மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் பாதுகாப்புக்கு ஆயுத பயிற்சி
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6–வது நாளாக வீழ்ச்சி
- தெலுங்கானா அமைப்பதில் மாற்றம் இல்லை: சோனியா திட்டவட்ட அறிவிப்பு
- உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க தி.மு.க. முடிவு
- டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு
- தா.கிருஷ்ணன் கொலை வழக்கு: மு.க.அழகிரி விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
- பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண்
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமான விவகாரம்: காங்கிரஸ் ஆலோசனை
- 1.33 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் கோவா விமானநிலையத்தில் பறிமுதல்
- பாரதீய ஜனதா ஏழை மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை: திக்விஜய் சிங்
- பாராளுமன்றம் முடங்குவதால் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறுவதில் இழுபறி
- பாராளுமன்ற ஜனநாயகத்தை பாரதீய ஜனதா கேலி கூத்தாக்குகிறது-நாராயணசாமி
- ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் வெட்டிய தமிழகத்தை சேர்ந்த 42 பேர் கைது
- குஜராத்தில் மூன்று முறை நிலநடுக்கம்: மக்கள் பீதியில் ஓட்டம்
- தெலுங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் கிரன் குமார் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
- கர்நாடகத்தில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது
- காமன்வெல்த் மாநாடு விவகாரம்: தமிழகம் முழுவதும் 24-ம் தேதி போராட்டம் நடத்துகிறது பா.ஜனதா
- தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்: சவரன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது
- முல்லைப் பெரியாறு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
- நீரா ராடியா டேப் விவகாரம்: ரத்தன் டாடா இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்
| திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் பாதுகாப்புக்கு ஆயுத பயிற்சி Posted: 21 Aug 2013 11:20 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. இதனால் கோவில் பாதுகாப்பில் தேவஸ்தானம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. திருப்பதி கோவிலுக்கு தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் போர்வையில் தீவிரவாதிகள் |
| அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6–வது நாளாக வீழ்ச்சி Posted: 21 Aug 2013 10:54 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6–வது நாளாக வீழ்ச்சியை சந்தித்து ரூ.65 ஆக சரிந்தது. சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை எண்ணை இறக்குமதி, தங்கம் இறக்குமதி போன்றவற்றுக்கு அதிக அளவில் டாலர் தேவைப்படுகிறது |
| தெலுங்கானா அமைப்பதில் மாற்றம் இல்லை: சோனியா திட்டவட்ட அறிவிப்பு Posted: 21 Aug 2013 10:54 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் |
| உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க தி.மு.க. முடிவு Posted: 21 Aug 2013 10:10 PM PDT உணவு பாதுகாப்பு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் உணவு வினியோகத்திட்டம் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், உணவு பாதுகாப்பு |
| டெல்லியில் வெங்காயம் விலை ரூ.80 ஆக உயர்வு Posted: 21 Aug 2013 10:04 PM PDT டெல்லியில் வெங்காயம் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்தது. விலையை கட்டுப்படுத்த வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.25க்கு விற்ற வெங்காயம் கடந்த வாரம் திடீர் என்று ரூ.50 ஆக உயர்ந்தது. |
| தா.கிருஷ்ணன் கொலை வழக்கு: மு.க.அழகிரி விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் Posted: 21 Aug 2013 09:45 PM PDT முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மதுரையில் கடந்த 2003–ம் ஆண்டு மே மாதம் 20–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி |
| பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் Posted: 21 Aug 2013 08:25 PM PDT இந்தியாவில் இதுநாள் வரை எண்ணெய் தொழில் நிறுவனம் ஆண் வர்க்கத்தின் நிர்வாகத்திலேயே இருந்து வந்துள்ளது.இப்போது, முதன்முதலாக நிஷி வாசுதேவன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனின் தலைமை நிர்வாகிப் பொறுப்பை ஏற்பதன் மூலம் இந்த நடைமுறையை மாற்றி அமைக்கின்றார். கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த நிஷி வாசுதேவன், என்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஆலோசகராகத் தனது தொழில் வாழ்க்கையைத் |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமான விவகாரம்: காங்கிரஸ் ஆலோசனை Posted: 21 Aug 2013 04:48 PM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரம் குறித்து காங்கிரஸ் மேலிடக்குழு ஆலோசனை நடத்தியது. எதிர்க்கட்சிகளின் தாக்குதலை சமாளிப்பதற்கான வியூகம் வகுக்கப்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூறியுள்ளார். |
| 1.33 கோடி மதிப்புடைய 4 கிலோ தங்கம் கோவா விமானநிலையத்தில் பறிமுதல் Posted: 21 Aug 2013 04:26 PM PDT கோவாவில் இருந்து விமானம் மற்றும் கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சுங்க இலாக அதிகாரிகள் இங்குள்ள தாபோலிம் விமானநிலையத்தில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1 கோடியே 33 லட்சம் மதிப்புடைய 4 கிலோ |
| பாரதீய ஜனதா ஏழை மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை: திக்விஜய் சிங் Posted: 21 Aug 2013 02:59 PM PDT காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் ரக்ஷா பந்தன் விழா முன்னிட்டு தனது சகோதரியை காண சொந்த மாநிலமான மத்தியப்பிரதேச தலைநகர் போபாலுக்கு வந்து இருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டியளித்தார். அதில் பாரதீய ஜனதா குறித்து அவர் கூறியதாவது:- |
| பாராளுமன்றம் முடங்குவதால் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறுவதில் இழுபறி Posted: 21 Aug 2013 02:49 PM PDT பாராளுமன்றம் தொடர்ந்து முடங்குவதால், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சட்டம் காலாவதி ஆகும் ஆபத்து உள்ளது. உணவு பாதுகாப்பு மசோதாவை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினமான கடந்த 20-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி |
| பாராளுமன்ற ஜனநாயகத்தை பாரதீய ஜனதா கேலி கூத்தாக்குகிறது-நாராயணசாமி Posted: 21 Aug 2013 02:26 PM PDT மத்திய மந்திரி நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பாரதீய ஜனதா தொடர்ந்து பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கி வருகிறது. பாராளுமன்றத்தின் அனைத்து அமர்வுகளையும் இக்கட்டான சுழ்நிலைக்கு தள்ளுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் |
| ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் வெட்டிய தமிழகத்தை சேர்ந்த 42 பேர் கைது Posted: 21 Aug 2013 01:55 PM PDT ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷல்லம் வனப்பகுதியில் உள்ள செம்மரக்கட்டை (சிவப்பு சந்தனமரம்) மரத்தை வெட்டி அதனை வாகனங்கள் மூலம் கடத்த முயன்ற 42 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் அதிரடி சோதனையில் கைது செய்தனர். கைதான 42 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் |
| குஜராத்தில் மூன்று முறை நிலநடுக்கம்: மக்கள் பீதியில் ஓட்டம் Posted: 21 Aug 2013 01:14 PM PDT குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பச்சாவ் டெசில் என்னுமிடத்தில் நேற்று மாலை 6.26 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலில் 3.5 ஆகப்பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு அப்பகுதியில் உள்ள வீடுகள் லேசாக குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் |
| தெலுங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் கிரன் குமார் சோனியா, ராகுலுடன் சந்திப்பு Posted: 21 Aug 2013 12:34 PM PDT தெலுங்கானவை தனி மாநிலமாக பிரித்துகொடுக்கும் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முடிவை எதிர்த்து சீமாந்திராவில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப்பிரதேச முதல் மந்திரி கிரன் |
| கர்நாடகத்தில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது Posted: 21 Aug 2013 07:14 AM PDT கர்நாடக மாநிலம் மாண்டியா எம்.பி. தொகுதியிலும், பெங்களூர் ரூரல் எம்.பி. தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடந்தது. மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யாவும், ஜனதாதளம் சார்பில் புட்டராஜும் போட்டியிட்டனர். ஏற்கனவே இந்த தொகுதி ஜனதா தளம் வசம் இருந்தது. அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து தொகுதியை |
| காமன்வெல்த் மாநாடு விவகாரம்: தமிழகம் முழுவதும் 24-ம் தேதி போராட்டம் நடத்துகிறது பா.ஜனதா Posted: 21 Aug 2013 05:26 AM PDT தமிழக பா.ஜனதா தலைவர் பொன் ராதாகிருஷ்ணன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற நவம்பர் மாதம் இலங்கையில் நடக்கவுள்ள "காமன்வெல்த்" உறுப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பாரதப்பிரதமரை நேரில் அழைத்திட இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து சென்றுள்ளார். "காமன்வெல்த்" உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பாரதப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது |
| தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்: சவரன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது Posted: 21 Aug 2013 04:50 AM PDT பங்குச் சந்தை வீழ்ச்சி, இறக்குமதி வரி உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஓரளவு விலை குறைந்து சவரன் 19 ஆயிரத்துக்கு சென்றது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது |
| முல்லைப் பெரியாறு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 21 Aug 2013 04:43 AM PDT தமிழகத்திற்கு பாசன வசதி அளிக்கும் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மேலும் கேரள அரசு கொண்டு வந்துள்ள அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் தமிழகம் வலியுறுத்தியது |
| நீரா ராடியா டேப் விவகாரம்: ரத்தன் டாடா இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் Posted: 21 Aug 2013 04:42 AM PDT அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொழில் அதிபர் ரத்தன் டாடா டெலிபோனில் பேசிய உரையாடல் விவரம் கடந்த 2010ம் ஆண்டு சில பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |