Tamil News | Online Tamil News |
- அத்வானி - மோடி மோதல் இல்லை: அடித்து சொல்கிறார் வெங்கய்யா நாயுடு
- மந்திரிகளை தனித்தனியாக அழைத்து ஜெ., விசாரணை: ஓரிரு நாளில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றம்?
- தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., மாவட்ட செயலர்கள் விருப்பம்
- "சூரிய சோறு!':சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்
- உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீசில் மனு: முட்டிமோதும் "தலைவா' பட தரப்பினர்
- 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் துவங்கியது- சொ.ஆனந்தன் -
- கார்கில் பகுதியிலும் பாக்., ராணுவம் அத்துமீறல்: பதிலடி தாக்குதலால் தப்பி ஓட்டம்
- பாக்., சிறையில் வாடும் இந்திய கைதிகள் கருணை கொலை செய்ய வேண்டுகோள்
- பார்லிமென்ட் அமளியால் காங்., தலைவர்கள் கவலை
- மும்பை நீர்மூழ்கி கப்பல் விபத்து: அமைச்சர் பி.ஏ.,வின் மருமகன் கதி என்ன?
| அத்வானி - மோடி மோதல் இல்லை: அடித்து சொல்கிறார் வெங்கய்யா நாயுடு Posted: கோல்கட்டா: ""அத்வானிக்கும், மோடிக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை; பிரதமரின் சுதந்திர தின பேச்சை, நரேந்திர மோடி விமர்சித்ததை ஆதரிக்கிறேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், வெங்கய்யா நாயுடு கூறினார்.பிரதமரின் செயல்பாடு: கோல்கட்டாவில், நிருபர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு கூறியதாவது: சுதந்திர தின விழாவில், அத்வானி பேசுகையில், யார் பெயரையும் குறிப்பிடாமல், கருத்து தெரிவித்து இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்; ஆனால், அவர் பதிலளிக்க தவறிவிட்டார். அந்த அடிப்படையில், பிரதமரின் ... |
| மந்திரிகளை தனித்தனியாக அழைத்து ஜெ., விசாரணை: ஓரிரு நாளில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றம்? Posted: சென்னை:"அமைச்சரவை மற்றும் கட்சியில் மாற்றம் நிச்சயம்' என, தகவல் பரவியுள்ளதால், தமிழக அமைச்சர்கள் அனைவரும், திகிலுடன் சென்னையில் தங்கியுள்ளனர். அவர்களில் பலரை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். இத்துடன், எம்.எல்.ஏ.,க்கள் பலர், அமைச்சர் கனவில், சென்னையில் முகாமிட்டுள்ளனர். தமிழக அமைச்சரவையில், சிறப்பாக பணிபுரியாதோர், புகாருக்குள்ளாவோர் ஆகியோரை, அவ்வப்போது முதல்வர், நீக்கி வருகிறார். கடந்த மாதம், முதல்வர் கொடநாட்டில் இருந்தபோது, உளவுத் துறை மூலம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின், நடவடிக்கைகளை ... |
| தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., மாவட்ட செயலர்கள் விருப்பம் Posted: தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. "கூட்டணி தொடர்பாக, மாவட்டச் செயலர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்தார்."லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என, தென் மாவட்டங்களைச் சேர்ந்த, தி.மு.க., மாவட்டச் செயலர்களும், "தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என, வட மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டச் செயலர்களும் விருப்பம் தெரிவித்தனர்.அனைவரின் கருத்துக்களை கேட்ட பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கூட்டணியின் முடிவு பற்றி, நான் பார்த்துக் கொள்கிறேன். ... |
| "சூரிய சோறு!':சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம் Posted: கோவை: கோவை மாநகராட்சி சார்பில், வடகோவை மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் "சோலார் குக்கர்' முறை பரீட்சார்த்த முறையில் கையாளப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநகராட்சி பள்ளிகளில் "சோலார் குக்கர்' திட்டம் விரிவடையும்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 மேல்நிலைப்பள்ளிகளில் 10 லட்சம் ரூபாயில், பரீட்சார்த்த முறையில் சூரிய சக்தியில் இயங்கும் "சோலார் குக்கர்' மூலம், மதிய உணவு தயாரிக்கவும், சத்துணவு கூடத்தில் சமையல் காஸ் பயன்பாட்டை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சூரிய சக்தியில் இயங்கும் வீட்டு உபயோக பொருட்கள் குறித்த ... |
| உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு போலீசில் மனு: முட்டிமோதும் "தலைவா' பட தரப்பினர் Posted: சென்னை :நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படத்தை, தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தால், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமிருக்க அனுமதியும், இடமும் கேட்டு, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளனர்.தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட பல காரணங்களால், நடிகர் விஜய், அமலா பால் நடித்த, "தலைவா' படம், தமிழகத்தில் வெளியாவதில் தொடர் சிக்கல் நிலவி வருகிறது.பிரச்னையை தீர்க்க, முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, நடிகர் விஜய் காத்திருக்கிறார். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ... |
| 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் துவங்கியது- சொ.ஆனந்தன் - Posted: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு, நேற்று முன்தினம் கோலாகலமாகத் துவங்கியது.இதில், 650க்கும் மேலான அறிஞர்கள் கலந்து கொண்டனர். மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள, "பெர்டானாசிஸ்வா' அரங்கத்தில், துவங்கிய மாநாட்டில், "இதுவரை தமிழ் இணையம்' என்ற தலைப்பில், மல்டி மீடியா விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது.அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐ.ஐ.டி., தலைவரும், "இன்பிட்' நிறுவனத்தின், கவுரவ ஆலோசகருமான, பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் பேசியதாவது:இந்திய மொழிகளிலேயே, தமிழ் மொழிக்குத் தான், உலக அளவில், இத்தனை மாநாடுகள், ... |
| கார்கில் பகுதியிலும் பாக்., ராணுவம் அத்துமீறல்: பதிலடி தாக்குதலால் தப்பி ஓட்டம் Posted: புதுடில்லி:பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்து வருவதுடன், கார்கில் உட்பட, எல்லையில் பல பகுதிகளிலும் பரவலாக தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில், கடந்த சில நாட்களாக, இடைவிடாது தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறி வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான், நேற்று முன்தினம் இரவில், கார்கில் பகுதியிலும் கைவரிசை காட்டியுள்ளது.கார்கிலின், திராஸ் பகுதியில், எல்லைக்கு ... |
| பாக்., சிறையில் வாடும் இந்திய கைதிகள் கருணை கொலை செய்ய வேண்டுகோள் Posted: புதுடில்லி : பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியர்கள், 11 பேர், தங்களை கருணைக் கொலை செய்யும்படி, இரு நாட்டு அரசுகளுக்கும், கடிதம் எழுதியுள்ளனர்.பாகிஸ்தானின், லாகூர் நகரில் உள்ள, கோட் லாக்பாட் சிறையில், ஏராளமான இந்தியர்கள், கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சக கைதிகளாலும், சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளாலும், கடுமையாக துன்புறுத்தப்படுவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சிறையில் கொடுமையை அனுபவிக்க முடியாத, 11 இந்தியர்கள், தங்களை கருணைக் கொலை செய்து விடும்படி, பாக்., மற்றும் இந்திய அரசுக்கு கண்ணீர் மல்க கடிதம் ... |
| பார்லிமென்ட் அமளியால் காங்., தலைவர்கள் கவலை Posted: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது முதல், தொடர்ச்சியாக அமளி நிலவி, இரு சபைகளின் அலுவல்களும் பாதிக்கப்பட்டு வருவதால், தங்களின் மிகப்பெரிய நம்பிக்கையான, உணவு பாதுகாப்பு மசோதாவை, இந்தக் கூட்டத் தொடரில், நிறைவேற்ற முடியுமா என்ற கவலையும், சந்தேகமும், காங்., தலைவர்களை ஆட்கொண்டுள்ளது.எதிர்ப்பு:அடுத்த எட்டு மாதங்களில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, காங்கிரஸ் மேலிடத்தால் உருவாக்கப்பட்டது, உணவு பாதுகாப்பு மசோதா. நாட்டிலுள்ள, 60 சதவீத மக்களுக்கு, மலிவு விலையில், அரிசி மற்றும் கோதுமை வழங்க வகை செய்யும், இந்த மசோதா, ... |
| மும்பை நீர்மூழ்கி கப்பல் விபத்து: அமைச்சர் பி.ஏ.,வின் மருமகன் கதி என்ன? Posted: சென்னை:மும்பை நீர்மூழ்கி கப்பல், வெடித்து மூழ்கிய விபத்தில் சிக்கிய கடற்படை வீரர்களில், தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தின் தனி உதவியாளர், கிருஷ்ண நந்தனின் மருமகனும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.இந்திய கடற்படைக்கு சொந்தமான, "சிந்து ரக்ஷக்' என்ற நீர்மூழ்கி கப்பல், மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இக்கப்பல், கடந்த இரு தினங்களுக்கு முன், திடீரென தீப்பிடித்து, வெடித்து மூழ்கியது.இக்கப்பலில், நவீன ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால், அவை அனைத்தும் தீயில் கருகி நாசமாயின. மும்பையின் பல பகுதிகளில் இருந்து, 16 ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 17,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |