மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சீரடி சாய்பாபா கோவிலில் இலவசமாக லட்டு பிரசாதம் நாளை முதல் வழங்கப்படுகிறது
- மும்பை நீர்மூழ்கி கப்பல் வெடித்து தீப்பிடித்தது: 18 கடற்படை வீரர்களை மீட்க தீயணைப்பு படையினர் போராட்டம்
- காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
- 14-வது நாளாக போராட்டம் நீடிப்பு: ஆந்திர அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.150 கோடி வருமானம் இழப்பு
- விமானதள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் காலதாமதம்
- பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது: பா.ஜ.க. கருத்து
- முல்லைப்பெரியாறு வழக்கு: அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது தவறு தான் - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வக்கீல் ஒப்புதல்
- மும்பை அருகே 2 கடற்படை கப்பல்களில் தீ விபத்து - 16 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன
- குஜராத்தில் நாளை 7 புதிய மாவட்டங்கள் உதயம்
- பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியா - பாக். எல்லையில் மாணவர்களின் காற்றாடி திருவிழா
- கிஷ்த்வார் கலவரம் எதிரொலி: காஷ்மீரின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு - 141 பேர் கைது
- பாகிஸ்தானுடன் நட்பையும் கூட்டுறவையும் உறுதிபடுத்த இந்தியா விரும்புகிறது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
- கோலாப்பூரில் வட இந்தியர்கள் மீது சிவசேனா-நவநிர்மாண் தொண்டர்கள் தாக்குதல்
- நவாஸ் ஷெரீபுடன் பேச்சுவார்த்தை நடத்த மன்மோகன் சிங் ஆர்வம் காட்டக்கூடாது: அத்வானி
- இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற நரேந்திர மோடிக்கு அழைப்பு
- டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை
- எல்லையில் அமைதி திரும்பிய பிறகே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: மத்திய வெளியுறவு செயலர் பேட்டி
- எம்.எல்.ஏ.-எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: சட்டத்திருத்தம் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
- எல்லைக் கோட்டுப் பிரச்சினையால் தூக்கமிழந்து தவிக்கும் மக்கள்
- சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதல்: 3 ஜவான்கள் பலி
| சீரடி சாய்பாபா கோவிலில் இலவசமாக லட்டு பிரசாதம் நாளை முதல் வழங்கப்படுகிறது Posted: 13 Aug 2013 10:40 PM PDT மராட்டிய மாநிலம் சீரடியில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (15–ந்தேதி) முதல் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று சீரடி சாய்பாபா சமஸ்தான டிரஸ்ட் அறிவித்துள்ளது. வரிசையில் வரும் போதே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு லட்டும் 50 கிராம் எடை கொண்டதாக |
| Posted: 13 Aug 2013 09:53 PM PDT மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பல் நிறுத்தும் தளத்தில் ஐ.என்.எஸ்.சிந்து ராக்ஸாக் என்ற அதி நவீன நீர்மூழ்கி கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் 3 அதிகாரிகள் உள்பட 18 கடற்படை வீரர்கள் இருந்தனர். நேற்று இரவு திடீர் என்று இந்த நீர்மூழ்கி கப்பலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே கப்பலில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. கப்பலின் அடித்தளம் கடல் தண்ணீரில் மூழ்கி இருக்க மேல் தளம் மட்டும் வெளியே தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு தேவையான ஆக் |
| காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 13 Aug 2013 09:48 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான், இந்திய வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்றது. இதனையடுத்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி |
| 14-வது நாளாக போராட்டம் நீடிப்பு: ஆந்திர அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.150 கோடி வருமானம் இழப்பு Posted: 13 Aug 2013 09:24 PM PDT தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்கக் கூடாது தொடர்ந்து ஐக்கிய ஆந்திராவாகவே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. இன்று 14-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. பொது மக்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளதால் ஆந்திரா பகுதியே ஸ்தம்பித்து விட்டது. 13 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்ளும் பூட்டியே கிடக்கின்றன. பஸ்களும் தொடர்ந்து இயக்கப்படவில்லை. தற்போது திருப்பதி-திருமலை |
| விமானதள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் காலதாமதம் Posted: 13 Aug 2013 05:28 PM PDT மும்பை விமான தள ஊழியர்களின் இரு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் விமானங்கள் 15 நிமிடங்கள் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றன |
| பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது: பா.ஜ.க. கருத்து Posted: 13 Aug 2013 03:16 PM PDT இந்தியாவை குற்றம் சாட்டி பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு |
| Posted: 13 Aug 2013 02:03 PM PDT முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தாமல், அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி |
| மும்பை அருகே 2 கடற்படை கப்பல்களில் தீ விபத்து - 16 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன Posted: 13 Aug 2013 01:38 PM PDT தெற்கு மும்பை கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களில் நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமோ, உயிர் பலியோ |
| குஜராத்தில் நாளை 7 புதிய மாவட்டங்கள் உதயம் Posted: 13 Aug 2013 01:05 PM PDT தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பா.ஜ.க. தலைமையிலான குஜராத் மாநில அரசு 7 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. ஆரவல்லி, போடாட், சோட்டா, உதய்பூர், மோர்பி, மஹிசாகர், கிர் - சோம்நாத், துவாரகா என பெயரிடப்பட்டுள்ள |
| பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியா - பாக். எல்லையில் மாணவர்களின் காற்றாடி திருவிழா Posted: 13 Aug 2013 12:44 PM PDT இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் வேளையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள டெல்லி பள்ளியில் பயிலும் மாணவர்கள் எல்லைப் பகுதியில் நேற்று காற்றாடி திருவிழாவை நடத்தினார்கள் |
| கிஷ்த்வார் கலவரம் எதிரொலி: காஷ்மீரின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு - 141 பேர் கைது Posted: 13 Aug 2013 12:25 PM PDT காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் கடந்த வெள்ளிக்கிழமை ரம்ஜான் தொழுகை முடிந்ததும் முஸ்லிம்களில் ஒரு சாரார் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள மற்றொரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர் |
| பாகிஸ்தானுடன் நட்பையும் கூட்டுறவையும் உறுதிபடுத்த இந்தியா விரும்புகிறது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Posted: 13 Aug 2013 10:36 AM PDT பாகிஸ்தானின் 67வது சுதந்திர தினம் நாளை (14ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் |
| கோலாப்பூரில் வட இந்தியர்கள் மீது சிவசேனா-நவநிர்மாண் தொண்டர்கள் தாக்குதல் Posted: 13 Aug 2013 09:07 AM PDT மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் நகரில் உள்ள கட்டுமான பணியிடத்தில் ஒரு குழந்தையை தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த தொழிலாளி ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். |
| நவாஸ் ஷெரீபுடன் பேச்சுவார்த்தை நடத்த மன்மோகன் சிங் ஆர்வம் காட்டக்கூடாது: அத்வானி Posted: 13 Aug 2013 08:40 AM PDT போர் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம், இந்திய வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்றது. இதனையடுத்து எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப். ஆனால் எல்லையில் அமைதி நிலவும்வரை பேச்சுவார்த்தை |
| இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற நரேந்திர மோடிக்கு அழைப்பு Posted: 13 Aug 2013 06:25 AM PDT பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து எதிர்க்கட்சியின் இந்திய தொழிலாளர் நண்பர்கள் குழு தலைவர் பேரி கார்டினர் எம்.பி. கடந்த வாரம் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'நவீன இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்திய நண்பர்கள் குழு தலைவர் சைலேஷ் வாரா எம்.பி.யும் தனியாக ஒரு |
| டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை Posted: 13 Aug 2013 05:12 AM PDT டெல்லியில் நாளை மறுநாள் நடக்கும் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ–தொய்பா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளது என்றும், இதற்காக தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்தது. 2 எச்சரிக்கை கடிதங்களும் அனுப்பப்பட்டது. |
| எல்லையில் அமைதி திரும்பிய பிறகே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: மத்திய வெளியுறவு செயலர் பேட்டி Posted: 13 Aug 2013 04:00 AM PDT காஷ்மீர் எல்லையில் ரோந்து சென்ற இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இரு நாட்டின் உறவின் புதிய தொடக்கத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விரும்புகிறார். இதற்காக இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார். |
| எம்.எல்.ஏ.-எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: சட்டத்திருத்தம் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு Posted: 13 Aug 2013 03:46 AM PDT தெலுங்கானா விவகாரம், ராபர்ட் வதேரா நில பேர ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக பாராளுமன்றப் பணிகள் முடக்கப்பட்டு வருகின்றன. எதிர் கட்சியினரின் அமளி காரணமாக பல மசோதாக்கள் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து |
| எல்லைக் கோட்டுப் பிரச்சினையால் தூக்கமிழந்து தவிக்கும் மக்கள் Posted: 13 Aug 2013 03:35 AM PDT இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையைப் பாதுகாப்பது இரண்டு நாட்டு வீரர்களுக்கு மட்டும் அழுத்தத்தைக் கொடுக்கும் விஷயம் அல்ல. அந்த எல்லையின் அருகே வாழ்க்கை நடத்தும் சாதாரண மக்களும் இந்த எல்லைப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றார்கள். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஜம்மு- காஷ்மீர் பகுதியில் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக்கோடு அமைந்துள்ளது. 740 கி.மீ தூரத்திற்கு அமைந்துள்ள இந்தக் கோட்டின் அருகில் வசிக்கும் மக்கள் இங்கு தோன்றும் கலவரங்களால் முதலில் பாதிக்கப்படுகின்றார்கள் |
| சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதல்: 3 ஜவான்கள் பலி Posted: 13 Aug 2013 03:33 AM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நக்சலைட்கள் அதிகம் நடமாட்டமுள்ள நாராயண்பூர் மாவட்ட மஹரா |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |