Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பாகிஸ்தான் வருகை

Posted: 31 Jul 2013 11:01 PM PDT

169d5a5b-1d5a-4b59-84c5-9dfc51f557dd_S_secvpf

169d5a5b-1d5a-4b59-84c5-9dfc51f557dd_S_secvpfஅமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பாகிஸ்தான் வந்தடைந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷரீப், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் ராணுவ தளபதி அஷ்ஃபக் கயானி ஆகியோருடன் அவர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்று பேச்சளவில் கூறிக்கொண்டிருக்காமல் உண்மையிலேயே தீவிரவாதிகளை களையெடுக்கும் வேலையில் பாகிஸ்தான் அரசு மும்முரமாக ஈடுபட வேண்டும் என அவர்களிடம் ஜான் கெர்ரி வற்புறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் பொருளாதாரம், எரிசக்தி, மின்சாரம் போன்ற தட்டுப்பாடுகளை நிலைப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இருக்கும் என தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்தும் தாக்குதல் தொடர்பாகவும் பாகிஸ்தான் விவாதிக்க உள்ளது. முன்னதாக ஜான் கெர்ரியின் வருகை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை அவரது நேற்றைய பாகிஸ்தான் பயணத்தை ஓரளவுக்கு ரகசியமாகவே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் பா.ஜ.க.வின் அயல்நாட்டு கிளை துவக்கம்

Posted: 31 Jul 2013 10:59 PM PDT

1303bc49-8e44-4baf-af91-601f20cb4e31_S_secvpf

1303bc49-8e44-4baf-af91-601f20cb4e31_S_secvpfபா.ஜ.க.வின் அயல்நாட்டு கிளை கனடாவின் 4 பெரிய நகரங்களில் கடந்த திங்கட்கிழமை துவக்கப்பட்டது. டொராண்டோ கிளையின் ஒருங்கிணைப்பாளராக ஆசாத் கவுசிக், மாண்ட்ரியல் கிளையின் ஒருங்கிணைப்பாளராக ஷிவேந்திர திவேதி, வேன்கோவர் கிளையின் ஒருங்கிணைப்பாளராக ஆதித்யா டவாட்டியா, ஓட்டாவா கிளையின் ஒருங்கிணைப்பாளராக ஷிவ் பாஸ்கர் ஆகியோரை கடல் கடந்த பா.ஜ.க.வின் நண்பர்கள் இயக்கத்தின் அகில உலக ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜாலி நியமித்துள்ளார்.
3 கோடியே 30 லட்சம் மக்கள் வாழும் கனடாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. இந்தியா மற்றும் கனடாவில் வாழும் மக்களுக்கு இடையிலான கலை மற்றும் பாரம்பரிய இணைப்பு பாலமாக கனடாவில் துவங்கப்பட்டுள்ள கடல் கடந்த பா.ஜ.க.வின் நண்பர்கள் அமைப்பு செயல்படும் என விஜய் ஜாலி தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேசியாவில் நாய்களின் படத்துடன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பெண் கைது

Posted: 31 Jul 2013 10:56 PM PDT

மலேசியாவில் நாய்களை பழக்கும் பயிற்சி நிலையம் நடத்தி வருபவர் மஸ்னா யூசப்(38). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இந்த பெண் சமீபத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார். நாய்களை குளிப்பாட்டுவது போன்றும் அவற்றுக்கு உணவு போடுவதும் போன்ற காட்சிகளின் பின்னணியில் தொழுகைக்காகன பாங்கோசை ஒலிக்க ரம்ஜான் வாழ்த்துகள் என்ற வாழ்த்து அட்டையுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. மதத்தின் அடிப்படை நம்பிக்கைக்கு ஊறு விளைவித்ததாக அந்த பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். 60 சதவீதம் [...]

உத்தரகாண்ட் நிலச்சரிவில் 4 பேர் பலி

Posted: 31 Jul 2013 10:48 PM PDT

உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை தொடர்கிறது. இதனால் நிலச்சரிவு, வெள்ளம் என மக்கள் மீண்டும் அவதிப்படுகின்றனர். ராஜ்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது விழுந்தது. இதில், கணவன் – மனைவியும் 2 குழந்தைகளும் மண்ணில் புதைந்து பலியாகினர்.

கால்வாயில் பஸ் விழுந்து 2 பேர் பலி

Posted: 31 Jul 2013 10:45 PM PDT

சண்டிகரில் பயணிகள் பஸ் ஒன்று கால்வாயில் விழுந்ததில் 2 பேர் பலியாயினர். மேலும் பலர் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு நேற்று முன்தினம் இரவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு 2 மணிக்கு பஞ்சாபில் உள்ள ஷிர்ஹிண்ட் என்ற இடத்தில் சென்றபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்தது.தகவல் அறிந்து போலீசாரும் மீட்பு படையினரும் கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்டனர். இதில் [...]

ஒரே நாளில் மெட்ரோவில் 24 லட்சம் பேர் பயணம்

Posted: 31 Jul 2013 10:40 PM PDT

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியது.டெல்லியில் மக்கள்தொகை பெருக்கத்தால், வாகனங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிறது. வாகன நெரிசலால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலால் வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தாமதமாக சென்று வரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பயணிகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுவர மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, [...]

இலங்கை அகதிக்கு 10 வருடகால சிறை தண்டனை

Posted: 31 Jul 2013 10:37 PM PDT

இலங்கை அகதி சௌந்தராஜன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்து நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சௌந்தராஜன் (வயது 43). இவர் வெடிபொருட்கள் மற்றும் செய்மதி தொலைபேசிகளுடன் காரில் வந்தபோது நாகை மாவட்டத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்படது. அதில் குற்றவாளி சௌந்தராஜனுக்கு [...]

மேலும் 74 தமிழக மீனவர்கள் கைது

Posted: 31 Jul 2013 10:34 PM PDT

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடைக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோர் காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இந்திய மீன்பிடித் திணைக்கள பிரதி பணிப்பாளர் உமா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 65 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி 139 தமிழக மீனவர்கள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் [...]

வேதனையுடன் மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்

Posted: 31 Jul 2013 10:29 PM PDT

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசுக்கு இது குறித்து பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 34 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை என்றும் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடவும் ஜெயலலிதா கேட்டுக் [...]

சுதந்திர தேர்தலுக்காக வடக்கில் இராணுவம் அகற்றப்பட வேண்டும் – கலைஞர்

Posted: 31 Jul 2013 10:27 PM PDT

சுதந்திரமாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றால், இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் வடக்கு மாகாண சபைக்கு வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை தலைமைத் தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷபிரிய, தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் 12.7.2013 அன்று ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த கூட்டத்திற்குப்பிறகு, தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™