puthiyathalaimurai.tv online |
- தங்கம் சவரனுக்கு ரூபாய். 216 குறைந்தது
- ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் செப்டம்பர் 6 வரை நீட்டிப்பு
- மேலூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்
- விருதுநகரில் பலத்த காற்றுடன் மழை
- தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும்: ஜெயலலிதா கடிதம்
- தமிழகத்தில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது: சமூக ஆர்வலர்கள்
- அநாகரீக கொண்டாட்டத்திற்கு வருத்தம் தெரிவித்தனர் இங்கிலாந்து வீரர்கள்
- வறட்சியிலும் நன்றாக வளரும் அரிய வகை பேரிச்சம் மரம்
- ஸ்கேன் மூலம் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தவர் கைது
- 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: மேரிகோம் நம்பிக்கை
| தங்கம் சவரனுக்கு ரூபாய். 216 குறைந்தது Posted: 28 Aug 2013 11:17 PM PDT தங்கத்தின் விலை இன்று குறைந்து காணப்படுகிறது. காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு 216 ரூபாய் விலை சரிந்து 23 ,552 ரூபாய்க்கு விற்கப்பனையாகிறது. சென்னையில் தற்போது 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து 3,148 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல், 22 காரட் ஆபரணத் தங்கமும் கிராமுக்கு 27 ரூபாய் விலை இறக்கம் கண்டு 2,944 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது.சில்லறை விற்பனையில் கிராமுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் குறைந்து 62 ரூபாய் 80 காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 1,455 ரூபாய் விலை சரிந்து 58,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. |
| ராமேஸ்வரம் மீனவர்கள் காவல் செப்டம்பர் 6 வரை நீட்டிப்பு Posted: 28 Aug 2013 11:01 PM PDT இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 41 ராமேஸ்வர மீனவர்களின் காவல் மீண்டும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி மற்றும் ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ஜோசப்,மரிய அகஸ்டின்,வடிவேல் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 41 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் காவலை வரும் 6 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஆனந்த கனகரத்தினம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் அழ்ந்துள்ளனர். மத்திய,மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மேலூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம் Posted: 28 Aug 2013 10:57 PM PDT மதுரை மாவட்டம் மேலூர் அருகே, அரசுப்பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேருந்து மார்த்தாண்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, முனிக்கோவில் என்ற இடத்தில், கார் ஒன்று சாலையின் குறுக்கே வேகமாக கடந்தது. கார்மீது மோதிவிடாமல் தவிர்க்க பேருந்தை இடப்புறமாக திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்தது. காயமடைந்தவர்ளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மேலூர் காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| விருதுநகரில் பலத்த காற்றுடன் மழை Posted: 28 Aug 2013 10:47 PM PDT விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரிக்கும் வெயில் மக்களை அவதிக்குள்ளாக்கி வந்த நிலையில், கன மழை பெய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கத்தால் அவதியுற்று வந்த மக்களுக்கு, இந்த மழை குளிர்ந்த சூழலை ஏற்படுத்தி ஆறுதல் அளித்தது என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்கும் விதமாக நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்ற நம்பிக்கையையும் இந்த மழை ஏற்படுத்தியுள்ளது. |
| தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும்: ஜெயலலிதா கடிதம் Posted: 28 Aug 2013 10:44 PM PDT இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 35 பேர் மற்றும் அந்நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 35 பேரையும், 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கடந்த 26ஆம் தேதி சிறைபிடித்துச் சென்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கையில் ஏற்கனவே சிறைவைக்கப்பட்டுள்ள நாகப்பட்டிணம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 82 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழக கடலோரப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்னையில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். |
| தமிழகத்தில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது: சமூக ஆர்வலர்கள் Posted: 28 Aug 2013 10:30 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சாலை யோரங்களில் கேரளாவில் இருந்து எடுத்து வந்து கோழி இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதாகவும் அதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கேரளக் கோழிஇறைச்சிக் கழிவுகளை ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கேரளமாநிலத்தில் கடுமையான சட்டத்திட்டங்கள் இருப்பதால், அங்கிருந்து வாகனங்களில் ஏற்றி வந்து தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. இதனைத் தடுக்க தமிழக அரசுத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. |
| அநாகரீக கொண்டாட்டத்திற்கு வருத்தம் தெரிவித்தனர் இங்கிலாந்து வீரர்கள் Posted: 28 Aug 2013 10:06 PM PDT ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றதை அநாகரீகமாக கொண்டாடியதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றதையடுத்து, கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் ஸ்டுவார்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், கெவின் பீட்டர்சன் ஆகிய வீரர்கள் ஆடுகளத்தில், சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினர். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி மன்னிப்பு கேட்டுள்ளது. |
| வறட்சியிலும் நன்றாக வளரும் அரிய வகை பேரிச்சம் மரம் Posted: 28 Aug 2013 10:00 PM PDT தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பேரிச்சை பண்ணைத் தோட்டத்தில் உயர்ரக பேரிச்சை மரக்கன்றை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நடவு செய்தார். இந்த வகை பேரிச்சையை வீட்டிற்கு ஒரு கன்றை வளர்த்து பயன்பெறும் விதமாக தமிழக அரசே இந்த மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க வேண்டும் என்று நம்மாழ்வார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.பேரிச்சை வகைகளில் அஜ்வா என்ற அரிய ரகத்தைச் சேர்ந்த மரக்கன்று வறட்சியான சூழலிலும் சிறப்பாக வளரக்கூடியது. இந்த பேரிச்சை கிலோ 3 ஆயிரம் ரூபாய் விற்பனையாகக் கூடியது என்று கூறப்படுகிறது. சிறந்த வருவாய் ஆதாரமாக பயன்படக்கூடிய இந்த வகை பேரிச்சை மரத்தை வளர்ப்பதன் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். |
| ஸ்கேன் மூலம் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தவர் கைது Posted: 28 Aug 2013 09:51 PM PDT கர்ப்பத்திலேயே குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்கேன் மைய மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதனை மூலம் தெரிவித்து வந்ததாக திருப்பத்தூரில் உள்ள ஜிஜி அல்டரா சவுண்ட் ஸ்கேன் மையத்தின் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஸ்கேன் மைய மேலாளர் வேடி கைது செய்யப்பட்டார். ஸ்கேன் மைய உரிமையாளர் சுகுமார் மற்றும் மருத்துவர் உஷா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஸ்கேன் சென்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. |
| 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: மேரிகோம் நம்பிக்கை Posted: 28 Aug 2013 09:44 PM PDT 2016-ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், தம்மால் தங்கப்பதக்கத்தை வெல்ல முடியும் என குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார். போபாலில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஆறு மாத ஓய்வுக்கு பின் மீண்டும் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |