Tamil News | Online Tamil News |
- 12ம் தேதி சென்னை வருகிறார் ஜெ.,
- காவிரியில் பாயும் வெள்ளம் கடைமடைக்கு போய் சேருமா? தூர் வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கும் கால்வாய்கள்
- உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் தாக்கல்: அ.தி.மு.க., - பா.ஜ., எதிர்ப்பு
- தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை
- தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் எதிரொலி : அந்தோணி தலைமையில் குழு அமைப்பு
- நீரா ராடியா "டேப்' விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கண்டனம்
- உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறும்: பிரணாப் நம்பிக்கை
- தூத்துக்குடி கலெக்டர் மாற்றம் ஏன்
- உபரி நீர் வீணாவதை தடுக்க நல்லாறு அணை திட்டம்
- மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
| 12ம் தேதி சென்னை வருகிறார் ஜெ., Posted: சுதந்திர தினத்தையொட்டி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள, புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், வரும், 15ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றுகிறார். கோடநாட்டில் இருக்கும் முதல்வர், வரும் 12ம் தேதி சென்னை வருகிறார். இந்தியாவின், 66வது சுதந்திர தினம், இம்மாதம், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள, புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில், முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றுகிறார். கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கொடியேற்றும் போது, எதிரில் உள்ள பகுதியில், பார்வையாளர்கள் அமருவதற்கான மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகர் ... |
| காவிரியில் பாயும் வெள்ளம் கடைமடைக்கு போய் சேருமா? தூர் வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கும் கால்வாய்கள் Posted: காவிரி டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித் துறை அலட்சியத்தால், கடைமடை வரை, காவிரி நீர் சென்று சேருமா என, சந்தேகம் எழுந்துள்ளது. காவிரி, கொள்ளிடம் கரைகளை ஒட்டியுள்ள ஏராளமான ஏரிகள், குளங்கள், தண்ணீர் பாய வேண்டிய கால்வாய்கள், முழுமையாக புதர்கள் மண்டி, தூர் வாரப்படாமல் மோசமான நிலையில் உள்ளன.டெல்டா பாசனத்துக்காக இம்மாதம், 2ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, 4ம் தேதி கல்லணையிலும், திருவாரூரில் மூணாறு தலைப்பு மதகுகளில், 6ம் தேதியும், தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி ... |
| உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் தாக்கல்: அ.தி.மு.க., - பா.ஜ., எதிர்ப்பு Posted: புதுடில்லி:நாட்டில் உள்ள, 67 சதவீத மக்களுக்கு, உணவு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும், உணவு பாதுகாப்பு மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, லோக்சபாவில் நேற்று, தாக்கல் செய்யப்பட்டது. "இந்த சட்டம், இந்திய கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது' என, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இந்த மசோதா, லோக்சபாவில் ஒருமனதாக நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காங்., தலைவர் சோனியாவின் கனவுத் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம். "அடுத்த லோக்சபா தேர்தலுக்குள், இந்த ... |
| தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை Posted: புதுடில்லி: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கை தூதரை நேரில் அழைத்து, மத்திய அரசு, தகவல் கேட்டுள்ளது.தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாவது, வாடிக்கையாகி விட்டது. |
| தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் எதிரொலி : அந்தோணி தலைமையில் குழு அமைப்பு Posted: புதுடில்லி:தெலுங்கானா தனி மாநில அறிவிப்புக்கு, ஆந்திராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, இது குறித்து ஆய்வு செய்ய, காங்., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, அந்தோணி தலைமையில், நான்கு பேர் அடங்கிய குழுவை, காங்., நியமித்துள்ளது. |
| நீரா ராடியா "டேப்' விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கண்டனம் Posted: புதுடில்லி:"2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அரசியல் தரகர் நீரா ராடியாவின், தொலைபேசி உரையாடல் அடிப்படையில், நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என்று, மத்திய அரசு அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தன் சாட்சிகள் பட்டியலில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் பெயரை குறிப்பிட்டு இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், மீடியா ஆலோசகராகவும், அரசியல் தரகராகவும் செயல்பட்டார். இவர், ஒன்பது ஆண்டுகளில், 300 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக எழுந்த ... |
| உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறும்: பிரணாப் நம்பிக்கை Posted: சென்னை:""உணவு பாதுகாப்பு மசோதா நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில் நிறைவேறும்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெள்ளி விழா, சென்னையில் உள்ள அந்நிறுவன வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பிரணாப் முகர்ஜி பேசியதாவது: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இயற்கையோடு இணைந்து, ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்கு செயல்படுவதோடு, தொழில்நுட்ப வளர்ச்சியையும் மேம்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு முன்னோடியாகவும், அவற்றை செயல்படுத்தும் ... |
| தூத்துக்குடி கலெக்டர் மாற்றம் ஏன் Posted: தூத்துக்குடி:தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், கடற்கரை மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சோதனை செய்ததால், மாற்றப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆஷிஷ்குமார், நேற்று முன்தினம் வி.வி.மணல் குவாரிகளில் சோதனை நடத்தினார். அன்று இரவே அவர், சமூகநலத்துறை, சத்துணவு திட்டத்தின் துணை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். அவர், தூத்துக்குடியில் 2011 ஜூலையிலிருந்து பணியாற்றி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதற்கு வர்த்தகர்கள் தடை உத்தரவு பெற்றனர். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் ஆளும் கட்சியினருக்கு ... |
| உபரி நீர் வீணாவதை தடுக்க நல்லாறு அணை திட்டம் Posted: பொள்ளாச்சி:பருவமழை காலங்களில், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளான பரம்பிக்குளம், சோலையாறு அணைகள் நிரம்பி உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. ஆனால், பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் திருமூர்த்தி அணை வறண்டு கிடக்கிறது. இந்த அவலத்தை மாற்ற, நல்லாறு அணைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால், இரு மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாவது தவிர்க்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி, மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு செல்லும் தண்ணீரை தேக்கி, கிழக்கு நோக்கி திருப்பி, மின் உற்பத்தி மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தும் ... |
| மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு Posted: புதுடில்லி : குற்ற வழக்குகளில் சிக்கி, தண்டனை பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில அரசுகளுக்கு, மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. "குற்றப் பின்னணிகளை உடைய எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பதவியில் இருக்கும் போது, அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்டால், அவர்களின் பதவிகள் உடனடியாக பறிக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட், சில தினங்களுக்கு முன் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்ற வழக்குகளில் தண்டனை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 08,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |