Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ ?

Posted: 02 Aug 2013 03:10 PM PDT

கவிதை அழுத  போதெல்லாம்   கையாக  துடைத்த  கவிவரிகள் .. கவிதை சிரித்த போதெல்லாம் கருத்துக்களாக உதிர்த்த புன்னகை வரிகள் ... கவிதை சிந்தித்த  போதெல்லாம் கற்பனைகளாக உதித்த  கவிவரிகள் ... கவிதை  சிறந்த  போதெல்லாம்   கலை வடிவம் தந்த  கவிவரிகள்  .... கவிதை கானமாக கொட்டிய போதெல்லாம் காற்று  வெள்ளம்  போல்  ஆடிய கவிவரிகள்  ... கவிதை  என்னும் கவிவரிகள் மட்டும் கலங்கி நிற்பது  ஏனோ  .... கலைகள்  எல்லாம் சிறக்க  என் கவி  போற்றிய  கலைஞன் நீயே கவிஞன்  நீயோ  கலங்கி  நிற்பது ...

சூரியனே என்ன கோவம்

Posted: 02 Aug 2013 02:23 PM PDT

தினமும் வந்து கதிர் வீசும் சூரியனே ஏன் இன்று முகம் காட்ட மறுக்கிறாய் மேகங்கள் சூரியனை மறைக்கலாம்   சில கணத்தில் மேகமது மறையலாம் மறைத்த அம்மேகத்தால் மறைய வேண்டாம் வீசும் உன் கதிரை குறைக்கவேன்டாம் நேரத்தில் நீ உதிக்க மறுக்கவேண்டாம் மேகத்தை அதற்காக வெறுக்கவேண்டாம் உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம் நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம் இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம் கறை மறந்து நீ வர வரவேற்கிறோம்

பெண்கள் எந்த வயது அழகு?

Posted: 02 Aug 2013 02:15 PM PDT

மனிதர்கள் எந்த வயதில் அழகாகத் தெரிகிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.இந்த கணிப்பு இவ்வளவு நாட்களாக நாம் கொண்டிருந்த எண்ணங்களை உடைத்துப் போட்டுள்ளது. பொதுவாக பெண்கள் டீன் ஏஜில் தான் அழகாக தெரிவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் நடுத்தர வயதில்தான் பெண்கள் ஜொலிக்கிறார்கள் என்று இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது. பெண்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட இந்து ஆய்வில் பெண்கள் 30 வயதில் மற்றவர்களுக்கு அழகாக தெரிவார்கள் என்று தெரியவந்தது. ...

நேதாஜி - மதுமிதா

Posted: 02 Aug 2013 10:42 AM PDT

நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்.... சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள்  சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்., அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் ...

காமெடி

Posted: 02 Aug 2013 10:22 AM PDT

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்: பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம். வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும். பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்; * * * சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது பாலு&வேலு: ஏன்!!!!!! சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் ...

திருடுபோன காரை உடனே கண்டுபிடிக்க ஓர் எளிய வழி!

Posted: 02 Aug 2013 10:04 AM PDT

திருடு போன காரை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. இன்ஸ்யூரன்ஸ் இல்லையே, டிராக்கர் கருவியும் பொருத்த வசதி இல்லை என்பவர்களுக்கான செய்திதான் இது. ஓர் பழைய மொபைல் அல்லது ரூ.1000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு மொபைல்போன் போதும். திருடு போன காரை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கான வழிமுறைகள் ஸ்லைடரில் காணலாம். குறைந்த விலையில் நீடித்த ஸ்டான்ட் பை பேட்டரி கொண்ட மொபைல்போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். சிறந்த நெட்வொர்க் கொண்ட தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் சிம் கார்டு ...

எருமைக் கணக்கு!

Posted: 02 Aug 2013 10:03 AM PDT

பண்ணையார் ஒருவர் தன் ஐந்து வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். "ஐயா! நான் பக்கத்து ஊர்ப் பண்ணையார்; செல்வம் படைத்தவன். என்னிடம் ஐம்பது எருமை மாடுகள் உள்ளன. இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?'' என்றார். "நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான்,'' என்றார் ஆசிரியர். "ஆ! நூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல எருமை மாடு ஒன்று வாங்கலாமே,'' என்றார் பண்ணையார். "வாங்குங்கள். உங்கள் ...

ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்!

Posted: 02 Aug 2013 10:01 AM PDT

மும்பையில் ஓடும் ரயிலில் ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது, அந்த பெண்மணி பயணம் செய்த அதே ரயில் பெட்டியில் மூன்று நர்சுகள் பயணம் செய்ததால் கர்ப்பிணிக்கு ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. மும்பையில் வசாய் எனும் இடத்திலிருந்து தாதருக்கு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இந்த ரயிலின் லேடிஸ் கம்பார்ட்மெண்டில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார். குழந்தை பிறப்பு தேதி நெருங்குவதால் பொரிவ்லியிலுள்ள பகவதி மருத்துவமனைக்கு சென்றுக்கொண்டிருந்த அவருக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டது. ரயில் ...

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Posted: 02 Aug 2013 10:00 AM PDT

நாள்தோறும் அதிகரித்து வரும் செல்போன் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை தூங்க விடாமல், தொல்லை கொடுக்கும் விளம்பர அழைப்புகள், மோசடி லாட்டரி பரிசு எஸ்எம்எஸ்களும் இப்போதும் பலருக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன். இவற்றை தடுக்க டிராய் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியது. எனினும், ஏதாவது ஒரு வழியில் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் வருவது நீடிக்கிறது. இந்த நிலையில், வேண்டாத விளம்பர எஸ்எம்எஸ்கள், அழைப்புகளை அனுப்புவோரை கண்டுபிடித்து தண்டிக்க புதிய வழியை டிராய் அறிவித்திருந்தது. அதன்படி, தொல்லை எஸ்எம்எஸ் ...

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய் !

Posted: 02 Aug 2013 09:59 AM PDT

பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். பீர்க்கங்காயை முற்றிய பிறகு தான் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்! சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன. 100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் ...

வீட்டு உணவுகளே விஷமாகிறது - ஜாக்கிரதை !

Posted: 02 Aug 2013 09:59 AM PDT

வித்தியாசமான உணவை, ருசியாக சாப்பிட எல்லோரும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அந்த சுவை மிகுந்த உணவே விஷமாகி, உடலை கடுமையாக பாதித்துவிடுகிறது. பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. எந்தெந்த உணவுகள் நமது உடலுக்கு ஏற்றதாக இருக்குமோ, அதில் நமக்கு பிடித்த மசாலாக்கள் சேர்த்து சமைப்பதால் வீட்டு உணவுகள் பெரும்பாலும் உடலுக்கு பிரச்சினை தராததாக இருக்கிறது. வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் சிறந்ததாக இருந்தாலும், அது முழு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் ...

கடலை எண்ணெய் இன் நன்மைகள்

Posted: 02 Aug 2013 09:55 AM PDT

சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது. * நிலக்கடலை என வழக்கு மொழியில் வழங்கப்படும் வேர்க்கடலை மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. தற்போது வெப்பமண்டல பகுதிகளான சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா பகுதிகளில் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக பயிரிடப்படுகிறது. இதன் பருப்புகளில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. * கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது. ...

மகிழ்சிக்கு வழி -பகுத்தறிவு வழிகாட்டி இதழை டவுன்லோட் செய்ய

Posted: 02 Aug 2013 09:55 AM PDT

மகிழ்சிக்கு வழி -பகுத்தறிவு வழிகாட்டி இதழை டவுன்லோட் செய்ய மகிழ்சிக்கு வழி -பகுத்தறிவு வழிகாட்டி இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/uq798y803oyundk/the-happines-tamil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos

Posted: 02 Aug 2013 09:55 AM PDT

மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ஒரு  நாள் காலை நாங்கள் கிளம்பினோம்  இந்த இரண்டு கோவிலகலையும் பார்க்கணும் என்று , இரண்டுமே ரொம்ப பழைய கோவில்கள். இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது தொட்டமளூர்  நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே ...

உடல் எடை அதிகரிக்காமல் திருப்தியாக சாப்பிடும் வழிகள்!

Posted: 02 Aug 2013 09:54 AM PDT

இந்த உலகில் ஒரு சாண் வயிற்றுக்கு உணவு தேடுவதே முதன்மையான வேலையாக இருக்கிறது. அத்தகைய உணவு நமக்கு திருப்தியையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் மற்றும் சிற்சில விஷயங்கள், பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன. சாப்பிடும் உணவு நிறைவையும், திருப்தியையும் தரவில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற் குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்கிறீர்களா? ...

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் !

Posted: 02 Aug 2013 09:52 AM PDT

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்தகைய மழைக்காலத்தை விரும்புவதற்கு பெரும் காரணம், மிதமான வெப்பநிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்கத்திற்கே எடுத்துச் செல்லும். நம்மை பொருத்தவரை மழைக்காலம் என்றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட்டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்றும் இருக்கத் தானே செய்யும். ...

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Posted: 02 Aug 2013 09:46 AM PDT

நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும். மதிய உணவுக்கு பிறகு கொய்யாபழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி,அரிப்பு, மூலநோய், சீறுநீரக கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு. கொய்யா ...

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Posted: 02 Aug 2013 09:45 AM PDT

திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்பட்டு தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம். ஆனால் யாரால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தடைகளை கடந்து போக முடிகிறதோ, அவர்களால் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ முடியும். அதிலும் குழந்தைகளுக்காக பெண்கள் தங்கள் திருமண வாழ்வு வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவார்கள். தங்களின் பாதுகாப்பு தேவையை மனதில் ...

கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...

Posted: 02 Aug 2013 09:43 AM PDT

'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு.... நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையதளத்திலும் உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய விவரத்தைக் கொடுக்க வேண்டாம். நன்கு தெரிந்த, நம்பிக்கையான இணையதளத்தில் மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டால் கொடுங்கள். யாராவது போனில் தொடர்புகொண்டு, உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தை, குறிப்பாக பின்பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றிக் கேட்டால் எந்த விவரத்தையும் சொல்லாதீர்கள். வங்கியில் ...

இதயத்தின் காவலன் பீன்ஸ் !

Posted: 02 Aug 2013 09:41 AM PDT

நமது உடலை நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைவது என்ன? உதாரணமாக காய்ச்சல் என வைத்துக்கொள்வோம். காய்ச்சல் ஏற்பட என்ன காரணம். வைரஸ் கிருமிகள் நமது உடலை தாக்கும் அவற்றை எதிர்க்க போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் நமது உடலுக்குள் வைரஸ் எளிதில் நுழைந்து விடுகிறது. அவற்றை தவிர்க்க போதுமான அளவு சத்துகள் தேவை. இதில் ஏதேனும் ஒரு சத்துகள் குறைந்தாலும் உடலை நோய் தாக்க ஆரம்பிக்கும். நமது உடலை சீராக இயங்கச் செய்ய இதயத்தின் பங்கு மிக முக்கியமானது. இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகளில் நாம் ...

ஃபுட் பாய்சன் வராமல் தடுப்பது நம் கையில் !

Posted: 02 Aug 2013 07:46 AM PDT

அந்த சிறுமிக்கு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலி. தொடர்ந்து வயிற்றுப்போக்கு. கடைசியில் அவள் இறந்தே போனாள். சிக்கன் பிரியாணியில் வேர்க்கடலையையும் கலந்திருந்ததால், அந்த உணவு விஷமாக மாறிவிட்டது என்றார்கள். ஆனால், வேர்க்கடலையையும் சிக்கன் பிரியாணியையும் கலந்து கொடுத்ததால் இந்த விபத்து நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நிலக்கடலையோ சிக்கன் துண்டோ கெட்டுப் போயிருக்க வேண்டும். உண்மையில், அதுதான் உணவை விஷமாக்கியுள்ளது. நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக ...

நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு !

Posted: 02 Aug 2013 07:29 AM PDT

நல்லோரைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும். இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்து மக்களுக்கு நல்லுபதேசங் களைச் செய்துள்ளார். ஸ்ரீதன்வந் திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாக வதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத் தில் குறிப்புகள் உள்ளன. ஒருமுறை ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -26)

Posted: 02 Aug 2013 06:42 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 02 Aug 2013 06:39 AM PDT

'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015. செல் 9944391668. உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ...

அனைத்து வீடியோக்கள் ஒரே இடத்தில் குழந்தைகளுக்கு....

Posted: 02 Aug 2013 06:36 AM PDT

உங்கள் குழந்தைகளின் அறிவு விருத்திக்கு ஏற்புடையதாகவும் நல்ல பொழுது போக்கிற்கு ஏற்றதாகவும் அத்தனை அம்சங்களையும் தாங்கி ஒரு வலைதளம் உள்ளது . இந்த வலைதளத்தில் குழந்தைகள் பெரிதும் விரும்பும் டோராவின் சாகசங்கள், முல்லா கதைகள் ,விக்ரமாதித்தன் கதைகள் போன்ற அத்தனை வீடியோக்களும் உள்ளது.  வலைதளத்திலேயே நேரடியாக கண்டுகளிக்கலாம் அல்லது வீடியோவை சேமிக்க விரும்புபவர்கள் அதற்குரிய வழிகளில் சேமித்து வைத்து குழந்தைகளுக்கு காண்பிக்கலாம் . லிங்க்  செல்ல இங்கேசுட்டவும் . வலைதளத்தில் தெரியும் வீடியோவின் ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 02 Aug 2013 06:10 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 02 Aug 2013 06:07 AM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 02 Aug 2013 05:58 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் !

Posted: 02 Aug 2013 04:57 AM PDT

தெய்வ வாகனங்களுள், திருமாலின் வாகனமாகிய கருடனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கருடனைத் துதிப்பவர்களுக்கு நாக தோஷம் மற்றும் பதினாறு வகை நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பர். மேலும் கருடனை வழிபடுபவர்களது  வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாததோடு, தொலைந்த பொருட்களும் உடனே கிடைக்கும். இத்தனை சிறப்புமிக்க கருடன் ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்நாள் கருட ஜெயந்தி எனும் பெயரில் வைணவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கருட ஜெயந்தி 11-8-2013 அன்று கொண்டாடப்பட உள்ளது. காசிப ...

அழகி!

Posted: 02 Aug 2013 03:26 AM PDT

பழைய காலத்து வீட்டின் திண்ணையில் குழந்தைகள் அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் ஆட்டமும், பாட்டமும் ஓவென்ற இரைச்சலும் காதைப் பிளந்தன. சாரதா பாட்டிக்கு, தினசரி ஒரு பெரிய தலைவேதனை ஆகிவிட்டது. அந்த தெருவிலே சாரதா பாட்டியின் வீட்டுத் திண்ணைதான் பெரிய திண்ணை. அந்தத் திண்ணையில் தான் தினசரி மாலை பள்ளி முடிந்ததும், தெருப்பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி கும்மாளம் போடுவர். பாட்டிக்கு எண்பது வயது ஆகிறது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. முகத்தில் மடிப்பு மடிப்பாய் சுருக்கங்கள். பற்கள் முழுவதும் ...

அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Posted: 02 Aug 2013 02:02 AM PDT

கான் இன்னும் தூங்கவில்லையா? நாளை வேலை இல்லையோ?

சிங்கப்பூர் மகா மாரியம்மன்

Posted: 02 Aug 2013 12:47 AM PDT

மகா மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில். மகா மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827ல் அமைக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள். இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயணப்பிள்ளை ...

சீனப்பொருள்களால் சின்னாபின்னமாகி வரும் இந்திய சிறு தொழில்கள்!

Posted: 02 Aug 2013 12:46 AM PDT

போட்டிகள் நிறைந்த இன்றைய நாளில் ஒரு சிறு தொழிற்சாலையை நடத்துவது பெருஞ்சவாலாகும். பக்கத்து நிறுவனங்களிடமிருந்தோ பக்கத்து மாநிலங்களிடமிருந்தோ போட்டி என்ற நிலைமாறி அயல்நாடுகளிடமிருந்து கடுமையான போட்டியினை சிறுதொழில் முனைவோர் சந்தித்து வருகின்றனர். இதைச் சமாளிக்க அரசின் ஆதரவு பெரிய அளவில் தேவைப்படுகிறது. 1972 முதல் 1995 வரை சிறு தொழில்களுக்கு மைய அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. 1995-க்குப் பிறகு உதவி குறைந்துவிட்டது. அயல்நாடுகளின் போட்டியென்று கூறும்போது, சீனாவில் தயாராகும் பொருள்கள் மிகக் ...

ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!

Posted: 02 Aug 2013 12:44 AM PDT

மதுரை: "இப்ப வருமோ... அப்ப வருமோ... எப்ப வரும்' என, மதுரை பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்களின், ஐந்து நாள் கண்காட்சி, நேற்று துவங்கியது. "எங்களின், பொழுதுபோக்கு பசிக்கும், புது, "ஷாப்பிங்' அனுபவத்திற்கும், தீனி போட வந்து விட்டது இக்கண்காட்சி' என, மதுரை மக்கள், மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மதுரை தமுக்கம் மைதானத்தில், ஆக., 5 வரை நடக்கும் இக்கண்காட்சியை, மதுரை கலெக்டர், எல்.சுப்பிரமணியன், நேற்று, துவக்கி வைத்தார். "தினமலர்' இணை ஆசிரியர், கி.ராமசுப்பு, உடன் ...

ஆடிப்பெருக்கு - காவிரியில் கரைபுரளும் தண்ணீர் :)

Posted: 02 Aug 2013 12:42 AM PDT

திருச்சி : காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆடிப்பெருக்கை கொண்டாட புதுமண தம்பதிகள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் நீர்நிலைகளில் குறிப்பாக காவிரி ஆற்றில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படும். அன்றைய தினம் புதுமண தம்பதிகள் திருச்சி காவிரி ஆற்றுக்கு வந்து புனித நீராடி பூஜை செய்து, மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வார்கள். திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவார்கள். அதேபோல் திருமணமாகாத பெண்கள், நல்ல வரன் அமையவேண்டி, பூஜை செய்து மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள். ...

ஆடிப்பெருக்கு !

Posted: 02 Aug 2013 12:40 AM PDT

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். ...

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ரூ.600 கோடி செலவில் பாய்லர் ஆலை இன்று திறப்பு

Posted: 02 Aug 2013 12:33 AM PDT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடி பட்டியில் 57 ஏக்கர் பரப்பளவில் ரூ.600 கோடி செலவில் பாய்லர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது. விழாவில் கலந்து கொள்வற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருமயம் அருகே உள்ள ஓலைக்குடி பட்டியில் பாய்லர் தொழிற்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றார். அங்கு மத்திய மந்திரிகள், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மற்றும் பாய்லர் ...

நெற்றிக்கண் திறப்பினும் பசி பசியே...!!!

Posted: 01 Aug 2013 11:59 PM PDT

பச்சை பிள்ளையின் அழுகுரலுக்கும், பரிதவிக்கும் தாயின் தவிப்பிற்கும், பஞ்சம் போக்க எவனும் வருவானோ பசி நீங்க பழைய சோறு தருவானோ..?? எத்தனை தவமிருந்து நாம் பிறந்தோம் எப்படி மனிதரென நாம் வளர்ந்தோம், எங்கே தேடினால் விடை அறிவோம் எதற்கு இனி நாம் விடை பெறுவோம்..!! ஒட்டிய வயிறும், ஓடாய் தேய்ந்த உடலும் மெலிந்த கன்னங்களும் குழி விழுந்த கண்களும் காய்ந்த சருகாய் முடியும், கிழிந்து தொங்கும் பாதமும், போதும் போதும் எத்தனை காலங்களுக்கு தான் பசிகொடுமையின் விலையில்லா விளம்பர தூதர்களாய் நாங்கள்...!! எச்சில் ...

நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்!

Posted: 01 Aug 2013 11:35 PM PDT

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் அண்ணாநகர் காவல் மாவட்ட பகுதிகளில் சுற்றிவரும் நவீன நடமாடும் காவல் நிலைய சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சண்முகவேல் துவக்கி வைத்தார். அண்ணாநகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ், உதவி கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், கண்ணன், செந்தில்குமரன் பங்கேற்றனர். 2002ல் போலீஸ் வாகனத்தில் சிறியளவில் துவங்கப்பட்ட இந்த நடமாடும் காவல் நிலையம் இப்போது புதுப்பொலிவுடன் கணினி, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய புரொஜக்டர்கள், ஒலிபெருக்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. ...

கணித ஒலிம்பிக் போட்டி: இந்தியா 5 பதக்கங்களை வென்றது ........

Posted: 01 Aug 2013 11:33 PM PDT

டெல்லி: கொலம்பியா நாட்டில் நடைபெற்ற 54வது கணித ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 1959ம் ஆண்டு ருமேனியாவில் தொடங்கப் பட்ட கணித ஒலிம்பிக் போட்டிகள், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக உலக அளாவில் நடத்தப்படும் கணிதப் போட்டியாகும். ஆரமப்த்தில் வெறும் 7 நாடுகளின் பங்களிப்போடு மட்டுமே தொடங்கப்பட்ட இப்போட்டியில் தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகள் வரை கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாட்டில் நடத்தப்படும் இப்போட்டியின் விதிமுறைகளையும், , மரபுகளையும் கணித ஒலிம்பிக் போட்டியின் ...

வைரஸ் பிரச்சனைக்கு உடனடி தீர்வு....!

Posted: 01 Aug 2013 10:56 PM PDT

வணக்கம் நண்பர்களே...! வைரஸ் பிரச்சனை தான் நம்ம எல்லாருக்கும் தீர்க்க முடியாத பெரும்பிரச்சனை. நாம் இன்ஸ்டால் செய்திருக்கும் ஆன்ட்டிவைரஸ் அனைத்து வைரஸ்களையும் சரியாக கண்டுபிடிக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேரும் தனித்தனியாக வைரஸ் டேட்டாபேஸ் வைத்திருப்பார். ஒருவரிடம் உள்ள வைரஸ் தொடர்பான டேட்டா இன்னொருவரிடம் இருக்காது. ஆனால் VirusTotal மூலம் மொத்தம் 49 ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர்களில் Scan பண்ண முடியும். வெறும் Files மட்டுமல்லாது சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு வெப்சைட்டையும் ...

500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்?

Posted: 01 Aug 2013 10:51 PM PDT

1909ம் வருடம், கனடாவின் பாறைகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் டூலிட்டில் வால்காட் 530 மில்லியன் பழமையான உயிரின படிமன்களை கண்டு திகைத்து போய்விட்டார். அந்த கால கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள், "கேம்பிரியக் காலகட்டம்' என குறிப்பிடுகின்றனர். அப்போது வடக்கு அமெரிக்காவின் ஆழம் அற்ற கடலில் மண் அடுக்குகளில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிமன்களாகும் இவை. தண்ணீரின் அடியில் ஏற்பட்டது நிலச்சரிவு. அங்கே வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்கள் ஆழப் புதைந்துவிட்டன. அங்கே கடும் குளிரும், ஆக்ஸிஜன் இல்லாத ஆழமும் நிலவியது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™