Tamil News | Online Tamil News |
- டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த திட்டம்: இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் முடிவு: விலைவாசி மேலும் கிடுகிடு என உயரும் அபாயம்
- முதல்வரை சந்திக்கிறார் நடிகர் விஜய்? வரும், 23ம் தேதி "தலைவா' வெளியீடு
- தொழில் நிறுவனங்களுக்கான மின் வெட்டு ரத்து: தொழில் துறையினர் வரவேற்பு
- தமிழகம், கேரள கடற்கரையில் மணல் அள்ள தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
- பிரதமருடன் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்படுத்திய மோடி: வழக்கம் போல காங்கிரஸ் எதிர்ப்பு
- ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக்' நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது
- ஒரு மாதத்தில் தமிழகத்துக்குக் கூடுதலாக 600 மெகா வாட்
- மேயரால் வடசென்னை சாலைகளில் நடக்க முடியுமா? காட்டாறாக ஓடிய வெள்ளத்தால் பாதசாரிகள் தவிப்பு
- இன்று சுதந்திர தினம்: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
- 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது
| Posted: புதுடில்லி:இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால், டீசல் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு யோசித்து வருகிறது. இதனால், விலைவாசி மேலும் கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், மம்தாவின் திரிணமுல் காங்., இருந்தவரை, டீசல் விலையை உயர்த்தாமல், மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. திரிணமுல் காங்., கூட்டணியில் இருந்து விலகியதும், காட்சிகள் மாறின.டீசல் விற்பனையால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும், லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்திக் கொள்ள, மத்திய ... |
| முதல்வரை சந்திக்கிறார் நடிகர் விஜய்? வரும், 23ம் தேதி "தலைவா' வெளியீடு Posted: "தலைவா' படத்தை வரும், 23ம் தேதி வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இது தொடர்பாக, வரும், 18ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகர் விஜய் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.நடிகர் விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா' படத்தை வெளியிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல், கோர்ட்டில் வழக்கு, அரசியல் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பு, படத்திற்கு, "யு' சான்றிதழ் கிடைத்தும் கேளிக்கை வரி விலக்கு நிராகரிப்பு என, படத்திற்கு தொடர்ந்து வந்த பிரச்னைகள், வியாபார ரீதியாக ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத நிலை ... |
| தொழில் நிறுவனங்களுக்கான மின் வெட்டு ரத்து: தொழில் துறையினர் வரவேற்பு Posted: தொழில் நிறுவனங்களுக்கான மின் வெட்டு, நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. தமிழக அரசின், இந்த முடிவை, பல்வேறு தொழில் துறையினர் வரவேற்று உள்ளனர்.தமிழகத்தில், விவசாயம், தொழிற்சாலை, குடியிருப்புகளுக்கு என, மொத்தம், தினசரி, 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின் உற்பத்தி, சராசரியாக, 8,000 மெகா வாட் என்ற அளவில் தான் உள்ளது.பற்றாக்குறை மின்சாரம், வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல், மின் வெட்டு, மின் தடை போன்றவற்றின் மூலம் ஈடுசெய்யப்படுகிறது. மின் தேவை அதிகரித்து உள்ளதால், 2008ல் இருந்து மின் வெட்டு நிலவுகிறது.தற்போது, தென் மேற்குப் பருவ மழை தீவிரம் ... |
| தமிழகம், கேரள கடற்கரையில் மணல் அள்ள தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு Posted: புதுடில்லி:"தமிழகம் மற்றும் கேரளா கடற்கரைகளில், சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் அள்ளக் கூடாது' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐந்து நீதிபதிகளைக் கொண்ட, நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில், இம்மாதம், 5ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதில், "சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி, ஆறுகளில் மணல் அள்ளக் கூடாது; இந்த உத்தரவு, நாடு முழுவதும் செல்லும்' என, உத்தரவிடப்பட்டது. மேலும், "இது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் ... |
| பிரதமருடன் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்படுத்திய மோடி: வழக்கம் போல காங்கிரஸ் எதிர்ப்பு Posted: ஆமதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமருடன், தன்னை ஒப்பிட்டு பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."நானும், அவரும்':குஜராத் முதல்வரும், பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான, நரேந்திர மோடி, நேற்று கூறியதாவது:சுதந்திர தினத்தையொட்டி, டில்லி, செங்கோட்டையில், பிரதமர் மன்மோகன் சிங், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, உரை நிகழ்த்தவுள்ளார். இதேபோல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நடக்கும், சுதந்திர தின விழாவில், நான், கொடியேற்றி, உரை நிகழ்த்தப் போகிறேன்.நாட்டு மக்களுக்கு, அவர்கள் (மத்திய அரசு) அளித்த வாக்குறுதி என்ன, அதில், எதை ... |
| ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக்' நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது Posted: மும்பை:மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, "ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக்' என்ற, பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல் திடீரென, தீப்பிடித்து, வெடித்துச் சிதறி, கடலுக்குள் மூழ்கியது. இதில் இருந்த, 18 வீரர்கள், பலியாயினர். இந்த விபத்து, இந்திய கடற்படைக்கு, மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.நம் கடற்படைக்கு சொந்தமான, போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள், பெரும்பாலும் ரஷ்யாவிடமிருந்து தான் வாங்கப்படுகின்றன. இதே போல், ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட, ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக் என்ற, பிரமாண்ட நீர்மூழ்கி கப்பல், மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ... |
| ஒரு மாதத்தில் தமிழகத்துக்குக் கூடுதலாக 600 மெகா வாட் Posted: வட சென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின், இரண்டாவது அலகு, விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம், 600 மெகா வாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும்.தமிழகத்தில், எண்ணூர், தூத்துக்குடி, வட சென்னை, வல்லூர், மேட்டூர் ஆகிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. தற்போது, வட சென்னையில், தலா, 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, மூன்று அலகுகள் செயல்பட்டு வருகின்றன.எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, வட சென்னை அனல் மின் நிலைய வளாகத்தில், தலா, 600 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அலகுகள் அமைக்கும் பணி, 2008ல், 8,000 கோடி ரூபாய் திட்ட செலவில் துவங்கப்பட்டது. இதற்கான ... |
| மேயரால் வடசென்னை சாலைகளில் நடக்க முடியுமா? காட்டாறாக ஓடிய வெள்ளத்தால் பாதசாரிகள் தவிப்பு Posted: சென்னை:தொடர் மழையால், வடசென்னையின் பெரும்பாலான சாலைகள் பல்லாங்குழிகளாகி விட்டன. மழைநீர் வடிகால்வாய் பணிகள், 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதால், இந்தாண்டும் வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டிருக்கிறது. குண்டும், குழியுமான வடசென்னை சாலைகளில், மேயர் ஒருதரமாவது நடக்கமுயற்சிக்க வேண்டும்.பணிகள் தொய்வு:சென்னையில், 747.67 கோடி ரூபாய் செலவில், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 419 கி.மீ., து?ரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் பணிகள், 2010ம் ஆண்டு துவங்கின.மூன்றாண்டுகள் ஆகியும், இதுவரை, 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து உள்ளன. இந்த பணிகளை ... |
| இன்று சுதந்திர தினம்: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் Posted: புதுடில்லி: இன்று, சுதந்திர தின விழாவை ஒட்டி, டில்லி உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.டில்லியில், போலீசார், துணை ராணுவ படையினர், நகரை சுற்றி தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, பிரதமர் மன் மோகன் சிங் மூவர்ண கொடியை ஏற்ற உள்ள செங்கோட்டை அருகே தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையின் உள்ளேயும், வெளி பகுதிகளிலும், "குளோஸ்டு சர்க்கியூட்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் பதட்டம் நிறைந்த இடங்களில், குறி பார்த்து சுடக்கூடிய, தேசிய பாதுகாப்பு படை ... |
| 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது Posted: கணினியிலும் இணையத்திலும் தமிழ் மொழியை மேம்படுத்தும் ஆராய்ச்சி மாநாடன தமிழ் இணைய மாநாடு தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடுகளில் உலக அளவில் உள்ள கணிப்பொறி அறிஞர்கள், மொழி வல்லுனர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் போன்ற பல்வேறு ஆர்வலர்கள் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.இதன் தொடர்ச்சியாக 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு இன்று(ஆகஸ்ட் 15) 2013ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக துவங்குகிறது. இம்மாநாடு இரண்டாம் முறையாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 15,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |