Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டி.இ.டி., வினாத்தாள் என விற்பனை : தர்மபுரியில் கும்பல் சுற்றிவளைப்பு

Posted:

தமிழகம் முழுவதும் நேற்று, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, முதல் தாள் தேர்வு நடந்தது. தர்மபுரி மற்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தருவதாகவும், ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் வரை, விலை பேசி காரிமங்கலம் பகுதியில் தங்கி விற்பனை செய்து வருதாகவும், தர்மபுரி எஸ்.பி., ஆஸ்ராகார்க்கிற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. மோசடியில் ஈடுபட்ட, டாஸ்மாக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் டி.இ.டி., முதல் நாள் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில், 2 லட்சத்துக்கு ...

மோடியை விமர்சிப்பவர்களை பா.ஜ.,விலிருந்து தூக்கி எறியுங்க: ஆர்.எஸ்.எஸ்.,

Posted:

பாரதிய ஜனதா கட்சியில் நிலவும், உட்கட்சி பூசலை தடுத்து நிறுத்த, சங் பரிவார் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சிக்கும், கட்சித் தலைவர்களுக்கு கடிவாளம் போடுங்கள்; மீறிப் பேசினால், அவர்களை கட்சியிலிருந்தே நீக்குங்கள்' என, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, அந்த அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.அடுத்த எட்டு மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனாலும், கட்சி மேலிடம், ...

பல குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதி சிக்கினான்

Posted:

புதுடில்லி:நாட்டில் நடந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசால் தேடப்பட்டு வரும், 20 பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவனுமான, அப்துல் கரீம் துண்டா என்ற அப்துல் குவாட்டூஸ், 70, நேற்று கைது செய்யப்பட்டான். இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது, நேபாள எல்லையில் சிக்கினான்.கடந்த, 2008ம் ஆண்டில், பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகள், மும்பையில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், 160க்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின், மத்திய அரசால் ...

ஏற்காட்டில் எதிர்க்கட்சிகள் "டெபாசிட்' காலி செய்ய திட்டம்

Posted:

ஏற்காடு தொகுதி, இடைத்தேர்தலில் எதிர்த்து போட்டியிடும், எதிர்க்கட்சிகளின், "டெபாசிட்' காலி செய்யும் வகையில், அ.தி.மு.க., தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதி, நலத்திட்ட உதவிகள் விரைந்து வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதால், எதிர்க்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த பெருமாள், ஜூலை, 18ம் தேதி, மாரடைப்பால் மரணமடைந்தார். அதையடுத்து, ஏற்காடு தொகுதிக்கு, விரைவில் தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.அதனால், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., ...

லோக்சபா தேர்தலில் தி.மு.க., போட்டியிடும் : கருணாநிதி தகவல்

Posted:

சென்னை:""லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது,'' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:தி.மு.க., மாவட்ட செயலர் கூட்டம், லோக்சபா தேர்தல் குறித்து, நேற்று நடைபெற்றது. அதில், அந்தத் தேர்தலில் நிற்பது என்று முடிவெடுக்கப்பட்டது. "தலைவா' படம் வெளியிட முடியாமல், 10 நாட்களாக தடைபட்டுள்ளது. அதை வெளியிட கோரி, நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு, அனுமதி தரவில்லை. படைப்பாளியாக நான், பதைக்கிறேன்.மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு, தமிழக அரசு ...

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வழி என்ன?

Posted:

தமிழகத்தின் கடற்கரை, 1,000 கி.மீ., நீளமுள்ளது. இந்த கடற்கரையை ஒட்டியுள்ள, 600 மீனவ கிராமங்களில், ஒன்பது லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்கள், 6,000 விசைப் படகுகள், 50 ஆயிரம் பைபர் படகுகள், கட்டுமரங்கள் மூலம் ஆண்டுக்கு, நான்கு லட்சம் டன் மீன்களைப் பிடித்து, 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.சென்னை முதல், கடலூர் மாவட்டம் வரையுள்ள கிராம மீனவர்கள், வங்காள விரிகுடா கடல் பகுதியிலும், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், தமிழகம் - இலங்கை இடைப்பட்ட பகுதியில் உள்ள, "பாக் ஜலசந்தி' என, கூறப்படும் ஆழம் மற்றும் ...

காப்பீடு அடையாள அட்டை கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவிப்பு

Posted:

தமிழக அரசு ஊழியர்கள், நான்கு ஆண்டுகளுக்கு உறுதி செய்யப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில், அதற்கான அடையாள அட்டை கிடைக்காததால், சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.அடையாள அட்டை அளிக்கப்பட்ட பெரும்பாலானோர், பெயர், காப்பீடுக்கு உரிய நபர்களின் விவரம் ஆகியவை தவறாக இருப்பதால், அடையாள அட்டை கிடைத்தும் பலனில்லை என, புலம்புகின்றனர்.தமிழக அரசு ஊழியர்கள், 18 லட்சம் பேருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், காப்பீடு அளிக்கும் திட்டம் தி.மு.க., ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.இதற்காக, அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் தொகை பிடித்தம் ...

அரசு பணியில் சேர போலி முகவரியில் பதிவு செய்த விவகாரம் : மூடி மறைக்க வேலைவாய்ப்பு துறை முயற்சி

Posted:

போலி முகவரியைக் கொண்டு, "ஆன்-லைன்' மூலமாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசுப் பணியில் சேர முயற்சித்த விவகாரத்தை மூடி மறைக்க, தீவிர முயற்சி நடந்து வருகிறது.கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தில், 1,588 கண்டக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், 817 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்; போலி முகவரி கொடுத்து, ஆன்-லைன் மூலமாக பதிவு செய்தவர்கள்.இதனால், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பறி போனது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி, ...

உரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்

Posted:

நமது நாடு, 120 கோடி மக்கள் தொகையையும், மிகப்பெரிய வாங்கும் சந்தையையும் கொண்ட நாடு. சேமிப்பு என்ற உணர்வு, இந்திய ரத்தத்தில் இரண்டறக் கலந்தது. உலகில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் போது, அமெரிக்க நாட்டில் நூற்றுக்கணக்கான வங்கிகள் திவால் நிலைக்கு ஆளாயின. அப்போது கூட, இந்தியாவில் அந்த நிலை, ஒரு வங்கிக்கு கூட ஏற்படவில்லை.இத்தகைய நாட்டில், சந்தையை பரப்பினால் அபரிதமான கொள்ளை லாபம் அடையலாம் என்ற பேராவல் கொண்டு, இங்கு உள்ள சில்லரை வணிகத்துறை மீது குறி வைத்து, அதை அடைய பல்வேறு வழிகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்கின.மத்திய அரசு, நாட்டை பற்றியோ, மக்களைப் ...

சாதாரண மக்களுக்கு எளிதில் நீதி கிடைக்க வேண்டும் : தலைமை நீதிபதி வலியுறுத்தல்

Posted:

கவுகாத்தி : ""சாதாரண மக்கள், கோர்ட்டை எளிதாக அணுகுவதற்கான வசதியையும், அவர்களின் பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு கிடைப்பதையும், நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி, பி.சதாசிவம் பேசினார்.அசாம் மாநிலம், கவுகாத்தியில், ஐகோர்ட்டுக்கான கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பி.சதாசிவம் பேசியதாவது: நாட்டில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தலைமை நீதிபதியாக பதவியேற்றதுமே, இது தொடர்பாக, அனைத்து ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™