Tamil News | Online Tamil News |
- இந்திய வீரர்கள் படுகொலை விவகாரத்தில் அந்தோணி "பல்டி!': பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம் என புது விளக்கம்
- ராஜ்யசபாவிலிருந்து பா.ஜ., - எம்.பி.,க்கள் மொத்தமாக வெளிநடப்பு
- கூடங்குளத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100 மெகா வாட்
- இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்
- பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்
- கடைமடைக்கு காவிரி நீர் சேருமா? உயரதிகாரிகள் கண் துடைப்பு, "ஆய்வு!'
- ரூ.20க்கு 1கிலோ அரிசி: பொதுமக்களிடம் வரவேற்பில்லை
- மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய முடிவு
- தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி? பேனர்களை அகற்ற கலெக்டர்கள் உத்தரவு
| Posted: புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி பல்டி அடித்துள்ளார். முன்னர் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலாக, புதிய அறிக்கை ஒன்றை, நேற்று தாக்கல் செய்தார். அதில், "இந்திய ராணுவ வீரர்களின் கொடூர படுகொலைக்கு, பாக்., ராணுவமே காரணமே' என, குற்றம் சாட்டினார்.ஜம்மு - காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடந்த செவ்வாயன்று, இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த, பாக்., ராணுவத்தினர், அங்கு பாதுகாப்பு பணியில் ... |
| ராஜ்யசபாவிலிருந்து பா.ஜ., - எம்.பி.,க்கள் மொத்தமாக வெளிநடப்பு Posted: "சபையை நடத்த விடாமல், இடையூறு செய்யும் எம்.பி.,க்களாக, எங்களை மட்டும், வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் சித்தரிப்பதை, ஏற்க முடியாது' எனக் கூறி, பா.ஜ., - எம்.பி.,க்கள், ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்ததால், ராஜ்யசபா நேற்று, மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.தொடரும் அமளி:பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த திங்கள் கிழமை துவங்கினாலும், இதுவரை எந்த அலுவலகங்களும், உருப்படியாக நடக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. தெலுங்கானா விவகாரம், காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் போன்றவற்றால், மூன்று நாட்களாக, இரு சபைகளின் ... |
| கூடங்குளத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100 மெகா வாட் Posted: புதுடில்லி:""கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கியது முதல், இன்று வரை, தமிழகத்திற்கு, 100 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது,'' என, மத்திய மின்துறை இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும், தமிழகத்திற்கு தர வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல், கேரள அரசும், 500 மெகா வாட் மின்சார வேண்டும் என, கோரியுள்ளது. இருப்பினும், விதிமுறைகளின்படியே, மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் ... |
| இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் Posted: சென்னை:"டெசோ' சார்பில் இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்."இலங்கை அரசமைப்புச் சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது; தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்; சிங்களக் குடியேற்றத்தை தடுக்க வேண்டும்' ஆகிய, நான்கு தீர்மானங்களை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெசோ சார்பில் அனைத்து மாவட்டங்களில் நேற்று ... |
| பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள் Posted: தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனத்தினர் ஏகபோக உரிமையாக, கனிம மணலைக் கொள்ளையடிப்பது, தொடர்ந்து நடக்கிறது.திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகி, கடலில் கலக்கும் தாமிரபரணி உள்ளிட்ட, கிளை நதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சேர்ந்த, அரிய வகை கனிமப் பொருட்கள், கிழக்கு கடற்கரை பகுதிகளில் சேர்ந்துள்ளன.குமரி மாவட்டத்தின், மேற்கு கடற்கரை கிராமம், மிடாலம் துவங்கி, நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தின், வடக்கு எல்லையான, வேம்பார் வரை, இத்தகைய அரிய கனிமங்கள் உள்ளன.கடற்கரையையொட்டி ... |
| கடைமடைக்கு காவிரி நீர் சேருமா? உயரதிகாரிகள் கண் துடைப்பு, "ஆய்வு!' Posted: தஞ்சாவூர்: டெல்டா பாசனத்துக்கு தேவையான உரம், விதை, பயிர்கடன் குறித்து தீவிர கண்காணிப்பு, உரிய நடவடிக்கை எடுக்க, திருவாரூர், தஞ்சையில் வேளாண், கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் நேற்று முகாமிட்டு, "அவசர' ஆய்வு நடத்தினர். "அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது' என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்."தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு காவிரி நீர் கடைமடை வரை சென்று சேர்வதில், நீர்நிலைகளில் தூர்வாரும் பணி முடக்கத்தால் சிக்கல் நிலவியது. இதனால், உரிய நடவடிக்கையில் அரசு துரிதமாக இறங்க வேண்டும்' என, ... |
| ரூ.20க்கு 1கிலோ அரிசி: பொதுமக்களிடம் வரவேற்பில்லை Posted: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த, துவங்கப்பட்ட, 20 ரூபாய்க்கு, 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில், அரிசி விற்பனை, தற்போது தான், 3,500 டன்னை தாண்டியுள்ளது.தமிழகத்தில் நிலவும் வறட்சியால், நெல் உற்பத்தி குறைந்து, வெளிச் Œந்தைகளில், அரிசி விலை வெகுவாக உயர்ந்தது. இதை கட்டுப்படுத்த, சன்ன ரக அரிசி, ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, ஏப்., 17ம் தேதி துவக்கி வைத்தார்.இந்த திட்டத்திற்காக, பஞ்சாப், ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள மத்திய தொகுப்பில் இருந்து, வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில், 1 கிலோ அரிசி, 19.11 ரூபாய் என்ற விலையில், 1 லட்சம் ... |
| மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய முடிவு Posted: வெளிச் சந்தையில், மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருவதை அடுத்து, மலிவு விலையில், மளிகை பொருட்கள் விற்பனை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. |
| தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி? பேனர்களை அகற்ற கலெக்டர்கள் உத்தரவு Posted: சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசியல் கட்சி பேனர்களைத் தவிர, மற்ற பேனர்களை அகற்றும்படி, வருவாய் துறையினருக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்."நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படம், இன்று வெளியிடப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று சில மாவட்ட கலெக்டர்கள், நகரில் அரசியல் கட்சி பேனர்கள் தவிர, மற்ற பேனர்களை அகற்றும்படி, வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், "அரசியல் கட்சி பேனர் தவிர, பொது இடங்களில் உள்ள, மற்ற பேனர்களை அகற்ற வேண்டும். அகற்றுவதற்கு முன்பும், அகற்றிய பின்னரும், அந்த இடத்தை புகைப்படம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 09,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |