Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தேமுதிகவிலிருந்து ஆஸ்டின் விலகல்
- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ
- உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வெளிமாநிலத்தவரை நியமிக்கக் கூடாது
- இலங்கையில் நவநீதம் பிள்ளை நேரில் ஆய்வு: ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க கருணாநிதி வலியுறுத்தல்
- கூடங்குளத்தில் அக்டோபரில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி
- இலங்கைத் தமிழரை நாடு கடத்தும் விவகாரம்: தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு
- காவல் பணி சவால்கள் நிறைந்தது: முதல்வர் ஜெயலலிதா
- எல்லாமே காணம் சார்!
- இன்றும் மக்களவை செயல்படும்
- போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டை: மாவோயிஸ்ட் தலைவர் சாவு
- ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம்
- உத்தரகண்டில் மழை குறைந்தது
- தெலங்கானாவை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம்
- விஸ்வ ஹிந்து பரிஷத் யாத்திரை: 70 பேரை கைது செய்ய உத்தரவு
- புதிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் காவல் துறை
- எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி
- நிலக்கரிச் சுரங்க விவகாரம்: 7 கோப்புகளை தேடி வருகிறோம்
- மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை
- காமாக்யா கோயிலில் மம்தா வழிபாடு
- சோலார் மோசடி: எதிர்க்கட்சிகள் மீது கேரள முதல்வர் பாய்ச்சல்
- உயிரி மருத்துவக் கழிவு அகற்றுவதை ஆராயக் குழு
- தில்−யில் 19-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்
- பாரபுல்லா மேம்பாலச் சாலை திட்டத்துக்கு ஒப்புதல்
- சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நிகழாண்டில் 4,000 இறப்புகள்
- மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்தாரம்: மீண்டும் விசாரணை வேண்டும்
- ஆட்டோக்களுக்கு புதிய வண்ணக் கோடுகள்
- துன்டாவுக்கு நெஞ்சுவலி:மருத்துவமனையில் அனுமதி
- "முதியவர்களும் உறுப்பு தானம் செய்யலாம்'
- கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப நடவடிக்கை
- தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் ஆராய்ச்சி மையம் நாளை தொடக்கம்
- தில்லி பிரதேச காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு
- ரமேஷ் பார்க், சமஸ்பூர் பகுதிகளில் விரைவில் நடைமேம்பாலங்கள்
- "இலங்கை மாகாணத் தேர்தலில் ராணுவம் தலையிடவில்லை'
- அரசியலமைப்புச் சட்ட திருத்தத்துக்கு ராம் விலாஸ் பஸ்வான் வலியுறுத்தல்
- பாகிஸ்தான் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி அதிக இடங்களில் வெற்றி
- உண்மையை மறைக்கிறார் டினா அம்பானி: நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு
- "குற்றம்சாட்டப்பட்டவர்கள் பேருந்தில் இருந்துள்ளனர்
- தெலங்கானா: அதிருப்தி எம்.பி.க்கள் அமளி
- ரசாயன ஆயுதத் தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்: பான் கி-மூன்
- ரூ.1.50 லட்சம் லஞ்சம்:வணிகவரித்துறை அதிகாரி கைது
- ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா
- உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- இந்தியா, பாகிஸ்தான் உறவு மேம்பட பேச்சுவார்த்தை தொடங்குவதே வழி
- பள்ளி மாணவர்களுக்கானகாந்திய சிந்தனைகள் போட்டி
- ரூ. 1 கோடி நிலம் அபகரிப்பு: திமுக பிரமுகர் கைது
- சுகாதார மைய ஊழியர்கள் மீது தாக்குதல்: 4 பேர் கைது
- கோஷ்டி பூசலால் காங்கிரஸ் வளர்ச்சிக்குத் தடை மேலிடப் பார்வையாளரிடம் கட்சியினர் புகார்
- ஒபாமா உரையின்போது பிராட்லிக்கு இளம்பெண் ஆதரவு கோஷம்
- ரூ. 2 ஆயிரம் பெற்று வழங்கப்பட்ட விலையில்லா ஆடு சாவு
- சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்
- காட்டுப்பகுதியில் இளைஞர் பிணம்
- அகதிகளாக 10 லட்சம் குழந்தைகள்
- லாரி மோதி மாணவர் சாவு
- ஆகஸ்ட் 24 மின் தடை
- சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வுப் போட்டி
- சி.எஸ்.ஆர். திட்டங்களில் ஈடுபடும் மக்கள் தொடர்பு நிறுவனம்
- ரூ.30 லட்சம் மோசடி
- லஞ்சம் : உதவி ஆட்சியரின் உதவியாளர் கைது
- மேலும் 21 பேர் மருத்துவமனையில் அனுமதி
- ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு உரிமம்: ரிலையன்ஸ் ஜியோ விண்ணப்பம்
- சாலை வசதி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- 28-ல் காரைக்கால் கோதண்டராமர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
- காரைக்காலிலிருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மீன் கழிவுகள்
- சமுதாய நலப்பணி திட்ட நாள் விழா
- ஜீவா, வெ.நாரா பிறந்தநாள் விழா
- "காமன்வெல்த் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கக் கூடாது
- மோகன்ஸ் நீரிழிவு மருத்துவ மையம் தொடக்கம்
- பா.ம.க. செயலர் வெட்டிக் கொலை
- மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 15 நாள் சிறை
- தேர்வாணைய சார்புச் செயலர் ஆலோசனை
- கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உறுதி
- உளுந்தூர்பேட்டையில் இன்று வழங்குகிறார் அமைச்சர்
- பங்குச் சந்தையில் 206 புள்ளிகள் உயர்வு
- வீட்டில் தீ விபத்து:சிலிண்டர் வெடித்தது
- பயிர் காப்பீடு மறுப்பு: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
- காவிரியில் அணை கட்டப்படுவதை தடுக்கக் கோரிக்கை
- சிதம்பரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி
- ரூபாய் மதிப்பில் ஏற்றம்
- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது
- பெரியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்
- போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டம்
- சேவைக் குறைபாடு:ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.1,000 அபராதம்
- விளையாட்டுப் போட்டி: 54 பள்ளிகள் பங்கேற்பு
- செம்மை கரும்பு சாகுபடி மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம்'
- தனி தெலங்கானாவால் சென்னை குடிநீருக்கு பாதிப்பில்லை
- அரசுப் பணியாளர் தேர்வில் விதிமுறைகளை பின்பற்ற ஆட்சியர் வேண்டுகோள்
- விழிப்புணர்வு பேரணி
- வகுப்பறையில் பாம்பு:மாணவர்கள் ஓட்டம்
- 58 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
- நல்ல தண்ணீர் குளம் சீரமைக்கப்படுமா?
- புழல் சிறைக் கைதிகளிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல்
- அனுமதியின்றி செம்மண் எடுத்த 2 டிராக்டர்கள், ஜேசிபி பறிமுதல்
- மாநில ஹாக்கி: சென்னை லயோலா கல்லூரி சாம்பியன்
- கள்ளக்குறிச்சி புதிய வழித் திட்டம் செயல்படுத்தப்படுமா?
- வளர்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநர் ஆய்வு
- அரசுப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவு
- தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை
- குரூப் 4 தேர்வு மையம்:வட்டாட்சியர் ஆய்வு
- கரும்பு வெட்டுக் குழுவினருக்கு மருத்துவ முதலுதவி விழிப்புணர்வு
| தேமுதிகவிலிருந்து ஆஸ்டின் விலகல் Posted: 23 Aug 2013 01:25 PM PDT தேமுதிகவிலிருந்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆஸ்டின் விலகியுள்ளார். |
| எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ Posted: 23 Aug 2013 01:24 PM PDT ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஊழியர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 35 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வெளிமாநிலத்தவரை நியமிக்கக் கூடாது Posted: 23 Aug 2013 01:22 PM PDT சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக வெளி மாநிலத்தவரை நியமிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| இலங்கையில் நவநீதம் பிள்ளை நேரில் ஆய்வு: ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க கருணாநிதி வலியுறுத்தல் Posted: 23 Aug 2013 01:22 PM PDT இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம் பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| கூடங்குளத்தில் அக்டோபரில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி Posted: 23 Aug 2013 01:21 PM PDT கூடங்குளம் அணு உலை மூலம் அக்டோபர் இறுதியில் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் வே. நாராயணசாமி தெரிவித்தார். |
| இலங்கைத் தமிழரை நாடு கடத்தும் விவகாரம்: தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு Posted: 23 Aug 2013 01:20 PM PDT இலங்கைத் தமிழரை நாடு கடத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே (இந்தியாவில் தங்க அனுமதிக்கும் நிலை) தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| காவல் பணி சவால்கள் நிறைந்தது: முதல்வர் ஜெயலலிதா Posted: 23 Aug 2013 01:19 PM PDT காவல் துறை பணியில் போலீஸாருக்கு சவால்கள் அதிகமாக உள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| Posted: 23 Aug 2013 01:16 PM PDT எல்லாமே காணம் சார்! |
| Posted: 23 Aug 2013 01:06 PM PDT மக்களவை சனிக்கிழமை செயல்படும் என்று அதன் தலைவர் மீரா குமார் அறிவித்துள்ளார். இதற்கு அவையின் உறுப்பினர்கள் பலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். |
| போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டை: மாவோயிஸ்ட் தலைவர் சாவு Posted: 23 Aug 2013 01:02 PM PDT நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த மாதவ் என்கிற கோல்லா ராமுலு என்ற மாவோயிஸ்ட் தலைவர், ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
| ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் Posted: 23 Aug 2013 01:01 PM PDT ரயில்வே துறையில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் கோட்ல ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார். |
| Posted: 23 Aug 2013 12:55 PM PDT வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்டில் மழை பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை மட்டும் ஆங்காங்கே காணப்பட்டது. |
| தெலங்கானாவை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் Posted: 23 Aug 2013 12:54 PM PDT தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். |
| விஸ்வ ஹிந்து பரிஷத் யாத்திரை: 70 பேரை கைது செய்ய உத்தரவு Posted: 23 Aug 2013 12:53 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) யாத்திரையை முன்னிட்டு, அந்த அமைப்பின் தலைவர்கள் 70 பேரை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
| புதிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் காவல் துறை Posted: 23 Aug 2013 12:47 PM PDT இலங்கையில் காவல்துறையைக் கட்டுப்படுத்துவதற்காக சட்டம்- ஒழுங்கு அமைச்சகத்தை அந்நாட்டு அரசு புதிதாக உருவாக்கியுள்ளது. |
| எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி Posted: 23 Aug 2013 12:46 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை இரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர். |
| நிலக்கரிச் சுரங்க விவகாரம்: 7 கோப்புகளை தேடி வருகிறோம் Posted: 23 Aug 2013 12:45 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக 7 கோப்புகள், 173 விண்ணப்பங்கள் மற்றும் 9 ஆவணங்களை காணவில்லை என்றும், அவற்றை தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாநிலங்களவையில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். |
| மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை Posted: 23 Aug 2013 12:42 PM PDT சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு வழங்கும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது. |
| காமாக்யா கோயிலில் மம்தா வழிபாடு Posted: 23 Aug 2013 12:40 PM PDT மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நீலாச்சல் மலைப்பகுதியிலுள்ள சக்தி ஸ்தலமான காமாக்யா கோயிலில் வழிபட்டார். |
| சோலார் மோசடி: எதிர்க்கட்சிகள் மீது கேரள முதல்வர் பாய்ச்சல் Posted: 23 Aug 2013 12:38 PM PDT சோலார் பேனல் மோசடி தொடர்பாக மாநில அரசுடன் பேச்சு நடத்த எதிர்க்கட்சியினர் தயாராக இல்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி குற்றம்சாட்டினார். |
| உயிரி மருத்துவக் கழிவு அகற்றுவதை ஆராயக் குழு Posted: 23 Aug 2013 12:33 PM PDT ""எய்ம்ஸ் மருத்துவமனை, ராம் மனோஹர் லோகியா (ஆர்எம்எல்) மருத்துவமனை உள்பட ஒன்பது அரசு மருத்துவமனைகளில் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| தில்−யில் 19-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம் Posted: 23 Aug 2013 12:33 PM PDT 19-ஆவது தில்லி புத்தகக் கண்காட்சி' பிரகதி மைதானில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இம்மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை |
| பாரபுல்லா மேம்பாலச் சாலை திட்டத்துக்கு ஒப்புதல் Posted: 23 Aug 2013 12:32 PM PDT தில்லியில் ஐ.என்.ஏ. முதல் மயூர்விஹார் வரையிலான பாரபுல்லா மேம்பாலச் சாலைத் திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார். |
| சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நிகழாண்டில் 4,000 இறப்புகள் Posted: 23 Aug 2013 12:31 PM PDT நிகழாண்டில் ஜூன் மாதம் வரை தில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் 4,135 பேர் இறந்துள்ளனர் என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை அரசு தெரிவித்தது. |
| மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்தாரம்: மீண்டும் விசாரணை வேண்டும் Posted: 23 Aug 2013 12:31 PM PDT தில்லியில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் போலீஸார் மீண்டும் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்க முதலமைச்சர் ஷீலா தீட்சித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக அமைப்பு |
| ஆட்டோக்களுக்கு புதிய வண்ணக் கோடுகள் Posted: 23 Aug 2013 12:30 PM PDT பயணிகள் வசதிக்காக ஆட்டோக்களுக்கு மண்டல வாரியாக வெவ்வேறு புதிய வண்ணக்கோடுகள் அளிக்க தில்லி போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. |
| துன்டாவுக்கு நெஞ்சுவலி:மருத்துவமனையில் அனுமதி Posted: 23 Aug 2013 12:30 PM PDT துன்டாவுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி புதுதில்லி, ஆக. 23: |
| "முதியவர்களும் உறுப்பு தானம் செய்யலாம்' Posted: 23 Aug 2013 12:30 PM PDT முதியவர்களும் உறுப்பு தானம் செய்யலாம் என்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தானத்துக்கான நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ள டாக்டர் ஏ.பி.தெய் கூறினார். |
| கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப நடவடிக்கை Posted: 23 Aug 2013 12:29 PM PDT தில்லி பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. |
| தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் ஆராய்ச்சி மையம் நாளை தொடக்கம் Posted: 23 Aug 2013 12:29 PM PDT தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் ஆராய்ச்சி மையம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக, தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வெள்ளிக்கிழமை வெ |
| தில்லி பிரதேச காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு Posted: 23 Aug 2013 12:29 PM PDT தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் து |
| ரமேஷ் பார்க், சமஸ்பூர் பகுதிகளில் விரைவில் நடைமேம்பாலங்கள் Posted: 23 Aug 2013 12:28 PM PDT கிழக்கு தில்லி, லட்சுமி நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரமேஷ் பார்க், சமஸ்பூர் பகுதிகளில் நடைமேம்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது |
| "இலங்கை மாகாணத் தேர்தலில் ராணுவம் தலையிடவில்லை' Posted: 23 Aug 2013 12:28 PM PDT இலங்கை வடக்கு மாகாணக் கவுன்சில் தேர்தலில் ராணுவம் தலையிடவில்லை என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார். |
| அரசியலமைப்புச் சட்ட திருத்தத்துக்கு ராம் விலாஸ் பஸ்வான் வலியுறுத்தல் Posted: 23 Aug 2013 12:28 PM PDT அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) கல்லூரிப் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொ |
| பாகிஸ்தான் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி அதிக இடங்களில் வெற்றி Posted: 23 Aug 2013 12:28 PM PDT பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. |
| உண்மையை மறைக்கிறார் டினா அம்பானி: நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு Posted: 23 Aug 2013 12:28 PM PDT ""2ஜி அலைக்கற்றை வழக்கில் உண்மையை டினா அம்பானி மூடி மறைக்கிறார்'' என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குரைஞர் குற்றம்சாட்டினார். |
| "குற்றம்சாட்டப்பட்டவர்கள் பேருந்தில் இருந்துள்ளனர் Posted: 23 Aug 2013 12:27 PM PDT தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும், துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெள்ளிக்கிழமை அரசுத்தரப்பு வழக்குரைஞர் தனது இறுதிவாதத்தை எடுத்துரைத்தார். |
| தெலங்கானா: அதிருப்தி எம்.பி.க்கள் அமளி Posted: 23 Aug 2013 12:27 PM PDT ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தை வலியுறுத்தியும், தனித் தெலங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த சில அதிருப்தி காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை தொடர் அமளியில் ஈடுபட்டனர். |
| ரசாயன ஆயுதத் தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்: பான் கி-மூன் Posted: 23 Aug 2013 12:27 PM PDT சிரியாவில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார். |
| ரூ.1.50 லட்சம் லஞ்சம்:வணிகவரித்துறை அதிகாரி கைது Posted: 23 Aug 2013 12:26 PM PDT சிதம்பரத்தில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடலூர் மாவட்ட வணிகவரித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 23 Aug 2013 12:25 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காட்டுமன்னார்கோவில் குமராட்சி வட்டார காங்கிரஸ் சார்பில் அண்மையில் நடைபெற்றது. |
| உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் Posted: 23 Aug 2013 12:25 PM PDT தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் இருப்பதாக மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. |
| கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 23 Aug 2013 12:25 PM PDT தமிழக அரசு முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இந்தியா, பாகிஸ்தான் உறவு மேம்பட பேச்சுவார்த்தை தொடங்குவதே வழி Posted: 23 Aug 2013 12:25 PM PDT இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதுதான் ஒரே வழி என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார். |
| பள்ளி மாணவர்களுக்கானகாந்திய சிந்தனைகள் போட்டி Posted: 23 Aug 2013 12:25 PM PDT சிதம்பரம் காந்தி மன்றத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான காந்திய சிந்தனைகள் குறித்த பல்வேறு போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. |
| ரூ. 1 கோடி நிலம் அபகரிப்பு: திமுக பிரமுகர் கைது Posted: 23 Aug 2013 12:24 PM PDT திருக்கழுகுன்றம் அருகே ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். |
| சுகாதார மைய ஊழியர்கள் மீது தாக்குதல்: 4 பேர் கைது Posted: 23 Aug 2013 12:23 PM PDT : உத்தரமேரூர் அருகே, ஆரம்ப சுகாதார மையத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, ஊழியர்களை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
| கோஷ்டி பூசலால் காங்கிரஸ் வளர்ச்சிக்குத் தடை மேலிடப் பார்வையாளரிடம் கட்சியினர் புகார் Posted: 23 Aug 2013 12:23 PM PDT தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு கோஷ்டி பூசலே தடையாக உள்ளது என்று காஞ்சிபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலிட பார்வையாளரிடம் நிர்வாகிகள் புகார் கூறினர். காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி |
| ஒபாமா உரையின்போது பிராட்லிக்கு இளம்பெண் ஆதரவு கோஷம் Posted: 23 Aug 2013 12:23 PM PDT அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றியபோது குறுக்கிட்ட ஒரு பெண், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராட்லி மேனிங்கை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார். |
| ரூ. 2 ஆயிரம் பெற்று வழங்கப்பட்ட விலையில்லா ஆடு சாவு Posted: 23 Aug 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் அருகே ரூ. 2 ஆயிரம் வசூல் செய்து கொண்டு வழங்கப்பட்ட தரமில்லாத விலையில்லா ஆடு இறந்தது. |
| சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் Posted: 23 Aug 2013 12:22 PM PDT சுதந்திர தினத்தன்று, விடுமுறை அளிக்காத தனியார் தொழில் நிறுவனங்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 54,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| காட்டுப்பகுதியில் இளைஞர் பிணம் Posted: 23 Aug 2013 12:22 PM PDT செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி பெருமாட்டுநல்லூர் காட்டுப் பகுதியில், அரிவாள் வெட்டு காயங்களுடன் இளைஞர் பிணமாக கிடந்தார். பெருமாட்டுநல்லூர் காட்டுப்பகுதியில் அரிவாள் வெட்டு |
| Posted: 23 Aug 2013 12:22 PM PDT உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவிலிருந்து அகதிகளாக வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. |
| Posted: 23 Aug 2013 12:22 PM PDT : கரசங்கால் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். |
| Posted: 23 Aug 2013 12:21 PM PDT |
| சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வுப் போட்டி Posted: 23 Aug 2013 12:21 PM PDT காஞ்சிபுரம் கா.மு. சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. |
| சி.எஸ்.ஆர். திட்டங்களில் ஈடுபடும் மக்கள் தொடர்பு நிறுவனம் Posted: 23 Aug 2013 12:20 PM PDT நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) திட்டங்கள் வழங்குவதில் முதல் முறையாக மக்கள் தொடர்பு நிறுவனமான கான்செப்ட் பி.ஆர். ஈடுபட்டுள்ளது. |
| Posted: 23 Aug 2013 12:20 PM PDT புதுச்சேரி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) ஏ.டி.எம்-இல் நிரப்புவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் ரூ. 30 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| லஞ்சம் : உதவி ஆட்சியரின் உதவியாளர் கைது Posted: 23 Aug 2013 12:20 PM PDT புதுச்சேரியில் சொத்துப் பத்திரத்தைத் திரும்ப வழங்குவதற்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார். |
| மேலும் 21 பேர் மருத்துவமனையில் அனுமதி Posted: 23 Aug 2013 12:20 PM PDT கீழூர் கிராமத்தில், குடிநீரில் ஏற்பட்ட மாசு காரணமாக, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மேலும் அதிகரித்தது. |
| ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு உரிமம்: ரிலையன்ஸ் ஜியோ விண்ணப்பம் Posted: 23 Aug 2013 12:19 PM PDT புதிய ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு சேவைகள் வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விண்ணப்பித்திருக்கின்றன என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் எம்.எஃப்.பாரூக்கி தெரிவித்திருக்கிறார். |
| சாலை வசதி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 23 Aug 2013 12:19 PM PDT : புதுச்சேரி அடுத்த புராண சிங்கபாளையம், பி.எஸ். பாளையத்தில் சாலை வசதி அமைத்துக் கொடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| 28-ல் காரைக்கால் கோதண்டராமர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் Posted: 23 Aug 2013 12:19 PM PDT காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் ஆக. 28-ம் தேதி ஊஞ்சல் உத்சவம் நடைபெறுகிறது. |
| காரைக்காலிலிருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மீன் கழிவுகள் Posted: 23 Aug 2013 12:18 PM PDT காரைக்காலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கோழித் தீவனம் தயாரிப்புக்கான மீன் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காரைக்கால் பகுதி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு திரும்பும்போது, பெரிய மீன்களுடன் பல்வே |
| சமுதாய நலப்பணி திட்ட நாள் விழா Posted: 23 Aug 2013 12:18 PM PDT காரைக்கால் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்ட நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| Posted: 23 Aug 2013 12:18 PM PDT இலக்கியப் பேராசான் ஜீவா, புதுச்சேரி பொதுவுடமை இயக்கக் கவிஞர் கவி.வெ.நாரா ஆகியோர் பிறந்தநாள் விழா மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜுக்கு பாராட்டு விழா புதுச்சேரி ராம் இண்டர்நேஷனல் கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. |
| "காமன்வெல்த் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கக் கூடாது Posted: 23 Aug 2013 12:18 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| மோகன்ஸ் நீரிழிவு மருத்துவ மையம் தொடக்கம் Posted: 23 Aug 2013 12:17 PM PDT புதுச்சேரியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மற்றும் சுரப்பியியல் சிறப்பு மருத்துவ மையத்தை, முதல்வர் ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 23 Aug 2013 12:17 PM PDT விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்துக்குள் கண்டமங்கலம் ஒன்றிய பா.ம.க. செயலர் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 15 நாள் சிறை Posted: 23 Aug 2013 12:16 PM PDT விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை செய்த புகாரில் கைதான ஆசிரியரை 15 நாள் சிறையில் அடைக்குமாறு செஞ்சி குற்றவியல் நடுவ |
| தேர்வாணைய சார்புச் செயலர் ஆலோசனை Posted: 23 Aug 2013 12:16 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, தேர்வு மைய அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சார்பு செயலர் ஷபிபெய்க் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உறுதி Posted: 23 Aug 2013 12:16 PM PDT மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுவேன் என்று சட்டப்பேரவை உறுப்பினர் எல்.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| உளுந்தூர்பேட்டையில் இன்று வழங்குகிறார் அமைச்சர் Posted: 23 Aug 2013 12:15 PM PDT உளுந்தூர்பேட்டை அரசினர் ஆண்கள், பெண்கள், எலவனாசூர்கோட்டை ஆகிய அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையிலா மடிக்கணினியும் உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட களவனூர், சிறுலாப்பட்டு ஆகிய கிராமங்களில் அரசின் நலத்திட்டங்கள் வழங்கு |
| பங்குச் சந்தையில் 206 புள்ளிகள் உயர்வு Posted: 23 Aug 2013 12:15 PM PDT மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 206 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 18,519 என்ற அளவில் நிலைத்தது. |
| வீட்டில் தீ விபத்து:சிலிண்டர் வெடித்தது Posted: 23 Aug 2013 12:15 PM PDT செஞ்சியில், வெள்ளிக்கிழமை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தின்போது கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. செஞ்சி பி.ஏரிக்கரை வடக்குப்புறத்தில் வசிப்பவர் கருணாகரன். இவரது கூரை |
| பயிர் காப்பீடு மறுப்பு: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு Posted: 23 Aug 2013 12:15 PM PDT தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்காமல் போனதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குறைகேட்பு கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. |
| காவிரியில் அணை கட்டப்படுவதை தடுக்கக் கோரிக்கை Posted: 23 Aug 2013 12:14 PM PDT காவிரி ஆற்றின் கர்நாடகப் பகுதியில் புதிய அணைக் கட்டுவதற்கான முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. |
| சிதம்பரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி Posted: 23 Aug 2013 12:14 PM PDT சிதம்பரம் நகரில் பல்வேறு பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| Posted: 23 Aug 2013 12:14 PM PDT மத்திய அரசு தெரிவித்த நம்பிக்கையைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பில் வெள்ளிக்கிழமை பெரும் ஏற்றம் காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூபாய் மதிப்பு 135 காசுகள் உயர்ந்து, செலாவணி வர்த்தக இறுதியில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 63.20 என்ற அளவில் நிலைத்தது. |
| காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது Posted: 23 Aug 2013 12:14 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார். |
| பெரியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் Posted: 23 Aug 2013 12:13 PM PDT இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| போக்குவரத்து விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 23 Aug 2013 12:13 PM PDT சிதம்பரத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு டி.எஸ்.பி. ஆர்.ராஜாராம் தலைமை வகித்தார். |
| சேவைக் குறைபாடு:ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.1,000 அபராதம் Posted: 23 Aug 2013 12:13 PM PDT போக்குவரத்து நிறுத்தப்பட்ட இடத்திற்கு பயணச்சீட்டை வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.1,000 அபராதம் விதித்து கடலூர் மாவட்ட குறைதீர்மன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| விளையாட்டுப் போட்டி: 54 பள்ளிகள் பங்கேற்பு Posted: 23 Aug 2013 12:12 PM PDT கடலூரில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. |
| செம்மை கரும்பு சாகுபடி மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம்' Posted: 23 Aug 2013 12:11 PM PDT செம்மை கரும்பு சாகுபடி மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என விவசாயிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வேண்டுகோள் விடுத்தார். |
| தனி தெலங்கானாவால் சென்னை குடிநீருக்கு பாதிப்பில்லை Posted: 23 Aug 2013 12:10 PM PDT ஆந்திர மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டு தனி தெலங்கானா மாநிலம் உருவாவதால் சென்னை குடிநீருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் கூறினார். |
| அரசுப் பணியாளர் தேர்வில் விதிமுறைகளை பின்பற்ற ஆட்சியர் வேண்டுகோள் Posted: 23 Aug 2013 12:10 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| Posted: 23 Aug 2013 12:10 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற சதுரங்க விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பேரணி ஸ்ரீபெரும்புதூரில் புதன்கிழமை நடைபெற்றது. |
| வகுப்பறையில் பாம்பு:மாணவர்கள் ஓட்டம் Posted: 23 Aug 2013 12:09 PM PDT திருத்தணியில் அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். |
| 58 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா Posted: 23 Aug 2013 12:09 PM PDT பொன்னேரியில் 58 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. பொன்னேரி வட்டம் சோம்பட்டு, பெரவள்ளூர் கிராமங்களில் வசிக்கும் 106 பேர் இலவச வீட்டுமனைப் |
| நல்ல தண்ணீர் குளம் சீரமைக்கப்படுமா? Posted: 23 Aug 2013 12:09 PM PDT திருத்தணியில் முறையான பராமரிப்பின்றி உள்ள நல்ல தண்ணீர் குளத்தை சீரமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. |
| புழல் சிறைக் கைதிகளிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் Posted: 23 Aug 2013 12:09 PM PDT புழல் மத்திய சிறையில் கைதிகள் இருவரிடமிருந்து 2 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நைனார் சுரேஷ் (34) மற்றும் அனுப் (26). இவர்கள் |
| அனுமதியின்றி செம்மண் எடுத்த 2 டிராக்டர்கள், ஜேசிபி பறிமுதல் Posted: 23 Aug 2013 12:08 PM PDT திருவள்ளூர் அருகே கிராமப்புறங்களில் அனுமதியின்றி செம்மண் எடுத்த 2 டிராக்டர்கள், ஒரு ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| மாநில ஹாக்கி: சென்னை லயோலா கல்லூரி சாம்பியன் Posted: 23 Aug 2013 12:08 PM PDT மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| கள்ளக்குறிச்சி புதிய வழித் திட்டம் செயல்படுத்தப்படுமா? Posted: 23 Aug 2013 12:08 PM PDT கிடப்பில் போடப்பட்ட சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக சேலம் செல்லும் புதிய ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர். சென்னையில் இருந்து சேலத்துக்கு ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக விழுப்புரம் வந்து, |
| வளர்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநர் ஆய்வு Posted: 23 Aug 2013 12:07 PM PDT கள்ளக்குறிச்சி ஒன்றியம் இந்திலி, பெருவங்கூர், வானியந்தல், அகரகோட்டாலம், பரமநத்தம், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குனர் க.முத்துமீனாள் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| அரசுப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவு Posted: 23 Aug 2013 12:07 PM PDT விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான பயிற்சி வகுப்பு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை Posted: 23 Aug 2013 12:07 PM PDT தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தியாகதுருகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| குரூப் 4 தேர்வு மையம்:வட்டாட்சியர் ஆய்வு Posted: 23 Aug 2013 12:06 PM PDT உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள டி.என்.பி.எஸ்.ஸி. குரூப் 4-தேர்வு மையங்களை வட்டாட்சியர் ஆர்.லலிதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| கரும்பு வெட்டுக் குழுவினருக்கு மருத்துவ முதலுதவி விழிப்புணர்வு Posted: 23 Aug 2013 12:06 PM PDT கரும்பு வெட்டுக்குழுக்களுக்கான மருத்துவ முதலுதவி விழிப்புணர்வு முகாம், செம்மேடு ராஜஸ்ரீ சுகர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் சார்பாக செஞ்சி வட்டம் ஆலம்பூண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |