன்முறையை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது. வெலிவேரிய வன்முறைகள் தொடர்பாக எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையானதும், வெளிப்படையானதுமான விசாரணையை நடத்தி, அதன் முடிவுகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். நம்பகமான அந்த விசாரணைப் பொறிமுறை மூலம், தவறு செய்தவர்கள் எவராயினும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வொசிங்டனில் யாரைச் சந்திக்கப் போகிறார் சம்பந்தன் Posted: 09 Aug 2013 08:21 PM PDT அமெரிக்கா செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனேடியக் கிளை நாளை ஒழுங்கு செய்துள்ள ஒன்றுகூடலில், இரா.சம்பந்தன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து அவர்கள் வரும் 12ம் நாள் அமெரிக்கா செல்லவுள்ளனர். வொசிங்டனில் அவர்கள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து [...] |
| பொதுமன்னிப்புக் கோரினார் பசில் ராஜபக்ச Posted: 09 Aug 2013 08:18 PM PDT சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய, ரதுபஸ்வல பொதுமக்கள் தாக்கப்பட்டதற்காக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பொதுமன்னிப்புக் கோரியுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிர்களையும், உடமைகளை இழந்தவர்களுக்கும் அவர் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். தமது கடமையைச் செய்ய முயன்ற பல ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் துரதிஸ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காப் படையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களால் மன்னிக்கப்பட முடியாதது என்றும் அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்துக்கும் [...] |
| கின்னஸ் சாதனை செய்ய 100 கிலோ எடையுள்ள ஒரு இட்லி Posted: 09 Aug 2013 08:07 PM PDT தண்டையார்பேட்டை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (42). சமையல்காரர். இவர் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுப்பது வழக்கம். இவருக்கு சமையல் செய்வதில் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக எண்ணம் உள்ளது. அதற்காக பலவித சமையல்களை செய்துள்ளார். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு சமையல் வகையை செய்வார்.கடந்த ஆண்டு தலா 50 கிலோ என 2 இட்லி, 40 கிலோவில் ஒரு இட்லியை இனியவன் [...] |
| தொண்டைமானாறு கடல் நீரேரிக்கு குறுக்காக பாலம் அமைக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி முட்டுக்கட்டை Posted: 09 Aug 2013 07:25 PM PDT
பருத்தித்துறை நகரசபை தலைவர் மற்றும், வலி,கிழக்கு பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் இன்று கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றனர். குறித்த சந்திப்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 60 வருடங்களாக மேற்படி பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் மக்கள் பயனடைகின்றார்கள். ஆனால் இந்த முறை பாலம் அமைக்க முயற்சித்த போது வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் ஆகியோருடன், ஈ.பி.டி.பி ஐங்கரன் ஆகியோர் பொலிஸாரின் உதவியுடன் தடைபோட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தினசரி 3 கிலோ மீற்றர்கள் மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் ஆத்திரமடைந்துள்ள மக்கள் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்திருக்கின்றார்கள். எனவே நாம் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம். மேலும் ஈ.பி.டி.பி கட்சியினர் மற்றும் அவர்களுடன் தங்கள் குறுகிய இலாபங்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் வலி,கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்டவர்கள் மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதேபோன்று பாலம் அமைப்பதற்கு தடை விதிப்பதற்கான காரணத்தையும் அதிகாரிகள் புலப்படுத்த வேண்டும். எனினும் அனைத்து எதிர்ப்புக்களையும் மீறி பாலம் அமைக்கப்படும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைந்தமை தொடர்பில் வருத்தப்படவில்லை -மஹிந்த சமரசிங்க Posted: 09 Aug 2013 07:21 PM PDT
ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர்தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பாட்டை கொண்டிருக்காத போதும் மஹி;ந்த ராஜபக்சவின் ஆட்சி முறையைக்கண்டு தேசத்துக்கு சேவை செய்தவதற்காக அரசாங்கத்தில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் தாமே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்த முதல நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் சமரசிங்க தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தல் பிரச்சாரங்களினால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது – விக்னேஸ்வரன் வேண்டுகோள்! Posted: 09 Aug 2013 07:13 PM PDT
கல்வி எங்கள் மூலதனம். பரீட்சை எழுதுகின்ற எமது மாணவர்களின் எதிர்கால வாழ்வு எங்கள் தேசத்தில் மிகவும் அடிப்படையானது. அந்த வகையில் இது தேர்தல் காலம் எனினும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எமது மாணவர்கள் இப்பரீட்சையில் தமது முழு ஆளுமைத்திறனையும் வெளிப்படுத்தி சித்தி பெற வேண்டும் என்பது எமது அவா. இதனைக் கருத்திற் கொண்டு எமது வேட்பாளர்கள் தமது தேர்தல் கால பிரசார நடவடிக்கைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். மாணவ மாணவியரின் நலன் கருதி அவர்களுக்கு எந்த விதத்திலும் எவ்விதமும் பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள். ஜனநாயகத்தினையும் பொது அமைதியையும் கவனத்திற் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் என தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பஸ் வண்டியுடன் டிப்பர் லொறி மோதி16 பேர் காயம் : 3 பேரின் நிலை கவலை Posted: 09 Aug 2013 07:06 PM PDT
பஸ்ஸின் சாரதி மற்றும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தொம்பே ஆஸ்பத்திரியின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் பூகொட பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாத்தறைப் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா மேற்கொண்ட தனியார் வகுப்பொன்றின் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களுமே பஸ்ஸில் பயணித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் 800 மொழிகள் பேசப்படுகின்றன Posted: 09 Aug 2013 06:48 PM PDT
தற்போது சுமார் 800 மொழிகள் பேசப்படுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது. நாடெங்கிலும் இருந்து 85 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்போடு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிபுணர்கள் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றி இந்தியாவின் மொழிகள் பற்றிய இந்த சுற்றாய்வை மேற்கொண்டிருந்தனர். மொழிகள் வழங்கும் இடம், அவற்றின் சரித்திரம், தோற்றம், இலக்கணம், இலக்கியம், பண்பாடு, கலைவடிவம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த சுற்றாய்வில் ஆராயப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்காதது, சமூகங்களின் இடம்பெயர்வு, சமூக பொருளாதார காரணங்களுக்காக பெரும்பான்மையானோரின் மொழியைப் பேச ஆரம்பிப்பது போன்றவை பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்துபோக முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தூதரகத்தில் பணியாற்றும் அலுவலர்களை திரும்ப அழைத்தது அமெரிக்கா Posted: 09 Aug 2013 06:40 PM PDT
மேலும், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தனது நாட்டு குடிமக்களுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ""அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து தூதரகத்தில் பணியாற்றும் முக்கியப் பொறுப்பில் அல்லாதவர்களை அமெரிக்காவுக்குத் திரும்புமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லாகூரில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்தோர் மிகவும் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











