Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இங்கப் பாருங்கப்பா என்னாமா வெட்கப்படுறாங்கனு….

Posted: 08 Aug 2013 11:17 PM PDT

இங்கப் பாருங்கப்பா என்னாமா வெட்கப்படுறாங்கனு….

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு மனிதர்களையும் விழுங்க துடிக்கும் காட்சி….

Posted: 08 Aug 2013 10:45 PM PDT

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு மனிதர்களையும் விழுங்க துடிக்கும் காட்சி….

This posting includes an audio/video/photo media file: Download Now

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி – கொந்தளிக்கும் கோத்தா

Posted: 08 Aug 2013 10:39 PM PDT

Gotabaya-Rajapaksa

Gotabaya-Rajapaksaவெலிவேரியவில் போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை பயன்படுத்தி, சிறிலங்கா இராணுவத்தின் மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் அழைப்புகளைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வெலிவேரிய சம்பவம் தொடர்பாக, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐதேக விடுத்துள்ள கோரிக்கை குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

"போராட்டம் நடத்தியவர்கள் மீது படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சூழ்நிலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகமும், சிறிலங்கா காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றன.

காவல்துறைமா அதிபர் இலங்ககோன் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரிடம், விடுத்த வேண்டுகோளை அடுத்தே, இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.

அவசரகால நிலையில், பாதுகாப்புப் படைகளை நிறுத்துவது தொடர்பான நடைமுறையே பின்பற்றப்பட்டது.

துரதிஸ்டவசமாக அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதும், படையினர் பதிலடியில் இறங்கினர்.

விசாரணைகளில் எவர் மீதேனும் குற்றம்காணப்பட்டால், யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

படையினரின் தனிப்பட்ட செயல்கள், ஒட்டுமொத்த சிறிலங்கா இராணுவத்தினதும் பெயரைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது.

சிறிலங்கா படையினரையும், சிறிலங்கா அதிபரையும், வெறுக்கும் சக்திகளின் தந்திரோபாயத்தை நாம் அறிவோம்.

அனைத்துலக விசாரணைக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, சிறிலங்கா படைகளுக்கு எதிரான அனைத்துலக போர்க்குற்ற விசாரணை அழைப்புக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது.

போர் முடிவுற்ற பின்னர்., சிறிலங்கா படையினர் மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியவர்கள், வெலிவேரிய சம்பவத்தை பயன்படுத்தி, தமது கோரிக்கையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

நந்திக்கடலில் நடந்த விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போருடன், வெலிவேரிய சம்பவத்தை ஒப்பிடுவதற்கு எதிர்க்கட்சிகள் மேலதிக நேரத்தை ஒதுக்கியுள்ளன.

இவையிரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை." என்றும் அவர் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அட மூளைக்காரங்களா?… நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சு….

Posted: 08 Aug 2013 10:33 PM PDT

அட மூளைக்காரங்களா?… நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சு….

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது -மு.க.ஸ்டாலின்

Posted: 08 Aug 2013 10:19 PM PDT

stalin

stalinதிருச்சி ரயில்வே ஜங்சன் எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற டெசோ அமைப்பின் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது,

டெசோ அமைப்பு ஏதோ இன்றைக்கு நேற்று உருவானதல்ல. 1984-ல் டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1984, 1986-ல் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு  இந்த டெசோ அமைப்பை மீண்டும் புதுப்பித்து, உலகம் முழுவதும் மனித உரிமைத் தளத்தில் செயல்படும் பல்வேறு அறிஞர்களை சென்னையில் கூட்டி இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து விவாதித்துள்ளோம்.

அதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஜெனிவா போன்ற நாடுகளுக்கு நானும், டிஆர். பாலுவும் நேரில் சென்று ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து உலகநாடுகளின் ஆதரவைக் கோரியுள்ளோம். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர் நலனுக்காக திமுக தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதாதான் இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

தமிழர் முழக்கத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலரும் இன்று திமுகவைக் குறைசொல்கின்றனர். அரசியல் பேச விரும்பவில்லை. எஞ்சியுள்ள இலங்கைத்தமிழர்களை காப்பாற்ற வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சட்டவிரோதமாக புகலிடம் கோரி செல்ல முயன்ற 36 பேர் கைது

Posted: 08 Aug 2013 10:06 PM PDT

arrest_CI

arrest_CIசட்டவிரோதமாக புகலிடம் கோரி செல்வதற்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் 36 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஆதரவாளர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராகம, குருகுலவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே நேற்று வியாழக்கிழமை இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  2 ஆதரவாளர்கள் உட்பட 21 ஆண்களையும் 3 பெண்களையும் 10 சிறுவர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேக நபர்களை  மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Posted: 08 Aug 2013 09:58 PM PDT

UNP

UNPவடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சுப் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும் தமது வேட்பாளர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றீர்கள் என வேட்பாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த அரசாங்கம் இராணுவத்தினரை பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கூறி வருகின்ற போதிலும் உண்மை நிலைமை அதுவல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் தருணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வடக்கு நோக்கிப் படையெடுத்து வாக்காளர்களின் மீது தாக்கத்தை செலுத்த முயற்சிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் தோற்போம் என்தபனை அரசாங்கம் விளங்கிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாக்காளர் விவரங்களைக் கோரும் படையினர் – விவரங்களை வழங்க வேண்டாம் – தேர்தல் ஆணையாளர்

Posted: 08 Aug 2013 09:51 PM PDT

NYT2008112110222443C

NYT2008112110222443Cமுல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் அந்தப் பகுதி வாக்காளர்களின் விவரங்களைக் கட்டாயப்படுத்திப் பெற்று வருகின்றனர் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "கபே'யிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீருடையில் கிராம அலுவலர்களின் அலுவலகங்களுக்குச் செல்லும் படையினர் கட்டாயப்படுத்தி வாக்களார்களின் விவரங்களைப் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களின் விவரங்கள் வாக்களிக்கத் தகுதியுடையோரின் எண்ணிக்கை ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்களின் எண்ணிக்கை தபால் மூலமாக வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை உட்படப் பல விவரங்களைப் படையினர் கட்டாயப்படுத்திப் பெற்று வருகின்றனர் எனக் கிராம அலுவலர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கிராம அலுவலர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதுடன் படையினர் கோரும் விவரங்களைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படையினர் உட்பட எவருக்கும் வாக்காளர் விவரங்களைக் கோரும் அதிகாரம் கிடையாது படையினர் கேட்டாலும் அவற்றை வழங்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடந்த ஜூன் மாதம் சகல கிராம அலுவலர்களுக்கும் அறிவித்துள்ள நிலையில் படையினரின் இந்த நடவடிக்கை தொடர்பாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத நடுப்பகுதியிலும் படையினர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் கிராம அலுவலர்களிடம் சென்று வாக்காளர் விவரங்களைக் கோரியிருந்தனர்.
இந்த விடயம் தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னரே அவ்வாறு படையினருக்கு விவரங்களை வழங்க வேண்டாம் என ஆணையாளர் எழுத்து மூல உத்தரவை விடுத்திருந்தார்.
இதன் பின்னர் வாக்காளர் விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்த படையினர் இப்போது அவற்றைக் கோரி வருகின்றனர் எனக் "கபே' அமைப்புக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

‘கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை’ : இங்கிலாந்தில் நீதிபதி தீர்ப்பு

Posted: 08 Aug 2013 09:37 PM PDT

husband-and-wife-in-bed-separated

husband-and-wife-in-bed-separatedகணவருடன் தூங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று மனைவியை இங்கிலாந்து கோர்ட்டு எச்சரித்துள்ளது. இந்த வழக்கு, இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பம் பற்றியது ஆகும். அக்குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் இருக்கிறார். அவருக்கு இந்தியாவில் பஞ்சாபில் மணப்பெண் பார்த்தனர். மணப்பெண், கால் முடமானவர். கடந்த 2009-ம் ஆண்டு, திருமணத்துக்காக, அந்த வாலிபர், இங்கிலாந்தில் இருந்து பஞ்சாபுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாலி கட்டுவதற்கு முன்பு, அவரை அப்பெண் பார்க்கவில்லை. தாலி கட்டிய பிறகுதான், தனது கணவர் இயல்பான மனிதர் அல்ல என்று அவர் புரிந்து கொண்டார். இருப்பினும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவருடன் வாழத் தொடங்கினார். திருமணத்துக்கு பிறகு, இருவரும் இங்கிலாந்து திரும்பினர். இங்கிலாந்து சட்டப்படி, 'செக்ஸ்' உறவுக்கு சம்மதிக்கவோ, மறுக்கவோ இயலாத நிலையில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவரின் திருமணம் ரத்து செய்யப்படும். எனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விசேஷ கோர்ட்டில் அரசுத்தரப்பு முறையிட்டது. அந்த வாலிபரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்தது. ஆனால், தங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி ஹோல்மன் விசித்திரமான தீர்ப்பு அளித்தார். அந்த வாலிபர், செக்ஸ் உறவுக்கு உடன்படும் திறன் படைத்தவர் அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார். எனவே, அவருடன் தூங்கி அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றும் நீதிபதி கூறினார். அதே சமயத்தில், அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டார். தனது துயரமான நிலைமையை மனவலிமை மற்றும் கண்ணியத்துடன் அப்பெண் தாங்கி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார். 'கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை' என்று இங்கிலாந்தில் இதுபோன்று ஒரு நீதிபதி தீர்ப்பு அளிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் பெண்கள் வங்கி

Posted: 08 Aug 2013 09:27 PM PDT

women

womenரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் அனைத்து பெண்கள் வங்கி அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அனைத்து பெண்கள் வங்கி தொடங்கப்படும் என்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் அறிவித்து இருந்தார். இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், அனைத்து பெண்கள் வங்கி அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.ஆயிரம் கோடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பாரதீய மகிளா பேங்க் எனப்படும் இந்த வங்கியின் தலைமையகம் டெல்லியில் செயல்படும். நாட்டின் பல பகுதிகளில் 6 கிளைகள் தொடங்கப்படும். இந்த வங்கி, நவம்பர் மாதம் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வங்கி, பொதுவாக பெண்களையும், குறிப்பாக, மகளிர் சுயஉதவி குழுக்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி நமோ நாராயண் மீனா சமீபத்தில் டெல்லி மேல்-சபையில் அளித்த பதிலில் தெரிவித்தார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் தெரிவித்த 5 முக்கிய திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த திருத்தங்களுடன் கூடிய மசோதா, வருகிற செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நிலத்தை கையகப்படுத்துவதற்கு பதிலாக, நிலத்தை குத்தகைக்கு வாங்கலாம் என்றும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 50 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஊடக பிரிவு தொடங்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் யோசனைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, மத்திய அரசின் செய்திகளை சமூக வலைத்தளங்களுக்கு கொண்டு செல்வதற்காக இந்த ஊடக பிரிவு தொடங்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவை கலைக்க வகைசெய்யும் நீதித்துறை நியமன ஆணையம் அமைப்பதற்கான மசோதா, மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், உடல்நலக்குறைவால் கூட்டத்தில் பங்கேற்காததே இதற்கு காரணம் ஆகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™