மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி கோவிலுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது
- இம்பாலில் சுதந்திர தின விழா நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு
- உணவு பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும்: பிரதமர் நம்பிக்கை
- எல்லைக்கோட்டு பிரச்சினைக்கு மத்தியில் பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
- அச்சுறுத்தல் இல்லா சுதந்திர தினம் கொண்டாடுவோம் - சிறப்பு பார்வை
- வருமான உயர்வைக் காட்டியுள்ள வடக்கு ரயில்வே
- முன்னாள் மத்திய இணை மந்திரி திலிப் சிங் ஜுடேயோ மரணம்
- போதி கயா ஆலய குண்டு வெடிப்பு: தலைமறைவாக இருந்த பூசாரி போலீசில் சிக்கினார் - தீவிர விசாரணை
- மணிப்பூர் முதல் மந்திரி வீட்டின் அருகே மீண்டும் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மனைவி - மகள் தொடர்பான ஆவணங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்பு
- குஜராத் போலி என்கவுண்டர் விவகாரத்தில் வெளி மாநில போலீசார் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
- பா.ஜ.க.வுக்கு பதிலடி தரும் ஐ.மு. கூட்டணி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பிரசார படம் வெளியீடு
- இந்திய - பாக். எல்லையில் மோடி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
- இந்தியாவுக்கு வரவிருந்த யாத்ரிகர்களின் பயணம் ரத்து: பாகிஸ்தான் முடிவு
- ஸ்திரமான அரசை தேர்வு செய்ய 2014 தேர்தல் வாய்ப்பு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை
- டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் புல்லாருக்கு தூக்கு உறுதி: மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது
- நேரடி அன்னிய முதலீடு இல்லாமல் அன்னிய செலாவணி கையிருப்பு உயராது: ப.சிதம்பரம் விளக்கம்
- கப்பல் விபத்தில் இறந்த மாலுமிகளுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி இரங்கல்
- மும்பை நீர்மூழ்கி கப்பல் விபத்தில் 18 மாலுமிகள் பலி: கடற்படை தளபதி தகவல்
- நீர்மூழ்கி கப்பல் வெடிப்பு குறித்து இன்றே அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: மாநிலங்களவையில் வலியுறுத்தல்
| திருப்பதி கோவிலுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது Posted: 14 Aug 2013 10:36 PM PDT ஆந்திராவில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி அரசு ஊழியர்கள் கடந்த 13-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் அரசு போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் ஆந்திராவில் 13 மாவட்டங்களில் கடந்த 12-ந் தேதி முதல் பஸ்கள் ஓடவில்லை. |
| இம்பாலில் சுதந்திர தின விழா நடைபெறும் இடம் அருகே குண்டுவெடிப்பு Posted: 14 Aug 2013 09:49 PM PDT மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் மொய்ரான்கோம் என்ற இடத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததாக தகவல் தெரிவிக்கின்றது. |
| உணவு பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும்: பிரதமர் நம்பிக்கை Posted: 14 Aug 2013 09:42 PM PDT பிரதமர் மன்மோகன்சிங் இன்று கூறும்போது, மும்பையில் சிந்துரக்ஷக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படும் 18 கப்பற்படை ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்து கொள்கிறேன். நடப்பு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உணவு பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். |
| Posted: 14 Aug 2013 09:32 PM PDT சமீபத்தில் ஏற்பட்ட பெருமழை காரணமாக வீட்டில் அன்றாடம் உபயோகித்துவரும் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன்விளைவாக அதன் வரத்து சந்தைகளில் குறைந்து விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்த நெருக்கடியைத் தீர்க்கும் விதமாக வெங்காயத்தை இறக்குமதி |
| அச்சுறுத்தல் இல்லா சுதந்திர தினம் கொண்டாடுவோம் - சிறப்பு பார்வை Posted: 14 Aug 2013 08:50 PM PDT வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பில் அடிமைப்பட்டுக் கிடந்த நாம், பல்வேறு தலைவர்களின் தியாகத்தினாலும், அர்ப்பணிப்பினாலும் சுதந்திரக் காற்றை இப்போது பெருமையுடன் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். 1947-ல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இப்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. |
| வருமான உயர்வைக் காட்டியுள்ள வடக்கு ரயில்வே Posted: 14 Aug 2013 05:15 PM PDT 2013-14ம் ஆண்டின் வடக்கு ரயில்வே கோட்டப் பிரிவின் பயணிகள் சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் லக்னோ பிரிவின் மேலாளர் என்.ஆர்.ஜகதீப் ராய் கலந்துகொண்டார். அப்போது இந்தப் பிரிவின் வருமானம் 1107.89 கோடி எனவும், இது சென்ற வருடத்தைக் காட்டிலும் 12.63 சதவிகிதம் அதிகரித்துள்ளது |
| முன்னாள் மத்திய இணை மந்திரி திலிப் சிங் ஜுடேயோ மரணம் Posted: 14 Aug 2013 03:55 PM PDT மத்திய முன்னாள் இணை மந்திரியும், சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. எம்.பி.யுமான திலிப் சிங் ஜுடேயோ(64) நேற்று மரணமடைந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களுக்காக குர்கானில் உள்ள மெடெண்டா ஆஸ்பத்திரியில் கடந்த 45 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக |
| போதி கயா ஆலய குண்டு வெடிப்பு: தலைமறைவாக இருந்த பூசாரி போலீசில் சிக்கினார் - தீவிர விசாரணை Posted: 14 Aug 2013 03:07 PM PDT பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகா போதி கோவிலில் ஜூலை 7ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர். நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்ட 9 குண்டுகளும் சக்தி குறைந்தவை என்பதால், கோவிலுக்கு பெரிய அளவில் |
| மணிப்பூர் முதல் மந்திரி வீட்டின் அருகே மீண்டும் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு Posted: 14 Aug 2013 02:16 PM PDT மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஒக்கரம் இபோபி சிங் பதவி வகித்து வருகிறார். இவரது அதிகாரபூர்வ அரசு இல்லம் இம்பாலில் உள்ள மாநில போலீஸ் தலைமை அலுவலகம் அருகே உள்ளது |
| நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மனைவி - மகள் தொடர்பான ஆவணங்களை வழங்க பிரதமர் அலுவலகம் மறுப்பு Posted: 14 Aug 2013 01:39 PM PDT இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் ஆட்சியை விரட்ட வேண்டும் என்று போராடிய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போசை கைது செய்த பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருந்தது. 1941ம் ஆண்டு விட்டுக் காவலில் இருந்து தப்பியோடிய அவர் ஜப்பானின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை |
| குஜராத் போலி என்கவுண்டர் விவகாரத்தில் வெளி மாநில போலீசார் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி Posted: 14 Aug 2013 01:08 PM PDT குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு முதல் 2006 வரை நடந்த போலி எண்கவுண்டர்கள் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ்.பேடி தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் 2-3-2012 அன்று நியமித்தது |
| பா.ஜ.க.வுக்கு பதிலடி தரும் ஐ.மு. கூட்டணி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பிரசார படம் வெளியீடு Posted: 14 Aug 2013 11:52 AM PDT ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் ஒலி, ஒளி பிரசார வடிவங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்தியாவின் கதை (பாரத் கா கஹானி) பகுதி - 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரசார தொகுப்புகளை மத்திய தகவல் |
| இந்திய - பாக். எல்லையில் மோடி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார் Posted: 14 Aug 2013 11:21 AM PDT காஷ்மீரில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் வேளையில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான புஜ் எல்லைப் பகுதியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாளை தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார் |
| இந்தியாவுக்கு வரவிருந்த யாத்ரிகர்களின் பயணம் ரத்து: பாகிஸ்தான் முடிவு Posted: 14 Aug 2013 08:07 AM PDT டெல்லியைச் சேர்ந்த சுஃபி இசைஞானியான ஹசரத் அமீர் குஸ்ரூ, கவாலிப் பாடல்களின் தந்தையாக அறியப்பட்டார். இத்தகைய பாரம்பரிய மரபுகள் இன்றளவும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நடைமுறையில் உள்ளன. அவரது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் வரும் 22 முதல் 29 ஆம் தேதி வரை புது டெல்லியில் நடைபெறுகின்றது. அதற்கு பாகிஸ்தானிலிருந்தும் யாத்ரிகர்கள் திரளாக வந்து பங்கெடுத்துக் கொள்ளுவார்கள் |
| ஸ்திரமான அரசை தேர்வு செய்ய 2014 தேர்தல் வாய்ப்பு: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை Posted: 14 Aug 2013 07:24 AM PDT சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஜனநாயகம் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது மட்டுமல்ல. நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு காந்தியடிகளின் கொள்கைகளை |
| Posted: 14 Aug 2013 05:55 AM PDT டெல்லியில் 1993-ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது. |
| நேரடி அன்னிய முதலீடு இல்லாமல் அன்னிய செலாவணி கையிருப்பு உயராது: ப.சிதம்பரம் விளக்கம் Posted: 14 Aug 2013 05:12 AM PDT மாநிலங்களவையில் இன்று பொருளாதாரம் குறித்த விவாதத்திற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பதில் அளித்து பேசியதாவது:- நாட்டின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க வேண்டியது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். விலைவாசியை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. |
| கப்பல் விபத்தில் இறந்த மாலுமிகளுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி இரங்கல் Posted: 14 Aug 2013 04:54 AM PDT மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ். சிந்துரக்ஸாக் என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பலில் நேற்று இரவு வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் கப்பலில் இருந்த 18 மாலுமிகளும் பலியானார்கள். விபத்துபற்றி தகவல் அறிந்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி, மும்பை சென்று கடற்படைத் தளத்தை பார்வையிட்டார். |
| மும்பை நீர்மூழ்கி கப்பல் விபத்தில் 18 மாலுமிகள் பலி: கடற்படை தளபதி தகவல் Posted: 14 Aug 2013 04:30 AM PDT மும்பை கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பல் நிறுத்தும் தளத்தில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஸாக் என்ற அதி நவீன நீர்மூழ்கி கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 3 அதிகாரிகள் உள்பட 18 கடற்படை வீரர்கள் இருந்த அந்த கப்பலில் இருந்து, நேற்று இரவு திடீர் என்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே கப்பலில் பயங்கரமாக |
| நீர்மூழ்கி கப்பல் வெடிப்பு குறித்து இன்றே அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: மாநிலங்களவையில் வலியுறுத்தல் Posted: 14 Aug 2013 04:10 AM PDT மும்பை கடற்படை தளத்தில் இருந்த ஐ.என்.எஸ். சிந்துரக்ஸாக் என்ற நீர்மூழ்கி கப்பல் இன்று அதிகாலை வெடித்து சிதறியது. அதில் இருந்த ஆயுதங்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தது. அப்போது கப்பலின் உள்ளே |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |