Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இன்று ரயில் "டிக்கெட் புக்கிங்' ஆரம்பம்

Posted:

தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு ரயில்களில் செல்ல விரும்புவோர், இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்கு, அதிகமானோர் வருவர் என்பதால், கூட்டத்தை சமாளிக்க, ரயில்வே நிர்வாகம், சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது."நகர மயமாதல்' காரணமாக, கிராமங்களில் இருந்து, நகரங்களில் குடியேறுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், தென் மாவட் டங்கள் உட்பட, அனைத்து மாவட்டங்களிலும் இருந்து, ஏராளமானோர் வேலை வாய்ப்பிற்காக, சென்னையில் குடியேறி உள்ளனர். அதேபோல், கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, போன்ற நகர் ...

கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை: மத்திய அரசு தகவல்

Posted:

புதுடில்லி: "கச்சத்தீவோ அல்லது இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியோ, இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை; அதனால், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீண்டும் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது."இந்தியா மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், ராமேஸ்வரம் அருகேயுள்ள, கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தங்கள் செல்லாது' என, அறிவிக்க வேண்டும் என்று கோரி, 2008 டிசம்பரில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு ஒன்றை தாக்கல் ...

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை கைவிட முடியாது: பிரதமர் உறுதி

Posted:

""ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது, நிச்சயமாக அதிர்ச்சி தரக்கூடியதே. ஆனாலும், பொருளாதார சீர்திருத்தங்களை கைவிட முடியாது. சீர்திருத்த நடவடிக்கைகளில், எந்த விதமான மாற்றங்களும் செய்யாமலேயே நிலைமை சரி செய்யப்படும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது குறித்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பொருட்களின் மொத்த விலை, சந்தைகளில், குறைவாக உள்ளது. ஆனாலும், நுகர்வோர் ...

"40 லோக்சபா தொகுதிகளையும் நாமே வெல்வோம்': ஜெயலலிதா சூளுரை

Posted:

சென்னை: "லோக்சபா தேர்தலில், நாற்பதையும் நாமே வெல்வோம்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு, மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., போஸ் மகன் சிவசுப்ரமணியன், ஆகியோரின், திருமண விழா, நேற்று, சென்னையில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது: பல்வேறு கடமைகளுக்கும், பணிச் சுமைக்கும் நடுவில், உங்களை ஒரே இடத்தில் காண்பதில், மகிழ்ச்சி அடைகிறேன். சாதகம், பாதகம், இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும், துன்பங்களே வரக்கூடாது என நினைப்பது கோழைத் தனம். துன்பங்களை எதிர்கொண்டு, அவற்றை ...

தி.மு.க.,வில் கோஷ்டி இல்லை: சொல்கிறார் கருணாநிதி

Posted:

சென்னை: ""தி.மு.க.,வில் எந்தக் கோஷ்டியும் இல்லை,'' என, திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.வேலூர் மாவட்ட தி.மு.க., செயலர் காந்தியின் இல்ல திருமண விழா, கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: "தமிழகத்தில் கோஷ்டி இல்லாத மாவட்டம், வேலூர் மாவட்டம் தான்' என, துரைமுருகன் பேசினார். ஒருவேளை அவருடைய மாவட்டமும் அது என்பதால், அப்படிச் சொல்லிக் கொண்டாரோ என, எனக்கு தெரியவில்லை. அப்படியானால், வேலூர் மாவட்டத்தில் தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் எல்லாம் கோஷ்டி இருப்பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். எந்தக் ...

தேர்தல் அறிவிப்புக்குப்பின் கூட்டணி முடிவு: விஜயகாந்த்

Posted:

சென்னை: லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின், 12வது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர் வாசன் உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள மூப்பனாரின் நினைவிடத்திற்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு விஜயகாந்த் வந்தார். அவரை மத்திய அமைச்சர் வாசன், ஞானதேசிகன் ஆகியோர் மூப்பனாரின் ...

"தலையும் புரியலே... வாலும் புரியலே': தவிக்கும் ஐவர் குழு

Posted:

மதுரை: மதுரை மாநகராட்சி மரகத லிங்கம் மாயமான விவகாரத்தில், ஆய்வுக்காக நியமிக்கப்பட்ட "ஐவர் குழு", "தலையும் புரியாமல்... வாலும் புரியாமல்,' அறையில் முடங்கியுள்ளது.மதுரை குன்னத்தூர் சத்திரத்தை, நான்கு ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணிக்காக, மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். அதிலிருந்த மரகதலிங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மாநகராட்சி கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின், மரகதலிங்கம் குறித்து கேள்வி எழுந்த போது, கருவூலத்தில் மாயமானது தெரியவந்தது. ரூ.66 ஆயிரம் கோடி மதிப்புள்ள அச்சிலையை மீட்கும் நோக்கில், மதுரை ஐகோர்ட் கிளையில், ...

லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல்: ஜனாதிபதியிடம் பா.ஜ., வேண்டுகோள்

Posted:

புதுடில்லி: "தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசால் முடியவில்லை; அதனால், நாட்டில் நிலையற்ற தன்மை நிலவுவதை முடிவுக்கு கொண்டு வர, லோக்சபா தேர்தலை விரைவாக நடத்தும்படி, மத்திய அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், பா.ஜ., வலியுறுத்தியது.அத்வானி தலைமையில்: பா.ஜ., பார்லிமென்டரி கட்சித் தலைவர், எல்.கே.அத்வானி தலைமையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உட்பட பலர், நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தனர். ...

அடி தாங்க முடி­யாமல் காலில் விழுந்து கத­றினோம்: தமி­ழக மீன­வர்கள்

Posted:

சென்னை : கடற்­கொள்­ளை­யர்கள், எங்­களை பிணைக் கைதி­க­ளாக்கி சர­மா­ரி­யாக தாக்­கினர்; அடி தாங்க முடி­யாமல், அவர்கள் காலில் விழுந்து கும்­பிட்டோம்; மீட்க வந்­தோரும் கும்­பிட்டு விழுந்­தனர். பிணைத் தொகை செலுத்­திய பின்பு தான், எங்­களை விட்­டனர்' என, ஆந்­திர கடற்­கொள்­ளை­யர்­க­ளிடம் சிக்­கிய தமி­ழக மீன­வர்கள் கூறினர். கோவில் திரு­வி­ழாவை காரணம் காட்டி, ஆண்­டு­தோறும் ஆடி, ஆவணி மாதங்­களில், தமி­ழக மீன­வர்­களை, ஆந்­திர கடற்­கொள்­ளை­யர்கள் சிறை பிடிப்­பதும், பிணைத்­தொகை செலுத்தி மீட்­பதும் பல ஆண்­டு­க­ளாக தொடர்ந்து நடந்து வரு­கி­றது. ஓரிரு ஆண்­டுக­ளாக இந்த பிரச்னை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™