Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கடுமையாக தண்டிக்க வேண்டும்: தீவிரவாதி துண்டாவின் தம்பி, தங்கை ஆவேசம்

Posted: 17 Aug 2013 11:05 PM PDT

லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாத இயக்கத்தின் வெடிகுண்டு தயாரிப்பாளராக இருந்தவன் அப்துல்கரீம் என்ற துண்டா. 70 வயதாகும் இவன் இந்தியாவில் முக்கிய நகரங்களில் நடந்த 40–க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்பு டையவன். இந்தியா தேடிவந்த மிக முக்கியமான 20 தீவிரவாதிகளில் இவனும் ஒருவன். நேற்று முன்தினம் மாலை நேபாள எல்லையில் இவன் டெல்லி

ஆந்திராவில் வியாபாரி– மனைவி, மகன் கொலை: காருடன் நகை-பணம் கொள்ளை

Posted: 17 Aug 2013 10:59 PM PDT

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் பாசரா கிராமத்தை சேர்ந்தவர் அசோக்சாய் (55). இவர் அங்குள்ள கோவில் அருகே பெரிய அளவில் பூஜை பொருள் விற்பனை கடை நடத்தி வந்தார். நேற்று காலை கடைக்கு ஊழியர்கள் வந்துவிட்டனர். ஆனால் அசோக்சாய் கடையை திறக்க வரவில்லை. நீண்ட நேரமாகியும் வராததால் அவரை தேடி ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டு கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தனர்.

7 வயது சிறுமி கற்பழிப்பு: 65 வயது முதியவர் கைது

Posted: 17 Aug 2013 10:56 PM PDT

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பொதுத்தூர் நகரை சேர்ந்தவர் புல்லையா யாதவ் (65). இவர் தனது வீட்டில் இட்லி மாவு அரைத்து கொடுப்பார். அந்த பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி. மாவு அரைக்க வந்தார். அந்த சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி புல்லையா யாதவ் வீட்டிற்குள் அழைத்து சென்று கதற கதற கற்பழித்தார். தகவல் அறிந்த சிறுமி உறவினர்கள் ஆவேசம் அடைந்து புல்லையா வீட்டை முற்றுகையிட்டு

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து: மேலும் ஒரு வீரர் உடல் மீட்கப்பட்டது- 12 பேர் உடல்களை தேடும் பணி தீவிரம்

Posted: 17 Aug 2013 10:50 PM PDT

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய நீர்மூழ்கி கப்பல் சிந்து ரக்சா கடந்த புதன்கிழமை அதிகாலை தீ பிடித்து வெடித்தது. இதில் அந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்த 3 கடற்படை அதிகாரிகள் மற்றும் 15 வீரர்கள் தீயில் கருகி பலியானார்கள். அவர்களது உடல்கள் நீர்மூழ்கிக் கப்பலுடன் கடலுக்குள் மூழ்கியது. பலியான 18 வீரர்களின் உடலை மீட்கும் பணி வியாழக்கிழமை

வேலை நிறுத்தத்தை முறியடிக்க ஆந்திர அரசு ஊழியர்கள் மீது 'எஸ்மா' சட்டம் பாய்ந்தது

Posted: 17 Aug 2013 10:00 PM PDT

ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு பணிகள் கடந்த 18 நாட்களாக செயல்படாமல் உள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 13 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது.

ராஜஸ்தான்: ஜோத்பூரில் அமையவிருக்கும் அறிவியல் மையம்

Posted: 17 Aug 2013 09:18 PM PDT

ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜோத்பூரில் நேற்று பிராந்திய அறிவியல் மையம் ஒன்று திறக்கப்பட்டது. இதனைத் திறந்து வைத்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவியல் நகரம் ஒன்றிற்கான அடிக்கல்லையும் நாட்டினார். பின்னர் திறப்புவிழா சிறப்புரை ஆற்றிய அவர், இந்த இரண்டு திட்டங்களும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி, அறிவியலில் ஆர்வம் உடைய

உத்தரகாண்ட் வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் 300 வெளிநாட்டவர்கள்

Posted: 17 Aug 2013 08:28 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 16,17 தேதிகளில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டது. அப்போது புனித யாத்திரை வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு பின்னர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர். இதில் காணாமற்போனவர்களைப்

செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ள 1800 இந்தியர்கள்

Posted: 17 Aug 2013 05:10 PM PDT

நெதர்லாந்து நாட்டில் மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இயங்கிவருகின்றது. லாப நோக்கில்லாத இந்த அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.

மிராரோடு: நகைக்கடையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை

Posted: 17 Aug 2013 03:19 PM PDT

தானே மாவட்டம் மிராரோடு நயாநகர் பகுதியை சேர்ந்தவர் பாவேஷ் (வயது 49). இவர் அதே பகுதியில் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யும் நகைக்கடை நடத்தி வருகிறார். பாவேஷ் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 6-வது உடல் மீட்பு

Posted: 17 Aug 2013 02:33 PM PDT

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்து ரக்‌ஷக் புதன் கிழமை அதிகாலை வெடித்து சிதறி மூழ்கியது. அதில் இருந்த தமிழக லெப்டினண்ட் கமாண்டர் வெங்கட் ராஜூ

அன்னா ஹசாரே மீது தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு

Posted: 17 Aug 2013 08:59 AM PDT

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜன்தத்ரா யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி அவர் உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த ஜன்தத்ரா யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தின்போது

ராஜஸ்தான் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்: 4 பேர் உயிர் ஊசல்

Posted: 17 Aug 2013 08:07 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் கோத்புட்லி துணை மாவட்ட சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சமையல் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் இரு தரப்பினரும் பாத்திரங்கள் மற்றும் விறகுக் கட்டையால் அடித்துக் கொண்டனர். இதுபற்றி அறிந்த சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சண்டையை விலக்கினர். பின்னர் காயம் அடைந்தவர்களை உடனடியாக

காசியாபாத் கடையில் ரெடிமேடு ஆடைகள் வாங்கினால் வெங்காயம் இலவசம்

Posted: 17 Aug 2013 07:16 AM PDT

சமையலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள வெங்காயத்தின் விலை அசுரவேகத்தில் உயர்ந்து வருகிறது. முக்கிய நகரங்களில் கிலோ 80 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனையாகிறது. சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும்: பீகார் பா.ஜனதா தீர்மானம்

Posted: 17 Aug 2013 05:52 AM PDT

பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். மோடியை முன்னிலைப்படுத்தியதில் ஒருசில தலைவர்கள் அதிருப்தி அடைந்தாலும், கட்சியில்

சோலார் பேனல் மோசடி பற்றி நீதி விசாரணை: உம்மன்சாண்டி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

Posted: 17 Aug 2013 04:36 AM PDT

சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாக கேரளாவில் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்தது. இதை தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர்

உலகமயமாக்கலை திரும்பப்பெற முடியாது: பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு

Posted: 17 Aug 2013 04:10 AM PDT

இந்திய பொருளாதார வரலாறு இதுவரை காணாத அளவாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.62.03 என்ற அளவுக்கு நேற்று வீழ்ச்சி ஏற்பட்டது. பின்னர், மாலையில் இது ரூ.61.65 ஆக ஆனது. இந்த வீழ்ச்சி, மும்பை பங்கு சந்தையில் நேற்று பெரிய அளவில் எதிரொலித்தது. பங்கு சந்தை குறியீட்டு எண் சென்சக்ஸ் 769.41 புள்ளிகள் சரிந்து, 18,598.18 புள்ளிகளில் முடிந்தது. பங்கு சந்தையில் ஏற்பட்ட அதிரடி வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஷ்ரத் என்கவுண்டர் வழக்கு: போலீஸ் அதிகாரி பாண்டேவிடம் 21-ம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி

Posted: 17 Aug 2013 03:45 AM PDT

குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதால் இந்த என்கவுண்டரை நடத்தியதாக காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால், இதுதொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட்–14 செயற்கைகோள் திங்கட்கிழமை ஏவப்படுகிறது

Posted: 17 Aug 2013 12:57 AM PDT

இந்தியாவின் தொலைத் தொடர்பு சேவைக்காக ஜிசாட்–14 என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அதிநவீன சக்திகள் கொண்ட 6 சி–பாண்ட் மற்றும் 6 கியூ–பாண்ட் என மொத்தம் 12 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன

பாரதீய ஜனதா கட்சியில் மோடியை விமர்சித்தால் 6 ஆண்டு சஸ்பெண்டு: ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

Posted: 17 Aug 2013 12:45 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரே பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படுகிறார். பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

திரிபுராவில் 4 வயது மாணவியை கற்பழித்த ஆசிரியர்

Posted: 17 Aug 2013 12:39 AM PDT

திரிபுரா மாநிலம் பிஷ்ரம் கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் சிரஞ்ஜித் தாஸ். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 4 வயது மாணவியை கற்பழித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தாள். உடனே அவர்கள் ஆவேசம் அடைந்து பள்ளிக்கு வந்தனர். அதற்குள் ஆசிரியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™