Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனடாவில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் பலி: பொதுமக்கள் அஞ்சலி

Posted: 28 Jul 2013 05:29 AM PDT

c4a59918-0da6-441c-83ad-4f21cce27e06_S_secvpf

 c4a59918-0da6-441c-83ad-4f21cce27e06_S_secvpfகனடாவில் கடந்த 6-ந்தேதி கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் ஒன்று கியூபெக் மாகாணத்தின் லக் மெகன்டிக் என்ற இடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த ரெயிலில் திடீரெனத் தீப்பிடித்தது.

இதில் அருகில் இருந்த கட்டிடங்களும், வீடுகளும் எரிந்துபோயின. அங்கிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவரசமாக தங்கள் வீடுகளைக்காலி செய்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். அதற்குள் 47 பேர் இந்தத் தீவிபத்தில் பரிதாபமாய் இறந்தனர். இந்த விபத்து குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று இறந்தவர்களுக்கான நினைவு அஞ்சலிக் கூட்டம் லக் மெகன்டிக் நகரில் உள்ள செயின்ட் ஆக்னெஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், கியூபெக்கின் பிரதமர் பாலின் மொரைய்ஸ் மற்றும் மேயர் கோலட் ராய் லோரெச் ஆகியோர் கலந்துகொண்டனர். பலியானவர்களின் உறவினர்கள் உட்பட, ஆயிரக்கணக்கானோர் இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். விபத்திற்குப் பின்னர் நடந்த இந்தக் கூட்டமே அங்கு நடந்த முதல் பொது நிகழ்ச்சியாகும். இந்தக் கூட்டத்தில் இறந்தவர்கள் 47 பேரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கக்கூடிய இந்த நேரம் மிகவும் உணர்ச்சிகரமானது என்று பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்தார். இந்த விபத்துக்குப் பின்னர், ரெயில் போக்குவரத்து விதிமுறைகளை அரசு தீவிரமாக்கியுள்ளது. அதேபோல், ஆபத்தான வெடிபொருட்களை ஏற்றிச்செல்லும் ரெயில்களில் இரண்டு மேற்பார்வையாளர்கள் இருக்கவேண்டும் என்றும், பயணம் முடிவடையும்வரை அவர்கள் பணியில் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உயரம் அதிகமான பெண்களை புற்று நோய் தாக்கும்

Posted: 28 Jul 2013 05:20 AM PDT

புற்று நோய்கள் குறித்து பல விதமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள யெசீவா பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்தியல் துறை நிபுணர் ஜியோப்பிரி சி கபாட் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். மாத விலக்கு நிறைவு பெற்ற 20,928 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் அதிக உயரமுள்ள பெண்களுக்கு புற்றுநோய் தாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மார்பக புற்று நோய், குடல் புற்று நோய், மற்றும் தோல் புற்று நோய் [...]

தயாமாஸ்டர் சுயேட்சையாக களமிறங்க முடிவு

Posted: 28 Jul 2013 05:07 AM PDT

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளராகச் செயற்பட்ட தயாமாஸ்டர்  வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு ஆலோசித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் வழங்காததை அடுத்தே அவர் சுயேட்சையாக களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் இரண்டொரு நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் எரிபொருள் வாகனம் தடம்புரண்டது

Posted: 28 Jul 2013 04:43 AM PDT

tanker_carrying_001-293x150

tanker_carrying_001-293x150கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் எரிபொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது. இச்சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஜெட் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 35,000 லீற்றர் எரிபொருட்களை எடுத்துச்சென்ற குறித்த வாகனம் ஒடுங்கிய பாதையினூடாகப் பயணித்த வேளை நிலைதடுமாறியதல் தடம்புரண்டு அருகிலிருந்த ஓடை ஒன்றுக்குள் விழுந்துள்ளது.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்தை சுற்றி 10 கிலோமீட்டருக்குள் உள்ள மக்களுக்கு குறித்த ஓடையிலிருந்து வழங்கப்படும் நீரை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விக்னேஸ்வரனை விமர்சிக்க பசிலுக்கு அருகதையில்லை

Posted: 28 Jul 2013 12:15 AM PDT

அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பசில் ராஜபக்ச கம்பகாவில் போட்டியிட முடியுமானால், விக்னேஸ்வரன் ஏன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தமிழ் மக்களால் நேசிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதன்மை வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையும், சக்தியும் உள்ளது. எமது வேட்பாளர் குறித்து குறை கூறுவதற்கு சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த அருகதையும் கிடையாது. வடக்கு, கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்படும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், [...]

தேவையற்ற மென்பொருட்களை கணனியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு

Posted: 27 Jul 2013 11:58 PM PDT

தற்காலத்தில் அதிகரித்துவரும் கணனிப் பயன்பாட்டிற்கு ஏற்ப மென்பொருட்களின் வருகையும் அதிகளவாகவே காணப்படுகின்றது. இவ்வாறான மென்பொருட்களில் சிலவற்றினை கணனியில் நிறுவிக்கொள்ளும்போது கணனியில் உளவுபார்க்கும் வேலையைச் செய்வதாக காணப்படுகின்றன. அதேபோன்று சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவுவதனால் கணனியின் வேகம் மந்தடையும் சாத்தியமும் அதிகமாகவே காணப்படுகின்றது. இதனால் அவ்வாறான மென்பொருட்களை தேடி முற்றுமுழுதாக கணனியிலிருந்து நீக்கிவிடுவது அவசியமாகும். எனினும் சாதாரண முறையில் மென்பொருட்களை நீக்கும்போது சில கோப்புக்கள் கணனியிலிருந்து நீங்காது. இதனால் கணினியின் வேகம் குறைவடைவதுடன், தேவையற்ற எச்சரிக்கை செய்திகளை தோற்றுவித்த [...]

பெரிய திரையுடன் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Posted: 27 Jul 2013 11:42 PM PDT

கைப்பேசி உற்பத்தியில் புதிதாக களமிறங்கியிருக்கும் Oppo நிறுவனமானது பெரிய திரையுடன்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவிருக்கின்றது. Oppo Find 7 என அழைக்கப்படும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Resolution Pixel உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது. மேலும் 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon 800 Processor, 13 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெரா, சேமிப்பு நினைவகமாக 32GB போன்றனவும் காணப்படுகின்றது. இவற்றுடன் 4,000 mAh உடையதும், நீடித்து உழைக்கக்கூடியதுமான [...]

ஹூசைன் போல்ட் இந்த வருடத்திற்கான சாதனையை பதிவு செய்தார்

Posted: 27 Jul 2013 11:30 PM PDT

ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்காவின் ஹூசைன் போல்ட் இந்த வருடத்தில் சிறந்த காலப்பெறுதியை பதிவு செய்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் அரங்கின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓட்டப் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 100 மீற்றர் ஓட்டத்தை அவர் 9.85 செக்கன்களில் கடந்து இந்த வருடத்தில் சிறந்த காலப்பெறுதியை பதிவு செய்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் 6 தடவைகள் தங்கப்பதக்கங்களை வென்ற ஹூசைன் போல்ட் 100 மீற்றர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளமை [...]

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

Posted: 27 Jul 2013 11:28 PM PDT

இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜிம்பாப்வே அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 58 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா [...]

இந்திய தலைப்பாகையை அணிந்து மக்களை மகிழ்வித்த பாப்பரசர்

Posted: 27 Jul 2013 11:12 PM PDT

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் உலக இளைஞர் தின விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு தலைமை தாங்குவதற்காக பாப்பரசர் பிரான்சிஸ் வாட்டிகன் நகரில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரேசிலில் வாழும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் இடையே நேற்று அவர் சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவுக்கு பின்னர் பாப்பரசர் பிரான்சிஸ் மேடையின் மீது பல்வேறு தரப்பினரையும் அழைத்து வாழ்த்தினார். பாப்பரசரிடம் வாழ்த்துபெற சில இந்தியர்களும் மேடையேறினர். அப்போது வெறும் உடம்புடன் பாசிமாலைகளை [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™