Tamil Star |
- இலங்கைக்கு செல்லாவிட்டால் கனடா தனிமைப்பட்டு விடும்!- ரொறன்ரோ ஸ்டார்
- இந்திய கடற்படை கப்பலில் தீ விபத்து
- முல்லைத்தீவில் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை கையளிக்குமாறு அரச அதிபருக்கு மகஜர் கையளிக்க ஏற்பாடு
- குஜராத்தில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்
- தீவிரவாத அச்சுறுத்தல்: சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு
- இஸ்ரேலின் புதிய குடியேற்றத் திட்டங்கள் சட்டவிரோதமானது: ஜோன் கெரி
- இங்கிலாந்தில் பாடசாலை ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்
- அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டவருக்கு நோபல் பரிசு?
- புற்று நோய் பாதிப்பை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள்
| இலங்கைக்கு செல்லாவிட்டால் கனடா தனிமைப்பட்டு விடும்!- ரொறன்ரோ ஸ்டார் Posted: 13 Aug 2013 09:55 PM PDT
ரொறன்ரோ ஸ்டார் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள கனேடிய படைத்தள கல்லூரியின் விரிவுரையாளர் அடம் சாப்னிக் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்திற் கொண்டு அந்த நாட்டில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனேடிய பிரதமர் ஹவாட் கடந்த இரண்டு வருடங்களாக அறிவித்து வருகிறார். எனினும் அவரின் இந்த அறிவிப்புக்கு அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள் கூட இதுவரை தமது ஆதரவை வெளியிடவில்லை. இந்தநிலையில் கனடா தமது முடிவில் தனித்து போகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் கனடாவின் தீர்மானம் இலங்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு காரணமாக இருக்காது என்றும் அடம் சாப்னிக் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய கடற்படை கப்பலில் தீ விபத்து Posted: 13 Aug 2013 09:46 PM PDT இந்தியா, தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.சிந்து ராக்சாக் என்ற நீர்மூழ்கிக் கப்பலிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் […] |
| Posted: 13 Aug 2013 09:43 PM PDT முல்லைத்தீவு- எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, நிலத்திற்குச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது நிலங்களுக்குச் செல்ல முடியாமல் விரட்டியடிக்கப்படுவதைக் கண்டித்தும், நிலங்களை மீள வழங்க வலியுறுத்தியும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்கவுள்ளனர். 1983ம் ஆண்டு மேற்குறித்த எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலைகளினால் இடம்பெயர்ந்து மிக நீண்டகாலம் வேறிடங்களில் வாழ்ந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மீளவும் அவர்களது வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர். எனினும் […] |
| குஜராத்தில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள் Posted: 13 Aug 2013 09:10 PM PDT குஜராத் மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசு 7 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. ஆரவல்லி, போடாட், சோட்டா, உதய்பூர், மோர்பி, மஹிசாகர், கிர் – சோம்நாத், துவாரகா என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு நாளை (15ம் தேதி) முதல் அமல்படுத்தப்படும். குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்த முதல் மந்திரி நரேந்திர மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்களையும், தாலுக்காக்களையும் உருவாக்குவோம் […] |
| தீவிரவாத அச்சுறுத்தல்: சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 13 Aug 2013 09:03 PM PDT இந்தியா முழுவதும் சுதந்திரதின விழா நாளை மறுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணிகளின் உடமைகள் சோதனை செய்த பிறகே பொருட்கள் வைப்பு அறையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு ரயில்களில் பார்சல்கள் அனுப்ப […] |
| வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு Posted: 13 Aug 2013 08:51 PM PDT மும்பையில் வேர்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த ரித்தேஷ், தாமினி, இவர்களது மகன் கிருஷ்ணா(2). ஆப்பார்ட்ம்மென்டில் வசிக்கும் இவர்களது மகன் வீட்டின் வெளியில் உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்டு கொண்டிருந்தான். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுகாரர் கிருஷ்ணாவின் முதுகில் ஆசையாக தட்டி சென்றுள்ளார். இதனால் கிருஷ்ணாவுக்கு தொடர்ச்சியான இரும்பலும் மூச்சடைப்பும் ஏற்பட்ட்டு கடும் அவதிக்குள்ளானான். இந்நிலையில் வேர்கடலை தான் காரணம் என்று தெரிய வந்த நிலையில் உடனடியாக கிருஷ்ணா […] |
| இஸ்ரேலின் புதிய குடியேற்றத் திட்டங்கள் சட்டவிரோதமானது: ஜோன் கெரி Posted: 13 Aug 2013 08:48 PM PDT மத்திய கிழக்கு சமாதானப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் புதிய குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பிற்கு பலஸ்தீனம் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாதகமான பதில் நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என பலஸ்தீனியர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. எனினும் குடியேற்றத் திட்டங்கள் சட்டவிரோதமானது என்பதை அமெரிக்கா வலியுறுத்துவதாகவும் ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார். இந்த […] |
| இங்கிலாந்தில் பாடசாலை ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் Posted: 13 Aug 2013 08:43 PM PDT இங்கிலாந்தில் பாடசாலை ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது மாணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு ஆண்டு தண்டனை வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி குறித்த ஆசிரியை, குற்றம் சாட்டப்பட்ட மாணவனுக்கு தனியாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஆசிரியையை கட்டியணைத்த அந்த மாணவன், அவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டான். அவனது பிடியில் இருந்து தப்பி கதவருகே ஓடிய ஆசிரியை, கதவு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்தார். ஆசிரியையின் கூச்சலை கேட்ட இதர ஆசிரியர்கள் கதவை […] |
| அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டவருக்கு நோபல் பரிசு? Posted: 13 Aug 2013 08:39 PM PDT
இதனை ஆதரித்து அவரது ஆதரவாளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள், இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25). இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நோர்வேயிலுள்ள நோபல் பரிசு அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன. அமைதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் வகையில் பணியாற்றிய பிராட்லி மேன்னிங்கிற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் 2009ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு இந்த பரிசை வழங்கிய களங்கத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என பிராட்லி மேன்னிங்கின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| புற்று நோய் பாதிப்பை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள் Posted: 13 Aug 2013 08:35 PM PDT மனிதர்களை அச்சுறுத்தும் புற்று நோய் பாதிப்புகள் பெரும்பாலான நேரங்களில் காலதாமதமாக கண்டறியப்படுவதால் நோய் பாதித்தவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் போவதும், இதனால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்ப்பபை புற்றுநோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர். இதன்படி, கர்ப்பபை புற்றுநோயை உருவாக்கும் செல்கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. இதை […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


