Tamil Star |
- தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 எம்பிக்கள் ராஜினாமா
- பலத்த மழை காரணமாக மூணாறு பகுதியில் நிலச்சரிவு :போக்குவரத்து பாதிப்பு – பள்ளிகளுக்கு விடுமுறை
- ஸ்நோடென் விடயத்தில் அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ரஷியா உதாசினம் : ஒபாமா, புதின் சந்திப்பு நடக்குமா?
- மியான்மரில் கனமழை பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம்
- வெலிவேரிய சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது – விஜித ஹேரத்
- பிரித்தானியாவில் சட்ட விரோத குடியேற்றவாசிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
- தவறைச் சுட்டிக் காட்டிய கிளிநொச்சி பொறியியலாளரை தாக்கிய அமைச்சர் ரிஷாத்தின் உறவினர்
- தமிழர்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது: வெலிவேரிய மக்கள் கவலை
- மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும்! பிரதமர் உறுதி
- பொருட்காட்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்த சம்பவத்தில் கிராம உதவியாளர் உள்பட 3 பேர் கைது
| தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 15 எம்பிக்கள் ராஜினாமா Posted: 02 Aug 2013 09:07 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பலத்த மழை காரணமாக மூணாறு பகுதியில் நிலச்சரிவு :போக்குவரத்து பாதிப்பு – பள்ளிகளுக்கு விடுமுறை Posted: 02 Aug 2013 09:02 PM PDT கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மூணாறில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மூணாறு பகுதியில் உள்ள குண்டளை, மாட்டுப்பட்டி, பழைய மூணாறு, ஹெட் ஒர்க்ஸ் அணை ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மதுரை–கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் பகுதியிலும், மூணாறு–உடுமலை சாலையில் நயமக்காடு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சாலையில் இருந்து மண் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்நோடென் விடயத்தில் அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ரஷியா உதாசினம் : ஒபாமா, புதின் சந்திப்பு நடக்குமா? Posted: 02 Aug 2013 08:53 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| மியான்மரில் கனமழை பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் Posted: 02 Aug 2013 08:46 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெலிவேரிய சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது – விஜித ஹேரத் Posted: 02 Aug 2013 08:37 PM PDT வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய சம்பவத்தில் 16 வயதான கஹந்தவ ஆராச்சிலாகே தேன் அகில தினேஷ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரும், வைத்தியசாலை தரப்பினரும் சரியான தகவல்களை வழங்குவதில்லை. தமது உறவினர்கள், பிள்ளைகள் வீடுகளுக்கு வரும் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரித்தானியாவில் சட்ட விரோத குடியேற்றவாசிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம் Posted: 02 Aug 2013 08:32 PM PDT
லண்டனின் வோல்ஹம்ஸ்டேவ், கென்சல் கிறீன், ஸ்டப்பேர்ட் மற்றும் கிரிக்கெல்வூட் பிரதேசங்களில் கடந்த மூன்று தினங்களாக அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இத்தேடுதலின் போது, தர்ஹம், மென்செஸ்டர் உட்பட நாடு முழுவதும் 90 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை எச்சரித்து வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை அடுத்தே அதிகாரிகள் இந்த தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், இந்த தேடுதல்களை அடிப்படை சுதந்திரத்தை மீறும் வன்முறை செயல்கள் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பெர்ரி காடினர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐந்து இலங்கையர்கள் உட்பட இந்தியன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பிரித்தானிய தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தவறைச் சுட்டிக் காட்டிய கிளிநொச்சி பொறியியலாளரை தாக்கிய அமைச்சர் ரிஷாத்தின் உறவினர் Posted: 02 Aug 2013 08:23 PM PDT
மேற்படி வீதியின் வேலைத்திறனைச் சரி பார்ப்பதற்கென கிளிநொச்சி வீதி அதிகார சபையில் இருந்து பொறியியலாளரான குழந்தைவேல் வில்வராசா ( வயது 35 )தனது தொழினுட்ப ஆலோசகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் குறித்த வீதியின் அபிவிருத்தியினைச் சென்று பார்வையிட்ட பொழுது வேலைத் தரம் மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டதனைச் சுட்டிக் காட்டியுள்ளார். 6 அங்குல உயரத்திற்குக் கொங்கிரீற் போடப்பட வேண்டிய நிலையில் MAGA ஒப்பந்ததாரரால் 4 அங்குல உயரத்திற்கு மாத்திரம் தரம் குறைந்த சீமெந்துக் கலவையினைக் கொண்டு கொங்கிரீற் போடப்பட்டு வந்துள்ளது. மேற்குறித்த குறையினைச் சுட்டிக் காட்டிய பொறியியலாளரை அங்கு பணியில் நின்ற MAGA ஊழியர் தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார். அங்கிருந்து புறப்பட்டுத் தமது அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்த பொறியியலாளர் குழுவினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இடை மறித்து, வீதி அபிவிருத்திப் பணியினை எதற்காக இடை நிறுத்தினாய் எனக் கேட்டு பொறியியலாளரின் கன்னத்தில் ஓங்கி கடுமையாகத் தாக்கியதுடன் கைத்துப்பாக்கியினை எடுத்து மிரட்டியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் நெருங்கிய உறவினரான ஆர்ஷிக் எனக் கூறப்படுகிறது. கடுமையான உடற்தாக்கங்களுக்கு உள்ளான குறித்த பொறியியலாளர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விடயம் குறித்து பொலிஸ் நிலையத்திலும் மேலதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் தாக்குதல் நடாத்தியவர்களுக்கெதிராக எடுக்கப்படவில்லை. இவ் விடயம் குறித்து பிரதம பொறியியலாளரான சஞ்சீவராஜாவுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தொடர்பு கொண்டு தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இத் திட்டங்கள் MAGA ஒப்பந்ததாரரால் மேற்கொள்ளப்படுவதால் இத்தகைய தரம் குன்றிய வேலைத் திட்டங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டாலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என்பது வெளிப்படை என மக்கள் விசனப்படுவதுடன், எமது தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் தென்னிலங்கையில் இருந்து வரும் ஒப்பந்ததாரர்கள் தரம்குன்றிய வேலைகளினைச் செய்து எமக்கென வரும் நிதிகளைக் கொள்ளையடித்து வருவதைத் தடுப்பதற்கு வழி என்ன எனக் கேள்வியெழுப்புகின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 02 Aug 2013 08:15 PM PDT
17வயதான இளைஞரை கொலை செய்து மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்படுத்தி, நேற்று இராணுவம் நடத்திய தாக்குதலை, மிலேச்சத்தனமான, கொடூரமான தாக்குதல் என்று இந்த மக்கள் வர்ணித்தனர். மிலேச்சத்தனமாக, கொடூரமான முறையில் எமது பிள்ளைகளை கொலை செய்தனர் என அந்த மக்கள் கூறினர். முழு உலகமும் மதிக்கும் சர்வதேச போர் சட்டத்தின் பிரகாரம் பாடசாலை, வைத்தியசாலை, மத வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. எனினும் இராணுவம் பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியது என வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள் குற்றம் சுமத்தினர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும்! பிரதமர் உறுதி Posted: 02 Aug 2013 07:59 PM PDT
இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சகைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட இலங்கை பிரதமர் ஜெயரத்ன நிருபர்களிடம் கூறியதாவது; இலங்கையில் உள்ள 9 மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார். இம்மாகாணங்களின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க ஏதுவாக, 13வது சட்ட திருத்தத்தில் திருத்தங்கள் கொண்டு வர இலங்கை முயற்சி செய்து வருகிறது. எனினும் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1987ம் ஆண்டு இந்திய அரசின் தலையீட்டின் பேரில், அப்போதைய பிரதமர் ராஜிவ் மற்றும் ஜெயவர்த்தன இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக, இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. தற்போது அவற்றிக்கு அளிக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க மகிந்தா ராஜபக்ச அரசு முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொருட்காட்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்த சம்பவத்தில் கிராம உதவியாளர் உள்பட 3 பேர் கைது Posted: 02 Aug 2013 07:55 PM PDT நெல்லை மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை பார்க்க மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக பொருட்காட்சி வளாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கென தனித்தனியாக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் கழிப்பறை அருகே வாலிபர் ஒருவர் மறைந்திருந்து செல்போனில் படம் எடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க சந்திப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










