Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் இன்று தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 14 லட்சம்: 5,500 அரசு வேலைக்கு இதுவரை இல்லாத போட்டி

Posted:

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, இன்று, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 14 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வு என்பதால், டி.என்.பி.எஸ்.சி., விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.இளநிலை உதவியாளர், 3,531 பேர்; வரி தண்டலர், 19; தட்டச்சர், 1,738; சுருக்கெழுத்து தட்டச்சர், 242; நில அளவர், 6; வரைவாளர், 30 என, 5,566 காலிப் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், இன்று காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கிறது.14 லட்சம் பேர்: இதற்காக, 244 ...

45 நாளில் 465 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பு: திருப்பூர் மாவட்டத்தில் மாசடைந்த தண்ணீர் காரணமா?

Posted:

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், 465 குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளாக பிறந்துள்ளதாக, சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூரில் நிலத்தடி நீர், மாசுப்பட்டுள்ளதுதான் காரணமா என, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களில் பலரும், தாய்மைப்பேறு குறித்த விழிப்புணர்வு சிறிதும் இன்றி அலட்சியமாக உள்ளனர். இதனால், பேறுகால பிரச்னைகள் அதிகளவில் ஏற்படுகின்றன. உடல் உறுப்பு இயக்க குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளாக குழந்தைகள் பிறக்கின்றன. ...

லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி அமைக்க முடியாமல் தி.மு.க., திணறல்

Posted:

லோக்சபா தேர்தலில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்க முடியாத நிலையில், தி.மு.க.,வுக்கு, "இடியாப்ப சிக்கல்' ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து அ.தி.மு.க., எடுக்கும் முடிவுக்கு பின், கூட்டணியை உருவாக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில், அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. கூட்டணி யாருடன் என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு ...

கூட்டணி குறித்து முடிவு செய்ய மீண்டும் மாநாடு: விஜயகாந்த் அறிவிப்பு

Posted:

சென்னை: ""கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், சேலத்தில் மாநாடு நடத்தி, கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டேன். அதேபோல, விரைவில் ஒரு மாநாடு நடத்த முடிவு செய்திருக்கிறேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., அலுவலகத்தில், நேற்று, 61 மாற்றுத் திறனாளிகளுக்கு, மோட்டார் சைக்கிள்கள் வழங்கி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: நான் பேசுவதற்கு முன் சிரித்து விட்டேன். இதை பார்த்தால், நான் குடித்து விட்டு பேசுவதாக பத்திரிகைகளில் செய்தி, வெளியிடுவர். அதைப் பற்றி நான் ...

ஜிகினா போராளிகள் - திருந்துவரா நம் மக்கள்? உரத்த சிந்தனை, எல்.முருகராஜ்

Posted:

ஒரு வழியாக, "தலைவா' படம் தியேட்டருக்கும் வந்துவிட்டது. இனிமேல் கடலில் கலந்து வீணாய் போன, 6 டி.எம்.சி., தண்ணீர் திரும்ப கிடைத்து விடும், எல்லை மீறி வந்து பாக்., படையினர் தொல்லை கொடுக்க மாட்டார்கள், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் நல்ல தீர்ப்பு கிடைத்து விடும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்...அடப்போங்கய்யா... ஏற்கனவே, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் பார்த்தாகி விட்ட படத்திற்கு, தமிழகத்தில் கிடைக்கப் போவது லாபப் பணமே. அதிலும், ஏதாவது வரிவிலக்கு கிடைக்குமா என்று பார்த்தனர்... அதற்கு வழியில்லை, அந்த வகையில், 3 கோடி ரூபாய் ...

பிரதமரும், ரூபாய் மதிப்பும் ஊமையாகி விட்டன: முதல்வர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்

Posted:

ராஜ்கோட்: ""பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்திய ரூபாய் மதிப்பும், ஊமையாகி விட்டன,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.குஜராத் மாநிலத்தில், புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான, அறிவிப்பு, கடந்த, 15ம் தேதி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, ராஜ்கோட்டில் நடந்த பாராட்டு விழாவில், முதல்வர் மோடி பேசியதாவது: ஒரு காலகட்டத்தில், இந்திய ரூபாயின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், இந்திய ரூபாய் மதிப்பு, தற்போது, தன் குரலை இழந்து, அமைதியாகி விட்டது. அதேபோல் தான், பிரதமர் மன்மோகன் சிங்கின் குரலையும், நம்மால் கேட்க முடிவதில்லை. ...

லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் வராது: காங்., தலைவர் சோனியா உறுதி

Posted:

புதுடில்லி: ""ஐந்தாண்டு காலம் முழுவதும் ஆட்சியில் இருப்பது தான், எங்கள் இலக்கு. எனவே, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை,'' என, காங்., தலைவர் சோனியா, உறுதிபட கூறினார்.தலைநகர் டில்லியில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், 60 கோடி ரூபாய் செலவில், தேசிய ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை மற்றும் பார்லிமென்ட் அருகில் அமைந்துள்ள இந்த ஊடக மையம், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.ஊடக மையம் திறப்பு: இதில், நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து வகையான தகவல் தொடர்பு ...

செப்., 15 முதல் "அம்மா மினரல் வாட்டர்': திட்டப்பணிகள் விறுவிறுப்பு

Posted:

சென்னை: பேருந்துகளில், குறைந்த விலையில், பாதுகாப்பான குடிநீர் வழங்கும், "அம்மா மினரல் வாட்டர்' திட்டப் பணிகளை,விரைவுப்படுத்தி உள்ளனர்.பேருந்துகளில் பயணம் செய்வோர், முக்கிய பேருந்து நிலையங்களில், கூடுதல் விலைக்கு விற்கப்படும் குடிநீரை, வேறு வழியின்றி வாங்க வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். "தமிழகத்தில், நீண்ட தூரம் இயக்கப்படும் பேருந்துகள், மற்றும் பேருந்து நிலையங்களில், ஒரு லிட்டர் குடிநீர், 10 ரூபாய்க்கு விற்பனை செய்ய, "அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையம் துவக்கப்படும் ' என, கடந்த, ஜூன் மாதம் முதல்வர் அறிவித்தார். அரசு போக்குவரத்துக் ...

வி.எச்.பி., யாத்திரை: அயோத்தியை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பதட்டம்

Posted:

அயோத்தி: அயோத்தியிலிருந்து, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பான, வி.எச்.பி., இன்று மேற்கொள்ள உள்ள, "கோசி பரிக்கிரமா யாத்திரை' யில், 50 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுவதால், இரட்டை நகரங்களான, அயோத்தி மற்றும் பைசாபாத்தில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அயோத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பதற்றம் நிலவுகிறது.ராமர் கோவில்: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, அந்நகரிலிருந்து, ஆறு மாவட்டங்கள் வழியாக, "கோசி பரிக்கிரமா யாத்திரை'யை, இன்று முதல், அடுத்த மாதம், 13ம் ...

ஜெகன்மோகன் இன்று முதல் உண்ணாவிரதம் : தெலு‌ங்கானாவிற்கு எதிர்ப்பு

Posted:

ஐதராபாத்: புதிதாக அமைய உள்ள தெலுங்கானா மாநிலத்தி்ற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ‌ஜெகன்மோகன்‌ரெட்டி இன்று முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார்.தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு : தெலுங்கானா மாநிலம்‌ அமைவதற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அளவிற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சஞ்சல்குடா சிறையில் ஓராண்டிற்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி இன்று முதல் உண்ணாவிரதம் மேற்‌கொள்ள உள்ளார். இத்தகவலை ஒய். எஸ். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™