Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? பிரதமர் மன்மோகனுக்கு மோடி சவால்

Posted:

புதுடில்லி: ""நாட்டின் வளர்ச்சி குறித்து, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?'' என, பிரதமர் மன்மோகனுக்கு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், டில்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக, பா.ஜ., சார்பில் முன்னிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படும், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, குஜராத்தில் புஜ் நகரில் நடந்த, சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். பிரதமரின் சுதந்திர தின உரைக்கு, பதிலளிக்கும் ...

"நக்சல் தாக்குதல்களை தடுக்க முடியவில்லை!': மன்மோகன் சிங் ஒப்புதல்

Posted:

புதுடில்லி: ""நக்சல் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை,'' என, சுதந்திர தின உரையின் போது, பிரதமர் மன்மோகன் சிங் தன் இயலாமையை கவலையுடன் தெரிவித்தார். எனினும், நக்சல் அட்டூழியத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆராயப்படும் என்றோ, அவர் குறிப்பிடவில்லை.கோட்டை கொத்தளம்: டில்லி அருகே உள்ள செங்கோட்டையின் கொத்தளத்தில், நாட்டின், 67வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில், தேசியக் கொடியேற்றி, உரையாற்றினார். அவர் உரையின் முக்கிய அம்சங்கள்: மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த, நம் ...

"சிந்து ரக்ஷக்' நீர்மூழ்கி கப்பல் வெடித்த மர்மம் நீடிப்பு

Posted:

மும்பை: வெடித்துச் சிதறி, மும்பை கடலில் மூழ்கிய, "ஐ.என்.எஸ்., சிந்து ரக்ஷக்' நீர்மூழ்கி கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் வீரர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை என, கூறும் அளவிற்கு, கப்பலின் உட்புறங்கள் மூடிப் போயுள்ளன. எப்படி விபத்து நிகழ்ந்தது என்ற மர்மம் இன்னும் விலகவில்லை.மும்பை அருகே உள்ள கொலாபா கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஐ.என்.எஸ்., சிந்து ரக்ஷக் நீர்மூழ்கி கப்பல், நேற்று முன்தினம் நள்ளிரவில் வெடித்துச் சிதறியது. அந்த பயங்கர விபத்து, நம் நாட்டின் கடற்படை இதுவரை சந்தித்திராதது.சிக்கிக் கொண்ட வீரர்கள்: ...

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் பயன்பாடு உயர்வு

Posted:

புதுடில்லி: இந்தியாவின் தங்கம் பயன்பாடு, 310 டன்னாக அதிகரித்து உள்ளது. இது கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.வரி உயர்வு: மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், இவற்றின் இறக்குமதி மீதான வரி, 8 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 338 டன்னாகவும், பயன்பாடு, 181.10 டன்னாகவும் இருந்தது. பயன்பாட்டை விட, தங்கம் இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்திருந்த நிலையில், ...

பொது வினியோக திட்டம் தொடர்ந்து செயல்படும்: முதல்வர் உறுதி

Posted:

சென்னை: ""தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப் படுத்தினாலும், தமிழகத்தில் அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.அணிவகுப்பு மரியாதை: சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில், முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின் அவர் பேசியதாவது: கல்லூரி அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள மாணவர்கள், உயர்கல்வி பெற, இந்த ஆண்டு, 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், இரண்டு பல்கலைக்கழக உறுப்பு ...

யாருடன் தி.மு.க., கூட்டணி? மாவட்ட செயலர்களிடம் கருணாநிதி இன்று கேட்கிறார்

Posted:

லோக்சபா தேர்தலில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் இன்று அறிவாலயத்தில் கூடுகிறது.அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலை சந்திக்க, தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நவம்பர் மாதத்தில், ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் சேர்ந்து நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த, 2004ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. ஒன்பது ஆண்டுகளாக நீடித்த அக்கட்சிகளின் கூட்டணி, இலங்கை தமிழர் ...

தேசியக்கொடி பறப்பதற்கு முன் தேசிய கீதம் இசைப்பு: கோட்டையில் சலசலப்பு

Posted:

சென்னை: சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த, சுதந்திர தின விழாவில், தேசியக்கொடி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.தமிழக அரசு சார்பில், சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில், நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கோட்டை முன், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் - ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகள் அமர, தனித்தனி இடங்களில் இருக்கை போடப்பட்டிருந்தது. காலை, 8:10 மணிக்கு, கோட்டை உள்ளே தயாராக இருந்த, கமாண்டோ வீரர்கள், ஆயுதம் ஏந்திய போலீசார், பேண்டு வாத்தியக் குழுவினர், குதிரை வீரர்கள், ...

சீனாவில் பெருகி வரும் "நிர்வாண திருமணம்': சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என இளைஞர்கள் நம்பிக்கை

Posted:

பீஜிங்: சீனாவில், "நிர்வாண திருமணம்' எனப்படும், புதிய வகை திருமண முறை, வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும், இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.சீனாவில், கடந்த, 13ம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் பிப்., 14ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், சீனாவில் சற்று வித்தியாசமாக, அந்நாட்டு பாரம்பரியத்தின் படி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நாட்டில் பல பகுதிகளைச் சேர்ந்த காதலர்களும், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் ...

நாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள்

Posted:

சென்னை: ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவங்குகிறது. நாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், "ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பை, டி.ஆர்.பி., ஏற்றுள்ளது. கடந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™