மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ ஆதாரம் மூலம் கைது
- செல்போனில் பேசியபடி சென்ற மாணவி மீது ரெயில் மோதி பலி
- உத்தரபிரதேசம்: பணி நீக்கம் செய்ததால் பள்ளி மேலாளரை சுட்டுக்கொன்ற துப்புரவு தொழிலாளி
- தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதலுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி
- நஷ்ட ஈடாக பணம் வேண்டாம் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுங்கள்: உயிரிழந்த வீரரின் மனைவி ஆவேசம்
- கொல்கத்தாவில் நாட்டின் முதல் தாய்ப்பால் வங்கி உதயம்
- பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காக்க 'அதிநவீன' ஆயுதம்
- நீரா ராடியா உரையாடல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
- மன்மோகன் சிங்குடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு: ஏ.கே.அந்தோணி மீது புகார் கூறினர்
- எல்லைக்குள் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
- மத்திய பிரதேசம்: 5 மகள்களை கொன்றவருக்கு இன்று தூக்கு
- 23,792 கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன: மத்திய அரசு தகவல்
- போராட்டம் எதிரொலி: டெல்லி தூதரகத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்த பாகிஸ்தான் கோரிக்கை
- மனைவியை 1 மாதம் பட்டினி போட்டு கொன்ற கணவன்
- பாதுகாப்புத்துறை மந்திரி தனது விளக்கத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டார்: மத்திய அரசு
- திகார் சிறையில் கொள்ளளவை விட இருமடங்கு கைதிகள் அடைப்பு
- சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க இலங்கை தூதரிடம் மத்திய அரசு வலியுறுத்தல்
- பீகாரில் தொடரும் சோகம்: பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 15 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
- திரிணாமுல் காங்கிரசின் வன்முறை அரசியலால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: சீத்தாராம் யெச்சூரி
- எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
| தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ ஆதாரம் மூலம் கைது Posted: 07 Aug 2013 11:07 PM PDT ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதி மக்கள் ஓட்டு மொத்தமாக வீதியில் இறங்கி போராடுவதால் போலீசார் செய்வதறியாமல் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். போராட்டத்தில் அரசு வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மேலும் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, ஜவகர்லால் நேரு உள்பட தேச தலைவர்கள் சிலைகள் தீ வைத்து உடைத்து |
| செல்போனில் பேசியபடி சென்ற மாணவி மீது ரெயில் மோதி பலி Posted: 07 Aug 2013 11:01 PM PDT திருவனந்தபுரம் அருகே சிறையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் மணக்குமார். இவரது மனைவி வீணா. இந்த தம்பதிக்கு ஸ்ரீலட்சுமி (வயது 22), நிஷா என்ற 2 மகள்களும் உண்டு. ஸ்ரீலட்சுமியும், நிஷாவும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீலட்சுமிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடிவு செய்தனர். அதன்படி வருகிற 20–ந்தேதி ஸ்ரீலட்சுமிக்கு |
| உத்தரபிரதேசம்: பணி நீக்கம் செய்ததால் பள்ளி மேலாளரை சுட்டுக்கொன்ற துப்புரவு தொழிலாளி Posted: 07 Aug 2013 10:52 PM PDT உத்தரபிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சந்திரசேகர் ஆசாத் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மேலாளராக சூரஜ்பாலி என்பவர் இருந்தார் பள்ளி முதல்வராக சரண்பீர்சிங் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் சந்தோஷ் குமார் என்பவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரை பள்ளி மேலாளர் சூரஜ்பாலி சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கினார். இதனால் சந்தோஷ்குமார் ஆத்திரம் அடைந்தார். |
| தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதலுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி Posted: 07 Aug 2013 10:03 PM PDT பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியானது குறித்து பாராளுமன்ற மேல்-சபையில் விவாதம் நடந்தது. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இந்த விவாதத்தின்போது பதிலளித்த மந்திரி, "பாகிஸ்தான் ராணுவ உடையணிந்த நபர்கள்'' என்று குறிப்பிட்டார் |
| Posted: 07 Aug 2013 08:16 PM PDT காஷ்மீர் மாநில எல்லை அருகே பூஞ்ச் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து உயிரிழந்த வீரர்களில் ஒருவரான விஜய் ராயின் மனைவி புஷ்பா ராய் கூறும்போது, 'எல்லையில் நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், தலை துண்டிக்கப்படுகிறார்கள் |
| கொல்கத்தாவில் நாட்டின் முதல் தாய்ப்பால் வங்கி உதயம் Posted: 07 Aug 2013 04:47 PM PDT குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்ற சத்தான ஆகாரம் எதுவும் இல்லை. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் தங்கள் அழகு போய்விடுமோ என தவறாக கருதி பல தாய்மார்கள் பால் தருவதில்லை. வேலைக்கு செல்லும் தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு பால் தர இயல்வதில்லை. பிரசவத்தின்போது தாய் இறந்துவிட்டாலும் சேய்க்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் மேற்கு வங்காள மாநிலத்தின் |
| பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காக்க 'அதிநவீன' ஆயுதம் Posted: 07 Aug 2013 03:41 PM PDT இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள், கற்பழிப்புகள், மானபங்கப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு எதிராக சட்டங்கள் பல கொண்டு வந்தும், இந்த சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியவில்லை. இந்தக் கொடுமையே பெண்களுக்கு நேராமல் தடுப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு அதிநவீன ஆயுதம் ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது. |
| Posted: 07 Aug 2013 02:52 PM PDT நீரா ராடியா உரையாடல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்டு, மத்திய அரசு அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வர்த்தக-அதிகார தரகராக செயல்பட்டு வந்த பெண்மணி நீரா ராடியா. இவர் ஒன்பதே ஆண்டுகளில் ரூ.300 கோடி அளவில் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை |
| மன்மோகன் சிங்குடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு: ஏ.கே.அந்தோணி மீது புகார் கூறினர் Posted: 07 Aug 2013 02:34 PM PDT பிரதமர் மன்மோகன் சிங்கை பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ.கே.அந்தோணி மீது புகார் கூறினர். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் |
| எல்லைக்குள் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் Posted: 07 Aug 2013 01:58 PM PDT காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து 5 இந்திய வீரர்களை சுட்டுக்கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் யூரி பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 5-ந்தேதி நள்ளிரவு இந்திய பகுதிக்குள் சுமார் 450 மீட்டர் தூரத்துக்கு |
| மத்திய பிரதேசம்: 5 மகள்களை கொன்றவருக்கு இன்று தூக்கு Posted: 07 Aug 2013 01:41 PM PDT மத்திய பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகன்லால் பரேலா. இவருக்கு 2 மனைவிகள். இவர்களுடன் பரேலாவுக்கு சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் அவர் தனது மகள்கள் ஜமுனா (1 வயது), பூல்கன்வார் (2), ஆர்த்தி (4), சவீதா (5), லீலா (6) ஆகியோரை ஈவிரக்கமின்றி கோடரியால் தலையை துண்டித்து படுகொலை செய்தார். |
| 23,792 கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன: மத்திய அரசு தகவல் Posted: 07 Aug 2013 01:02 PM PDT நாடு முழுவதும் 21 ஐகோர்ட்டுகளில் 23 ஆயிரத்து 792 கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பாராளுமன்றத்தில் மத்திய சட்ட மந்திரி கபில் சிபல் கூறினார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மத்திய சட்ட மந்திரி கபில் சிபல் எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். |
| போராட்டம் எதிரொலி: டெல்லி தூதரகத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்த பாகிஸ்தான் கோரிக்கை Posted: 07 Aug 2013 10:53 AM PDT எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்திய வீரர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. |
| மனைவியை 1 மாதம் பட்டினி போட்டு கொன்ற கணவன் Posted: 07 Aug 2013 05:31 AM PDT உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜனார்த்தன் ராய் தனது மனைவி கிரண்ராயுடன் (45) மராட்டிய மாநிலம் நல்ல சோபாரா என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் 13–ந்தேதி தகராறு ஏற்பட்டபோது ஜனார்த்தன் ராய் மனைவியை வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டி சென்று விட்டார். கணவன் மீது உள்ள கோபத்தில் மனைவியும் வீட்டுக்குள்ளேயே சாப்பிடாமல் படுத்துக்கொண்டார். |
| பாதுகாப்புத்துறை மந்திரி தனது விளக்கத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டார்: மத்திய அரசு Posted: 07 Aug 2013 05:31 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். ஒரு வீரர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்போது, இதுதொடர்பாக விளக்கம் அளித்த பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி, தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ |
| திகார் சிறையில் கொள்ளளவை விட இருமடங்கு கைதிகள் அடைப்பு Posted: 07 Aug 2013 05:11 AM PDT மத்திய உள்துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங், மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், "உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு கைதிகள் உள்ளனர். திகார் சிறையில் 5850 ஆண் கைதிகளும், 400 பெண் கைதிகளும் என மொத்தம் 6250 பேர் அடைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், |
| சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்க இலங்கை தூதரிடம் மத்திய அரசு வலியுறுத்தல் Posted: 07 Aug 2013 04:45 AM PDT இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும், அவர்களின் படுகுகளையும் சிறை பிடித்து சேதப்படுத்தும் கடற்படையினர் இரவு பகலாக சிரமப்பட்டு பிடித்த மீன்களையும் |
| பீகாரில் தொடரும் சோகம்: பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 15 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 07 Aug 2013 04:23 AM PDT பாட்னாவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மாதம் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ - மாணவிகள் பரிதாபமாக பலியாகினர். ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் 3 வார சிகிச்சைக்கு பின்னர் நேற்றுதான் வீடு திரும்பினர் |
| திரிணாமுல் காங்கிரசின் வன்முறை அரசியலால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: சீத்தாராம் யெச்சூரி Posted: 07 Aug 2013 04:07 AM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடின. இதுதொடர்பாக புதுடெல்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது |
| எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு Posted: 07 Aug 2013 04:02 AM PDT பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தெலுங்கானா, போடோ பிரச்சினையால் முதல் நாளே சபை முடங்கியது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. இதனால் 2–வது நாளும் சபை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. 3–வது நாளாக இன்றும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |