Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சர்வதேச போட்டிகளிலிருந்து முன்னணி காற்பந்து வீரர் க்லோஸ் ஓய்வு

Posted: 20 Aug 2013 10:34 PM PDT

ஜெர்மனியின் முன்னணி கால்பந்து வீரராக விளங்குபவர் மிரோஸ்லாவ் க்லோஸ். இவர் வரும் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடக்க இருக்கும் உலககோப்பை கால்பந்து போட்டிக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தேசியப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் இதே முடிவு எடுக்கப்படலாம் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். லாசியோ அணியின் நட்சத்திர வீரரான க்லோஸ் (வயது 35), ஜெர்மனிக்காக 128 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுவரை அவர் அடித்துள்ள கோல்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆகும். இன்னும் ஒரு கோல் […]

ஆஷஸ் டெஸ்ட்: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதல்

Posted: 20 Aug 2013 10:33 PM PDT

சுற்றுலா அவுஸ்ரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெறும் ஏஷெஸ் போட்டி தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதனிடையே, ஏற்கனவே இடம்பெற்ற நான்கு போட்டிகளில் இங்கிலாந்து அணி, மூன்றுக்கு பூச்சியம் என்ற அடைப்படையில் வெற்றிப்பெற்று தொடரை தம்வசப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைனில் பேக்ஸ் அனுப்ப உதவும் நீட்சி

Posted: 20 Aug 2013 10:33 PM PDT

தொடர்பாடல் சேவையில் பேக்ஸின் பயன்பாடானது இன்றும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. எனினும் கணனிகளில் தட்டச்சு செய்த கோப்புக்களை பிரிண்ட் செய்த பின்னரே அவற்றினை பேக்ஸ் மூலமாக அனுப்பக்கூடியவாறு இருந்தது. ஆனால் தற்போது கணினியிலுள் உள்ள கோப்புக்களை பிரிண்ட் செய்யாமலே ஒன்லைன் மூலம் பேக்ஸ் அனுப்புவதற்காக HelloFax எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குரோம் உலாவியில் பயன்படுத்தக்கூடிய இந்த நீட்சியின் மூலம் 30 வகையான கோப்புக்களை அனுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் கூகுள் ட்ரைவிலுள்ள கோப்புக்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்கச் […]

ஜிமெயில் மின்னஞ்சல்களை பேக்கப் செய்வதற்கு

Posted: 20 Aug 2013 10:32 PM PDT

ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மூலம் பரிமாறப்படும் மின்னஞ்சல்களை பாதுகாப்புக் கருதி பேக்கப் செய்வதற்கு BackUp Gmail எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை பயன்படுத்தி பேக்கப் செய்யும் வசதியை தருகின்றது. இலகுவாக கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள BackUp Gmail மென்பொருளில் பேக்கப் செய்த மின்னஞ்சல்களை மீண்டும் சேமிக்கும் (Restore) வசதியும் தரப்பட்டுள்ளது. தரவிறக்கச் சுட்டி

‘மெட்ராஸ் கபே’ படத்தில் பிரபாகரனாக நடித்த அஜய் ரத்னத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

Posted: 20 Aug 2013 10:02 PM PDT

ஜான்ஆபிரகாம் நடித்த ‘மெட்ராஸ் கபே’ படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23�ந்தேதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதில் ஜான் ஆபிரகாம் இந்திய ‘ரா’ அதிகாரியாக வருகிறார். கதாநாயகி நர்கிஸ் பக்ரி இங்கிலாந்து பத்திரிகை நிருபராக வருகிறார். அஜய் ரத்னம் பிரபாகரன் கேரக்டரில் நடித்துள்ளார். பியூஷ் பாண்டே இந்திய அமைச்சரவை செயலாளராக வருகிறார். லீனா மரியா, டினு […]

’மெட்ராஸ் கபே’ திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியைக் கூட நீக்கமாட்டேன்: ஜான் ஆபிரகாம்

Posted: 20 Aug 2013 09:58 PM PDT

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் 'மெட்ராஸ் கபே' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர். இந்நிலையில் நேற்று அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- சென்சார் போர்டு அனுமதியளித்த பிறகு இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள். யூகங்களின் அடிப்படையில் நிறைய பேர் இத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். மக்கள் இந்த திரைப்படத்தை பார்க்கட்டும். பிறகு முடிவு செய்வோம். கதை எப்படி இருக்கிறதோ, அதை […]

சிறுவனின் கால் மூட்டில் வளர்ந்த கடல் நந்தை!: அமெரிக்காவில் சம்பவம்

Posted: 20 Aug 2013 09:29 PM PDT

sea_snail_hatches_004

sea_snail_hatches_004அமெரிக்காவில் சிறுவனின் கால் மூட்டுக்குள் வளர்ந்த கடல் நத்தை தற்போது வெளியே எடுக்கப்பட்டு, மீன் தொட்டியில் வளர்க்கப்படுகிறது.

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், ஆரஞ்ச் கவுன்டி பகுதியை சேர்ந்தவர் ராச்சல்.

இவரது நான்கு வயது மகன் பால் பிராங்ளின், கடந்த மாதம் வீட்டருகே உள்ள புல்வெளியில் பிராங்ளின் விளையாடி கொண்டிருந்த போது கீழே விழுந்ததில், கால் மூட்டில் காயம் ஏற்பட்டது.

இதை சரியாக கவனிக்காததால், மூன்று வாரத்துக்கு பிறகு, சிறுவனின் மூட்டு வீங்கியது. புண்ணில் சீழ் பிடித்து கொண்டதால் சிறுவனின் மூட்டை அழுத்தி, சீழை வெளியேற்றினார் ராச்சல்.

அப்போது, கல் போன்று ஒன்று வெளியேறியது. அதன் பின் அது தானாக நகர துவங்கியது.

அப்போது தான், அது கடல் நத்தை என்பதை ராச்சல் கண்டுபிடித்தார்.

அந்த நத்தையை கழுவி தற்போது, மீன் தொட்டியில் வளர்க்கிறார்.

புல்வெளியில் கிடந்த நத்தையின் முட்டை, சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்தின் வழியாக உள் சென்று வளர்ந்து, நத்தையாக வெளியேறியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சட்டவிரோத புகலிடக் கோரிக்கை குறித்து அவுஸ்திரேலியா கிழக்கில் பிரச்சாரம் :

Posted: 20 Aug 2013 09:22 PM PDT

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் ஆபத்தான பயணங்கள் குறித்து அவுஸ்திரேலியா கிழக்கு மாகாணத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசூரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட உள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் பிரவேசிக்கும் எவருக்கும் புகலிடம் வழங்கப்பட மாட்டாது எனவும், உடனடியாக அவர்கள் பபுவா நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர் சட்டங்களில் திருத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புகலிடக் கோரிக்கையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் […]

ஈரான் சதி நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்கா: அம்பலமாகும் உண்மை

Posted: 20 Aug 2013 09:04 PM PDT

amarica

amaricaஈரானில் 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற சதி நடவடிக்கையில் தமக்கு முக்கிய பங்கு இருந்ததை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிலையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சதி மூலம் ஈரானில் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அப்போதைய பிரதமர் மொஹமட் மொசாதிக் பதவி கவிழ்க்கப்பட்டிருந்தார்.

இந்த சதி நவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 60 ஆண்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் தேசிய சுயாதீன பாதுகாப்பு ஆவணத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையின் ஓர் பகுதியாக சி.ஐ.ஏ இன் நேரடி வழிகாட்டலின் கீழ் இந்த இராணுவச் சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பஸ் பயணிகளுக்கு கத்திக்குத்து: 10 மாதக் குழந்தை உள்ளிட்ட மூவர் பலி

Posted: 20 Aug 2013 09:00 PM PDT

சீனாவில் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளை நபரொருவர் கத்தியால் தாக்கியதில் 10 மாதக் குழந்தை உள்ளிட்ட மூவர் பலியாகியுள்ளர். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பெய்குவோ நகரில் இருந்து அனியாங் மாவட்டத்திற்கு நேற்று ஒரு பஸ்சில் 33 பயணிகள் சென்றுக் கொண்டிருந்தனர். அயாங் நகரை நெருங்கும்போது பஸ்சில் பயணித்த ஒரு நபருக்கும் மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக உருமாறிய போது, தகராறு செய்த பயணி மடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளை […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™