Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆட்டோ அடாவடி புகார் தீரும் வகையில் "கடிவாளம்': சென்னையில் 71 ஆயிரம் வாகனங்களுக்கு புது மீட்டர்: தமிழகம் முழுவதும் கட்டணம் அமலாக நடவடிக்கை

Posted:

சென்னை:தமிழகத்தில், ஆட்டோ பயணத்திற்கான கட்டணம் வரைமுறை இல்லாமல் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, புதிய கட்டணத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, சென்னையில் நேற்று முதல், அமலுக்கு வந்தது.மாநிலத்தில், 2.14 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னையில் மட்டும் 71 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன.இவற்றின் ஓட்டுனர்கள், மீட்டர் படி கட்டணம் வசூலிக்காமல், தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயம் செய்து, அதை அடாவடியாக வசூல் செய்வதாக பரவலான புகார்கள் எழுந்தன.கடைசியாக, 2006ம் ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால், ...

நக்சல் பாதிப்பு பகுதிகளில் துணை ராணுவத்தினர் புது அவதாரம்

Posted:

புதுடில்லி:நக்சல் வேட்டையில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர், துப்பாக்கி, வெடிகுண்டுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, மருந்து, ஆடைகள், டிரான்சிஸ்டர் ரேடியோ போன்றவற்றுடன், நக்சல் பாதிப்பு பகுதிகளில் உள்ள கிராம மக்களை சந்திக்க உள்ளனர்.9 மாநிலங்களில்:நாட்டின் பல மாநிலங்களில், நக்சல் பாதிப்பு இருந்தபோதிலும், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய, ஒன்பது மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது.இந்த பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில், துணை ராணுவப் படைகளான, ...

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற அரசு மும்முரம்

Posted:

புதுடில்லி:உணவு பாதுகாப்பு மசோதா உட்பட, சில முக்கிய மசோதாக்கள், பார்லிமென்டில் இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுவதால், தங்கள் கட்சி எம்.பி.,க்கள்அனைவரும், கட்டாயம் சபையில் ஆஜராகவேண்டும் என, காங்., கட்சி, கொறடாஉத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டு மக்களில், 60 சதவீதம் பேருக்கு, மலிவு விலையில் உணவு தானியங்கள் கிடைப்பதற்காக, உணவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், சோனியாவின் கனவுத் திட்டமான, உணவு பாதுகாப்பு திட்டம் நிறைவேறி விடும். அதனால், பார்லிமென்டின் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில், இந்த மசோதாவை ...

அயோத்தியில் தடையை மீறி யாத்திரை செல்ல முற்பட்ட பரிஷத் தலைவர்கள், தொண்டர்கள் கைது

Posted:

லக்னோ:அயோத்தியில், தடையை மீறி, யாத்திரை செல்ல முயன்ற, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பான, வி.எச்.பி., தலைவர்கள், பிரவீண் தொகாடியா, அசோக் சிங்கால் ஆகியோர், உ.பி., போலீசாரால், நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களுடன், 1,000க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால், உ.பி.,யில் பதற்றம் நிலவுகிறது; பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.உ.பி., மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, "கோசி பரிக்கிரமா' என்ற பெயரில், ஆறுமாவட்டங்களில் யாத்திரை நடத்த, வி.எச்.பி., அமைப்பு, திட்டமிட்டிருந்தது.இந்த யாத்திரை, நேற்று ...

தி.மு.க., ஆதரிக்குமா? எதிர்க்குமா? முதல்வர் கேள்வி

Posted:

சென்னை:"தமிழக மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ள, தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை, தி.மு.க., ஆதரிக்குமா? அல்லது எதிர்க்குமா? என்பதை, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெளிவுப்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: தேசிய உணவு பாதுகாப்பு மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன், கருணாநிதி விடை அளிக்க வேண்டும் என, சில கேள்விகளை முன் கேட்டிருந்தேன்.என் கேள்விகளுக்கு பதில் அளித்த கருணாநிதி, "தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்து தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களை, தாங்கி வெளிவருமானால், அப்போது அதை தி.மு.க., ...

இந்திரா பாணியில் நடவடிக்கை: வலியுறுத்துகிறார் கருணாநிதி

Posted:

சென்னை:"தமிழக மீனவர்கள் பிரச்னையில், இந்திரா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும்; தமிழக மீனவர்களும் காப்பாற்றப்படுவர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பார்லிமென்ட்டில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான்குர்ஷித் பேசுகையில், "மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு, இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இணைந்து பேச வேண்டும். தமிழக மீனவர்கள் குழு, தமிழக அரசின் ...

லோக்சபா தேர்தலில் காங்., பக்கம் சாய்கிறது தே.மு.தி.க., : விஜயகாந்த் பிறந்த நாளில் திருப்பம்

Posted:

லோக்சபா தேர்தலில், காங்., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவது, நேற்று நடந்த விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. காங்., துணைத் தலைவர் ராகுல் அனுப்பிய வாழ்த்து, அரசியல் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே முதல் முறையாக கூட்டணி மலர்ந்தது. இக்கூட்டணி, அதே ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் உடைந்தது. இதையடுத்து, ஆளும் கட்சிக்கு எதிராக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது, அரசு தரப்பில் பல மாவட்ட கோர்ட்களில் அவதூறு வழக்குகள் ...

"மாஜி' அமைச்சர்கள் விடுவிப்பை எதிர்த்து அப்பீல்?

Posted:

தி.மு.க., "மாஜி' அமைச்சர்கள், சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், "அப்பீல்' செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறை மும்முரமாக உள்ளது. அரசின் ஒப்புதலுக்காக, லஞ்ச ஒழிப்புத் துறை காத்திருக்கிறது.கடந்த, 1996 2001ல், தி.மு.க., ஆட்சியின் போது, அமைச்சர்களாக கோ.சி.மணி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி வகித்தனர். 2001ல், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், இவர்களுக்கு எதிராக, சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்தந்த மாஜிஸ்திரேட் கோர்ட்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இருந்து ...

கடலோர மாவட்டங்களுக்கு அபாயம் : உளவுத்துறை எச்சரிக்கையால் உஷார்

Posted:

சென்னை:தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக, மத்திய உளவுத்துறை, மீண்டும் எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, கடலோர பகுதிகள் அனைத்தும், உஷார் படுத்தப்பட்டுள்ளன.மும்பையில், கடல் மார்க்கமாக வந்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை, உளவுத்துறை எச்சரிக்கும் போதும், தேவையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சமீபத்தில், இலங்கை வழியாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™