Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஹன்சிகாவின் அழகில் மயங்கிய சிம்ரன்

Posted:

தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு தனி இடத்தை, பல ஆண்டுகளாக தக்க வைத்திருந்தவர் சிம்ரன். நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் ஸ்பெஷலிஸ்டாக இருந்த சிம்ரனின் இடுப்பு நடனத்தில், மயங்கி கிடந்த ரசிகர்கள் ஏராளம்.அப்படிப்பட்ட சிம்ரன், திருமணத்திற்கு பின் விட்டுச் சென்ற காலி இடத்தை, இதுவரை யாரும் கைப்பற்றாத நிலையில், இப்போது தன் இடத்துக்கு ...

சினிமாவுக்கு மொழி அவசியமில்லை:ஜான் ஆபிரகாம்

Posted:

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த அனுபவம் குறித்து?மாடலிங் துறைக்கு வந்தது, சினிமாவுக்கு வந்தது எல்லாமே, எதிர்பாராமல் நடந்தது தான். ஆனாலும், சினிமாவில், இந்த அளவுக்கு எனக்கு வரவேற்பு கிடைக்கும் என, கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்போது, இந்தி சினிமாவில் உள்ள குறிப்பிடும்படியான நபர்களில், நானும் ஒரு நபர் என்பது, ...

விரைவில்..."ஊப்ஸ் ஏ தேஸி

Posted:

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடும்பத்தினரும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் காதலும் தான், பாலிவுட்காரர்களுக்கு, முக்கியமான கதைக் கரு. இதுபோன்ற பல படங்கள் வந்தும், பாலிவுட்டுக்கு ஏற்பட்டுள்ள, "வெளிநாட்டு இந்தியர் காய்ச்சல், இன்னும் குணமடையவில்லை. அந்த வரிசையில் வந்துள்ள, அடுத்த படம் தான், இது. ஆனால், இதில், காதலுக்கு ...

ஸ்ரீதேவிக்கு பின் ஸ்ருதி தானாம்:பாலிவுட்டை கலக்குவதால் பாராட்டு

Posted:

தமிழ் சினிமாவிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்று, கொடி நாட்டிய நடிகைகளில், ரேகா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வரிசையில், இப்போது ஸ்ருதி ஹாசனின் பெயரும் சேர்ந்துள்ளது. இவர் தமிழ்ப் பெண்ணாக இருந்தும், அறிமுகமானது என்னவோ, "லக் என்ற இந்தி படத்தில் தான். அதன் பின் தமிழுக்கு வந்து, "ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களில் ...

ஏமாற்றத்தில் வீணா மாலிக்

Posted:

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கிற்கு, சர்ச்சையிலும், பரபரப்பிலும் சிக்குவது புதிய விஷயமல்ல. ஆனால், இப்போது பரபரப்பில் சிக்கியுள்ளது, வீணா மாலிக் அல்ல; அவர் நடித்துள்ள புதிய கன்னடப் படம். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, "சில்க் சக்கத் ஹாட் என்ற பெயரில், ஒரு கன்னட படம் தயாரானது. இதில், சில்க்காக நடித்திருப்பது, ...

"வீ சென்டிமென்ட்கை கொடுக்குமா?

Posted:

நடிகர் அஜீத், பொதுவாக, அதிகம் சென்டிமென்ட் பார்ப்பது இல்லை. ஆனால், தமிழ் சினிமாவுக்கு சென்டிமென்ட் ரொம்பவும் அவசியமாயிற்றே. அஜீத், இதற்கு முன் நடித்த, "வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்கள், பெரும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்தவை. இதனால், "ஆரம்பம் படத்துக்கு அடுத்ததாக, அவர் தற்போது நடித்து வரும், படத்துக்கு, "வீரம் என, பெயர் ...

ஐஸ்வர்யாவின் உதவிக்கரம்

Posted:

அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பின்னும், தொடர்ந்து நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பிறந்ததை அடுத்து, சினிமாவுக்கு குட்பை கூறினார். இப்போது, ஆரத்யா என்ற ஒன்றரை வயது மகளை பராமரிப்பதிலேயே,  தன் முழுக் கவனத்தையும் பதித்துள்ளார் ஐஸ்வர்யா.உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நடனமாட, பாலிவுட் ...

அதிர்ஷ்ட தேவதை - ஹன்சிகாவுக்கு புதுப்பட்டம்

Posted:

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சிங்கம்-2, தீயா வேலை செய்யணும் குமாரு படம் ஹிட்டாகியுள்ளது. தற்போது பிரியாணி, வேட்டை மன்னன், வாலு உள்ளிட்ட கைநிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகாவுக்கு அதிர்ஷ்ட தேவதை எனும் புதிய பட்டத்தை கொடுத்து, ...

யுவன் பிறந்த நாளில் பிரியாணி பாடல்

Posted:

கார்த்தி, ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் பிரியாணி படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியிடப்படும் என்று முதலில் அறிவித்திருந்தார்கள். இப்போது அதனை ஆகஸ்ட் 31ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் 100 வது படம் என்பதால் அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 31ந் தேதியில் பாடல்களை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அந்த ...

16 வயதினிலே மயிலுக்கு 50 வயது

Posted:

 16 வயதினிலே படத்தில் மயிலாக வந்த ஸ்ரீதேவிக்கு இன்று(ஆகஸ்ட் 13ம் தேதி) 50 வயது. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனது 13-ம் வயதில் மூன்று முடிச்சு படத்தில் ...

வெயிட்டிங் லிஸ்டில் கார்த்தி!

Posted:

பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற படங்களின் வெற்றி கார்த்தியின் மார்க்கெட்டை மளமளவென்று உயர்த்தியது. ஆனால், அதன்பிறகு அவர் நடித்த சகுனி, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்கள் சறுக்கி விட்டன. இதனால், அடுத்த ஓரிரு படங்களிலேயே மேல்தட்டு ஹீரோ பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கார்த்தி ...

தனுஷ் : 25 - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

பல படங்களின் தொடர்தோல்விகளால் துவண்டிருந்தார் கஸ்தூரி ராஜா. அப்போது அவர் துள்ளுவதோ இளமை என்ற ஒரு படத்தை தயாரித்து, இயக்க ஆரம்பித்தார். அந்தப் படம் வெற்றிபெற்றால் சென்னையில் வாழ்வது இல்லையேல் மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்குச் சென்று விடுவது என்கிற முடிவில் இருந்தார். படத்துக்கு ஹீரோ என்று தனியாக ஆள் போட்டால் அவருக்கு சம்பளம் ...

இரண்டாம் உலகம் வெற்றி பெற்றால் ஆர்யாவும் பெரிய ஹீரோதானாம்!

Posted:

சினிமா உலகில் படங்களின் வெற்றிதான் நடிகர்களின் மார்க்கெட்டை தீர்மானிக்கிறது. அந்த வகையில் சமீபகாலமாக 100 கோடி 150 கோடி என்று மெகா பட்ஜெட்டில் தமிழ்ப்படங்களே உருவாகி வருகின்றன. அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகர்களும் 30 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது வளர்ந்து வரும் ஆர்யா சமீபத்தில்தான் ...

தலைவா தாமதம் ஆவதால், 555 ஐத் தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் படமும் ரிலீசாகிறது!

Posted:

விஜய்யின் தலைவா படம் கடந்த 9-ந்தேதி அன்று திரைக்கு வர இருந்ததால் பல படங்கள் பின்வாங்கின. ஆனால், எதிர்பாராதவிதமாக அப்படம் இன்னும் ரிலீசாகாததால் 10-ந்தேதி அன்று பரத்தின் 555 திரைக்கு வந்தது. அதையடுத்து, இப்போது சுசீந்திரன் இயக்கியுள்ள ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தையும் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியிடுகிறார்கள். அதே தேதியில் ...

விளம்பர தூதர் ஆனார் ஸ்ரீதேவி

Posted:

ரிலையன்ஸ் பிரஷ், பிக் பஜார், மாதிரி அடுத்து ஒரு ஷாப்பிங்  வரப்போகிறது. அதன் பெயர் வீ ஸ்டோர். இதன் பிராண்ட் அம்பாசிடரா ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு வழங்கப்படும் சம்பளம் ஆண்டுக்கு 2 கோடி என்கிறார்கள்.

"நான் எப்போதுமே என் குடும்பத்தோடு வீ ஸ்டோரில்தான் ஷாப்பிங் செல்வேன். அது தனி அனுபவமாக இருக்கும். புது புது ...

வரிசை கட்டும் சீனிவாசன் படங்கள்

Posted:

பல்வேறு மோசடி வழக்கில் சிக்கி உள்ள நடிகரும், சித்த வைத்திய டாக்டருமான சீனிவாசன் இப்போது எந்த சிறையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கிறது. அவர் எப்படியும் விடுதலையாகி விடுவார். அவரை வைத்து புரமோஷன் செய்து படத்தை வெளியிடலாம் என்று காத்திருந்தவர்கள். இப்போதைக்கு அவர் ...

பியூட்டி ஆப் தி இயர்! சோனம் கபூர்

Posted:

பிரபல பேஷன் பத்திரிக்கையான வோக், ஒவ்வொரு வருடமும் சினிமா மற்றும் பேஷன் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.  இந்த வருடத்திற்கான விழா மும்பை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இதில் பியூட்டி ஆப் தி இயர் விருது பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு கிடைத்துள்ளது. விருதினை பெற்ற சோனம் கபூர் ...

100 கோடி வசூலித்த சென்னை எக்ஸ்பிரஸ்!

Posted:

ரா-ஒன் படத்தையடுத்து ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் வியாபார ரீதியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, ரஜினியை புகழ்ந்த ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இருவரும் பாடுவது போன்ற ஒரு லுங்கி டான்ஸ் பாடலும் இடம்பெற்றது.

இதற்கிடையே, ...

தலைவா படத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் தியேட்டர் அதிபர்கள்

Posted:

"நடிகர் விஜயின், "தலைவா படத்தை திரையிடுவதை தாமதப்படுத்தினால், குண்டு வெடிக்கும் என, சென்னை, உதயம் தியேட்டருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா படம், பல்வேறு பிரச்னைகளால், வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

படத்தை திரையிட்டால் குண்டுவெடிக்கும்

"தலைவா படம் வெளியிடும் ...

இந்திய விருதை விட ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிதல்ல! நாசர் பேச்சு

Posted:

கோலிவுட்டின் குணசித்ர நடிகர்களில் நாசர் குறிப்பிடத்தக்கவர். இவர், இந்திய அரசு வழங்கும் தேசிய விருதினை விட அமெரிக்க அரசு கொடுக்கும் ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிதல்ல என்று கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு புத்தக திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் நாசரிடம் வாசகர்கள் சரமாரியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™