Tamil Star |
- பூரி ஜெகந்நாதர் கோவில் அர்ச்சகர்களால் தாக்கப்பட்ட இத்தாலியப் பெண் புகாரை திரும்பப் பெற்றார்
- பெரம்பூர் வட்ட தி.மு.க. செயலாளர் வெட்டிக்கொலை
- பலவந்தமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர் சாவு : தைவான் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா
- சூரியனை சுற்றி அதிசய ஒளிவட்டம்: பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்
- அமெரிக்க புலனாய்வுத்துறை அதிரடி : பாலியல் தொழிலில் சிறுவயதினரை ஈடுபடுத்தியவர்கள் கைது
- உலக இளையோர் செஸ் போட்டி: இந்திய அணிக்கு தங்கம்
- 2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு
- வடமாகாண சபைத் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக இருக்காது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சம்
- 3 ஆவது தொகுதி படைவீரர்கள் தமிழ்மொழி பயிற்சி நெறியில் பூர்த்தி
- ஈபிடிபியின் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை தவராசா : போட்டியில் டக்ளஸ் இல்லை
| பூரி ஜெகந்நாதர் கோவில் அர்ச்சகர்களால் தாக்கப்பட்ட இத்தாலியப் பெண் புகாரை திரும்பப் பெற்றார் Posted: 29 Jul 2013 09:32 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெரம்பூர் வட்ட தி.மு.க. செயலாளர் வெட்டிக்கொலை Posted: 29 Jul 2013 09:28 PM PDT பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் இடிமுரசு இளங்கோ (வயது 33). இவர் பெரம்பூர் வட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் அவர் பெரம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பலினர் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த இடிமுரசு இளங்கோ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பலவந்தமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர் சாவு : தைவான் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா Posted: 29 Jul 2013 09:18 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| சூரியனை சுற்றி அதிசய ஒளிவட்டம்: பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர் Posted: 29 Jul 2013 09:13 PM PDT
ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்த இளம்பெண்கள் சூரியனின் வண்ணகாட்சியை கண்டு களித்தனர். அப்போது அவர்களின் கண்கள் கூசியது. சற்று நேரத்தில் அதிசய வட்டம் மறைந்துவிட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவரும், ஈரோடு கல்லூரி பேராசிரியருமான மணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– மேகத்தில் உள்ள சிறு நீர்த்திவலைகள் வழியாக சூரிய ஒளி பாயும்போது இதுபோன்று சூரியன் பல வண்ணங்களில் காட்சி அளிக்கும். இதுவே பெரிய நீர்த்திவலைகளாக இருந்தால் மழையாக கீழே பொழிந்துவிடும். மழைக் காலங்களில் இது நிகழும். கண்கள் கூசுவது சாதாரண நிகழ்வுதான். சூரியனை எப்போதுமே நேரடியாக கண்களால் பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் கண்கள் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க புலனாய்வுத்துறை அதிரடி : பாலியல் தொழிலில் சிறுவயதினரை ஈடுபடுத்தியவர்கள் கைது Posted: 29 Jul 2013 09:01 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக இளையோர் செஸ் போட்டி: இந்திய அணிக்கு தங்கம் Posted: 29 Jul 2013 08:54 PM PDT உலக இளையோர் செஸ் ஒலிம்பியாட் போட்டி சீனாவில் நடந்தது. இதன் அணிகள் பிரிவில் சயந்தன் தாஸ், திப்தயன் கோஷ், முரளி கார்த்திகேயன், ஷர்துல் காஜரே ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3.5–0.5 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி மொத்தம் 18 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது. ரஷிய அணி 2–வது இடமும், துருக்கி அணி 3–வது இடமும் பெற்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு Posted: 29 Jul 2013 08:50 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடமாகாண சபைத் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக இருக்காது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சம் Posted: 29 Jul 2013 08:42 PM PDT
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய தினம் வேட்புமனுத்தாக்கல் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மாலை 4 மணியளவில் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் இரா சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடாத்தப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அது நடைபெறாது போனது எனினும் கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது. எனவே இந்த தேர்தல் சர்வதேச அழுத்தத்தினாலேயே நடத்தப்படுகின்றது. அதற்கான நியமனப்பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் தேர்தல் நடைபெறுகின்றது என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வடமாகாணத்தில் முதல் முறையாக நடைபெறும் இந்த தேர்தலில் தமது மாகாணத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக மக்கள் தமது ஜனநாயக உரிமையினை முதல் முறையாக பயன்படுத்த உள்ளனர் எனினும் கடந்த கால தேர்தல்கள் போல சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு இருந்ததைப் போல இல்லாது இந்த தேர்தல் சுதந்திரமாக நடைபெறவேண்டும். எனவே இவ்வாறான தேர்தலை நடாத்த த.தே.கூ பரிபூரண ஒத்துழைப்பினை நல்கும். அத்துடன் அவ்வாறான தேர்தலே நடைபெறவேண்டும் என்றும் இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றோம். எனினும் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுமா என்பதற்கு பல சந்தேகங்கள் இருக்கின்றது. ஒரு சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழுவை, சுதந்திரமான பொதுச் சேவை ஆணைக்குழுவை , சுதந்திரமான பொலிஸ் சேவை ஆணைக்குழுவை நியமனம் செய்ய உறுதியளித்த 13ஆவது திருத்தம் நீக்கப்பட்டு அவ்வாறான ஒழுங்குகள் தற்போது இல்லை. இவ்விதம் இல்லாத சூழலில் நடைபெறும் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுமா நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படுமா என்பது பற்றி சந்தேகம் கொள்ள போதிய இடமுண்டு. மேலும் தேர்தல் காலத்தில் சுதந்திரமான பிரசாரத்திற்கு இடமிருக்க வேண்டும். கூட்டங்களில் பங்குபற்ற மக்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கூடும் சுதந்திரம் இருக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும்.வாக்களிப்பு நிலையங்களில் கடமை புரிபவர்கள் சட்டத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும். வாக்கெண்ணுவது சட்டத்திற்குள் நடைபெறவேண்டும். இருப்பினும் சட்டத்திற்கு முரணானவகையிலும் அமையலாம் என்ற சந்தேகம் கடந்த கால தேர்தல்களில் ஊடாக எழுகின்றது. இவற்றை உறுதி செய்வதற்கு சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு இல்லாமல், சுதந்திரமான பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை இல்லாது எவ்விதமாக நாங்கள் இதனை அடைய முடியும். இதனை சர்வதேசம் உட்பட அனைவரும் அறியவேண்டிய தேவை உள்ளது. எனவே தேர்தல் முறையாக நடைபெறவேண்டும். இதற்கான முயற்சிகளை த.தே.கூ எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய மாநாட்டின் போது முதன்மை வேட்பாளர் சி.வீ.விக்கினேஸ்வரன், செயலாளர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் மற்றும் வேட்பாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| 3 ஆவது தொகுதி படைவீரர்கள் தமிழ்மொழி பயிற்சி நெறியில் பூர்த்தி Posted: 29 Jul 2013 08:31 PM PDT வெற்றிலைக்கேணி 55 ஆவது படைப்பிரிவினால் நடத்தப்பட்ட தமிழ்மொழி பயிற்சி நெறியை 3 ஆவது தொகுதி படைவீரர்கள் பூர்த்தி செய்துள்ளனர். தமது கடமையை சிறப்பாக செய்யவும் பொதுமக்களுடன் நல்லுறவை வளர்க்கவும் இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட இதை பயிற்சி திட்டத்தினால் 55 படைப்பிரிவு தலைமையகத்திலுள்ள 100 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் நன்மையடைந்துள்ளனர். இந்த மூன்றாவது தொகுதி இராணுவ வீரர்கள் தமது தமிழ்மொழித்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கலைநிகழ்வையும் நடத்தினர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈபிடிபியின் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை தவராசா : போட்டியில் டக்ளஸ் இல்லை Posted: 29 Jul 2013 08:26 PM PDT
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், ஈபிடிபிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஈபிடிபி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரமும் வெளிவந்துள்ளது. யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல், யாழ்.மாவட்ட அமைப்பாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன், வடமராட்சி அமைப்பாளர் எஸ்.பாலகிருஸ்ணன், அலெக்சான்டர் சூசைமுத்து (சாள்ஸ்), சுந்தரம் டிவகலாலா, ஆறுதல் நிறுவன இணைப்பாளர் ஏ.அகஸ்டின், சிகரம் ஊடக நிறுவன பணிப்பாளர் கோ.றுசாங்கன், பனை தென்னை வள கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கணேசன், ஆகியோரே, ஈபிடிபி சார்பில் போட்டியிடவுள்ளனர். நேற்று முன்தினம் தவராசாவும், நேற்று ஏனைய வேட்பாளர்களும் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வேட்பாளர் பட்டியலில் ஒப்பமிட்டுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








