Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கிடுகிடு உயர்வால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் அதிகரிப்பு: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

Posted:

சென்னை:தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில், நேற்று ஒரே நாளில், மூன்று பேரிடம் இருந்து, 12 கிலோ தங்கக் கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு, 4 கோடி ரூபாய்.சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு உள்ளிட்ட பல காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலையும், நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை, ...

மும்பையில் பெண் போட்டோகிராபரை சீரழித்தது கும்பல்: ஒருவன் சிக்கினான்

Posted:

மும்பை:மும்பையில், பெண் போட்டோகிராபரை, பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த, ஒருவனை, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பிடிப்பதற்கு, போர்க்கால அடிப்படையில், தேடுதல் வேட்டையை, முடுக்கி விட்டுள்ளனர்.டில்லியில், கடந்தாண்டு, மருத்துவ மாணவி, வெறிக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின், சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டையே உலுக்கிய, இந்த சம்பவத்தை எதிர்த்து, டில்லியில் பெரும் போராட்டங்கள் வெடித்தன.மும்பையில் ...

ஈடுபாட்டுடனும், துணிச்சலுடனும் செயல்பட்டு குற்றங்களைக் குறையுங்கள்: முதல்வர் ஜெ., அறிவுரை

Posted:

சென்னை:""காவலர்கள், தங்கள் பணிகளில், ஈடுபாட்டினையும், துணிச்சலையும் செலுத்தினால், குற்றங்கள் மேலும் குறைக்கப்படும்; சட்டம் ஒழுங்கு, இன்னும் சிறப்போடு நிலை நாட்டப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.காவல், தீயணைப்பு மற்றும் ஊர் காவல் படையில், சிறப்பாகப் பணிபுரிந்த, 549 பேருக்கு, பதக்கம் வழங்கும் விழா, சென்னை, ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில், நேற்று மாலை நடந்தது. விழாவில், பதக்கங்கள் வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:தேர்வு : காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில், இதுவரை, 12,162 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 14,611 ...

"தினமலர்' நாளிதழ் ஏன் இப்படி? கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை:"முதல்வர் உரை நிகழ்த்திய போது, அமைச்சர்கள் எல்லாம் தூங்கி வழிந்து கொண்டிருந்த புகைப்படத்தை, முதல் பக்கத்தில் வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ, "தினமலர்' நாளிதழுக்கு, இரண்டு பக்க அரசு விளம்பரங்கள் தரப்படவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.கருணாநிதி வழக்கமாக வெளியிடும், கேள்வி - பதில் அறிக்கை:சென்னை பல்கலைக் கழகத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பட்டமளிப்பு விழா உரையின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம், "தினமலர்' நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்ததைப் பார்த்தீர்களா?பார்த்தேன்; அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத் ...

"நான் ஒரு முழு நேர அரசியல்வாதி':திருப்பதியில் விஜயகாந்த் பேட்டி

Posted:

திருப்பதி : தன் பிறந்த நாளையொட்டி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "நான் ஒரு முழு நேர அரசியல்வாதி' என, கூறியுள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷுடன், ஏழுமலையானை தரிசிக்க, நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தார்.நேற்று அதிகாலை, அபிஷேக நேரத்தில், ஏழுமலையானை தரிசித்தார். பின், அவர் அளித்த பேட்டி: பிறந்த நாளன்று, ஏழுமலையானை தரிசித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆந்திரப் பிரிவினை குறித்து, இதுவரை இறுதி முடிவு வெளியிடப்படவில்லை; போராட்டம் முடிந்து, பிரிவினை முடிந்த பின், ...

செப்டம்பரில் செயல்படுமா வல்லூர் அனல்மின் நிலைய 2வது அலகு?

Posted:

வரும் செப்டம்பர் மாதத்திற்குள், வல்லூர் அனல் மின் நிலையத்தின், இரண்டாவது அலகு செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், தமிழகத்திற்கு கூடுதலாக, 200 - 250 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்.அதேசமயம், அனல் மின் நிலையத்தின், மூன்று அலகுகள், முழு வடிவம் பெறாமல் இருப்பதால், மின் வாரிய அதிகாரிகள், என்.டி.பி.சி., நிறுவனத்தின் மீது, அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், மின் உற்பத்தியை காட்டிலும், தேவை அதிகமாக உள்ளது. இதனால், புதிய மின் நிலையங்கள் அமைத்து, மின் உற்பத்தியை அதிகரிக்கும் முனைப்பில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டு வருகிறது.ரூ.9,000 ...

டி.என்.பி.எஸ்.சி., "திக்..திக்...'

Posted:

ஏற்கனவே, குரூப் - 2 தேர்வில், கேள்வித்தாள், "லீக்' ஆன விவகாரம், சமீபத்தில், தர்மபுரியில், டி.இ.டி., தேர்வில் எழுந்த சர்ச்சை ஆகியவற்றால், டி.என்.பி.எஸ்.சி., "திக்..திக்...' நிலையில் உள்ளது. நாளை நடக்கும் குரூப் - 4 தேர்வில், எவ்வித பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, உறுப்பினர்களை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது.தேர்வாணைய தலைவராக நடராஜ் இருந்தபோது, அவரின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, குரூப் - 2 தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்' ஆனது. அதிர்ச்சி அடைந்த நடராஜ், அந்த தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வை ...

உடலில் தானாக தீப்பற்றும் நோய் இல்லை; சிகிச்சை முடிந்து குழந்தை "டிஸ்சார்ஜ்'

Posted:

சென்னை:""குழந்தைக்கு தானாக தீப்பற்றும் நோய் பாதிப்பு இல்லை. குழந்தையை தவறாக பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து, காவல் துறையும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 16 நாள் சிகிச்சைக்குப்பின் குழந்தை நேற்று, "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டது.திண்டிவனம், டி.பரங்கினியைச் சேர்ந்தவர் கர்ணன்; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு, நர்மதா என்ற மூன்று வயது பெண் குழந்தையும், ராகுல் என்ற மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளன. இதில், குழந்தை ராகுல் உடலில், ...

வீழ்ச்சி இல்லாத தொழில் வளர்ச்சி: கோவைக்கு வருமா மறுமலர்ச்சி

Posted:

கோவை:தொழில் வளம் கொண்ட கோவை மாவட்டத்தில் மறுமலர்ச்சியாக புதிய குறுந்தொழிற்பேட்டைகள் அமைத்து தந்தால், தொழில் வளம் மட்டுமின்றி, மக்கள் வளத்துடன், நகரமும் வளர்ச்சி பெறும் என பல்வேறு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.கோவையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், மோட்டார் பம்ப்செட், வெட் கிரைண்டர், ராணுவ தளவாடங்கள், ரயில்வேதுறை உள்ளிட்ட பல்துறைகளுக்கு தேவையான அனைத்து வகையான உதிரிபாகங்களும் உற்பத்தி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™