Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முறையாக திட்டமிடாததால் காவிரியில் உபரி நீர் வீண்: ஏரி, கால்வாய்கள் தூர்வாராததால் விவசாயிகள் விரக்தி

Posted:

மழை வெள்ள காலங்களில் காவிரியை, உபரி நீர் கால்வாயாக பயன்படுத்தும், கர்நாடக மாநிலத்தை போல, கொள்ளிடம் ஆற்றை, தமிழகம் பயன்படுத்துவது தொடர்கிறது. நேற்று ஒரே நாளில், கிட்டத்தட்ட நான்கு டி.எம்.சி., தண்ணீர், கொள்ளிடம் வழியாக, கடலில் கலந்து வீணாகியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களின் பாசனத்திற்காக மட்டுமின்றி, பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்குகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்யும் தென் மேற்கு பருவமழையால், அங்குள்ள, நான்கு ...

காஷ்மீர் எல்லை பகுதியில் பாக்., ராணுவம் அட்டூழியம்: இந்திய வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொலை

Posted:

ஜம்மு: காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவத்தினர், லஷ்கர் பயங்கரவாதிகள் உதவியுடன், துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், கொõடூர தாக்குதல் நடத்தினர். இதில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இந்த அத்துமீறல் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து, தன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள்:

காஷ்மீரில், இந்தியா - பாக்., எல்லை பகுதியில், போர் நிறுத்த ...

"அரசியல் தந்திரத்துடன் இலங்கைக்கு தக்க பதிலடி': ஜெயலலிதா "மீண்டும்' கடிதம்!

Posted:

சென்னை: "இலங்கையின் நேசமற்ற செயல்களுக்கு, அரசியல் தந்திரத்துடன் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த அவரது கடிதம்:
இலங்கை சிறையில் வாடும், தமிழகத்தைச் சேர்ந்த, 70 மீனவர்கள் அனுபவிக்கும் துயரம் குறித்து, ஜூன், 17, ஜூலை, 8 மற்றும் இம்மாதம், 1, 2 ஆகிய தேதிகளில், கடிதம் எழுதியுள்ளேன். மீனவர்களை உடனடியாக விடுவித்து பாதுகாக்க, உயர் நிலை அதிகாரிகளுடன் நேரடியாக நீங்கள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தேன். இப்பிரச்னை குறித்து இலங்கை ...

பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த அமைச்சர்

Posted:

சென்னை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார்.
கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோருடன், நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமைச்சர் சென்றார். அங்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின், 8, 10 மற்றும் பிளஸ் 2 ...

சமாஜ்வாதி எம்.பி.,யை அடிக்க பாய்ந்த மணிசங்கர் அய்யர்: பெரும் கைகலப்பு தவிர்ப்பு

Posted:

""நீ ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட்,'' என, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வால் விமர்சனம் செய்ததால், ஆவேசம் அடைந்த, காங்கிரஸ் எம்.பி., மணிசங்கர் அய்யர், கைகளை முறுக்கியபடி, அவரை நோக்கி பாய்ந்தார். இதனால், ராஜ்யசபாவில், கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. சக எம்.பி.,க்கள் தலையிட்டு, விலக்கி விட்டதால், நிகழவிருந்த கைகலப்பு தவிர்க்கப்பட்டது.
கடும் அமளி:
ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாக்., ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் வெடித்தது. "இந்தப் பிரச்னை குறித்து, உடனே விவாதம் நடத்த ...

உணவு பாதுகாப்பு மசோதா: என் மீது குற்றம் சுமத்துவதா: கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை: "உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக, என் மீது குற்றம் சுமத்துவதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு, நான் ஆதரவு தெரிவித்து, தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக, முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். நான் எப்போது, எந்த தேதியில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்? ஜெயலலிதா, தன் அறிக்கையில், "தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை, மத்திய அரசு, லோக்சபாவில் ...

வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் காவிரி ஆற்றில் தர்ப்பணம்: காற்றில் பறந்த அரசு உத்தரவு

Posted:

வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால், காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் தடையை மீறி, சில வி.ஐ.பி.,க்கள் மட்டும் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்தது, பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்தது.
ஆடி அமாவாசை:
ஆடி அமாவாசை நாளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது நம்பிக்கை. ஆகையால், காவிரி நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று, ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை, வழக்கமாக கொண்டு உள்ளனர். குறிப்பாக, பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ...

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க சதி

Posted:

சென்னை: மேலப்பாளையத்தில், வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, ஐந்து பேரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது. கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கிச்சான் புகாரியை, மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வேலூர், இந்து முன்னணி அமைப்பாளர் வெள்ளையப்பன், சேலம் பா.ஜ., பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவங்களுக்கு பின், தமிழக உளவு பரிவுகள், உஷார் படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையதில், கிச்சான் புகாரியின் ஆதரவாளர்கள், வெடி குண்டு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ...

"அம்மா திட்டம்' முகாமில் வடை, பாயாசத்துடன் விருந்து

Posted:

சென்னையில் நடந்த, "அம்மா திட்டம்' முகாமில், மனு கொடுக்க வந்தோருக்கு, தலை வாழை இலை போட்டு, வடை, பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது. அதிகாரிகளும், பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் உணவை ருசித்தனர்.
பொதுமக்கள், பல்வேறு சான்றிதழ்கள், உதவித் தொகை கோரி, வி.ஏ.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகங்களுக்கு, அலைவதைத் தடுக்கவும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே அதிகாரிகள் குழு சென்று, மனுக்கள் பெற்று உதவும் வகையில், "அம்மா திட்டம்' அரசால் அறிவிக்கப்பட்டது. வாரம் தோறும் செவ்வாயன்று, வருவாய் வட்டத்திற்கு, ஒரு கிராமத்தில், முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™