Tamil Star |
- உலக தடகள சாம்பியன்ஷிப்: உசைன் போல்ட் மீண்டும் முதலிடத்தில்…
- இயான் பெல் சதம்: வலுவான நிலையில் இங்கிலாந்து
- போலி விமர்சனக்ளுக்கு துணை போகாதீர்கள் … உண்மையான சினிமா ரசிகன் இது போன்ற விமர்சங்களில் ஈடு பட மாட்டன் .. தலைவா படத்தை பற்றி தவறாக எழுதியவர்கள் இதுக்கு முந்திய விஜய்யின் வெற்றி ,நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களுக்கும் கேவலாமான விமர்சங்கலையே எழுதியவர்கள் .. இவர்கள் திரைப்படத்தை பார்த்தார்களோ யாருக்கு தெரியும்.. ஆக மொத்தத்தில் நான் சொல்ல வாறது தலைவா பாடம் நேற்று பாத்தேன் … நகைசுவை , சஸ்பென்ஸ் , அதிரடி … அதற்காக துப்பாக்கி படம் அளவுக்கு எதிரபார்பை தவிரிர்த்து ஒரு முழுமையான நல்ல திரைக்கதையுடன் ஒரு கமர்சியல் வெற்றி திரைப்படம் … நீ விஜய் ரசிகன் எண்டு கமெண்ட் அடித்து என்னை கிழிக்க போகும் நண்பர்களே … நான் சினிமா ரசிகன் … நன் சினிமா ரசிகன் நான் சினிமா ரசிகன்
- முன்னேஸ்வரத்தில் மனித எச்சம் மீட்பு
- இலங்கைக் கடலில் சீனா மீன்பிடி
- ஈபிள் டவர் வெடிகுண்டு மிரட்டல்: மீண்டும் திறக்கப்பட்டது உலக அதிசயம்
- அதிகளவு தொலைக்காட்சி பார்க்கும் சிறு பிள்ளைகளின் வாழ்க்கை பாழாகும்: எச்சரிக்கை தகவல்
- இங்கிலாந்தில் மிகக் குறைந்த வயதில் சாரதியான பெண்
- சீனாவில் H7N9 பாதிப்புக்குள்ளான மற்றுமொருவர் கண்டுபிடிப்பு
- மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்?: புதிய கருவி கண்டுபிடிப்பு
| உலக தடகள சாம்பியன்ஷிப்: உசைன் போல்ட் மீண்டும் முதலிடத்தில்… Posted: 11 Aug 2013 10:33 PM PDT ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் 14 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா நாட்டு தடகள வீரர் உசைன் போல்ட் மீண்டும் வெற்றி பெற்றார். இந்த ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லின் மற்றும் ஜமைக்கா வீரர் நெஸ்டா கார்டெர் ஆகியோரை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு தள்ளி 9.77 வினாடிகளில் உசைன் போல்ட் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் […] |
| இயான் பெல் சதம்: வலுவான நிலையில் இங்கிலாந்து Posted: 11 Aug 2013 10:29 PM PDT ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயான் பெல் சதம் அடிக்க, வலுவான முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2-0 என முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து அணி, கோப்பையை தக்கவைத்தது. நான்காவது போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது நாள் […] |
| Posted: 11 Aug 2013 10:24 PM PDT குடும்ப அரசியலை இல்லாமல் செய்யும் அதிகாரம் பொதுமக்களிடம் காணப்படுவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறவினர்களுக்கு அதிகளவு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான் எனது உறவினர் எவரையும் அரசியலில் ஈடுபடுத்தவில்லை. இன்று ஒட்டுமொத்த அரசியலேய வர்த்தகமயப்பட்டுள்ளது. காலம் காலமாக கட்சிக்காக சேவை செய்தவர்கள் உதாசீனம் செய்யப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் பணத்தை வாரி இறைக்கும் நபர்களுக்கு விருப்பு வாக்கு அளிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிக வலுவான கட்சி. […] |
| முன்னேஸ்வரத்தில் மனித எச்சம் மீட்பு Posted: 11 Aug 2013 10:21 PM PDT முன்னேஸ்வரம் சிவன் கோவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த மனித எச்சம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனித எச்சம் ஏற்கனவே 3 வருடங்களுக்கு முன்னதாகவே ஆலயத்தின் திருத்தப் பணிகளுக்காக மண்ணை தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. எனினும் பரிசோதனைகளுக்காக இந்த இடத்தை மீண்டும் தோண்ட வேண்டாம் என்று ஆலய நிர்வாகத்திடம் இலங்கை புதைப்பொருள் ஆய்வு திணைக்களம் கோரி இருந்தது. ஆனால் அண்மையில் இடம்பெற்ற ஆலயத்தின் பூஜைகளை முன்னிட்டு, மீண்டும் அந்த இடத்தில் மண் […] |
| Posted: 11 Aug 2013 10:19 PM PDT இலங்கைக் கடலில் சீனா மீன்பிடியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன நிறுவனங்கள் மீன்பிடியில் ஈடுபட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என இலங்கை மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது தெடர்பான உடன்படிக்கை ஒன்றில் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கைச்சாத்திட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் காலங்களில் இலங்கைக் கொடியுடன் இலங்கைக் கடற்பரப்பில் சீனர்கள் மீன்பிடியில் ஈடுபடவுள்ளனர். சுமார் 40 கப்பல்களில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரோலர் முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்படும் மீன்களில் […] |
| ஈபிள் டவர் வெடிகுண்டு மிரட்டல்: மீண்டும் திறக்கப்பட்டது உலக அதிசயம் Posted: 11 Aug 2013 10:18 PM PDT உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்த கோபுரத்தை தகர்ப்பதற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் இதற்கு முன்னதாக மார்ச் மாதம் விடுத்த எச்சரிக்கையில் பிரான்சில் உள்ள முக்கியமான கடைகள் மூடப்பட்டன. பின்பு யூன் மாதமும் வெடிகுண்டு மிரட்டலானது விடப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி ஈபிள் டவர் மூடப்பட்டது. இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை கருதி சமீபத்தில் தான் […] |
| அதிகளவு தொலைக்காட்சி பார்க்கும் சிறு பிள்ளைகளின் வாழ்க்கை பாழாகும்: எச்சரிக்கை தகவல் Posted: 11 Aug 2013 10:12 PM PDT சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி முன் அதிகளவு நேரத்தை செலவிட்டால், கல்வி கற்பதிலும், பிற்காலத்தில் பாரிய அளவிலும் துன்பம் ஏற்படும் என தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் University of Montreal, Quebec-ல் நடத்தப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது. அதாவது, சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி முன் செலவிடும் நேரத்தின் அளவிற்கும், இளவயதில் கல்வி கற்கும் ஆற்றலுக்கும், பிற்காலத்தில் மற்றவர்களால் பலவீனப்படுத்தப்படும் போது பாரிய அளவில் துன்பத்தை உண்டாக்குதல் போன்றனவற்றிற்கும் சம்பந்தம் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒருநாளைக்கு 3 மணி […] |
| இங்கிலாந்தில் மிகக் குறைந்த வயதில் சாரதியான பெண் Posted: 11 Aug 2013 10:10 PM PDT இங்கிலாந்தில் மிக குறைந்த வயதில் பாரவூர்தி ஓட்டும் உரிமையை 18 வயது இளம்பெண்ணான ஜெஸ் ஸ்டப்ஸ் பெற்றுள்ளார். இவரது சகோதரியான 24 வயது லூசியும் பாரவூர்தி சாரதி என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இளம் வயது பெண் பாரவூர்தி சாரதி ஆனது குறித்து கருத்து கூறிய ஜெஸ் ஸ்டப்ஸ், ‘எனது அப்பா, மாமாக்கள், சகோதரர்கள், சகோதரி எல்லோருமே பாரவூர்தி சாரதிகள் தான். ஓட்ட பழகி விட்டால் பிறகு இந்த தொழிலை விட்டு விலக மனம் வராது. என்னைப் பொருத்தவரை […] |
| சீனாவில் H7N9 பாதிப்புக்குள்ளான மற்றுமொருவர் கண்டுபிடிப்பு Posted: 11 Aug 2013 09:53 PM PDT சீனாவில் H7N9 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸால் பீடிக்கப்பட்ட மேலுமொருவர் இனம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. தென்பிராந்தியத்திலுள்ள குவாங்டங் மாகாணத்திலுள்ள கோழிப் பண்ணை பணியாளர் ஒருவர் இந்த ரைவஸால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 51 வயதான பெண் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் கடந்த 3 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பிரகாரம் சீனாவில் பறவைக் காய்சலால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த அரச […] |
| மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்?: புதிய கருவி கண்டுபிடிப்பு Posted: 11 Aug 2013 09:45 PM PDT மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள், அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது, கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் கருவி மூலம் நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று எண்டோதிலியல் செல்களை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |