Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் உருக்கமான வேண்டுகோள்: பார்லிமென்ட் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தேவை

Posted:

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், நாளை துவங்குகிறது. முக்கிய மசோதாக்கள் பல நிறைவேற்ற வேண்டியுள்ளதால், பார்லிமென்டை சுமுகமாக நடத்த, அனைத்துக் கட்சிகளின் எம்.பி.,க்களும், தலைவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், நாளை கூடவுள்ளது. இதற்காக, டில்லியில் நேற்று, சபாநாயகர் மீரா குமார் தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. பொதுவாக, இது போன்ற கூட்டங்களில், அரசை எதிர்த்து, நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவது பற்றி, ...

தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறியிருக்கும்: கருணாநிதி

Posted:

சென்னை: "தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் பொருளாதார வல்லுனர் ஜீன் டி ரெஸ் ஆகியோர் எழுதியுள்ள, "நிலையில்லா புகழ்- இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்' என்ற நூல் பற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றின் வளர்ச்சி, தனி நாடுகளுக்கு இணையாக உள்ளது' என, அமர்த்தியா சென் குறிப்பிட்டு உள்ளார். அதேநேரத்தில், வளர்ந்த மாநிலங்கள் என்பதற்காக, நிதி ஒதுக்கீட்டை ...

நாடு முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு 12 சதவீதம் சேவை வரி விதிப்பு

Posted:

சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கூடுதல் வரியையும், மாணவர்களிடமே வசூலிக்க வேண்டியிருக்கும். பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், வரும், 7ம் தேதி, பெங்களூருவில் கூடுகின்றனர். ...

முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு ஓரிரு வாரத்தில் தீர்வு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

Posted:

ஈரோடு: ""ஓரிரு வாரத்தில் முல்லை பெரியாறு பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது,'' என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஈரோட்டில் பேசினார்.ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு, பாராட்டு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: நான் பங்கேற்கும் விழாக்களில், இளம் வக்கீல்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம். வக்கீல்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வழக்குகள் மீது அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களை வக்கீல்கள் கைவிட வேண்டும் என பலர் வலியுறுத்தியும், தொடர்ந்து புறக்கணிப்பு ...

கரை புரண்டு ஓடிய காவிரியில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

Posted:

காவிரியில் தண்ணீர் கரை புரண்டோடியதால், காவிரிக் கரையோர புதுமணத் தம்பதியர், ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக, நேற்று கொண்டாடினர்.
வாழ்வு செழிக்க:
தமிழகத்தில், ஆடிப்பெருக்கு விழா, ஆண்டுதோறும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, காவிரிக் கரையோர விவசாயிகள், பயிரையும், வாழ்வையும் செழிக்க வைக்கும் நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், புதுமணத் தம்பதியர், வாழ்வில் என்றும் இன்பமும், எல்லா வளமும் பொங்கும் வகையிலும், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுகின்றனர். கர்நாடகா அரசு, கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து, 2ம் தேதி, ...

எதற்கு இந்த வெற்றுப் போராட்டம்? உரத்த சிந்தனை, ஆர்.நடராஜன்

Posted:

நாகரிகம் என்பதைத் துறந்த பிறகு தான், சிலர் அரசியல்வாதிகளாகின்றனரா அல்லது மக்கள் பிரதிநிதிகளான பிறகு, அவர்கள் நாகரிகத்தைத் துறக்கின்றனரா என்ற கேள்வியை, நவீன வேதாளம், நவீன விக்கிரமாதித்தனிடம் எப்போது கேட்கும் என்று தெரியவில்லை. ஆனாலும், மக்களைப் பொறுத்தவரை, இது தலை வெடிக்கும் கேள்வியே.மக்கள் பிரதிநிதிகளின் கவுரவம், அகவுரவம் பற்றி நாம் கவலைப்படுவது போல், அவர்கள் கவலைப்படுவதில்லை என்பது, நம் ஜனநாயக அவலங்களில் ஒன்று. அவர்களுக்குக் காரியம் தான் முக்கியம்; வழிமுறைகள் அல்ல. எந்த வழியிலும் நினைத்ததை சாதிக்க வேண்டும். அதுவே அவர்களது குறி. இப்போது ...

உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted:

சென்னை: "உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும்; மத்திய அரசு கொண்டு வர உள்ள, உணவு பாதுகாப்பு மசோதாவில், திருத்தங்களை கொண்டு வர வேண்டும்' என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தன்னிச்சையாக, அவசர கதியில், "தேசிய உணவு பாதுகாப்பு அவசர சட்டம் - 2013' என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, உணவுப் பொருளை பற்றாக்குறை இல்லாமல் செய்வதாக, வாக்குறுதி அளித்துள்ளது.
ஏமாற்றம்:
ஆனால், சட்டத்தில் ஏராளமான ...

பா.ஜ.,வுடன் கூட்டணியா? மதில் மேல் நிற்கும் தி.மு.க.,

Posted:

காங்கிரசுடன், ஏழாம் பொருத்தமாகியுள்ள நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்தவும், தேசிய அளவில் மோடி அலை வீசுவதால், லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்து ஆலோசிக்கவும், இம்மாதம் 16ம் தேதி, அறிவாலயத்தில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் கூடுகிறது. இதில், மாவட்டச் செயலர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையிலும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவின் அடிப்படையிலும், கூட்டணி அமைக்க, கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் ...

காங்கிரசுடன் இணைகிறது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

Posted:

ஐதராபாத்: தெலுங்கானா ஆதரவாளர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற உள்ள நிலையில், அதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை, காங்கிரசுடன் இணைக்க, அந்தக் கட்சியின் தலைவர், சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, நாளை டில்லி செல்கிறார்.
தெலுங்கானா:
"ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா ஆதரவாளர்கள் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், தேர்தல் நேரங்களில் மட்டும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™