Tamil News | Online Tamil News |
- ஓட்டெடுப்பில் உதவ தி.மு.க.,வுடன் காங்கிரஸ் சமரசம் : உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு
- மதுரை, மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி
- இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்
- முல்லை பெரியாறு அணை வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்
- தமிழக ரயில் திட்டங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்
- பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன: கருணாநிதி
- கொள்ளிடம் ஆற்றை கைவிட்ட தமிழக அரசு: மணலுக்காக கிடப்பில் போடப்பட்ட அரிய திட்டம்
- வறட்சி நிவாரண தொகை தராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு: கிடப்பில் இருக்கும் மத்திய குழு அறிக்கை
- அதிகாரிகளால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு
- சிரியாவில் ரசாயன குண்டு வீச்சு : கிளர்ச்சியாளர்கள் 650 பேர் பலி?
| ஓட்டெடுப்பில் உதவ தி.மு.க.,வுடன் காங்கிரஸ் சமரசம் : உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு Posted: உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் குறித்து, தி.மு.க., எம்.பி.,க்களிடம், இரண்டு சுற்று பேச்சுவார்த்தையை, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடித்து விட்டது. ஓட்டெடுப்பின் போது, இந்த மசோதாவை ஆதரிக்க, தி.மு.க., தயாராகி விட்டதாக தெரிய வந்துள்ளது.நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள், உணவு பாதுகாப்பு மசோதாவை, எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீருவது என, காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதற்காக, ஒவ்வொரு கட்சியாக அணுகி, ஆதரவையும் திரட்டி வருகிறது.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும், பொது வினியோகத் திட்டத்தின் ... |
| மதுரை, மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி Posted: மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக, தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது:பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்து வருகிறது. தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து, ... |
| இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் Posted: புதுடில்லி :சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி, 20 கி.மீ., ஊடுருவி, இரண்டு நாட்கள் முகாமிட்டு, தங்கியிருந்து விட்டு, திரும்பிச் சென்ற தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாடிக்கை:நமக்கு சொந்தமான அருணாச்சல பிரதேச மாநிலத்தை, சீன அரசும், சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, அருணாச்சல பிரதேசத்துக்குள், சீன ராணுவம், அத்துமீறி நுழைவது, வாடிக்கையாக நடக்கிறது. இதேபோல், காஷ்மீரின் லடாக் பகுதிக்குள்ளும், சீன ராணுவத்தின் ஊடுருவல், அடிக்கடி நடக்கிறது. கடந்த ஏப்ரலில், லடாக் பகுதியில், இந்திய எல்லைக்குள் ... |
| முல்லை பெரியாறு அணை வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட் Posted: புதுடில்லி :முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக, தமிழக மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு இடையே, பிரச்னை இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான, இறுதி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின், ஆர்.எம்.லோதா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு, "பெஞ்ச்' முன், கடந்த சில நாட்களாக நடந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், வினோத் போப்தே, வாதிட்டதாவது:முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ... |
| தமிழக ரயில் திட்டங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல் Posted: "தமிழக ரயில் திட்டங்களுக்கு, குறைந்த அளவு நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், திட்டங்கள் நிறைவடைய காலதாமதம் ஆகும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, போதுமான நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதில்லை. இது குறித்து, பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், அவை ஏற்கபடாமலும் இருந்து வருகிறது.இந்நிலையில், லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பதிலில் கூறியதாவது:முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் ... |
| பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன: கருணாநிதி Posted: சென்னை:"தமிழகத்தில், பாலியல் குற்றங்கள், பரவலாக நடைபெறுகின்றன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாற்றுமுறை குறை தீர்வு மையக் கட்டடம் ஒன்று, 3.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா அதில் கலந்து கொண்டு, மகளிருக்காக, அ.தி.மு.க., ஆட்சியில், நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையெல்லாம் தொகுத்து சொல்லியிருக்கிறார்.பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இடர்பாட்டிற்கு ஆளாகக் கூடாது என்ற ... |
| கொள்ளிடம் ஆற்றை கைவிட்ட தமிழக அரசு: மணலுக்காக கிடப்பில் போடப்பட்ட அரிய திட்டம் Posted: கர்நாடகாவிடம் போராடி, பெறும் காவிரி நீர், கொள்ளிடம் வழியாக, கடலில் சென்று கலப்பதை தடுக்கும் திட்டங்களை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்."கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை மற்றும் கதவணைகளை கட்டுவதால், எந்த பலனும் இல்லை; பல நூறு கோடி ரூபாய் தான் வீணாகும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், "மணல் குவாரிகளுக்காக, நீர் சேமிப்பு திட்டம் புறக்கணிக்கப் படுகிறது' என, டெல்டா விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.வெள்ள வடிகால்:காவிரியின் வெள்ள வடிகாலாக, கொள்ளிடம் ... |
| வறட்சி நிவாரண தொகை தராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு: கிடப்பில் இருக்கும் மத்திய குழு அறிக்கை Posted: தமிழகத்தில், வறட்சி குறித்து ஆய்வு செய்து சென்ற மத்தியக் குழு, அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதமாகி விட்டது. ஆனால், மாநில அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை தராமல், மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.பருவமழை ஏமாற்றியதால், தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறுவை, சம்பா சாகுபடி இல்லாததால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள் உற்பத்தியும் குறைந்துள்ளது.மூன்று நாள் ஆய்வு:இதனால், சென்னையை தவிர்த்து பிற, 31 மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்டவை என, தமிழக அரசு அறிவித்தது. விவசாயிகளுக்கு வறட்சி ... |
| அதிகாரிகளால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு Posted: சென்னை : சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர், மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தணிக்கை துறை அறிக்கையில் அம்பலம் ஆகியுள்ளது. அதையடுத்து, தணிக்கை அறிக்கை பெற்ற பிறகே அதிகாரிகளுக்கு பணி ஓய்வு அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பணி ஓய்வு பெறும் போது, தாங்கள் மேற்கொண்ட பணிகள், அதற்கான செலவு விவரம், பணியில் இருக்கும் போது நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனரா என்பன போன்ற பல விஷயங்கள் ஆராயப்பட்டு, விரிவான தணிக்கை அறிக்கை வழங்கப்பட ... |
| சிரியாவில் ரசாயன குண்டு வீச்சு : கிளர்ச்சியாளர்கள் 650 பேர் பலி? Posted: டமாஸ்கஸ் : சிரியா நாட்டில், கிளர்ச்சியாளர்கள் மீது, ராணுவம், ரசாயன குண்டுகளை வீசி தாக்கியதில், 650 பேர் பலியாகியுள்ளனர். சிரியா நாட்டில், அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 22,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |