Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மூடநம்பிக்கைக்கு எதிராக போராடிய நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொலை: புனேயில் கடையடைப்பு

Posted: 20 Aug 2013 11:24 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தவர் நரேந்திர தபோல்கர். சாதனா பத்திரிகையின் ஆசிரியரான இவர் முற்போக்கு சிந்தனைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மூட நம்பிக்கை மற்றும் மாய மந்திரங்களுக்கு எதிராக சட்டசபையில் மசோதா கொண்டு வரவேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தார்.

கேரளாவில் சினிமா தயாரிக்கும் ஆசையில் ஓட்டலில் கொள்ளையடித்த துணை நடிகர் கைது

Posted: 20 Aug 2013 11:23 PM PDT

திருவனந்தபுரம் பாறப்பொற்றை என்ற இடத்தை சேர்ந்தவர்முகமது ஷெரீப் (வயது 28). இவர் மலையாள சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் தமிழ், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் சிறு வேடங்களில் நடித்து வருகிறார்

ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 15 ஆயிரம் இந்தியர்கள் ஆண்டுதோறும் பலி: பாதுகாப்பு ஆய்வு கமிட்டி தகவல்

Posted: 20 Aug 2013 10:30 PM PDT

ரெயில் விபத்துகளில் ஆண்டுதோறும் சராசரியாக 15 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர் என்ற திடுக்கிடும் தகவலை 2012 ஆண்டு இந்திய ரெயில்வே துறையால் அமைக்கப்பட்ட அனில் காக்கோட்கர் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு சீராய்வு கமிட்டி அறிவித்துள்ளது. இதில், ரெயில்வே துறையின் மெத்தனப் போக்காலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாட்டாலும் தண்டவாளங்களை கடந்து சென்ற 15 ஆயிரம் பேர் சராசரியாக ஆண்டுதோறும் பலியாகியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மதுரையை தகர்க்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 20 Aug 2013 10:12 PM PDT

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து நாச வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பிடிபட்ட தீவிரவாதிகள் இது தொடர்பாக அளித்த வாக்கு மூலத்தில் பாகிஸ்தானின் சதிச் செயல் அம்பலமானது. அதன் பிறகும் பாகிஸ்தானின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது

பிரதமர் மன்மோகன் சிங் செப்.27ம் தேதி வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார்

Posted: 20 Aug 2013 09:58 PM PDT

குறுகிய கால பயணமாக அடுத்த (செப்டம்பர்) மாதம் 27ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ஆகியோருக்கிடையே வாஷிங்டனில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையின் போது இந்த சந்திப்பு தேதி இறுதி செய்யப்பட்டது.

2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற சட்டத்தில் திருத்தம்

Posted: 20 Aug 2013 09:31 PM PDT

அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சில அதிரடி உத்தரவுகளை கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டது. குற்ற வழக்குகளில் இரண்டு அல்லது இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நாடெங்கும் உள்ள அரசியல் கட்சிகளிடம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க கூடாது என்று கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம், அரசியல் கட்சிகளிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தது.

முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

Posted: 20 Aug 2013 08:58 PM PDT

கேரளாவில் பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி பணம் மோசடி செய்ததாக பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், நாட்டிய கலைஞர் ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்ற மந்திரிகள் மற்றும் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக உம்மன் சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பனும் கைது செய்யப்பட்டார்.

நிலக்கரி ஊழலில் தொடர்புள்ள 257 கோப்புகளை காணவில்லை: சி.பி.ஐ. தகவல்

Posted: 20 Aug 2013 08:45 PM PDT

நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் தொடர்பான 257 கோப்புகள் காணாமல் போயுள்ளது. இதனால் வழக்கு விசாரணை பலவீனம் அடையும் என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் காரணமாக மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாடு அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊழல் குறித்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை

தடையை மீறி அயோத்திக்கு யாத்திரை செல்வோம்: விசுவ இந்து பரிஷத் அறிவிப்பு

Posted: 20 Aug 2013 08:27 PM PDT

உத்தரபிரதேச மாநில அரசின் தடையை மீறி அயோத்திக்கு யாத்திரை செல்வோம் என்று விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர் சாமி சின்மயானந்த் அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு விசுவ இந்து பரிஷத் நடத்தும் யாத்திரைக்கு தடை விதித்து அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் தடையை மீறி யாத்திரை நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் சாமி

வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு

Posted: 20 Aug 2013 05:27 PM PDT

வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார். பிரபல சரோட் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகானுக்கு ராஜீவ் காந்தி சமாதான விருது வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இந்த விருதை வழங்கினார்கள். பிரதமர் மன்மோகன்சிங் விழாவில்

அரசு ஊழியர் இறந்துவிட்டால் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை கோர உரிமை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 20 Aug 2013 04:03 PM PDT

அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் மட்டும் வேலை கோர உரிமை இல்லை என்று, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டு கடந்த 2010-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், இறந்துபோன எம்.ஜி.பி. கிராம வங்கி ஊழியர் ஒருவரின் மகனான சக்கரவர்த்தி சிங்குக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்க

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பிரதமரின் பொருளாதார ஆலோசகருடன் ப.சிதம்பரம் ஆலோசனை

Posted: 20 Aug 2013 03:54 PM PDT

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜனுடன் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். கடந்த சில நாட்களாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதோடு அரசின் இறக்குமதி செலவினமும்

உணவுப்பாதுகாப்பு சட்டத்திற்கு பிறகு நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆபத்தான பரிமாணங்களை தொடும்: ராஜ்நாத் சிங்

Posted: 20 Aug 2013 03:12 PM PDT

பஞ்சாப் மாநில லாங்கோவாலில் முன்னாள் சிரோமனி அகாலி தளத்தலைவர் சாந்த் ஹர்சந்த்சிங் லாங்கோவாலின் 38-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். அக்கூட்டத்தில் நாட்டின் பணப்பற்றாக்குறை குறித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

உத்தரகாண்ட்டில் கனமழையினால் நிலச்சரிவு: சாலைகள் அடித்து செல்லப்பட்டன

Posted: 20 Aug 2013 02:40 PM PDT

ஏற்கனவே கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. கனமழையினால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டின் முக்கிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரகாசி மாவட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சாலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தொடர் மழையை

உணவுப்பாதுகாப்பு சட்டத்தை தடுத்து மக்களின் உரிமையை மறுக்கிறார் மோடி: கே.வி. தாமஸ்

Posted: 20 Aug 2013 01:39 PM PDT

நாட்டிலுள்ள 70 சதவிகித மக்கள் பயன்பெறும் விதத்தில் மிகவும் குறைந்த விலையில் உணவுப்பொருட்களை வழங்க வகை செய்யும் உணவுப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர ஆளும் காங்கிரஸ்

சீனாவுக்கு மிரட்டல்: இந்திய விமானப்படை போக்குவரத்து விமானம் லடாக் வருகை

Posted: 20 Aug 2013 12:32 PM PDT

கடந்த ஏப்ரல் மாதம் லடாக் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவத்தினர் அங்குள்ள டெப்சாங் பள்ளத்தாக்கில் முகாம் அமைத்து தங்கினர். இதனையடுத்து எல்லையில் பதட்டம் நிலவியது. பின்னர்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மோடி கடும் தாக்கு

Posted: 20 Aug 2013 12:21 PM PDT

பதவி நாற்காலியை காப்பாற்றுவது பற்றி மட்டுமே கவலைப்படும் மத்திய அரசு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, பா.ஜனதா தலைவர் நரேந்திரமோடி தாக்குதல் தொடுத்தார். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் டாலருக்கு எதிரான ரூபாயின்

ராஜஸ்தானில் ஜீப்-லாரி மோதல்: பயணிகள் 10 பேர் பலி

Posted: 20 Aug 2013 11:19 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் சோமு என்னுமிடத்தில் இருந்து சாண்ட்வாஜி என்ற இடம் நோக்கி ஜீப் ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த ஜீப் ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய

கேரள மீனவர்கள் கொலை வழக்கு: இத்தாலி கடற்படையினர் வாக்குமூலம் அளிக்க இந்தியா வர மறுப்பு

Posted: 20 Aug 2013 06:58 AM PDT

கேரள கடற்பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 மீனவர்களை அந்த வழியாக வந்த இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலானோ லத்தோர், சால்வதோர் ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

உலகின் உயரமான ஓடுதளத்தில் சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் தரையிறக்கம்: இந்திய விமானப்படை சாதனை

Posted: 20 Aug 2013 06:00 AM PDT

இந்தியாவின் ராணுவ பலத்தை சோதித்து வரும் சீனப்படைகள், கடந்த ஏப்ரல் மாதம் லடாக் எல்லை அருகே ஊடுருவி முகாம் அமைத்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்தப் படைகள் வாபஸ் பெறப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™