Tamil Star |
- காற்பந்து அணியை வாங்கும் முயற்சி – டோனி
- இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஷேவாக் கடும் பயிற்சி
- முகநூல் கண்காணிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா
- தட்டைக் கழுவ மறுத்ததால் தலித் சிறுவன் சுட்டுக் கொலை
- தமிழக மீனவர் பிரச்சினை: பிரதமருக்கு ஜெ மீண்டும் கடிதம்
- குரங்கின் வாயில் மது ஊற்றுவதை தடுத்தவரை கல்லால் அடித்துக்கொன்றவன் கைது
- நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி
- ஆஸி. செல்ல முயன்ற 27 பேர் கைது
- இந்தியப் பெண்களே தனியாக வெளியே போகாதீர்கள்: நடிகை ஹேமமாலினியின் அட்வைஸ்
- நவீன உளவு செயற்கைகோளை ரகசியமாக விண்ணில் ஏவியது அமெரிக்கா
| காற்பந்து அணியை வாங்கும் முயற்சி – டோனி Posted: 28 Aug 2013 10:59 PM PDT “பைக்’ அணியை தொடர்ந்து உதைபந்தாட்ட அணியை வாங்க இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. பிரிமியர் கிரிக்கெட், பாட்மின்டன் லீக் போல, “டுவென்டி-20′ பாணியில் கால்பந்து லீக் போட்டி, இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜன., 18 முதல் மார்ச் 30 வரை நடக்கவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளை வாங்க பலர் போட்டியிடுகின்றனர். கோல்கட்டா பிரிமியர் கிரிக்கெட் அணி உரிமையாளர், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கோல்கட்டா கால்பந்து அணியை வாங்கத் […] |
| இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஷேவாக் கடும் பயிற்சி Posted: 28 Aug 2013 10:56 PM PDT இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக். மோசமான ஆட்டம் காரணமாக அவர் கடந்த 6 மாதமாக சர்வதேச போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2–வது டெஸ்டுக்கு (மார்ச் மாதம்) பிறகு ஷேவாக் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஒருநாள் போட்டியை பொறுத்தவரை அதற்கு முன்பே அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். ஜனவரி 3–ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியோடு நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். இளம் வீரர்களின் சிறப்பான […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| முகநூல் கண்காணிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா Posted: 28 Aug 2013 10:50 PM PDT பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக முகநூலர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கேனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன. அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக […] |
| தட்டைக் கழுவ மறுத்ததால் தலித் சிறுவன் சுட்டுக் கொலை Posted: 28 Aug 2013 10:40 PM PDT தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த தலித் சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச பொலிசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசம், முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று, ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர், தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி, தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் […] |
| தமிழக மீனவர் பிரச்சினை: பிரதமருக்கு ஜெ மீண்டும் கடிதம் Posted: 28 Aug 2013 10:34 PM PDT இலங்கை சிறையில் உள்ள 117 மீனவரை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளர். மேலும் தமிழக மீனவர்கள் தங்களது படகுகளுடன் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு மீது தமிழக மீனவர்கள் ஏற்கனவே கடும் கோபத்தில் உள்ளதாகவும், இலங்கை அரசு மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளதாகவும் ஜெயலலிதா புகார் தெரிவித்துள்ளார். |
| குரங்கின் வாயில் மது ஊற்றுவதை தடுத்தவரை கல்லால் அடித்துக்கொன்றவன் கைது Posted: 28 Aug 2013 10:32 PM PDT குரங்கின் வாயில் மது ஊற்றுவதை தடுத்த குரங்காட்டியை அடித்துக் கொன்றவனை டெல்லி போலீசார் கைது செய்தனர். புதுடெல்லி ரெயில் நிலையத்தில் பார்சல் பிரிவில் கூலித் தொழிலாளியாக வேலை செய்பவன், ராம்பாபு(34). சம்பவத்தன்று நள்ளிரவில் ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் ராம்பாபு கள்ளச்சந்தை மது கிடைக்குமா? என்று தேடி அலைந்துள்ளான். ரெயில் நிலையம் அருகே குரங்கை வைத்து வித்தை காட்டி பிழைக்கும் இர்பான் என்பவன் ராம்பாபுவுடன் கூட்டுசேர, இருவரும் ஓரிடத்திற்கு சென்று கள்ளச் சந்தை மதுவை வாங்கி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி Posted: 28 Aug 2013 10:09 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பி;ள்ளையின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமது பக்க நியாயங்களைக் கேட்டறிந்து கொள்ள நவனீதம்பிள்ளை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வார காலம் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பதாகவும், தம்மை சந்திக்க போதியளவு கால அவகாசம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பு அளிக்குமாறு […] |
| ஆஸி. செல்ல முயன்ற 27 பேர் கைது Posted: 28 Aug 2013 10:02 PM PDT சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 27 பேர் அம்பலாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பிரதேசங்களில் மறைந்திருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொட, மினுவங்கொட மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியப் பெண்களே தனியாக வெளியே போகாதீர்கள்: நடிகை ஹேமமாலினியின் அட்வைஸ் Posted: 28 Aug 2013 08:32 PM PDT ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக எம்.பி ஹேமமாலினி கூறியுள்ளார். நாட்டு நிலைமை சரியில்லை என்பதால் பெண்கள் நிலை மோசமாக இருப்பதாகவும், பெண்கள் யாரும் வீட்டை விட்டுப் போக வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் வெளியே போவதாக இருந்தால் தனியாக போக வேண்டாம், உற்ற துணையுடன் போகுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், பெண்களுக்கு நான் தரும் அட்வைஸ் யாரும் வெளியே […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நவீன உளவு செயற்கைகோளை ரகசியமாக விண்ணில் ஏவியது அமெரிக்கா Posted: 28 Aug 2013 08:22 PM PDT
செயற்கைகோளை உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் ஏவியது. 'என்ரோல் - 65' என்னும் இந்த செயற்கைகோள் ஏவப்படும் செய்தி மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு அடுத்தபடியான 7 நிமிடங்களுக்கு பின்னர், இதுதொடர்பான செய்திகள் அனைத்தும் இரட்டடிப்பு செய்யப்பட்டன. இந்த மதிப்பு வாய்ந்த சொத்தினை விண்ணில் செலுத்தியதை அமெரிக்காவின் கெளரவமாக கருதுவதாக இந்த உளவு செயற்கைகோளின் திட்ட அதிகாரி ஜிம் ஸ்பானிக் தெரிவித்தார். செயற்கைகோள் ஏவப்படும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது பேசிய வர்ணனையாளர், 'இந்த நாட்டின் விடுதலைக்காக தொண்டாற்றிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்த செயற்கைகோள் ஏவலை அர்ப்பணிக்கிறோம்' என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

