Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு

Posted:

தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் பதிவில், மாநிலங்கள் அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல், மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய, மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசின் கல்வித் துறை, 2007ம் ...

டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ரூ.68.8 : எல்லா பொருட்களும் விலை ஏறும் அபாயம்: மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் காரணம்?

Posted:

சென்னை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.கடந்த சில நாட்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வந்தாலும், நேற்று டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு, ரூ.68.8 என்று சரிந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி சுமை மேலும் அதிகரிக்கும் நிலை உட்பட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க, மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருந்த ...

த்கச்சத்தீவு பற்றி பேச கூடாது என்கிறது வெளியுறவுதுறை தடை

Posted:

கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ளது. "நட்பு நாடாக, இலங்கை இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்' என, வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கச்சத்தீவை மீட்பது குறித்து, பார்லிமென்டில் விவாதம் நடத்தப்படும் என, தமிழக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.தடைவிதிப்பு:இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் அருகே, கச்சத்தீவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ...

மியான்மர் அத்துமீறல்: மணிப்பூரில் ஊடுருவல்

Posted:

இம்பால் :இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரை ஒட்டி, பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தவும், முள்வேலியை அமைக்கவும், மியான்மர் நாட்டு படைகள் முயன்றுள்ளன. இவ்விஷயத்தில், மியான்மருக்கு எதிராக பிரச்னையை கிளப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்திய எல்லைக்குள், சமீபத்தில் சீனாவும், பாகிஸ்தானும் அத்துமீறி நுழைந்து பிரச்னை கொடுத்து வந்தன. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான, சின்ன நாடு மியான்மரும் இந்தியாவிடம் வாலாட்ட துவங்கியுள்ளது.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள சந்தல் மாவட்டத்தில், மியான்மர் படைகள் நுழைந்து, பாதுகாப்பு நிலைகளை அமைக்கவும், ...

முலாயம் சிங்கை சந்தித்தாரா துர்கா?

Posted:

லக்னோ:மணல் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி, துர்கா, சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகும் என, தெரிய வந்துள்ளது.உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. உதவி கலெக்டராக பணியாற்றிய, துர்கா, 28, என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மணல் மாபியாக்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. சஸ்பெண்ட் குறித்து, உ.பி., அரசிடம் ...

விழுந்து... உருண்டு... உடைந்து... நொறுங்கி...

Posted:

ஒரு நாட்டின் மதிப்பு, மரியாதை, எதில் அடங்கி இருக்கிறதோ இல்லையோ, அந்நாட்டின் கரன்சியில் நிச்சயம் கலந்து இருக்கிறது. கரன்சியின் மதிப்பு உயர்ந்தால், பொருளாதாரத்தில் அந்நாடு வலுவாக இருக்கிறது என அர்த்தம். கரன்சியின் மதிப்பு வீழ்ந்தால், அந்நாட்டின் பொருளாதாரம், அதல பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது என அர்த்தம்.ரூபாய் என அழைக்கப்படும் இந்திய கரன்சியின் மதிப்பு, சில மாதங்களாக டாலருக்கு எதிராக தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. இதற்கு பல காரணங்களை "சல்ஜாப்பு' சொன்னாலும், பொருளாதார மேதைகள் என கூறப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் தான் ...

பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுவிக்க முடியுமா? இழப்பீடு கோரும் வழக்குகளில் நாளை விசாரணை

Posted:

பொதுச் சொத்து சேதத்திற்கு, பா.ம.க.,விடம் இழப்பீடு கோரும், 142 வழக்குகளின் விசாரணை நாளை நடக்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுவிக்கக் கோரும் மனுவும், விசாரணைக்கு வருவதால், இதில் முடிவு எடுக்கப்படலாம் என, தெரிகிறது.பகுப்பாய்வு:பொதுச் சொத்து சேதத்துக்கான இழப்பீட்டை, பா.ம.க.,வினரிடம் வசூலிக்கும் வகையில், தமிழக அரசு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை, பதிவு செய்துள்ளது.துறை ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, வருவாய் ஆணையர் ஸ்ரீதர் முன்னிலையில், விசாரணை நடந்து வருகிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் மணி, வன்னிய சங்கத் தலைவர் காடுவெட்டி ...

என்ன ஆனது ஏழைகளுக்கான இலவச திருமண திட்டம்?

Posted:

சென்னை:இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஏழை ஜோடிகளுக்கு, அரசின் சார்பில், திருமணம் செய்து வைக்கும் திட்டம், இந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில், இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து, திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கும் என, தெரிகிறது.தமிழக அரசின், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு நோட்டீஸ், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38,444 கோவில்களில் ஒட்டப்படும். மேலும், உள்ளாட்சி அமைப்பிகளிலும் ஒட்டப்படும். திருமணம் ...

சிக்கன் அல்ல... காக்கா பிரியாணி: திருப்பூர் அருகே மக்கள் "திடுக்'

Posted:

திருப்பூர்:திருப்பூரில், சில ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள், டாஸ்மாக் "பார்' களில் காக்கை வறுவல், காக்கை பிரியாணி விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.திருப்பூர், 51வது வார்டுக்கு உட்பட்ட பெரிச்சிபாளையத்தில் இருந்து கோபால் நகர் செல்லும் வழியில், மழைநீர் வடிகால் செல்கிறது. கடந்த இரு நாட்களாக இங்கு வரும் மர்ம நபர்கள் சிலர், புதர்மறைவில் அமர்ந்து, எங்கிருந்தோ பிடித்த காக்கைகளை கொன்று, தோல் உரித்து, இறைச்சியை மட்டும் எடுத்துச்செல்கின் றனர். இதனால், தள்ளுவண்டி டிபன் கடைகள் மற்றும் சிறு சிறு ஓட்டல்களில், சிக்கன் இறைச்சிக்கு பதிலாக, காக்கையை ...

"சுடச்சுட' கருவேப்பிலை இட்லி, கருப்பட்டி பணியாரம்...: கோவை மாநகராட்சியில் விரைவில் மூலிகை உணவகம்!

Posted:

சென்னையை போன்று, கோவை மாநகராட்சியிலும் மூலிகை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 1981ல் மூலிகை உணவகம் துவங்கப்பட்டு, மூலிகை தாவரங்கள், தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படுகின்றன.கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலும், அதேபோன்று, மூலிகை உணவகம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர் பணியாற்றுகின்றனர். கவுன்சிலர்கள், மண்டல பணியாளர்கள், பொதுமக்கள் என, தினமும் 500 பேர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பிரதான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™